Posts

Showing posts from October, 2023

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நெறிமுறை செய்வதற்கான உத்தரவு ஒன்றை திங்கட்கிழமை அன்று வெளியிட்டார். அமெரிக்க நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை அறிவித்தார். அப்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது டீப் ஃபேக் வீடியோவை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். “ஏஐ சாதனங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுகின்றன. அது சங்கடம் தருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவை கொண்டு டீப் ஃபேக் மூலமாக ஒருவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், மோசடி செய்யவும், போலி செய்திகளை பரப்பவும், குற்ற செயலில் ஈடுபடவும் செய்கின்றனர். ஒருவரின் மூன்று நொடி குரல் பதிவே இதற்கு போதும். அண்மையில் எனது டீப் ஃபேக் வீடியோவை நான் பார்த்தேன். ‘நான் எப்போது இதை சொன்னேன்’ என்று தான் அதை பார்த்ததும் நான் நினைத்தேன்” என தெரிவித்தார்.

World News

Image
டெல் அவிவ்: அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சக பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு, ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இன்னும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு முடிவும் தெரியவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் முதல் அப்பாவி குழந்தைகள் வரை இந்தக் கொடூரத் தாக்குதலில் பலியாகி வருகின்றனர்.

World News

Image
டெல் அவிவ்: போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு வுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இன்னும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் காசா வீதிகளில் உலாவும் புகைப்படங்கள் வெளியாகி சக மனிதர்களை கவலையில் ஆழ்த்துகிறது. நேற்று நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

World News

Image
டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட ஜெர்மனி பெண் ஷானி லவுக் (22) உயிரோடு இல்லை. அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் ரைம் பகுதியில் சூப்பர்நோவா இசை விழா நடைபெற்றது. அப்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இசை விழாவில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இசை விழாவில் பங்கேற்ற 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் கடத்திச் செல்லப்பட்டனர்.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7- ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இஸ்ரேல் ராணுவம், காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளை குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதோடு அல்-குத்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு, அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்,

World News

Image
மெக்சிகோ: வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் 'ஓடிஸ்' சூறாவளி சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. அப்போது அடித்த பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமானவை சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

World News

Image
புதுடெல்லி: சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த கிளீனர் சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த அந்தப் பெண் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மே 4-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. போலீஸார் தீவிர விசாரணை மே 5-ம் தேதியே சின்னையாவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு சார்பில் அரசு துணை வழக்கறிஞர் (டிபிபி) கயல் பிள்ளை ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சின்னையாவுக்கு 15 முதல் 17 ஆண்டு சிறைத் தண்டனையும், 18 சவுக்கடி தண்டனையும் தரப்படவேண்டும் என அவர் வாதாடினார்.

World News

Image
காசா நகர்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதியில் சுமார் 260 அடி ஆழத்தில் 500 கி.மீ. தொலைவுக்கு ரகசிய சுரங்க நகரத்தை அமைத்துள்ளனர். இந்த சுரங்க நகரத்தில் பதுங்கியிருந்து இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக அவர்கள் போரிட்டு வருகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் வான் வழி தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 40 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. காசாவுக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். ஹமாஸின் போர் வியூக பின்னணியில் அவர்களின் ரகசிய சுரங்க நகரம் இருப்பது தெரியவந்துள்ளது.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார். ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார்.

World News

Image
நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக நிவாரண பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

World News

Image
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் வான்வழிப் பிரிவின் தலைவரான இஸ்ஸாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் சுவாலை விட்டு எரிய தொடங்கியிருக்கிறது. ஹாமஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை கண்ணும் கருத்துமாக எடுத்து வைக்கிறது. இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கியப் படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.

World News

Image
டெல் அவிவ்: போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இஸ்ரேல், அமெரிக்கா , ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, பபுவா நியூ கினியா, பராகுவே உள்பட 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு லீவிஸ்டன் நகரில் உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
நியூயார்க்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்திருந்தன. 'பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனித உரிமை கடமைகளை கடைப்பிடித்தல்' எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உடன் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு தீர்மானத்தில் ஓரிடத்தில் கூட ஹமாஸ் அமைப்பினரை ஊடுருவல்காரர்கள் என்று சுட்டிக்காட்டாததை வன்மையாகக் கண்டித்தது.

World News

Image
பீஜிங்: சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார். அவருக்கு வயது 68. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லீ கெகியாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். கட்சியில் செல்வாக்கு நிறைந்த அவரை சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் ஓரங்கட்டத் தொடங்கினார். இதனால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியிருக்க நேர்ந்தது. பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஷாங்காய் நகரில் வசித்துவந்த அவர் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

World News

Image
புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார்அரசு கடந்த ஆண்டு கைது செய்து சிறையில்அடைத்தது. இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் ‘பெல்ட் அன்ட் ரோடு' திட்டத்தை சீனா தொடங்கியது. இதன்படி மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் 154 நாடுகள் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

World News

Image
வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயோன போர் தீவிரமடையும்பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் தயாராகி வருகிறது. அமெரிக்க உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

World News

Image
புதுடெல்லி: ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலானபோர் கவலை அளிக்கிறது. இருதரப்பும் போரை நிறுத்தி, அமைதிபேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர். இதற்கு, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்களை முன்னிறுத்தி வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி இருந்தனர். வான் வழியாகவும், தரை வழியாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இயங்கி வரும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை நவோர் கிலன் தெரிவித்துள்ளார்.

World News

Image
நியூயார்க்: மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல், அதனால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவைகள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைக்கிழமை கூடியது. அதில் பேசிய ஐ.நா., பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியதாவது: மத்திய கிழக்கில் நிலைமை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மோசமடைந்து வருகிறது. பிரிவுகள் சமூகங்களைப் பிளவுபடுத்தி பதற்றத்தை தொடந்து கொதிப்படையச் செய்கின்றன. இதனால் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்புத் தொடங்கி கொள்கைகளில் உறுதியாக இருப்பது இன்றியமையாதது. இந்த மனிதத் தன்மையற்ற துன்பத்தை குறைப்பதற்கு, மனிதாபிமான உதவிகள் கெண்டு செல்வதை எளிதாக்க வேண்டும். பிணையக் கைதிகள் விடுதலை செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண

World News

Image
புதுடெல்லி: இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டான் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்தித்து பேசினார். இஸ்ரேல் எல்லையில் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரை அறிவித்து காசா பகுதிக்குள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவாசிகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காசாவாசிகள் வடக்கில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் அனைவரையும் ஹமாஸ் ஆதரவு தீவிரவாதிகள் என்றே கருதுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்புகளை இஸ்ரேலியப் படைகளின் பெயர் மற்றும் முத்திரையுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் மூலம் காசா மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. காசாவாசிகளின் மொபைல் எண்களுக்கும் குறுந்தகவல், ஆடியோ மெசேஜ் வாயிலாக இத்தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறியதாவது: இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒரு லட்சம் வீரர்கள், 2 லட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

World News

Image
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்ட மக்கள் விரைந்து நாடு திரும்ப வேண்டி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒன்று கூடி ‘Lighting up the Light’ என்ற பிரச்சார இயக்கத்தை மக்கள் முன்னெடுத்தனர்.

World News

Image
வெலிங்டன்: சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலமும், பாடி பில்டருமான ரேஷெல் சேஸ் உயிரிழந்தார். 41 வயதான அவரது திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் உயிரிழந்த தகவலை அவரது மூத்த மகள் உறுதி செய்துள்ளார். உடற்பயிற்சி மற்றும் தன்னந்தனி பெண்ணாக தனது குழந்தைகளை வளர்ப்பது குறித்து உத்வேகம் அளிக்கும் வகையிலான பதிவுகளை ரேஷெல், சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வழக்கம். அவரை ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே சுமார் 1.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 2015-ல் ரேஷெல், விவாகரத்து பெற்றார்.

World News

Image
லாகூர்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன் என தெரிவித்துள்ளார். பணவீக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் , தற்போது நாடு திரும்பியுள்ளார். வரும் ஜனவரியில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

World News

Image
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காசாவில் உள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

World News

Image
டெல் அவிவ்: லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதிகளில் வசிக்கும் 20,000 பேரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 14-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் கடற்படை பிரிவை சேர்ந்த மூத்த கமாண்டர் ஷாலாபி கொல்லப்பட்டார்.

World News

Image
ரஃபா: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் நேற்று எகிப்து-காசா எல்லையான ரஃபாவுக்கு சென்றார். அங்குள்ள அல் ஆரிப் விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திறங்கிய நிவாரண பொருட்கள் அவர் ஆய்வு செய்தார். இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய 200 லாரிகள் ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் கூறும்போது, “அடுத்த சில நாட்களில் காசா பகுதிக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படும்" என்றார்.

World News

Image
டெல் அவிவ்: இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

World News

Image
இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு , கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாக காசாவில் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். குறிப்பாக காசா இஸ்ரேல் தாக்குதலின் இரையாகி வருகிறது. காரணம் காசா, பாலஸ்தீனத்தின் முக்கியமான நகரமாகக் கருதப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்கள்தான் அதிகமாக வசிக்கின்றனர். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

World News

Image
வாஷிங்டன்: ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார். அந்த உரையில் அவர், "ஹமாஸ் மற்றும் புதினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை ஆனால் இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும்.

World News

Image
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: வடகொரிய ராணுவத்தில் எப்7 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

World News

Image
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெருசலேமில் நேற்று சந்தித்து பேசினார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் இஸ்ரேலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த வரிசையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்றார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

World News

Image
டெல் அவிவ்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,478 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

World News

Image
வாஷிங்டன்: காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பளர் ஆட்ரின் வாட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அரசு செய்த ஆய்வின்படி காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் இதனை உறுதி செய்துள்ளோம்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
டெல் அவிவ்: காசா மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்கள் தவறுதலாக விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வந்து அந்நாட்டு அதிபர், பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். தரை வழியாகவும் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் எல்லைப் பகுதியில் புகை மூட்டம் மூண்டுள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில இடங்களில் தீ பிடித்து எரிவது போலவும் உள்ளது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம் என அண்மையில் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் மோதல் தீவிரமடைந்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இந்த சூழலில் இன்று இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 11-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதல்நடத்தின. இஸ்ரேலில் இருந்து ஏராளமானஏவுகணை குண்டுகளும் வீசப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். 1,200-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் மீட்க முடியவில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

World News

Image
காசா: பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதனை தாக்குதலுக்கு ஆளான மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது. காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் விமானப்படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தும் இஸ்ரேல் தரப்பில் இது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக ஹமாஸ் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் தோல்வி இதற்கு காரணம் என இஸ்ரேல் தரப்பில் சொல்லியுள்ளதாக தகவல். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

World News

Image
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் யாயா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது.

World News

Image
வாஷிங்டன்: ‘‘இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும்’’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம் ஆண்டு வரை இஸ்ரேல் நிர்வாகத்தின்கீழ் காசா இருந்தது. அதன்பிறகு, பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.

World News

Image
காசா நகர்: இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதால் வடக்கு காசா பகுதி மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். காசா நகரின் மேற்குப் பகுதிகள், காசா முனை பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காசா பகுதியில் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ராக்கெட் குண்டுகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. எனவே பொதுமக்கள் ரத்த தானம்செய்ய முன்வருமாறு காசா பகுதி மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

World News

Image
புதுடெல்லி: கடந்த 2008-ம் காசா மீதான படையெடுப்புக்குப் பிறகு தரைவழியாக சென்று தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது இதுவே முதல்முறை. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியங்களை கொன்று குவித்ததையடுத்து, இஸ்ரேல் வான் வாழியாக காசா மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் ஆயிரக்கணக் கானோர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் மேலும்ஒரு ஹமாஸ் கமாண்டர் உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது.

World News

Image
காசா நகர்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த 23 லட்சம் பேர் குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 8-வதுநாளாக போர் நீடித்தது. போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வருகின்றனர்.

World News

Image
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் 2 மூத்த கமாண்டர்கள் கொல்லப் பட்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் வான்வழி தாக்குதல் பிரிவின் தளபதியாக முராத் அபு என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் காசா நகரில் உள்ள ஹமாஸ் முகாமில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த முகாமை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் முராத் அபு உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.