World News

கரோனா பெருந்தொற்றையே உலகம் மறந்துவிடக்கூடிய அளவுக்கு, ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கில் மிகப் பெரிய ராணுவ மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டை அதற்குப் பக்கத்தில் உள்ள ரஷ்யா எந்த நேரமும் ஆக்கிரமிக்க முற்படலாம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள வட அட்லான்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள் அமைப்பும் கூறி வருகின்றன.

உக்ரைன் எல்லைப்பகுதியில் கவச வாகனங்கள், டேங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்விமானங்கள் ஆகியவற்றுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளையும் ரஷ்யா தயார்நிலையில் வைத்திருக்கிறது. ரஷ்யப் படைகள்உள்ளே நுழைந்தால் தடுப்பதற்கு உக்ரைன் ராணுவமும் தயாராக இருக்கிறது. உக்ரைனுக்கு உதவநேட்டோ நாடுகளின் படைகளும் தயாராக இருக்கின்றன. அமெரிக்கா தன்னுடைய ராணுவத்தின் 8,500 துருப்புகளை தயார் நிலையில் இருக்கமாறு அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யா, இப்போது உக்ரைன் எல்லைக்கு அருகிலும், தான் ஆக்கிரமித்துள்ள கிரீமியாவிலும் போர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. நேட்டோ நாடுகளும் தங்களுடைய போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் கிழக்கு ஐரோப்பாவுக்கு விரையுமாறு உத்தரவிட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News