World News

கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்டால் அந்த நபர் வாயிலாக தொற்று பரவுவது குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனில் உள்ள சுகாதார அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், “பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் பிறருக்கு கரோனா பரவுவது 50%க்கும் மேலாகத் தடுக்கப்படுகிறது. இது நல்ல அறிகுறி. இந்த மருத்துவப் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News