Posts

Showing posts from July, 2022

World News

Image
கொழும்பு: "இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக் காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்திராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது தீவு தேசமான இலங்கை. சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கரோனா ஊரடங்கு முதல் நெருக்கடியை தந்தது. அதனால், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. இதற்கிடையே அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு திவாலாகிவிட்டது.

Sports in Tamil

Image
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி கண்டது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது கிரீஸை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர்.

Sports in Tamil

Image
பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி (Achinta Sheuli). இது நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதான அச்சிந்தா ஷூலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். 73 கிலோ எடைப் பிரிவில் அவர் விளையாடி வருகிறார். காமன்வெல்த் போட்டியில் இதே எடைப்பிரிவில் அவர் பங்கேற்றார். இதற்கு முன்னர் 2021 ஜூனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கமும் வென்றுள்ளார்.

Sports in Tamil

Image
கோவை: நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL) சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பகிர்ந்து கொண்டன. மழை காரணமாக போட்டியில் முடிவு எட்டப்படாத காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 23-ம் தேதி டிஎன்பிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியது. மதுரை, சேப்பாக், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் என எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த 24-ம் தேதியோடு நடந்து முடிந்தது. நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன.

Sports in Tamil

Image
பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கானாவை 11-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இதுதான் முதல் போட்டி. குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இந்தியா, கானாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை வலைக்குள் தள்ளுவதில் குறியாக இருந்தனர். அதற்கான உந்துதலுடன் பந்தை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் ஆட்டத்தின் பெரும்பாலான நேரமும் வைத்திருந்தனர். அதன் பலனாக இந்திய அணிக்கு இந்த அற்புத வெற்றி சாத்தியமானது.

Sports in Tamil

Image
மகளிர் பிரிவு 2 வது சுற்றில் பாலஸ்தீனம் அணி 4-0 என்ற கணக்கில் கொமொரோஸ் அணியை வீழ்த்தியது. இந்த அணியில் இடம்பிடித்துள்ள ராண்டா சேடருக்கு 8 வயதே ஆகிறது. இதன் மூலம் அவர், இந்த செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தார். கொமொரோஸ் அணியை வீழ்த்திய பின்னர் தனது அணியுடன் உற்சாக போஸ் கொடுக்கிறார் ராண்டா சேடர்.

Sports in Tamil

Image
மனம் திறக்கும் கார்த்திகேயன் முரளி ஓபன் பிரிவில் இந்திய சி அணியில் இடம் பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி மெக்சிகோவின் கபோ விடல் யூரியலை தோற்கடித்தார். அவர், கூறும்போது, ” இந்திய அணிக்காக விளையாடுவது சிறப்பான விஷயம். ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என நாங்கள் இதற்கு முன்னர் நினைத்தது இல்லை. சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடுவது பெருமையாக உள்ளது. இந்தியாவில் அதிகளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளோம். இதனால் சி அணியில் இடம் பெறுவது என்பது ஒரு பொருட்டல்ல.

Sports in Tamil

Image
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது மால்டோவாவை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர். விதித் குஜராத்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரி கிருஷ்ணா, ஷிட்கோ இவானை எதிர்த்து விளையாடினார்.

World News

Image
சிட்டகாங் : வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ் ஒன்று ஏற்றிச் சென்றது. இந்தபஸ், டாக்கா நோக்கிச் செல்லும்போது வழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றுள்ளது.

World News

Image
புதுடெல்லி : இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து திரவுபதி முர்மு அனுப்பியுள்ள பதில் கடிதம்:

Sports in Tamil

Image
பர்மிங்ஹாம்/புதுடெல்லி : பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்கள் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளியும், குருராஜா வெண்கலமும், மீராபாய் சானு தங்கமும், பிந்த்யாராணி தேவி வெள்ளியும் வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடக்க நாளன்று கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெற்றன.

Sports in Tamil

Image
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிந்த்யாராணி தேவி சொரோகைபம் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார். ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியிலேயே 81 கிலோ எடையை தூக்கிய பிந்த்யாராணி தேவி, இரண்டாம் முயற்சியில் 84 கிலோ எடையையும் இறுதி முயற்சியில் 86 கிலோ எடையை தூக்கி அசத்தினார். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியில் 110 கிலோ எடையை தூக்கியவர், இரண்டாம் முயற்சியில் 114 கிலோ எடையை தூங்குவதில் தோல்வி கண்டார். என்றாலும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

Sports in Tamil

Image
மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் போன்ற முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sports in Tamil

Image
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக நடப்பு உலக சாம்பியனும், நார்வே நாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெற்று வருவது செஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் நேற்று சென்னை வந்து சேர்ந்தார்.

World News

Image
லண்டன்: பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பு வெறும் 10% மட்டுமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், பெண்கள் இந்திய அணிகள் வெற்றிகளை குவித்தன. 44-வது செஸ் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.

Sports in Tamil

Image
சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளனர். இதனால் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாடுவர்.

Sports in Tamil

Image
பர்மிங்ஹாம் : பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக தொடங்கின. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புடன் உற்சாகமாக விழா தொடங்கியது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இம்முறை புதிதாக 20 ஓவர் மகளிர் கிரிக்கெட், ஜூடோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

Sports in Tamil

Image
தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா. 191 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கைல் மேயர்ஸ் முதல் ஓவரிலேயே அதிரடியான துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த அர்ஷ்தீப் சிங்கின் ஓவரிலும் பவுண்டரி அடித்தார். என்றாலும் மூன்றாவது பந்திலேயே அவரை 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக்கினார் அர்ஷ்தீப். வழக்கமாக நடு வரிசையில் இறங்கும் ஜேசன் ஹோல்டர் இன்று ஒன் டவுனாக இறங்கினார். அவரை அடுத்த ஓவரிலேயே ஜடேஜா டக் அவுட் செய்தார்.

Sports in Tamil

Image
31 வயதான இந்திய வீராங்கனையான ஹரிகா, கடந்த பல ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பாக உள்ளார். அவருக்கு இது 8-வது ஒலிம்பியாட் போட்டியாகும். 2004ம் ஆண்டு அறிமுகமான அவர், தொடர்ச்சியாக 8 ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

Sports in Tamil

Image
1 அமெரிக்கா (சராசரி ரேட்டிங் 2771) : பேபியானோ கருணா (2783), வெஸ்லி சோ (2773), லெவோன் அரோனியன் (2775), லீனியர் டொமிங்குஸ்பெரெஸ் (2754), சாம் ஷாங்க்லாண்ட் (2720). 2 இந்தியா ஏ (சராசரி ரேட்டிங் 2696): பி.ஹரிகிருஷ்ணா (2720), விதித் குஜராத்தி (2714), அர்ஜூன் எரிகைசி (2689), எஸ்.எல்.நாராயணன் (2659), கே.சசிகிரண் (2638).

Sports in Tamil

Image
5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இம்முறை செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மாறாக இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர், கூறும்போது, “எந்த பகுதியில் நடைபெற்றாலும் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை. சமீபகாலமாக எனது கடமைகளை குறைத்து கொண்டு வருகிறேன்.

Sports in Tamil

Image
சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் தொடங்குகிறது. போட்டிக்காக மொத்தம் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரே நேரத்தில் இந்த 700 பலகைகளிலும் விளையாடும் 1400 வீரர்களின் ஆட்டத்தை இணையதளம் வழியாக கண்டுகளிக்கலாம்.

Sports in Tamil

Image
பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

Sports in Tamil

Image
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தான் திடீரென விலகி உள்ளது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வு வரும் ஆகஸ்ட் 10 வரையில் நடைபெறுகிறது. மொத்தம் 186 நாடுகளில் இருந்து சுமார் 2000+ வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

Sports in Tamil

Image
பர்மிங்ஹாம் : இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின் : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.

Sports in Tamil

Image
துபாய் : இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த ஆண்டு டி20 பார்மெட்டில் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக தொடரை வேறு இடத்தில் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. தற்போது தொடர் நடைபெறும் இடம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sports in Tamil

Image
ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இது சாத்தியம் ஆகலாம் என தெரிவித்துள்ளார் அவர். இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களில் அதிக வருமானம் ஈட்டும் டாப் ஐந்து விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான மோகம் கூடிக் கொண்டே உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 30 அல்லது 35 சதங்களை பதிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதோடு கோலியை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடியும் உள்ளார் அவர். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.

World News

Image
தன் கனவு நிறுவனத்தில் ஒரு வேலை. அதற்காக விடாமுயற்சியைக் கைவிடாமல் ஓர் இளைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டைலர் கோஹன். இவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், அவரின் இலக்கு எல்லாம் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.

World News

Image
மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான அம்ராவில் இன்று (புதன்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக ஆக பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கட்டிடங்கள் பலவும் சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை.

World News

Image
மாஸ்கோ: 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி பார்சோவ் கூறும்போது, "நாங்கள் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென ஒரு விண்வெளி நிலையம் தனியாக அமைக்கப்படும்” என்றார்.

World News

Image
குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன். உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். அந்த பேட்டியில் அவர், "குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

World News

Image
வாஷிங்டன் : உலகை அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்தபோதிலும், இந்தியாவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடான அமெரிக்காவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சர்வதேச செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ பல நாடுகளில் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின் : ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடரை வென்றுவிட்டதால் இந்திய அணி எந்தவித அழுத்தமும் இல்லாமல் இந்த ஆட்டத்தை அணுகுகிறது.

Sports in Tamil

Image
பர்மிங்காம்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் கழகம் உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா வெண்கலம் வென்றிருந்தார். இவர் எதிர்வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடவுள்ளார்.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனவே இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் நம் நாட்டுக்கு திரும்பலாம் என தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான்கள் கடந்த சில நாட்களாக இந்து, சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sports in Tamil

Image
மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயின் : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

World News

Image
புதுடெல்லி : இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ரஷ்ய, சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். திரவுபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Sports in Tamil

Image
சென்னை : உலக அளவில் விளையாட்டு, பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹாஸ்ப்ரோ (Hasbro). இது ‘மேஜிக்: தி கேதரிங்’, ‘நெர்ஃப்’, ‘மை லிட்டில் போனி’, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’, ‘மோனோபோலி’, ‘பேபி அலைவ்’, ‘பவர் ரேஞ்சர்ஸ்’ என்பது உட்பட 1,500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் பிரபலமான விளையாட்டுகளைக் கொண்டுள்ளது. கடந்த 2021 தொடக்கத்தில் ‘மோனோபோலி டீல்’ கார்டு விளையாட்டை இந்தியில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் தற்போது கிளாசிக் ‘மோனோபோலி’, ‘கேம் ஆஃப் லைஃப்’, ‘மோனோபோலி டீல்’ கார்டு கேம் ஆகியவற்றை முழுக்க முழுக்க தமிழில் அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளிலேயே தற்போது தமிழில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

World News

Image
குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மருந்துகள் பிரிவான பவேரியன் நார்டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இம்வாநெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திற்கும் ஐஸ்லாந்து, லீசஸ்டைன் மற்றும் நார்வே நாடுகளிலும் செலுத்தத்தக்கது.

World News

Image
லண்டன்: “ பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல்” என்று ரிஷி சுனக் ஆவேசமாகப் பேசினார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

Sports in Tamil

Image
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், டிஸ்னி ஸ்டார் ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெற முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் அவர் விளையாடிய அபார இன்னிங்ஸ் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் அங்கு 6,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது இந்த ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயாக மாறி இருக்கிறது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: உலக தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Sports in Tamil

Image
மாமல்லபுரம்/சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ‘நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ சாதனைக்காக நேற்று நடைபெற்ற செஸ் ஒத்திகைப் போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஒத்திகைப் போட்டியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகைபுரிந்துள்ளனர்.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 312 ரன்கள் தேவை. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரையும் 2-0 என்ற கணக்கில் வெல்லும். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன.

World News

Image
உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்குள்ளயே எழுப்பப்பட்டது. இதற்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.