Posts

Showing posts from June, 2023

Sports in Tamil

Image
ஜாக்ரெப்: உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் தியா சித்தலே, ஸ்ரீஜா அகுலா ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, குரோஷியாவின் ஹனா அரபோவிச்சுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 11-6, 11-3, 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

World News

Image
பெய்ஜிங் : சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 'ஒரு குடும்பம், 3 குழந்தைகள்' திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசும், மாகாண அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. சீன அரசின் அறிவுறுத்தலின்படி தனியார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

Sports in Tamil

Image
புலவாயோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 6 சுற்றில் நேற்று புலவாயோ நகரில் ஜிம்பாப்வே–ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 103 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் அவர், அடித்த 3-வது சதமாக இது அமைந்தது. சிகந்தர் ராசா 42, லூக் ஜாங்வி 43, கிரெய்க் எர்வின் 25, வெஸ்லி மாதவரே 25, ஜாய்லார்டு கும்பி 21 ரன்கள் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் பயாஸ் பட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 333 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணி ஒரு கட்டத்தில் 46 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான காஷ்யப் பிரஜாபதி 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜதிந்தர் சிங் 2, அகிப் இல்யாஸ் 45, ஜீஷான் மக்சூத் 23, அயன் கான் 47, ஷோயிப் கான் 11, நசீம் குஷி 12, கலீமுல்லா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் அஜிங்க்ய ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்வது கடினம் என இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை அஜிங்க்ய ரஹானே கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் இழந்தார். சுமார் 18 மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக ரஹானே மீண்டும் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் அவர், முறையே 89 மற்றும் 46 ரன்கள் எடுத்தார்.

World News

Image
நியூயார்க் : ஆயுத போராட்டத்தால் பாதிக்கப்படும் சிறார் குறித்த ஐ.நா. சபையின் ஆண்டறிக்கையில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகளின் ஆயுதப் போராட்டத்தால் சிறுவர், சிறுமிகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிரவாத குழுக்கள், கிளர்ச்சிக் குழுக்களில் சிறுவர்கள் இணைக்கப்பட்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

World News

Image
நியூஃபவுண்டலேண்ட்: பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்ட நிலையில் அவற்றில் மனித உடலின் எச்சங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றிக் காண்பிக்க சுற்றுலா பயணிகளுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி வாகனத்தில் இருந்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே பெரும் பணக்காரர்கள்.

Sports in Tamil

Image
சென்னை: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நினைவுகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அவர் தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கடைசி பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

World News

Image
புதுடெல்லி: இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், பால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தன. மக்கள் அரசுக்கு எதிராக போராடினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார்.

Sports in Tamil

Image
லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. நிதானமாக விளையாடிய கவாஜா 70 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் போல்டானார். தனது 35வது அரை சதத்தை அடித்த டேவிட் வார்னர் 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

Sports in Tamil

Image
ஹராரே: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று தொடரில் சூப்பர் 6 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றன. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள்தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.

World News

Image
சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரையில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தெரிவு செய்யப்படாதது குறித்து இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Sports in Tamil

Image
சிகப்புப் பந்தில் 5 நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்களின் செயல்பாடுகளை வைத்து இந்திய டெஸ்ட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதா என்று டெஸ்ட் அணித் தேர்வு குறித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சுனில் கவாஸ்கர் இந்த ஐயங்களை கண்டனமாக எழுப்பியுள்ளார். சர்பராஸ் கானைத் தேர்வு செய்யாமல் பல மழுப்பல் காரணங்களைக் கூறிய காரணங்கள் போய் இப்போதெல்லாம் தேர்வாளர்கள் செய்தியாளர்களையே சந்திப்பதில்லை, அப்படி சந்தித்தால் ஏன் புஜாரா நீக்கம்?, ஏன் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்பதனால் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கின்றனரா என்று கவாஸ்கர் கண்டனங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sports in Tamil

Image
இந்திய அணியில் டாப் 6 பேட்டர்களில் ஒரே இடது கை வீரராக ரிஷப் பந்த் மட்டுமே இருந்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக இல்லாததால் இந்திய அணியில் இடது கை பேட்டர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பந்த் அளவுக்கு இஷான் கிஷனின் பேட்டிங்கில் நம்பகத்தன்மை இல்லை. அவர் வங்கதேசத்திற்கு எதிராக அதிவேக அதிரடி இரட்டைச் சதம் விளாசியது அவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தினாலும் சீரான முறையில் அவர் ஆடுவதில்லை. இப்போது ரிங்கு சிங் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அணிக்கு இடது கை பேட்டர்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. 2011 உலகக்கோப்பையில் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என்று அணியில் லெஃப்ட் ஹேண்டர்கள் இருந்தனர். ஆகவே இடது கை வீரர்கள் அணியில் இருப்பது எதிரணியினருக்கு பெரிய சவால் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. அதனால்தான் ரவி சாஸ்திரி மிகச்சரியாகவே இரண்டு இடது கை பேட்டர்கள் தேவை என்கிறார்.

Sports in Tamil

Image
மும்பை: இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது. இதன்படி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத்தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றிருந்தன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது. ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்று நடைபெறுகிறது.

Sports in Tamil

Image
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது.

Sports in Tamil

Image
ஹராரே: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றின் லீக் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் ஆல் ரவுண்டர் வான் பீக், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளன. அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வே நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும்.

World News

Image
வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல, ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, இந்தியா-அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது.

Sports in Tamil

Image
ஹராரே: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்றில் அமெரிக்க அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி. கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது பெரிய வெற்றியாக அமைந்தது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2009ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 7 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் குவித்திருந்தது.

Sports in Tamil

Image
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

World News

Image
புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையிலான வர்த் தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Sports in Tamil

Image
சென்னை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி. சேலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை பவர்பிளேவில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என கட்டுப்படுத்தினர் மதுரை சீகம் பேந்தர்ஸ் பந்து வீச்சாளர்கள். இதன் மூலம் இந்த சீசனில் பவர்பிளேவில் குறைந்த ரன்களை பதிவு செய்தது சேலம் ஸ்பார்ட்டன்ஸ். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமித் சாட்விக், கவுரி சங்கர் ஆகியோர் தலா 17 ரன்களும், ஷன்னி சாந்து 16 ரன்களும் சேர்த்தனர்.

World News

Image
கெய்ரோ: எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். எகிப்து அதிபரின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். எகிப்து பிரதமர் முஸ்தபா மேட்போலி, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். முதல் நாளில் 2 நாடுகளின் பிரதமர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

Sports in Tamil

Image
சேலம்: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசனின் லீக் போட்டிகள் கோவை, திண்டுக்கல் போன்ற ஊர்களை அடுத்து சேலத்திலும் நடைபெற்று வருகிறது. நேற்று (ஞாயிறு) சேலத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் பால்சி திருச்சி அணிகள் விளையாடின. இதில் திருச்சி அணிக்காக விளையாடி வரும் நடராஜன் களம் கண்டார். அவருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். 32 வயதான நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017-ல் விளையாட தொடங்கினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2015 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.

Sports in Tamil

Image
மும்பை: 1983-ல் ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சரித்திர சாதனை படைத்து சரியாக 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்போது இந்திய அணியை வழிநடத்திய கேப்டனான கபில்தேவ். “உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றியும் மகத்தானது. ஆனால், எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான போட்டி என்றால் அது இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி தான். ஏனெனில், அவர்கள் எங்களுக்கு எதிராக எளிதில் வெற்றி பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமர்நாத் மற்றும் ஆசாத் வீசிய 24 ஓவர்கள் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த தொடர் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத வகையில் அமைந்தது” என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
மாஸ்கோ : விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவ் விலகியுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் அடுத்த மாதம், லண்டனில் தொடங்கவுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஆகிய பாடல்களை பாடி இந்தியர்களிடையே மேரி மில்பென் ஏற்கெனவே மிகவும் பிரபலமானார்.

World News

Image
பாரிஸ்: உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் லாஜிஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்புகளைவிட மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அவர் வந்துசேரும் வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

World News

Image
போதைப்பொருட்கள் அதைப் பயன்படுத்துபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரை, உறவுகளை எல்லாம் தாண்டி ஒரு பெரிய தேசத்தின் தேர்தல் முடிவுகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு போகும் ஆபத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் தெரிகிறது. அந்த தேசம் அமெரிக்கா. போதைப்பொருள் பயன்படுத்தியவர். 53 வயது தொழிலதிபர், சட்டம் படித்தவர். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். முதலாவது, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அவருடைய வருமானத்தின் ஒரு பகுதிக்கு கட்ட வேண்டிய 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரிப்பணம் கட்டவில்லை. அடுத்தது, அவர் 11 நாட்களுக்கு ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். அதுகுறித்து கேட்டபோதுதான் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்கிற தகவலை மறைத்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான தண்டனை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைவாசம்.

Sports in Tamil

Image
மும்பை : சேதேஷ்வர் புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 12-ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

World News

Image
மாஸ்கோ : ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது.

World News

Image
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், "ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான அணியில் சீனியர் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புஜாரா கடந்த 3 ஆண்டுகளாக சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

World News

Image
நியூஃபவுண்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஈடுபட்டது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இதில் பைலட் உட்பட 5 பேர் பயணம் செய்ய முடியும். ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட, டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தை ஓசன்கேட் தொடங்கியது. இந்த சாகச சுற்றுலா மூலம், டைட்டானிக் கப்பலை பார்வையிட ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 46 சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

World News

Image
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்ற பெருமையை இந்தியா நீண்ட காலமாக கொண்டுள்ளது. ஆனால், உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அதைப் பற்றி விமர்சிப்பவர்களை அடக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அவர்களின் உரிமைகள் மேம்படவும், சுதந்திரமான பேச்சுரிமைக்கும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?’’ என அந்த நிருபர் கேள்வி எழுப்பினார்.

Sports in Tamil

Image
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தின்போது இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு, ரெஃப்ரீ பிரஜ்வால் சேத்ரி, ரெட்கார்டு வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பந்து ஆடுகள லைனுக்கு வெளியே வந்தது. அதை பாகிஸ்தான் அணியின் டிபன்டர் அப்துல்லா இக்பால், எடுத்து த்ரோ செய்ய முயன்றார். அப்போது லைனுக்கு வெளியே இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அப்துல்லா இக்பாலின் கைகளில் இருந்த பந்தை தட்டிவிட்டார்.

Sports in Tamil

Image
பெர்லின்: சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டில் இந்தியாவின் பதக்க வேட்டை 50-ஐ தாண்டி உள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 55 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 17 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கும். தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேறுள்ளனர்.

Sports in Tamil

Image
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் இந்த தொடரை இங்கிலாந்து அணி கண்காட்சியாக மாற்றும் அபாயகட்டத்தில் இருப்பதாக முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் ஆதங்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கீழ்ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடி வருகிறது. இவர்களது ஆட்டம்கிரிக்கெட் உலகில் ‘பாஸ்பால்’ என வர்ணிக்கப்படுகிறது. பாஸ்பால் பாணியில் அதிரடி வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ‘பாஸ்பால்’ புரட்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

World News

Image
நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பல் சிதைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1,600 அடி (487 மீ) தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஆடம் ஜான் தெரிவித்தது. டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் நீரில் மூழ்கக்கூடியவை என்று நம்பப்படுகிறது. கடலில் டைட்டன் வெடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அமெரிக்க கடற்படை கடலுக்குள் ஏதோ வெடிப்பு ஏற்பட்ட சத்தத்தை கேட்டது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசு தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

World News

Image
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

Sports in Tamil

Image
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் மோதின.இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் கோல் அடித்துஅசத்திய கேப்டன் சுனில் சேத்ரி 16, 72-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றினார். தொடர்ந்து 81-வது நிமிடத்தில் உதாந்த சிங் குமம் கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி 3 கோல்கள் அடித்ததன் மூலம் ஆசிய கால்பந்து வீரர்களில் அதிககோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இந்த மைல் கல் சாதனையை சுனில் சேத்ரி தனது138-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் ஆசிய வீரர்களில் மலேசியாவின் மொக்தார் தஹாரி (1972 முதல் 1985 வரை) 89 கோல்கள் அடித்து 2-வது இடம் வகித்திருந்தார். தற்போது சுனில் சேத்ரி 90 கோல்களுடன் அவரை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

World News

Image
நியூஃபவுண்ட்லேண்ட்: இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இதனால் நீர்மூழ்கியில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இது கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறன் படைத்தது. இதில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் செல்ல ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம்.

World News

Image
வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். நேற்றைய தினம் மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். எலான் மஸ்க் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்றும் ஆன்மீகம் முதல் எரிசக்தி வரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம் என்றும் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

World News

Image
நியூயார்க் : நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மோடி அங்கு, வரும் 25-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : நிதி பற்றாக்குறையால் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி இழந்துள்ளது தெரியவந்துள்ளது. உலக சாம்பியனான அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் மைதானத்தில் நான்கு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ட்ரேட் மார்க்கான இடது-கால் மூலம் பந்தை ஸ்ட்ரைக் செய்து கோலாக மாற்றி இருந்தார் மெஸ்ஸி. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல், இந்தோனேசியாவுடனும் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Sports in Tamil

Image
மும்பை : எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கதையை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்துள்ளார். 2007 டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் (வொயிட் பால்) நிரந்தர கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். முன்னதாக, தோனி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு சச்சின் பரிந்துரையே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவலாக சில கதைகள் சொல்லப்பட்டுவந்தன.

World News

Image
புதுடெல்லி : அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ட்விட்டர் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது ஆகும். முன்னதாக, கடந்த 2015-ல் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு சென்றிருந்தபோது பிரதமர் மோடி மஸ்கை சந்தித்திருந்தார். அப்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கவில்லை.

Sports in Tamil

Image
பர்மிங்காம் : ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது.