Sports in Tamil

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் விளையாட்டுக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் இடம் கிடைப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இந்த ஸ்காலர்ஷிப் இடங்களைப் பெற கடுமையான போட்டிகள் இருக்கும். இந்தச் சூழலில் நாகாலாந்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், விளையாட்டுத் துறைக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மான்மவுத் பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த கோட்டாவில் இடம்பிடித்த முதல் நாகாலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தின் மோகோசுங் மாவட்டத்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக டேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். தனது 6 வயது முதல் அவர் டென்னிஸ் விளையாட்டை கற்று வருகிறார். ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் பயிற்சி பெற நவீன வசதிகள் இல்லாததால், ஜமீர் பயிற்சி பெறுவதற்காகவே, அவரது குடும்பம் குவாஹாட்டி நகருக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்குள்ள ஆல் அசாம் டென்னிஸ் அசோசியேஷனில், இளவயது முதல் ஜமீர் பயிற்சி பெற்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News