Posts

Showing posts from December, 2021

World News

Image
ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று டெட்ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கரோனா பெருந்தொற்றிலிருந்து எந்தவொரு நாடும் முழுமையாக விடுபடவில்லை. கரோனாவைத் தடுக்கவும் கரோனாவால் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்கவும் இன்று நிறைய மருத்துவ உபகரணங்கள் உள்ளன. ஆனால் தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் சமநிலை இல்லை. எவ்வளவு காலம் தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவமின்மை நீடிக்கிறதோ புதிய வைரஸ் உருமாற்றங்களுக்கான வாய்ப்பும் அவ்வளவு அதிகம். ஆகையால் நாம் தடுப்பூசி சமத்துவமின்மையை குறைத்தால் கரோனா பெருந்தொற்றையும் ஒழித்துவிடலாம். கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டை நாம் அடைந்துள்ளோம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்த ஆண்டு தான் கரோனாவின் இறுதியாண்டாக இருக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.

World News

Image
பியாங்யாங்: இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை கவனம் ஈர்த்துள்ளது. வட கொரியா என்றாலே ராணுவ பலம் பற்றி செய்திகள் தான் எப்போதும் வெளிச்சத்துக்கு வரும்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம் பெறவில்லை, புதிய கேப்டனாக கே.எல்.ராகுலும், துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல்,ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உடற்தகுதியில்லாததால் சேர்க்கப்படவில்லை, டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி வரும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

World News

Image
ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டான 2022-ம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். உலகின் நேரக் கணக்கின்படி பசிபிங் தீவில் உள்ள டோங்கா, சமோவா, கிரிபாட்டி, கிறிஸ்துமஸ் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும். ஆனால், நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறப்பது கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,72,093 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து worldometers இணையதளம் வெளியிட்ட தகவலில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,72,029 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,362 பேர் பலியாகினர். புதன்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நியூயார்க், நியூஜெர்சி, சிகாக்கோ ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் 11 வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர் ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
கான்பரா: ஆஸ்திரேலியாவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அருங்காட்சியமாக இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 20க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். நிலைமையை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குள்ளும் கரோனா வைரஸ் ஊடுவிவிட்டது. இங்கிலாந்து அணியின் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடமாட்டார் அவருக்குப்பதிலாக உஸ்மான் கவாஜா விளையாடுவார் எனத் தெரிகிறது. ஆனாலும் 14 நாட்கள் சிகிச்சைக்குப்பின் டிராவிஸ் ஹெட் ஹோபர்ட்டில் நடக்கும்கடைசி டெஸ்டில் விளையாடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: 2010ம் ஆண்டுக்குப்பின் (2016ம் ஆண்டு தவிர) இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக வெற்றிகளை இந்திய அணி 2021ம் ஆண்டில் பெற்றுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 8 வெற்றிகளைப் பெற்றது, இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிடைத்ததாகும். செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. செஞ்சூரியனை தனது கோட்டையாக வைத்திருந்த தென் ஆப்பிரிக்காவை அந்த கோட்டையில் வைத்தே இந்திய அணி வீழ்த்தியது. இரு அணிகளிலும் சேர்த்து 40 விக்கெட்டுகளில் 38 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: தென் ஆப்பிரி்க்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக திடீரென நேற்று அறிவித்துள்ளார். 29 வயதாகும் டீ காக் மிக இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார். இதனால், இந்திய அணிக்கு எதிராக அடுத்து நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் டீ காக் விளையாடமாட்டார். டீ காக் இல்லாதது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

World News

Image
சூடானில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி மாற்றத்தால் அங்குள்ள செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானில் நோபிள்ஸ் குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இக்குழும நிறுவனர் முகமதுஅல்-மமூன். இக்குழுமம் ரயில்வே,கப்பல், பெட்ரோ ரசாயனம், வேளாண்துறை மற்றும் டைல்ஸ்உற்பத்தி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதில் டைல்ஸ் ஆலை ஆர்ஏகே செராமிக்என்ற பெயரில் காரி தொழிற்பேட்டையில் செயல்படுகிறது.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சின் துணையுடன், செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என்று சொல்லப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

World News

Image
நியூயார்க்: டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளின் பரவல் உலக அளவில் இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும், இந்த கரோனா சுனாமியால் உலக சுகாதார கட்டமைப்பை உலுக்குகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

Sports in Tamil

Image
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தை பாராட்டி ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஸ்பெயினில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்தகிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கிடாம்பி ஸ்ரீகாந்த், பதக்கம் வென்றால் அவருக்கு அரசு பணியும், ரூ.7 லட்சம் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: செஞ்சூரியனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் எல்கர் (15), பீட்டர்ஸன் (17) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

World News

Image
பெர்லின்: உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தன்னுடைய ஆசையைத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. தொடர்ந்து 3-வது முறையாக ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்து வருகிறது.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: " கிரிக்கெட்டில் என்னுடைய வெற்றிக்கு முழுக் காரணம் என் தந்தைதான். அவர் இல்லாவிட்டால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது " என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்தார். செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி தனது 200-வது விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: இந்திய அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்துவீச்சால் செஞ்சூரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரி்க்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சேர்த்து, 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் 5-வது இடத்தை ஷமி பெற்றார். இதற்கு முன் கபில்தேவ் (434), இசாந்த் சர்மா (311), ஜாகீர்கான் (311), ஜவஹல் ஸ்ரீநாத் (236) ஆகியோர் வீழ்த்தியுள்ளனர்.

World News

Image
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1919-ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் இங்கிலாந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் இங்கிலாந்து ராணி 2-ம்எலிசபெத்தைக் கொல்லப்போவதாக மர்ம நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் முகமூடி அணிந்த அந்த நபர் தன் பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும் தான் ஒரு இந்திய சீக்கியர் என்றும் கூறி ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக ராணி எலிசபெத்தைக் கொலை செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்த மனிதர் கையில் வில்லுடன் உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

World News

Image
புக்கர் பரிசு வென்ற நியூசிலாந்து எழுத்தாளர் கெரி ஹுல்ம் (74) நேற்று முன்தினம் காலமானார். நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள வெய்மேட் நகரில் 27-ம் தேதி காலையில் கெரி காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இறப்புக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

Sports in Tamil

Image
மெல்போர்னில் நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது. ஆட்டம் தொடங்கி 3-வது நாளில் முடிவு கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அறிமுக வீரர் போலந்த் 6 விக்ெகட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்குக் காரணமாக அமைந்தார். 4 ஓவர்கள் வீசிய போலந்த் ஒரு மெய்டன் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த வீச்சை நிரூபித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

World News

Image
மாபுடோ: உணவுப் பொருள் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு 500 டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ 'சாகர்' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி இந்திய கடற்படையின் கேசரி கப்பல் மூலம் பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏர்கெனவே மாலத்தீவு, மொரிஷியல், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Sports in Tamil

Image
புதுடெல்லி : ரவி சாஸ்திரியின் வேலை வெண்ணை தடவிப் பேசுவது இல்லை. ரவி சாஸ்திரி பேசியதை அஸ்வின்தான் தவறாகப் புரிந்து கொண்டார் என்று தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் “ கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவை புகழ்ந்து, வெளிநாடுகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதால் நான் நொறுங்கிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

World News

Image
காபூல்: நீண்ட தூரப் பயணத்துக்கு ஆண்கள் வழித்துணையாக வந்தால் மட்டுமே பெண்கள் தனியாகச் செல்ல முடியும் என்று தலிபான் அரசு கெடுபிடி விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்தபின்னர் அங்கு பெண்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் நிலவி வருகின்றன.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: செஞ்சூரியனில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. செஞ்சூரியனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணாக ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Sports in Tamil

Image
செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம்அடித்து, வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியிடித்துள்ளார். செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

World News

Image
நியூயார்க்: அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலால் குழந்தைகள் நல வார்டு நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இன்று 110க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

Sports in Tamil

Image
ஜெய்ப்பூர்: ஷுபம் அரோரோவின் சதம், கேப்டன் ரிஷி தவண் ஆகியோரின் ஆட்டத்தால் ஜெய்பூரில் நேற்று நடந்த விஜய் ஹசாரோ கோப்பைக்கான இறுதிஆட்டத்தில் தமிழக அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாச்சலப் பிரதேச அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட் செய்த தமிழக அணி 49.4 ஓவர்களில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இமாச்சலப்பிரதேச அணி களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: கே.எல்.ராகுலின் அற்புதமான சதம், மயங்க்அகர்வாலின் அரைசதம் ஆகியவற்றால் செஞ்சூரியனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தை அளித்துள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Sports in Tamil

Image
செஞ்சுரியன்: செஞ்சுரியன் நகரில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி 117 ரன்கள் குவித்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் மயங்க் அகர்வால் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 123 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின், சேதேஷ்வர் புஜாரா ரன் எடுக்காத நிலையில் நிகிடி பந்தில் நடையை கட்டினார். கே.எல்.ராகுலுடன் இணைந்த கோலி பொறுமையாக விளையாடினார். ஆனால், 35 ரன்களில் நிகிடி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே களமிறங்கினார். சீராகரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல்தனது 7-வது சதத்தை விளாசினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

World News

Image
புதுடெல்லி: எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 90. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு. வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்துகொள்ள வழி வகுத்தது.

World News

Image
மியான்மரின் கயா நகரில் ராணுவத்தால் கொல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்பான 'காரென்னி' உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காரென்னி அமைப்பு வெளியிட்ட தகவலில், “மியான்மரின் கயா நகரில் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரும் அடங்குவர். மியான்மர் ராணுவத்தின் இந்த மனிதத் தன்மையற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை

Sports in Tamil

Image
புதுடெல்லி: நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன், அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 1998-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Sports in Tamil

Image
செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ டிவி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே வென்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வந்துவிட்டது. எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இந்திய அணி களமிறங்கும்போது, சிறப்பாக விளையாடி வென்றிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

World News

Image
நியூயார்க்: உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 108 நாடுகளில் 151,368 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

World News

Image
நார்வே நாட்டில் வெளியாகியுள்ள சான்ட்டா க்ளாஸ் விளம்பரம் ஒன்று வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதன் மையம், தன்பாலின ஈர்ப்பாளர் ஆதரவு என்பதே கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கால விளம்பரங்கள் ஒரு பாரம்பரியம். பல தரப்பட்ட பொருள்கள், சேவைகளுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் விளம்பரங்கள் வெளியாகும். அதிலும் குறிப்பாக சான்ட்டாவுடன் வெளியாகும் விளம்பரங்கள் மக்களை ஈர்க்கும். இந்த கிறிஸ்துமஸுக்கு நார்வே நாட்டு தபால் சேவைத் துறை சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 'வென் ஹென்ரி மீட்ஸ் சான்ட்டா' (When Harry meets Santa) என்ற அந்த விளம்பரம் 4 நிமிடங்கள் ஓடுகிறது. நடுத்தர வயது ஆண் ஒருவர் வடதுருவத்தில் உள்ள சான்ட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் இந்த கிறிஸ்துமஸுக்கு நீங்கள் எனக்கு வேண்டும் என்று எழுதி அனுப்புகிறார். அவருடைய ஆசை நிறைவேறுகிறது. அந்த விளம்பரத்தின் முடிவில் ஹென்ரியும், சான்ட்டாவும் முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அப்போதுதான் நமக்கு அந்த விளம்பத்திரன் நோக்கம் புரிகிறது. ஆம், இந்த சான்ட்டா ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்.

World News

Image
புதுடெல்லி: கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன... ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன 'டெல்மைக்ரான்' வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது, பாதிப்பு எப்படி இருக்கும்? - அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ... டெல்மைக்ரான் என்றால் என்ன? - கரோனா வைரஸின் இரட்டை திரிபுதான் 'டெல்மைக்ரான்' வைரஸ். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வேகமாக டெல்மைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. அதாவது, கரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய இரு குணங்களையும் கொண்டதுதான் 'டெல்மைக்ரான்' வைரஸ்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று ட்விட்டரில் அறிவித்தார். 1998-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ செய்தியில், “பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் கதறுகிறார். ஒவ்வொருவரின் வேதனைக்கும் வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கடந்த 2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவைப் புகழ்ந்து, வெளிநாடுகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் எனப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதால் நான் நொறுங்கிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 231 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 6,400 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Sports in Tamil

Image
லாகூர்: பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். இங்கு மதச்சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல், கோயில்களை சூறையாடுவது நிறுத்தப்பட வேண்டும் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள ராஞ்சூர் லைன் பகுதியில் கடந்த 20ம்தேதி இந்து கோயிலை ஒன்றை சிலர் அடித்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் முன்னாள்வீரர் டேனிஷ் கனேரியா கடும்கண்டனத்தை ட்விட்டரில் பதவி செய்துள்ளார்.

World News

Image
இந்த கிறிஸ்துமஸுக்கு நெருங்கியவர்களுக்கு பரிசளிக்க நாட்டு மக்களுக்கு ஒரு யோசனையைக் கூறியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். பைபிளில் ஒரு வசனம் உண்டு. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே அது.

World News

Image
பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “கரோனாவுக்கு எதிரான முதல் மாத்திரையை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. கரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் 90% பயனளிக்கக் கூடியவை. இது வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

World News

Image
பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “கரோனாவுக்கு எதிரான முதல் மாத்திரையை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. இந்த மாத்திரைகளை வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் 90% பயனளிக்கக் கூடியவை. இது வேகமாக பரவி வரும் ஓமைக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

World News

Image
நியூயார்க்: தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் ஒமைக்ரான் அறிகுறி குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதன்பிறகு கரோனா தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இப்போது அது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அலை உச்சத்தைத் தொட்டு சரிவதாகக் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

World News

Image
ஜெனீவா: பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை உலக நாடுகள் ஒழித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விநியோகத்தில் சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலகின் ஒருசில பகுதிகளில் மட்டும் தடுப்பூசி திட்டம் சரிவர செயல்படுத்தப்படாமல் அங்கு கரோனா பரவல் தொடர்ந்தால் அது புதுப்புது உருமாற்றங்களுக்கே வழிவகுக்கும் என ஹூ நீண்ட நாளாக எச்சரித்து வருகிறது.

World News

Image
ஜெனீவா: டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகும் விகிதம் குறைவு என்பதை நிரூபிக்க உலக சுகாதார அமைப்பிடம் போதிய புள்ளிவிவர ஆதாரங்களை இல்லை.