World News

நியூஃபவுண்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஈடுபட்டது.

இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இதில் பைலட் உட்பட 5 பேர் பயணம் செய்ய முடியும். ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட, டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தை ஓசன்கேட் தொடங்கியது. இந்த சாகச சுற்றுலா மூலம், டைட்டானிக் கப்பலை பார்வையிட ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 46 சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News