World News
நியூஃபவுண்ட்லேண்ட்: இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.
இதனால் நீர்மூழ்கியில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இது கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறன் படைத்தது. இதில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் செல்ல ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம்.
Comments
Post a Comment