Posts

Showing posts from August, 2021

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அவரை சக இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி முதுகில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

World News

Image
கத்தாரில் இந்தியத் தூரர் தீபக் மிட்டலைச் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் பங்ேகற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறயதையடுத்து, அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் தலிபான்கள் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ ஆட்சியும் அமைக்கப்படவில்லை.

World News

Image
எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளி யேறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தினர்.

Sports in Tamil

Image
மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன். இல்லாவிட்டால் 1.90 மீட்டர் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு. டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

World News

Image
இனி சீனக் குழந்தைகள் வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும். புதிய நடைமுறையை நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் அமல்படுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். புதிய சட்டத்தின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களில் இதே நேரத்தில் விளையாடலாம். அதேபோல் புதிய விதியின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர் , விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாடு பதிவு செய்துகொள்ள முடியும். சீனா இதற்கு முன்னதாகவும் கூட வீடியோ கேம் விளையாட்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

World News

Image
ஆப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொக்கவிட்டபடி தலிபான்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி உறைய வைக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்நாடு முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டது.

World News

Image
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப்பெறப்பட்ட நிலையில் முதன்முறையாக தலிபான் தலைவரை இந்திய தூதர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கத்தார் நாட்டில் நடந்துள்ளது. சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

World News

Image
ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் காரணமாக தலைநகர் கான்பெராவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டு நிலையில் மொத்த கரோனா பாதிப்பு 4 கோடியை நெருங்குகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,19,642 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 569 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3.9 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.0 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 6, 56,393 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக கலிபோர்னியாவில் 43 லட்சமும், டெக்சாஸில் 35 லட்ச பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

Sports in Tamil

Image
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ள நிலையில் இரு அணிகள் வருகையால் பிசிசிஐ அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடியில் வருமானம் கிடைக்க உள்ளது. ஐபிஎல் டி20 தொடர் 14-வது ஆண்டாக நடந்து வருகிறது. தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளன. இதற்காக குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமமும், மற்றொரு நிறுவனமும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

World News

Image
காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார்.

Sports in Tamil

Image
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்டெயின், இன்று அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

World News

Image
ஐஎஸ் கோராசான், தலிபான் தீவிரவாதிகள் இரு தரப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் இருவருக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. இரு தரப்புக்கும் பொது எதிரி அமெரிக்காதான். வன்முறை, ஆயுதக் கிளர்ச்சி, உயிர் பலி, ஷரியத் சட்டம் அடிப்படையிலான அரசு அமைவதையே தலிபான்களும், ஐஎஸ் கோராசான் தீவிரவாத அமைப்பும் லட்சியமாகக் கொண்டுள்ளன. கொள்கையளவில் இரு தீவிரவாத அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், களத்தில் இருவரும் எதிரிகளாகவே இருக்கிறார்கள்.

World News

Image
நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம் என்று விமானநிலைய ஓடுதளத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதியன்று முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அங்கிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதியை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கடைசி நாள் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்து வரும் 16-வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான பி1 ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலப்பதக்கம் வென்றார். முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற சிங்ராஜ், அறிமுகத்திலேயே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

World News

Image
தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மனிதநேய அடிப்படையில் உதவி தேவைப்படுகிறது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ படைகளுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

Sports in Tamil

Image
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைத் தொடர்ந்து ஷாகித் அப்ரிடியும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.

World News

Image
தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆப்கனில் இன்னமும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

World News

Image
தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடிக்குள் முழுமையாக வந்துவிட்டதால், இனிமேல் பெண் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்காது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த பஷேஸ்டா அர்காணட் ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.

World News

Image
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராகவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

World News

Image
கரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் யாகூப் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Sports in Tamil

Image
பாராலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய வட்டு எறிதல் வீரர் வினோத் குமாரிடமிருந்து வெண்கலப் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. அது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று காலை டோக்கியோ பாராலிம்பிக்ஸில் F52 பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் பங்கேறார். அவர் 19.9 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வெற்றிக்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். F52 பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று முறையிட்டனர்.

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வெறுள்ளார். மேலும் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அவர் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். F64 பிரிவில களமிறங்கிய சுமித் அன்டில், தனக்கு மொத்தம் வழங்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில், முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் ஈட்டியை எறிந்தார். அவரே 5வது முயற்சியில் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து புதிய உலகச் சாதனை படைத்தார்.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் “அபராமான விளையாட்டு அவனி லெகாரா @AvaniLekhara! உங்கள் கடின உழைப்பினால் உங்களுக்குத் தகுதியான தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மையினாலும், துப்பாக்கிச் சுடுதல் மீதான உங்கள் ஆர்வத்தின் காரணமாகவுமே இது சாத்தியமானது. இந்திய விளையாட்டுத் துறைக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான தருணம். உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். #Paralympics", என்று கூறியுள்ளார்.

World News

Image
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீனத் தொலைக்காட்சிக்கு சபிஹுல்லா அளித்த பேட்டியில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானார்கள். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும்.

World News

Image
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமனின் தென் பகுதியில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் தாக்குதல் நடத்தின. இரு அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் காரணமாக ஏமனின் தென் பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

World News

Image
காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் அலை கடலென திரண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புக விமான நிலையத்தில் குவிந்தனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

World News

Image
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மக்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகும் தலிபான்கள் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

Sports in Tamil

Image
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

World News

Image
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராக்கெட்டுகளின் இலக்கு அமெரிக்க படைகளா? இல்லை அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவில்லை ஆனால் ராக்கெட்டுகள் சத்தம் காதைப் பிளக்கிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில், மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இது பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான். அவானி 249.6 புள்ளிகள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

Sports in Tamil

Image
‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் 2-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஃபிட் இந்தியா’ கைபேசி செயலியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியபோது, ‘‘ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை கொண்டாடும் தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திய மக்களுக்கு இந்த செயலி அரசாங்கத்தின் பரிசாகும். விளையாட்டு வீரர்கள் உடற்தகுதியாக இருக்க இந்த செயலி அவசியம்’’ என்றார்.

World News

Image
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கடந்த 15-ம் தேதி கைப்பற்றினர். அங்கிருந்து அமெரிக்கர்களையும், அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கன் மக்களையும் மீட்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். T46/47 பிரிவில் அவர் 2.06 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் அமெரிக்க வீரர் ரோட்ரிக் டவுன்சீட் 2.15 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இன்னொரு இந்திய வீரர் ராம்பால் சஹார், 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.

World News

Image
அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்துக்குள் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிலிருந்து தற்போது வரை 1,12,000 பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இறுதிக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல். ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை இறுதி சுற்றில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் 34 வயதான பவினாபென் படேல்,உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜாங் மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவினாபென் படேல்.

World News

Image
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை பாராட்டியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50% மக்களுக்கு முதல்டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

World News

Image
தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் இரண்டு தனித்தனி அமைப்புகள், இரண்டையும் ஒன்றாக அமெரிக்கா பார்க்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில், ‘‘இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை நாங்க மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம்’’ எனத் தெரிவித்தார்.

Sports in Tamil

Image
உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது, நாடு உங்களை நாளை கொண்டாடும் என பவீனா பட்டேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியிக்கு முன்னேறி இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சீனாவில் மியா சேங்கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர், 2016ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்.

World News

Image
காபூலில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின் அங்குள்ள துர்க்மெனிஸ்தான் தூதரகத்தை குண்டுவைத்து தகர்க்க ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் முயன்றுள்ள நிலையில் அதனை தலிபான்கள் தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரமாக செயல்பட்டபோது கேரள மாநிலம் மலப்புரம், காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் இங்கிருந்து தப்பி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

World News

Image
காபூல் விமான நிலையத்திலிருந்து உடனே வெளியேறுங்கள் என்று குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நேற்றுமுன் தினம் (வியாழக்கிமை மாலை) ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பொறுப்பேற்றது.

World News

Image
ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்கா தாங்கள் குறிவைத்த இலக்கை கொன்றுவிட்டோம் என அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் கொரோஷான் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Sports in Tamil

Image
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியிக்கு முன்னேறி இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

Sports in Tamil

Image
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் 4-வது நாளான நேற்று மகளிருக்கான டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பவினாபென் படேல், பிரேசிலின் ஜாய்ஸ் டி ஆலிவியராவை எதிர்த்து விளையாடினார். இதில் பவினாபென் படேல் 12-10, 13-11, 11-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற கால் இறுதி சுற்றில் பவினாபென் படேல், நடப்பு சாம்பியனான செர்பியாவின் போரிஸ்லாவா பெரிக் ராங்கோவிச்சை எதிர் கொண்டு 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட்டில் வென்று அரை இறுதி சுற்றி கால்பதித்தார்.

World News

Image
காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தலிபான்கள் முதல் முறையாக பதிலளித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா கூறும்போது, “ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது கொள்கையை வகுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆப்கன் நிலத்தை வெளிநாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

World News

Image
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.