Posts

Showing posts from September, 2021

Sports in Tamil

Image
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆட்டத்தை வெற்றியுடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் முடித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

World News

Image
ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், ஐ.நா.,வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில், ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினார். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், ஆப்கனின் முன்னாள் அரசின் ஐ.நா. பிரதிநிதியும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் தோனி பிடித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Sports in Tamil

Image
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்து மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் வெளியேறினார். இதனால் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் கெயில் விளையாடமாட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. கரீபியன் ப்ரீயமியர் லீக் தொடரின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்தவாறு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் இணைந்தார். இதனால் பயோ-பபுள் சூழலில் தொடர்ந்து இருந்ததால், கெயிலுக்கு பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் அணியிலிருந்து வெளிேயறினார்.

World News

Image
பாகிஸ்தான் நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. இது கவலையளிக்கிறது எனக் கூறியிருக்கிறார் அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி. கடந்த காலங்களில் அமெரிக்காவுடன், அப்போதைய ஆப்கன் அரசும் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தது. தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கனின் குளிர் காலத்தில் தலிபான் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் தஞ்சமளிப்பது, தலிபான் தலைவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வந்தது.

Sports in Tamil

Image
கடினமான நேரத்திலும், வெற்றியின்போதும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீட்டு மீண்டு சிஎஸ்கே திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Sports in Tamil

Image
வலுவாக திரும்பி வருவோம் என்று கடந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் முதல்முறையாக சிஎஸ்கே வெளிேயறியபோது தோனி கூறியவார்த்தைகள் இவை. ஆனால், இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றை சிஎஸ்கே அணி உறுதி செய்து, வலுவாக திரும்பி வந்துள்ளது. பிராவோ, ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சால், ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

World News

Image
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. மாநாடுநடைபெற்று வருகிறது. இதில்"வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் 2014-ல் நோபல் பரிசு பெற்றகைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது: கரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு பதிலாக என்னை தவறாக ட்விட்டரில் டேக் செய்கிறீர்கள் என இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பரான அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

World News

Image
இது உங்கள் நாடு. இதைவிட்டு வெளியே செல்லாதீர்கள் என சொந்த நாட்டிலிருந்து செல்ல முற்படும் மக்களை பாகிஸ்தான் எல்லையில் தடுத்து நிறுத்தி கெஞ்சி வருகின்றனர் தலிபான்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் செல்லும் எல்லைப் பகுதிகளில் பிரதானமானது ஸ்பின் போல்டக் பகுதி. இங்கிருந்து சில 100 மீட்டர் நடந்து சென்றால் போதும் பாகிஸ்தான் வந்துவிடும்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தலிபான்கள் தடை போட்டுவரும் நிலையில், இன்று காபூலில் ஒரு பள்ளியின் முன் சில பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். ஆப்கன் தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வாயிலில் இன்று 6 பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் ஒரு பதாகை வைத்திருந்தனர்.

World News

Image
ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடா, ட்விட்டரில் பகிர்ந்த ஒரே ஒரு புகைப்படத்தால் அனைவராலும் அறியப்படும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கரோனா பெருந்தொற்றைக் கையாணட விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.

World News

Image
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாத ஊரடங்குக்குப் பின்னரும் கரோனா கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களாக ஊரடங்கு நீடிக்கிறது. எனினும் அங்கு கரோனா தொற்று குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மெல்போர்ன் நகரில் புதன்கிழமை 900 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் காரணமாகவே மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.

World News

Image
ஈக்வேடாரில் சிறையில் நடந்த கலவரத்தில் 100 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். ஈக்வேடார் சிறைச் சாலைகளில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் மீண்டும் நாட்டின் முக்கிய சிறைச் சாலையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

World News

Image
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,190 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,23,276 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,190 பேர் கரோனாவுக்கு பலியாயுள்ளனர்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்யா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை வீழ்த்தி தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் 15க்கும் மேற்பட்டோர் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். இதனால், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இதுவரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.

Sports in Tamil

Image
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து கோடிக் கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மியாப்பூர், பூச்சுபள்ளி, கச்சிபவுலி, மைலார்தேவ் பள்ளி ஆகிய பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் நடத்திய 23 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் ரொக்கம், மற்றும் லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.20 கோடி ஆகும்.

World News

Image
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்திருப்பதால் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 8.2-லிருந்து 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளது கோல்ட்மேன் சாச் நிறுவனம். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீத பங்களிக்கும் 17 மாகாணங்களில் கடந்தசில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பெருமளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள்,டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

World News

Image
ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள் என இந்திய அரசுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் காபூலைக் கைப்பறியதுமே பல்வேறு நாடுகளும் அவசர கதியில் தத்தம் மக்களை இயன்றவரை ஆப்கனில் இருந்து மீட்டன. அந்த வகையில் இந்திய விமானப்படையின் விமானம் கடைசியாக ஆகஸ்ட் 15ல் ஆப்கன் சென்று இந்தியர்களை மீட்டு வந்தது. அதன்பின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்கப் படைகளும் முழுமையாக வெளியேறின. கடைசி நாட்களில் மக்கள் விமான நிலையத்தில் திரண்டதாலும், ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலாலும் விமான நிலையம் சேதமடைந்தது. தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைக்கவும் கால தாமதமானது. இதற்கிடையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான விமானப் போக்குவரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக துண்டித்தன.

Sports in Tamil

Image
நியூஸிலந்துக்கு எதிரான 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்மா செய்தாரா என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மோர்கன், அஸ்வின், டிம் சவுதி இடையிலான வார்த்தை மோதல்தான் பெரும் சர்்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

World News

Image
உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று பரவும் வீதமும், இறப்பும் 10% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த வாரத்தில் கரோனா பரவலும், அதனால் ஏற்படும் இறப்பும் உலக அளவில் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த வாரத்தில் கரோனா பரவும் வீதமும், இறப்பும் 10% குறைந்துள்ளது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கரோனா பரவும் வீதம் குறைந்துள்ளது. மாறாக ஆப்பிரிக்காவில் அதிகரித்துள்ளது. ”என்றார்.

World News

Image
ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கரோனா பெருந்தொற்றைக் கையாணட் விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவமானதுக்குரியது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

World News

Image
ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு, ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு திங்கட்கிழமை அதன் முடிவுகள் வெளியாகின. சமூக ஜனநாயகக் கட்சி 25.7% வாக்குகளைப் பெற்றது. ஏஞ்சலா மெர்க்கல் தலைவராக உள்ள ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 24.1% வாக்குகளைப் பெற்றது. கிரீன்ஸ் கட்சி 14.8% வாக்குகளைப் பெற்றுள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி 11.5% வாக்குகளைப் பெற்றது.

World News

Image
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள தலிபான் அரசை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம்பெற்றோரில் 15க்கும் மேற்பட்டோர் ஐ.நா.வால் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். இதனாலேயே சர்வதேச சமூகம் ஆப்கனின் தலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றன.

World News

Image
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்துள்ளனர் தலிபான்கள். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் அங்கு தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைத்தனர். ஆனாலும் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க இன்றளவும் தயக்கம் காட்டிவருகிறது.

Sports in Tamil

Image
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, குர்னல் பாண்டியாவின் செயல் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கான வெளிப்பாடாக அமைந்தது. அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது.

World News

Image
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நியூசிலாந்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்லாந்தில் மட்டும் பெரும்பாலானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
மோர்கன், அஸ்வின் இடையே நடந்த மோதலின்போது சமாதானத் தூதர் போலத்தான் செயல்பட்டேன் என்று கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

World News

Image
பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியின்போது, கொலைக் குற்றவாளிகள் என்று அறிவித்த பெண் நீதிபதிகளைத் தேடிச் சென்று கொலையாளிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் நீதிக்கும், நீதிபதிக்குமே பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியபின் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் எனத் தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள்.

Sports in Tamil

Image
இந்திய அணிக்கு அடுத்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும். கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்தை துணை கேப்டன்களாக நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஆனால், அதன்பின், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இதுவரை பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

World News

Image
சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கரோனா காரணமாக சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.

World News

Image
கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரை செய்துள்ளன. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறும்போது, “கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.

World News

Image
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு 1,836 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,836 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில், 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

World News

Image
பேஸ்புக் வீடியோவால் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயுடன் இணைந்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர். அப்துல் குத்தூஸ் முன்ஸிக்கு 10 வயது இருந்தபோது அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். மேற்கே உள்ள ராஜ்ஸஹி எனும் கிரானத்திற்குச் சென்றார். ஆதரவற்று திரிந்த அவரை அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தத்தெடுத்துக் கொண்டனர்.

World News

Image
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்கள் எதிர்ப்புப் படையில் இருந்த போராளியின் குழந்தையைத் தலிபான்கள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கனில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், நாளுக்கு நாள் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரைக் கொன்று பொதுவெளியில் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.

World News

Image
30 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் என்னவென்று கிரெட்டா துன்பர்க் உலகத் தலைவர்களை விளாசியிருக்கிறார். இத்தாலியின் மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate) காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமிருந்து 190 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கிரெட்டா துன்பர்கும் கலந்து கொண்டார். ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

World News

Image
நிலக்கரி பற்றாக்குறையால் சீனாவின் பல்வேறு நகரங்களிலும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், சீன தொழிற்சாலைகள் பல முடங்கியுள்ளன. இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் சீனப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. (கோல்ட்மேன் சாக்ஸ் குழும நிறுவனம் என்பதொரு உலக அளவிலான முதலீட்டு வங்கி மற்றும் பத்திரங்கள் நிறுவனமாகும்)

World News

Image
லண்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்படுத்தப்பட்டார். 28 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியரான சபீனா நெஸ்ஸா தெற்கு லண்டனில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் கொலை செய்யப்பட்டு, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

Sports in Tamil

Image
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்துவரும் 14-வது ஐபிஎல் சீசனோடு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல்வேறு ஊகச் செய்திகள் வந்தபோதிலும் அதை சிஎஸ்கே நிர்வாகிகளும், உரிமையாளர்களும் மறுத்து வருகிறார்கள். ஆனால், வதந்திகள் அடங்குவதாக இல்லை. தோனியின் உடல் கட்டுக்கோப்பு, இளைஞர்களுக்கு இணையாகக் களத்தில் விளையாடுதல் போன்றவற்றால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பு கூறுகிறது.

World News

Image
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு நடுவே ரஷ்யாவிடமிருந்து மீண்டும் ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவிடமிருந்து இரண்டாவது முறையாக ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளது. துருக்கியின் இம்முடிவுக்கு அமெரிக்கா முன்னரே எதிர்ப்பு தெரிவித்தது.

World News

Image
பெண்கள் படிக்கவோ, பணிக்காகவோ காபூல் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம் என புதிய வேந்தராக தலிபான்களால் நியமிக்கப்பட்ட முகமது அஷ்ரஃப் கைராத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பெண் சுதந்திரத்துக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன.

World News

Image
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் நிபந்தனைகள் ஏதுமின்றி முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் மீது கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜான் ஹின்க்ளே என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். வாஷிங்டன்னில், ஹில்டன் ஹோட்டலின் வெளியே இந்தத் தூப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

World News

Image
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது மூட்டை வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரான்ஸின் லியோனில் நகரில் நடந்த சர்வதேச உணவு வர்த்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, ​​பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மக்ரோனின் பாதுகாவலர்கள் அந்த மர்ம நபரிடமிருந்து மக்ரோனைக் காப்பாற்றினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
ஏவுகணை, அணு ஆயுதங்கள் என பல்வேறு ஆயுத சோதனைகளையும் தொடர்ந்து நடத்திவரும் வட கொரியா, ஆயுத சோதனை நடத்துவது எங்களின் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வடகொரிய பிரதிநிதி கிம் சாங், நாங்கள் எங்களது தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவே ஆயுத சோதனைகளை மேற்கொள்கிறோம். அதன் மூலம் எங்கள் தேசத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறினார்.

Sports in Tamil

Image
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹலைத் தேர்வு செய்யாததற்கு தேர்வுக் குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சஹல் தேர்வு செய்யப்படவில்லை.

World News

Image
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் எவ்விதப் பாகுபாடுமின்றி வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஏழு பறக்கும் படையினர் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினருடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

World News

Image
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது.