Posts

Showing posts from April, 2021

Sports in Tamil

Image
பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம், அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த வாரம் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வீடு திரும்பினார். “கரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்” என்று கூறியிருந்தார்.

Sports in Tamil

Image
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் எண்ணிக்கை உலக அளவை தாண்டி செல்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு உள்ளாகுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். கரோனா தொற்று உயிரிழப்பும் உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. 3523 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

Sports in Tamil

Image
ஹர்பிரீத் பிராரின் பிரமாதமான பந்துவீச்சு, கேஎல் ராகுலின் பேட்டிங் ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.

World News

Image
இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை ஜப்பான் வழங்க உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகப்படி யான நோயாளிகளால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் விளையாட்டுக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் இடம் கிடைப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இந்த ஸ்காலர்ஷிப் இடங்களைப் பெற கடுமையான போட்டிகள் இருக்கும். இந்தச் சூழலில் நாகாலாந்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், விளையாட்டுத் துறைக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மான்மவுத் பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த கோட்டாவில் இடம்பிடித்த முதல் நாகாலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நாகாலாந்து மாநிலத்தின் மோகோசுங் மாவட்டத்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக டேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். தனது 6 வயது முதல் அவர் டென்னிஸ் விளையாட்டை கற்று வருகிறார். ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் பயிற்சி பெற நவீன வசதிகள் இல்லாததால், ஜமீர் பயிற்சி பெறுவதற்காகவே, அவரது குடும்பம் குவாஹாட்டி நகருக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்குள்ள ஆல் அசாம் டென்னிஸ் அசோசியேஷனில், இளவயது முதல் ஜமீர் பயிற்சி பெற்றுள்ளார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 155 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியானது பிரித்வி ஷாவின் அதிரடியால் 21 பந்துகள் மீதம் வைத்து வென்றது. பிரித்வி ஷா 41 பந்துகளில், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். அதிலும் அவர், ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்டி அசத்தியிருந்தார். கொல்கத்தா அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 7 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கலம், கேப்டன் இயன் மோர்கன் ஆகியோர் எப்போதுமே ஆக்ரோஷமான ஆட்டத்தை கையாளக் கூடியவர்கள். ஆனால் இந்த சீசனில் அந்த அணி இதை செய்யவில்லை.

World News

Image
இந்தியாவுக்கு அடுத்த வாரம் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பப்பட உள்ளதாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் கூறும்போது, “மற்ற மருத்துவப் பொருட்களுடன் இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளும் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
கரோனா வைரஸ் பாதிப்பால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடக அமைப்பின் சார்பில் 4,200 ஆஸ்திரேலிய டாலர் (ரூ.2.21 லட்சம்) நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இந்தியர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடுவதைப் பார்த்து பல நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. பல நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருந்துகளையும், முகக் கவசங்களையும் அனுப்பி உதவுகின்றன.

Sports in Tamil

Image
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கத், தனது ஐபிஎல் ஊதியத்தின் 10 சதவீதத்தை கரோனா நிவாரணப் பணிகளுக்காக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் நிகோலஸ் பூரன் தனது ஊதியத்தின் ஒரு பகுதியை கரோனா நோயாளிகளின் மருத்துவப் பணிகளுக்கு நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் உனத்கத்தும் அறிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரும், மே.இ.தீவுகள் வீரருமான நிகோலஸ் பூரன், தனது ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பாதியை, இந்தியாவில் கரோனாவில் பாதிப்பின் நிவாரணப் பணிகளுக்காக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்து வருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

World News

Image
இந்தியாவின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறும்போது, “கரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதுவும் கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இதை உணர்வது அவசியமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைப்பு தரப்பில்,”பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,001 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு, பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் பிரான்ஸுக்கு வந்த ஒருவருக்கு இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Sports in Tamil

Image
நான் தொடக்க வீரராக களமிறங்கிய காலத்தில்கூட ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்தது இல்லை. பிரித்வி ஷாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்தார். அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

World News

Image
இஸ்ரேலில் மத வழிப்பாட்டு கூட்டம் ஒன்றில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு மீறி கூடியதலால் நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். இஸ்ரேலில் 60% க்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அங்கு கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் பெரும் திரளாக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கின்றன.

World News

Image
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வு நிகழ்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82% கரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பக்கமே உள்ளன” என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
பிரித்வி ஷாவின் அசுரத்தனமான பேட்டிங்கால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி ராஜா என்றால், அதன் தளபதியாக இருந்து வழிநடத்தி வருபவர் ரோஹித் சர்மா. இன்று (ஏப்ரல் 30) அவரது பிறந்த நாள். ரோஹித் சர்மாவின் சொந்த ஊர் ஆந்திராவின் விசாகப்பட்டினம். அவருக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகள் பேசத் தெரியும். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கை தனது ரோல் மாடலாகக் கொண்டு கிரிக்கெட்டில் தடம்பதித்த ரோஹித் சர்மா, ஆரம்ப கட்டத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னராக இருந்துள்ளார்.

Sports in Tamil

Image
கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 90,000 ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், பிற வீரர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

World News

Image
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குப் பயணிக்க விடமால் விதிக்கப்படும் தடைகளால் கரோனா தொற்றின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரிக்கவே செய்யும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசுகள் பயணத் தடைகளை விதிக்கின்றன. ஊரடங்கு மற்றும் மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கரோனா பரவலைச் சிறிதளவு மட்டுமே தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவிலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணத் தடைகள் கரோனா தொற்றுகளை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

World News

Image
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டுக் குடிமக்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அமெரிக்க குடிமக்கள் நாடு திரும்புவதற்கான பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
கரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நயாகரா நீர்வீழ்ச்சி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

Sports in Tamil

Image
இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காக ரூ.7.5 கோடியை நிவாரண நிதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறக்கட்டளையான ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டன் ஏசியன் அறக்கட்டளை இணைந்து இந்த நிதியுதவியை அறிவித்துள்ளன.

Sports in Tamil

Image
இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் நான் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்காதது எனக்குக் கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷேன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேனை 8 அணிகளுமே விலைக்கு வாங்கவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனான லாபுஷேனை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

World News

Image
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 201 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 201 பேர் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பலி இதுவாகும்.

World News

Image
வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் கூறும்போது, “ வெள்ளை மேலாதிக்கம் என்பது ஒரு பயங்கரவாதம் ஆகும். வெள்ளை மேலாதிக்கம் இன்று நம் தாயகத்திற்கு மிகவும் ஆபத்தான பயங்கரவாதமாகவும், அச்சுறுத்தலாகவும் எங்கள் புலனாய்வு அமைப்புகள் தீர்மானித்துள்ளது. இதனை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். என் சக அமெரிக்கர்களே, பாருங்கள், இந்த தேசத்தின் ஆன்மாவை குணப்படுத்த நாம் ஒன்று சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சத்தால், ஐபிஎல் டி20 தொடரிலிருந்து நடுவர் நிதின் மேனன் பாதியிலேயே விலகியுள்ளார். ஆஸ்திரேலிய நடுவர் பால் ரீஃபெல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்த நிலையில், ஆஸ்திரேலிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 தொடரின் 14-வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ராசே வேன் டர் டூசென் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் வருவதற்காக 7 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தையும் ராசே வேன் டர் டூசென் முடித்துவிட்டார். விரைவில் ராஜஸ்தான் அணியில் சேர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

World News

Image
கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்டால் அந்த நபர் வாயிலாக தொற்று பரவுவது குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டனில் உள்ள சுகாதார அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், “பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் பிறருக்கு கரோனா பரவுவது 50%க்கும் மேலாகத் தடுக்கப்படுகிறது. இது நல்ல அறிகுறி. இந்த மருத்துவப் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ‘இன்லைன் ஆல்பைன்’ பிரிவில் கோவை மாணவர் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் 58-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சண்டிகர் மற்றும் மொகாலியில் நடைபெற்றது. இதில் ஸ்பீடு ஸ்கேட்டிங், இன்லைன் ஃப்ரீ ஸ்டைல், ஸ்கேட்போர்டிங், ரோலர் ஃப்ரீ ஸ்டைல், இன்லைன் டவுன்ஹில், இன்லைன் ஆல்பைன், ரோலர் டெர்பி, ரோலர் ஸ்கூட்டர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி நடைபெற்றது.

Sports in Tamil

Image
டூப்பிளசிஸ், கெய்க்வாட் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்அணி. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையி்ல் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்டகாலம் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆசிஷ் நெஹ்ராவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 29). 1999-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் ஆசிஷ் நெஹ்ரா. இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால் மீண்டும் அவரை அணிக்கு தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கங்குலி கேப்டன் ஆன பிறகு, 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு பயணம் செய்த இந்தியக் குழுவில் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது. 2003-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை இவர் வீழ்த்தினார். ஆனால் அதன் பின் சில போட்டிகளில் சொதப்ப, மீண்டும் தூக்கி வீசப்பட்டார். அதோடு காயங்களும் ஏற்பட, நெஹ்ராவின் பயணம் தடைபட்டது.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 172 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மொகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரிஷப்பந்த் இரு பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. அவருக்கு உறுதுணையாக விளையாடிய சிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ஹெட்மையர், ஜேமிசன் வீசிய 18-வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்தஓவரில் 21 ரன்கள் சேர்க்கப்பட்டதால் டெல்லி அணியால் ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு செல்ல முடிந்தது. முன்னதாக ஹெட்மையர் 15 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை தேவ்தத் படிக்கல் தவறவிட்டிருந்தார். இதனால் ஆட்டம் பெங்களூரு அணியின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியது.

World News

Image
இந்தியாவில் கரோனா வைரஸின் 2-ம் அலை தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்திய-அமெரிக்க டாக்டர்கள், இந்தியாவிலுள்ள கரோனா நோயாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

World News

Image
இந்தியாவில் காணப்படும் புதியவகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ்பரவல் கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. ஒரு நாள்கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த புயல்வேக வைரஸ் பரவலுக்கு இங்கு கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் (பி.1.67) காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

World News

Image
கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்குகிறோம். இது நிச்சயம் ஆம்புலன்ஸ் சேவைக்கும், பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கும் உதவும்” என்றார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 தொடரில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் குக்லிஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகி, நாள்தோறும் லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வருவோருக்குத் தடை விதித்தன. இந்தியப் பயணிகள் வரவும் தடை விதித்தன. ஆஸ்திரேலிய அரசும் மே 15-ம் தேதிவரை இந்திய விமானங்கள் வரத் தடை விதித்தது.

World News

Image
பிரேசிலில் கரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,95,022 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
எப்போதுமே நாங்கள் பேட்டிங்கில் வலுவான அணிதான். ஆனால், இப்போது பந்துவீச்சிலும் வலுவாக மாறிவிட்டோம் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

World News

Image
வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான கரோனா தடுப்பு மருந்துகளை பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்து பைஸர் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கூறும்போது, “ நாங்கள் கரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

World News

Image
கரோனா தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக நான் பெரிய அறிவிப்பை இன்று தெரிவிக்கிறேன். நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் பெரிய கூட்டத்தில் இல்லாத நேரத்தில் வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

Sports in Tamil

Image
360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

World News

Image
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுப்பு மே 1-ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழப் போரின் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு போதுமான ஆக்சிஜனும், மருந்துகளும் இல்லாத சூழல் நிலவுகிறது.

Sports in Tamil

Image
வியட்நாம் போரில் பங்கேற்க அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முகமது அலி புறக்கணித்த நாள் ஏப்ரல் 28, 1967. 1960-களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. சில விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலிக்கும் அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த அழைப்பை முகமது அலி புறக்கணித்தார். ராணுவத்தில் சேர மறுத்தார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களது பந்து வீச்சாளர்களிடமிருந்து மிகவும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் வெளிப்பட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்தார். ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தங்களது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் 123 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து எளிதான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியானது கேப்டன் இயன் மோர்கன் (47), ராகுல் திரிபாதி (41) ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 20 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது.

World News

Image
தெற்காசிய நாடுகள் கரோனா தடுப்பூசிகளைப் பெற சீனா உதவும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பூசிகளைப் பெற உதவி செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
கம்மின்ஸை தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், ஐபிஎல் வர்னணையாளருமான பிரெட் லீ இந்தியாவுக்கு நிதியுதவி வழங்கி உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் பிற வீரர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

World News

Image
திரவ ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறும்போது, “கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்தியா கஷ்டமான காலகட்டத்தில் உள்ளது என்பதை நன்கு அறிவோம். பிரான்ஸும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வோம்.

Sports in Tamil

Image
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான டி.நடராஜனுக்கு இன்று முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதன்பின் முழங்கால் வலி காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Sports in Tamil

Image
ஆஸ்திரேலிய அணியின் அதிகாரபூர்வத் தொடரின் ஒரு பகுதி அல்ல ஐபிஎல் டி20 தொடர். ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.