Posts

Showing posts from January, 2022

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற ஸ்டார் நெட்வொர்க் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்கள் மத்தியில்தான் அதிகளவில் போட்டி இருக்கும். கடந்த முறை இந்தப் போட்டியை சமாளித்து ஸ்டார் நெட்வொர்க் அந்த உரிமையைப் பெற்றது. கடந்த வருட ஐபிஎல் சீசன் இரண்டு கட்டங்களாக நடந்ததால், ஸ்டார் நெட்வொர்க்கின் வருமானம் பாதித்ததாக சொல்லப்பட்டது. இதனால் இந்த முறை ஸ்டார் நெட்வொர்க் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெறுமா என்பதில் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்டார் இந்தியாவின் தலைவர் கே.மாதவன் விடைகொடுத்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற, ஸ்டார் நெட்வொர்க் தொடர்ந்து தனது முதலீட்டை செய்யும். அதிக முதலீடு செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். அனைத்து உரிமங்கள் புதுப்பித்தல்களிலும் நேர்மறையாக இருக்கப் போகிறோம். எங்கள் நிறுவனத்தின் 60%க்கும் அதிகமான பங்குகள் விளையாட்டில்தான் உள்ளது. எனவே, அதை தொடரவே விரும்புகிறோம். ஆனால் எங்கள் வரம்புக்குள் இருந்தால் மட்டுமே, ஒளிபரப்பு ஏலத்தை எடுப்போம்.

Sports in Tamil

Image
துபாய்: ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ஏற்ற ஒரு வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். ரோஹித்தின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள அவர், விராட் கோலியின் ஓய்வு தனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது என்றும் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் புகழ்பெற்ற கேப்டன் ரிக்கி பான்டிங். சமீபத்தில் இவர் ஐசிசிக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா தொடர்பாக பேசிய பான்டிங், "மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் கேப்டனாக நுழைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, முதல் சில ஆட்டங்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாட முடியாத நிலை. என் இடத்தை மற்றொரு இளம்வீரருக்கு கொடுக்க முடிவெடுத்து அந்த அணியில் இருந்து விலகினேன். எனக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு பொருத்தமான நபர் யார் எனக் கேள்வி எழுந்தபோது ஒரே ஒரு இளம் வீரர் மட்டுமே அணியை வழிநடத்த முடியும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. அதுதான் ரோஹித் சர்மா.

World News

Image
ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

World News

Image
ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மெத்வதேவை ரசிகர்களை சிலிர்க்கவைத்த ஆட்டத்தில் வீழ்த்திய ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரத்தை எழுதினார். 5 மணி 24 நிமிடங்கள் வரை நீடித்த இந்த காத்திரமான ஆட்டத்தில், நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார். டென்னிஸ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து படைத்த ஞாயிறுக்கிழமை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் - ஸ்பெயினின் ரஃபேல் நடால் மோதினர். இதுவே 2022-ம் ஆண்டின் மறக்க முடியாத முதல் டென்னிஸ் போட்டியாகவே ரசிகர்களுக்கு அமைந்தது.

World News

Image
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார்.

World News

Image
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பலமாக எதிர்ப்புகள் கிளம்பின.

Sports in Tamil

Image
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் என மேற்குஇந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கணித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகின்றன. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

World News

Image
நியூயார்க்: பிரபல பிடிஎஸ் இசைக் குழு குறித்து இன ரீதியாக அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழுவான பிடிஎஸ், உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இக்குழுவில் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

World News

Image
நியூயார்க்: கனடா - அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி கண்டெடுக்கப்பட்டனர்.

World News

Image
பெய்ஜிங்: புதிய கரோனா வைரஸ் ‘நியோகோவ்’, மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1920-களில் விலங்குகள், பறவைகளிடம் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘சார்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவியது. அதற்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது.

Sports in Tamil

Image
பரோடா: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் 26 வயது வீரர் தீபக் ஹூடா. கடந்த இரண்டு ஆண்டுகள் நிறைய சர்ச்சைகளை சந்தித்த ஹூடா, அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் தனது எட்டு ஆண்டுகள் கடின உழைப்பால் அணிக்கு தேர்வாகி இருக்கும் கதைதான் இது.

World News

Image
2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கரோனாவின் கோரத் தாக்குதலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நாடுகள் தப்பித்து இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா?

World News

Image
அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி வருகிறது. அந்தப் புகைப்படத்திலிருந்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜுவான் ஸ்டிபன் மோண்டோயா. இந்தப் பயணத்தின் பின்புலமும் வலி மிகுந்தது. விபத்துக்குள்ளான படகில் பல மணி நேரமாக நடுக்கடலில் பயணித்து வந்த ஜுவான், அமெரிக்க கடற்படையால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டபோது, அவரது உடலில் இருந்த அனைத்து நீர்ச்சத்தும் இழந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். உடனடியாக ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்து அவரை மீட்டனர்.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால். இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை தோற்கடித்து தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையா் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பிரபல ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை இன்று எதிர்கொண்டார். மெல்போர்னின் ராட் லேவர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மழை குறுக்கிட்டது. இதனால் மைதானத்தின் கூரை மூடப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஈரப்பதமான வானிலை மேட்டியோ பெரட்டினிக்கு சாதகமான ஒன்று. பலமுறை இதுபோன்ற தருணங்களில் மேட்டியோ பெரட்டினியின் கை களத்தில் ஓங்கியிருந்துள்ளது. இதனால் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறவைத்தது.

Sports in Tamil

Image
41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி. இந்த வெற்றி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் வென்று அவர் கோப்பையை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி இன்று நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டத்தில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 41 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஷ்லிக் பார்ட்டி. கடந்த 41 வருடங்களாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் டென்னிஸ் தொடரில் ஒரு ஆஸ்திரேலியர் கூட இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 1980ல் வெண்டி டர்ன்புல் என்பவர் கடைசியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார். அதன்பிறகு, இந்த நீண்டகால ஏக்கத்தை தீர்த்துள்ளார் பார்ட்டி.

World News

Image
ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது. 1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 ஆண்டு பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் ஹெலினாவுக்கு கவர்னராக வருகை புரிகிறார். இவருடன்தான் ஜொனாதனும் செயின்ட் ஹெல்னாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை செயின்ட் ஹெலினாவில், சுமார் 31 கவர்னர்களை ஜொனாதன் சந்திருக்கிறது. செயின்ட் ஹெலினாவின் கவர்னர் இல்லத்தில்தான் ஜொனாதன் தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறது.

Sports in Tamil

Image
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுடன், புதுமுகங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள், சர்ப்ரைஸ் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன், அணித் தேர்வு எப்படி இருக்கிறது என்பது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம். அடுத்த மாதம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை நிரூபித்து இருப்பதால் இந்தத் தொடர் மூலம் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். 1996ஆம் வெளியான ‘அஜய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனீல் தர்ஷன். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜான்வர்’, ‘ஏக் ரிஸ்டா’,‘டலாஷ்’, ‘அண்டாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளது. இயக்கம் தவிர்த்து சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவே அவர் இயக்கத்தில் வெளியாக கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் தர்ஷன், நடாஷா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

World News

Image
கரோனா பெருந்தொற்றையே உலகம் மறந்துவிடக்கூடிய அளவுக்கு, ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கில் மிகப் பெரிய ராணுவ மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டை அதற்குப் பக்கத்தில் உள்ள ரஷ்யா எந்த நேரமும் ஆக்கிரமிக்க முற்படலாம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள வட அட்லான்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள் அமைப்பும் கூறி வருகின்றன. உக்ரைன் எல்லைப்பகுதியில் கவச வாகனங்கள், டேங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்விமானங்கள் ஆகியவற்றுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளையும் ரஷ்யா தயார்நிலையில் வைத்திருக்கிறது. ரஷ்யப் படைகள்உள்ளே நுழைந்தால் தடுப்பதற்கு உக்ரைன் ராணுவமும் தயாராக இருக்கிறது. உக்ரைனுக்கு உதவநேட்டோ நாடுகளின் படைகளும் தயாராக இருக்கின்றன. அமெரிக்கா தன்னுடைய ராணுவத்தின் 8,500 துருப்புகளை தயார் நிலையில் இருக்கமாறு அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யா, இப்போது உக்ரைன் எல்லைக்கு அருகிலும், தான் ஆக்கிரமித்துள்ள கிரீமியாவிலும் போர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. நேட்டோ நாடுகளும் தங்களுடைய போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் கிழக்கு ஐரோப்பாவுக்கு விரைய

Sports in Tamil

Image
ஆடுகளத்தில் விராட் கோலி ஒரு பீஸ்ட்; ஆனால் மற்றபடி அவர் ரொம்பவே அமைதியான நபர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தாரின் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு தெரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பின்னர் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

Sports in Tamil

Image
ஒருநாள் கிரிக்கெட்டில் ரவிசந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்களை இந்திய பவுலர்கள் வீழ்த்தாதது தோல்விக்கான முக்கியக் காரணி.

World News

Image
உங்களது குழந்தைகள் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து போப் பிரான்சிஸ் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “பெற்றோர்கள் தங்கள் குழந்தை தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்தால் அவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஒரே பாலின திருமணத்தை சர்ச் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு கூட்டு உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பியுள்ளார். தாங்கள் விளையாடும் நாட்டையும் தாண்டி, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெறும் ஆற்றல் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆற்றலைப் பெற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் கிறிஸ் கெயில். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டியில் ஆடிவந்தாலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவரை நேசிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

Sports in Tamil

Image
இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு விருதுபெற தகுதியாகி இருக்கும் ஒரே ஹாக்கி வீராங்கனை இவர் மட்டுமே. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் அர்ஜென்டினா அணியுடன் போராடி தோற்றது இந்தியா. இந்த தோல்வியை அடுத்து ஹரித்வாரில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு திரண்ட ஒரு கும்பல், அவர்களை சாதிரீதியாக பேசி, இந்திய அணியில் தலித்துகள் அதிகமாக இருப்பதாலேயே தோல்வி ஏற்பட்டது என்று கூச்சலிட்டனர்.

Sports in Tamil

Image
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படக் காட்சிகளில் தனது முகத்தை வைத்து மார்ஃப் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய பேட்டிங் ஸ்டார் டேவிட் வார்னர், அவருடைய பேட்டிங்கைத் தாண்டி இன்ஸ்டா போஸ்ட்களுக்கும் பெயர் பெற்றவர்.

World News

Image
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

Sports in Tamil

Image
ஹராரே : தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என ஜிம்பாப்வே அணியை கேப்டனாக வழிநடத்திய பிரெண்டன் டெய்லர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதி பெற்ற 32 வயது பிரான்ஸ் வீராங்கனையால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் களம் நெகிழ்ச்சிகரமாக அமைந்தது. எந்த ஒரு டென்னிஸ் வீரருக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தடம் பாதிக்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். அது பலருக்கு சாத்தியப்படுவதில்லை. ஆனால், முயன்றால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார் பிரான்ஸ் நாட்டு டென்னிஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட். நேற்று நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் தரவரிசையில் 15 இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை சிமோனா ஹாலெப் உடன் மோதினார் 32 வயதாகும் கார்னெட். சிமோனா ஹாலெப் இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். மேலும் இருமுறை உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளார்.

Sports in Tamil

Image
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க கோலி, ரோகித் ஆகிய இரு இந்திய வீரர்களைத் தவிர, அணியில் வேறு யாருக்கும் திறன் இல்லை என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 7 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பேசியவை இணையத்தில் வெளியாகி வைரல் செய்தியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் தன்னை விமர்சித்த விஷயத்தை மிகுந்த நிதானத்துடன் கையாண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அந்தப் பத்திரிகை நிருபர்.

Sports in Tamil

Image
தங்கள் மகளின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அனுஷ்கா சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாமிகா ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில தினங்களில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்தச் சூழலில் நேற்று (ஜன 23) கேப்டவுனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியின்போது விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியுடன் மகள் வாமிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

World News

Image
வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய புவனேஷ் குமாருக்கு பதிலாக அணியில் வேறு ஒரு வீரரைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் பட்டியலில் உள்ள புவனேஷ் குமார், அண்மைக்காலமாக அவரது மோசமான விளையாட்டு காரணமாக விமர்சன வளையத்துக்குள் வந்துள்ளார்.

World News

Image
கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளதாக, ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:

Sports in Tamil

Image
சென்னை: தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. 40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.

World News

Image
வெலிங்டன்: நியூஸிலாந்தில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் தொற்று பெருகி வரும் சூழலில் தனது திருமணத்தை தற்போதைக்கு ரத்து செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆல்ட்ரென் அறிவித்துள்ளார். 40 வயதான ஜெசிந்தா கடந்த 4 ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராக உள்ளார். கரோனா முதல் அலையின் போது உலகளவில் முதல் நாடாக ஜீரோ கோவிட் என்ற இலக்கை நியூஸிலாந்து எட்டியது. இதற்காக அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

Sports in Tamil

Image
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் இறுதி போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது.

World News

Image
கரோனாவின் வெவ்வேறு உருமாற்றங்களில் இருந்தும் மக்களைக் காக்கும் வகையில் உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வரும் நிலையில் இதற்கு மாற்றாக ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவதைப் பரிசீலிக்கலாம் என ஃபைஸர் சிஇஓ ஆல்பர்ட் போர்லா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களின் மக்களின் ஃபைஸர் இன்க் நிறுவனத்தின் ஃபைஸர் தடுப்பூசியை செலுத்துகின்றனர். உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இஸ்ரேல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறது.

World News

Image
கனடாவின் மத்திய மானிசோடா மாகாணத்தில் உள்ளது எமர்சன்நகரம். இந்தப் பகுதி அமெரிக்கஎல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைபவர்கள் இந்தப் பகுதியை தான் பயன் படுத்துவார்கள். எனவே, இதுபோன்ற நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று அவர்களை கார் மூலமாக அமெரிக்க எல்லைக்குள் அழைத்துச் செல்வதற்காகவே சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

Sports in Tamil

Image
தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்திருக்கும் நிலையில் கேஎல் ராகுல் கேப்டன்ஷிப்பில் உள்ள குறைபாடுகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு தோல்வி கொடுக்கும் துயரங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளது. போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி விதித்த 288 ரன் என்ற டார்கெட்டை ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜான்மன் மலான், குயின்டன் டி காக் அதிரடியின் உதவியுடன் 48.1 ஓவரிலேயே எட்டியது தென்னாப்பிரிக்கா. இதனால் தொடரை இழந்துள்ளது இந்தியா.

Sports in Tamil

Image
ஜம்மு: குளிர்கால ஒலிம்பிக்கில் இரண்டு விதமான போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான தனது மகன் ஆரிப் முகம்மது கான் இதுவரை பெற்ற பதக்கங்களை பெருமிதத்துடன் காட்டினார் காஷ்மீரைச் சேர்ந்த தாய். நவீனகால ஒலிம்பிக்குகள் தொடங்கி நூற்றாண்டை கடந்த நிலையில், எண்பதுகளில் தொடங்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தொடக்கத்தில் வழக்கமான (அதாவது கோடைக்கால) ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவை ஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், குளிர்காலத்தில் வழக்கமான ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா? இரண்டு ஒலிம்பிக்ஸையும் ஒரே நேரத்தில் நடத்தினால் போட்டி முடிவுகளை தனித்தனியாக அறிவிப்பதா? இணைத்து பதக்கங்களைக் கணக்கிட்டு வெற்றியாளரைத் தீர்மானிப்பதா? அப்படிச் செய்தால் குளிர்கால விளையாட்டுக்கள் ஆடும் சூழலே இல்லாத நாடுகளுக்கு அது அநீதி செய்வதாக ஆகாதா? இந்தக் கேள்விகள் எழ, குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

World News

Image
ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் 2022 சீசனில் பங்கேற்கும் லக்னோ, அகமதாபாத் அணிகள் தலா மூன்று வீரர்களை இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தலா மூன்று வீரர்களை முறைப்படி இன்று ஒப்பந்தம் செய்துள்ளன.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என பெண்கள் நாள்தோறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், பெண்களுக்கான சம உரிமையை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தவர் தமனா சர்யாபி. இவர் கடந்த வாரம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்துவத்தை வலியுறுத்தி தலிபான்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் பல பெண்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமனா தலிபான்களால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களாக தமனாவை காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமனாவின் வீட்டுக்குள் தலிபான்கள் நுழையும் காட்சியைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம்தான் தலிபான்களால் தமனா கைது செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிய வந்திருக்கிறது.

World News

Image
ஐக்கிய நாடுகள்: "காலநிலை மாற்றம், மோதல்கள், கரோனா ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளது" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, “கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்கள் தூண்டிவிடப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் பல வழிகளில் தற்போது மோசமாக உள்ளது.

World News

Image
துபாய்: சவுதி நடத்திய வான்வழித் தாக்குதல் விளைவாக ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் ஹொடெய்டா நகரை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

World News

Image
லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது , ”பிரிட்டனில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு விடுதிகள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும். பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணி செய்யலாம். முகக்கவசங்கள் இனி கட்டாயம் இல்லை. எனினும், நெரிசலான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. வரும் வியாழக்கிழமை முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தார்.

Sports in Tamil

Image
மஸ்கட் : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியதில் எனக்கு பெரிதாக எந்த வியப்பும் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

World News

Image
உலக அளவில் மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் என்று 100க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்த கோடீஸ்வரர்களில் டிஸ்னி ஹெய்ரிஸ், அபிகெயில் டிஸ்னி ஆகியோரும் உள்ளனர். ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு இந்த வாரம் நடந்தது. இதில் புதன்கிழமை சர்வதேச கோடீஸ்வரர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசினர். இதில் 102 கோடீஸ்வரர்கள் சார்பில் கடிதம் வெளியிடப்பட்டது.