Posts

Showing posts from December, 2022

Sports in Tamil

Image
டேராடூன் : விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும், அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டன.

World News

Image
"இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம்தான் வரவேற்கிறது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்" உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று 310-வது நாள். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தான் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா முன்னேறிய வேகம் உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தது. நேட்டோ நாடுகளிடம் குறிப்பாக அமெரிக்காவிடம் உதவி கோரிய ஜெலன்ஸ்கி இன்று வரை போரை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் அதன் பக்கவாட்டு விளைவுகள்தான் உண்மையிலேயே இது போர்களுக்கான காலம் இல்லை என்பதை அன்றாடமும் உணர்த்தி வருகிறது.

World News

Image
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக இருந்த பெனடிக்ட் காலமானார். அவருக்கு வயது 95. ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். ஆர்ச் பிஷப், கார்டினல் ப்ரீஸ்ட், கார்டினல் பிஷப், கார்டினல் என பல்வேறு பதவிகளை வகித்த ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி போப் ஆக பொறுப்பேற்றார்.

World News

Image
கில்ஜித்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கில்ஜித் பல்திஸ்தானில் பொதுமக்களின் நிலங்களை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எவ்வித இழப்பீடும் தராமல் நிலங்களை ஆக்கிரமிப்பதை பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டும் கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், இதுவரை 60 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலங்களை அது ஆக்கிரமித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

World News

Image
நிகோசியா: "பயங்கரவாததின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது" என்று அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தார். கலந்துரையாடல்களின் போது அமைச்சர் பேசியதாவது: "பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால் அதற்காக, சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக உள்ளது.

Sports in Tamil

Image
சாவோ பாவ்லோ: மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 82. கால்பந்து விளையாட்டை கலையாக மாற்றி வெகுஜன ரசிகர்களை மயங்க வைத்த பீலே, கடந்த 2021-ம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பீலே இறந்தார்.

Sports in Tamil

Image
டேராடூன் : கார் ஓட்டுவது குறித்து இந்திய அணி வீரர் ரிஷப் பந்த்துக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும், அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையின் முடிவு வெளியாகி உள்ளது. அதில் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டு நார்மலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். இதனையடுத்து நெற்றி, முதுகு, கால்கள் என்று படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்தினால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தற்போது ரிஷப் பண்ட் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். இதனையடுத்து நெற்றி, முதுகு, கால்கள் என்று படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்தினால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தற்போது ரிஷப் பண்ட் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

World News

Image
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.

Sports in Tamil

Image
பாரிஸ்: கால்பந்து உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் லீக் 1 தொடர் மீண்டும் துவங்கி உள்ளது. இந்தத் தொடரில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடும் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் களத்திற்கு திரும்பியுள்ளனர். வரும் ஜனவரியில் இதே அணியில் மெஸ்ஸி இணைய உள்ளதாக தகவல். இந்தச் சூழலில் நேற்று ஸ்ட்ராஸ்பேர்க் அணியுடன் பிஎஸ்ஜி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. எம்பாப்பே உட்பட அந்த அணி சார்பில் இரண்டு பேர் கோல் பதிவு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர்.

World News

Image
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் விமானப் படைத் தரப்பில் கூறும்போது, “ரஷ்யா இன்று காலை தொடங்கியதிலிருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் சுமார் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் வீசியது. இதன் காரணமாக தலைநகர் கீவ் பகுதியில் 90% மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
கராச்சி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள 5-வது இரட்டை சதம் ஆகும். அதோடு நியூஸிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை இரட்டை சதம் பதிவு செய்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சவுதி தலைமையிலான நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்தத் தொடரின் முதல் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. மெல்போர்ன் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை 2-வது இன்னிங்ஸிலும் சொற்பமாக 204 ரன்களில் சுருட்டி ஆஸ்திரேலியா 182 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதமுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய மண்ணில் 2005-06ல் நடந்த டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றுத் தருணமாகும்.

World News

Image
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்புயலுக்கு அங்குள்ள நயாகரா அருவி பாதி உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

World News

Image
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

World News

Image
தைபே: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு செய்துள்ளது. தைவான் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா ராணுவம் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தைவான் - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தைவானில் காட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓர் ஆண்டாக உயர்த்த அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் முடிவு செய்துள்ளார்.

Sports in Tamil

Image
ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்மூர்த்திகளான விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பது இவர்களது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகத்தை பலரிடத்திலும் எழுப்பியுள்ளது. அதாவது 2021, 2022 டி20 கிரிக்கெட் பின்னடைவுகளுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை கட்டமைக்கும் முனைப்பில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பது புரிகிறது.

Sports in Tamil

Image
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு முதல் டெஸ்ட்டில் 2 நாட்களில் படுதோல்வி கண்டது, இப்போது பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட்டில் 189 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்காவைச் சுருட்டிய ஆஸ்திரேலியா 541 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் டிக்ளேர் செய்யாமல் அந்த அணியை இம்சித்து வருகிறது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் கோபாவேசம் தெற்றெனப் புலப்படுகிறது. 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியையும் விளையாட்டு விரும்பிகளான அந்த நாட்டு ரசிகர்களையும் புரட்டிப் போட்ட சம்பவம்தான் இதற்கெல்லாம் காரணம். தென் ஆப்பிரிக்காவுக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சென்றது ஆஸ்திரேலியா அணி அப்போது முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்த போது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

World News

Image
பெய்ஜிங்: ஜனவரி 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது. சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவிதித்தது. எல்லைகள் மூடப்பட்டநிலையில், கரோனா வைரஸ்தொற்று பாதிப்பை அந்நாட்டு அரசு சுகாதாரப் பட்டியலில் ‘‘ஏ’’ பிரிவில் வைத்திருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது.

Sports in Tamil

Image
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அகா சல்மான் சதம் விளாசி அசத்தினார். கராச்சியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. பாபர் அஸம் 161, அகா சல்மான் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 130.5 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

World News

Image
புவனேஸ்வர் : அதிபர் விளாடிமிர் புதினை தொடர்ந்து விமர்சித்து வந்த ரஷ்யாவின் முன்னாள் எம்.பி. பாவெல் அன்டோவ் ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் எம்.பி.யாக இருந்தவர் பாவெல் அன்டோவ். தொழிலதிபரான இவர் ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். உக்ரைனுடனான போரைத் தொடர்ந்து இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வந்தார்.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரின் இரட்டை ச தத்தால் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 386 ரன்கள் குவித்தது. மெல்பர்னில் நடைபெற்று வரும்இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் டேவிட் வார்னர் 32 ரன்களுடனும், மார்னஷ் லபுஷேன் 5 ரன்களுடனும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

Sports in Tamil

Image
மும்பை : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியாவில் இந்திய அணி விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இந்திய அணி வீரர்களின் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் வங்கதேச தொடரில் கட்டைவிரல் காயத்தால் விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். என்றாலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் மீதமுள்ள இரு போட்டிகளில் நடக்கவுள்ளன.

Sports in Tamil

Image
மெல்பேர்ன்: தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தச் சூழலில் சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன் என புகழ்ந்துள்ளார் அவரது மனைவி கேண்டிஸ் வார்னர். 36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான மெல்பேர்ன் போட்டியையும் சேர்த்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 8000-க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார்.

World News

Image
சியோல்: எல்லைத் தாண்டி வந்த வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “திங்கட்கிழமை வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள் தென்கொரிய எல்லையைக் கடந்தன. அவற்றை நாங்கள் சுட்டு விழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார்.

Sports in Tamil

Image
மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டேவிட் வார்னர் இரட்டைச் சதமெடுத்து ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட 10வது வீரர் என்ற பெருமையை எட்டினார் டேவிட் வார்னர். சுமார் 3 ஆண்டுகால சத வறட்சிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அவரது சதத்துக்கு தண்ணீர் பாய்ச்சியது, விளாசினார் இரட்டைச் சதத்தை. சென்னையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோ ரூட் 218 ரன்களை தன் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த சாதனையை வார்னர் இரட்டைச் சதம் மூலம் 100வது டெஸ்ட் இரட்டைச் சதம் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 196 ரன்களில் இருந்த போது இங்கிடி பந்து ஒன்று கூடுதலாக எழும்ப வார்னரின் கட் ஷாட் எட்ஜ் ஆகி ஒரே ஸ்லிப்புக்கு வைடாகச் சென்று பவுண்டரி சென்றது, 100வது டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார். மேலும் இந்த இரட்டைச் சதம் மூலம் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த 184 ரன்களையும் கடந்தார். வார்னரின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதம் ஆகும் இது.

Sports in Tamil

Image
வங்கதேச அணிக்கு எதிரான மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த தருணம். கணிக்க முடியாமல் அமைந்த ஆடுகளத்தில் பந்துகள் பெரும்பாலும் தாழ்வாகவும், மோசமாகவும் வந்து கொண்டிருந்ததால் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் ஆட்டமிழந்து தங்களது இருக்கைக்கு திரும்பிவிட்டனர். இலக்கு 145 ரன்களே என்ற போதிலும் அது சாத்தியம் இல்லாதது, வெகுதொலைவில் இருப்பது போன்ற உணர்வை பார்வையாளர்கள் மத்தியில் கடத்தியது. அப்போதுதான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்தார். இவர்கள் இருவரும்தான் அணியில் இருந்த கடைசி பேட்ஸ்மேன்கள். இவர்களுக்கு பின்னால் டெய்லெண்டர்கள் உமேஷ் யாதவ், மொகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த 36 வயதான ஆல்ரவுண்டரான அஸ்வின் தனது சிறப்புமிக்க 88 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். இம்முறை அவர் சதம் அடிக்கவில்லை. ஏன் அரை சதம் கூட எட்டவில்லை. இருப்பினும் மிர்பூர் டெஸ்டின் கடைசி நாளில் அஸ்வின் சேர்த்த 42 ரன்கள் அதனினும் பெரிது.

Sports in Tamil

Image
வங்கதேசத்துடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 2-வது இடத்தில் உள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த உக்ரைன் - ரஷ்யா போர், வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து வருகிறது. ”எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வரை உக்ரைனிலிருந்து வெளியேற மாட்டோம்” என்று ரஷ்யாவும், “ரஷ்ய ராணுவத்தை எங்கள் பகுதியிலிருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம்” என்று உக்ரைனும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், போர் காரணமாக அரங்கேறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்திருந்தது.

World News

Image
பீஜீங்: சீனாவில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்வதில் இம்முறை சீனா கடுமை காட்டவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

Sports in Tamil

Image
வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட தண்ணி குடிக்க வேண்டியதாயிற்று. கடைசியில் ஸ்ரேயஸ் அய்யரின் சுழல் பந்து வீச்சுக்கு எதிரான அமைதியான ஒரு ‘ஜீனியஸ்’ ரக பேட்டிங்கும் அஸ்வினின் அற்புதமான தைரிய இன்னிங்சும் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால் இந்த வெற்றி பெருமை கொள்ளத் தக்கதுதானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் முதலில் குல்தீப் யாதவ்வை உட்கார வைத்து விட்டு ஆடிய போட்டியில், தப்பும் தவறுமாக ஒரு அணித்தேர்வை திமிராக செய்து விட்டு வெற்றி பெறுகிறது என்றால் அவர்கள் செய்த தவறான அணித்தேர்வு நியாயமாகி விடும் பொதுப்பார்வையில், ஆனால் கிரிக்கெட் ஆட்ட தார்மிகத்தின் படி இந்தியா வென்றாலும் குல்தீப் யாதவ்வை ட்ராப் செய்தது அநியாயமே. இங்கிலாந்தில் உலகின் தலை சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை கோலி-சாஸ்திரி கூட்டணி உட்கார வைத்து அழகு பார்த்தது வெற்றியில் முடிந்தாலும் எப்படி அநீதியோ அது போல்தான் இந்த வங்கதேசத்திற்கு எதிரான வெற்றி அநீதியில் பிறந்த வெற்றி என்று நாம் கஷ்டத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.

Sports in Tamil

Image
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஸ்டேஜ்-3 வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரகதி, ஆதித்தி ஸ்வாமி, பர்னீத் கவுர் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர். காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷ், ஓஜாஸ் டியோடேல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளியைக் கைப்பற்றினர். காம்பவுண்ட் அணி பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கத்தைக் கைப்பற்றினர்.

World News

Image
நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு, பனிப்புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணிப்பு: இந்நிலையில் வானிலை ஆய்வாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கடுமையாக வாட்டிவதைத்து வந்த பனிப்பொழிவும், பனிப்புயலும் படிப்படியாகக் குறையும் என்று கணித்துள்ளனர். இது மக்களுக்கு சற்றே ஆறுதல் தரும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவைப் போல் கனடா நாட்டிலும் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் கிரேட்டர் லேக்ஸ் தொடங்கி, மெக்சிகோவின் ரியோ க்ராண்ட் பகுதி வரை பாதிப்பு உள்ளது.

World News

Image
தெஹ்ரான்: ஈரானில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்த ராப் பாடகர் உள்ளிட்ட இரு போராட்டக்காரர்களின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் சிலருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகளும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

World News

Image
வாடிகன்: பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் நாளான இன்று கிறிஸ்துமஸ் தினத்தை ( இயேசு பிறந்த தினம்) கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உலக மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

World News

Image
காபூல்: ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபன்கள் தடை விதித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Sports in Tamil

Image
மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Sports in Tamil

Image
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று ஷாகித் அப்ரிடி தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழுவை அப்ரிதி வழிநடத்துவார். மேலும் தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் ரஷித் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

Sports in Tamil

Image
மிர்பூர் : வங்கதேசத்துடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிவருகிறது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிவிளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்றகணக்கில் இழந்த இந்திய அணி, முதல் டெஸ்டில் அபாரவெற்றியைப் பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்போட்டி மிர்பூரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது.

World News

Image
ஐ.நா : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இந்த ஆண்டு டிசம்பரிலும் இந்தியா ஏற்றது.

Sports in Tamil

Image
மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்க்ஸின் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவை. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

World News

Image
துபாய்: வளைகுடா நாடுகளில் செழிப்பானதாக அறியப்படும் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இந்திய இளைஞர் அஜய் ஓகுலாவுக்கு ரூ.33 கோடி லாட்டரி அடித்துள்ளது. எமிரேட்ஸ் ட்ரா என்ற லாட்டரியை வாங்கிய அவர் ஜாக்பாட் அடித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். இது தொடர்பாக அவர் கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், "நான் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவன். இங்கே துபாயில் கடந்த 4 வருடங்களாக பணி புரிகிறேன். தற்போது ஒரு நகைக் கடையில் ஓட்டுநராக உள்ளேன். மாதம் 3200 திர்ஹம் சம்பாதிக்கிறேன். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 72 ஆயிரத்து 185 ஆகும்.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவை கடுமையாக தாக்கிய "பாம்ப் சூறாவளி" பனிப்புயலால் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பனிபுயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமாக இயல்பான வெப்பநிலை நிலவும் தென்பகுதி உட்பட நாடுமுழுவதும் வீசிவரும் கடுங்குளிர் காரணமாக வெந்நீர் கூட விரைவில் பனிக்கட்டியாக விடும் சூழல் நிலவி வருகிறது.

World News

Image
பெய்ஜிங்: சீனாவில் கரோனா தினசரி பாதிப்பு 3.7 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டம் பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடந்தது. இதில் சீனாவின் கரோனா பரவல் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த வாரத்தில் சீனாவின் தினசரி கரோனா பாதிப்பு 3 கோடியே 70 லட்சம் என்று கணக்கிடப்பட்டதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்தது. இது உலகளவில் மிக அதிகமான தொற்று பரவலாகும்.

World News

Image
வாஷிங்டன் : 2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யத் தேவையான விஷயங்களையும் கொடுத்தது என்று பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களில் ஒருவரான இவர், 2022ம் ஆண்டு குறித்தும் 2023ம் ஆண்டை வரவேற்பது குறித்தும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துள்ளார். "எங்கள் பேரக்குழந்தைகளுக்குத் தகுதியான எதிர்காலம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள பில் கேட்ஸ் அதில், "2022ம் ஆண்டு தனக்கு முக்கியமான விஷயங்களையும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யத் தேவையான விஷயங்களையும் கொடுத்தது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டே அடுத்த ஆண்டை எதிர்நோக்கும் இத்தருணத்தில் என்னை ஆதரிப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.

Sports in Tamil

Image
18 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் மகேந்திர சிங் தோனி எனும் மகத்தான வீரர். கிரிக்கெட் உலகின் ஆல் டைம் சிறந்த வீரராக, கேப்டனாக அவர் இருப்பார் என அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம். காலச்சக்கரத்தை அப்படியே பின்னோக்கி இதே நாளில் கடந்த 2004-க்கு சுழற்றினால் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள எம்ஏ அஜீஸ் மைதானத்தில் தனது சர்வதேச என்ட்ரியை கொடுத்தார் தோனி. முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே பந்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் விளையாடிய முதல் நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார். அப்போது அவருக்கு வயதும் 23 தான்.

World News

Image
காத்மாண்டு: சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். அவர் விடுதலையாகியுள்ள நிலையில், அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியனவற்றை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சார்லஸ் சோப்ராஜிடம் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. அவருடைய உண்மையான பாஸ்போர்ட் எதுவென்பது தெரிந்த பின்னர் அவரை பிரான்ஸுக்கு நாடுகடத்த முடியும். முன்னதாக, சார்லஸ் சோப்ராஜ் தன் முதுமையைக் காரணம் காட்டி விடுதலை கோரியிருந்தார். இந்நிலையில், நேபாள் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததோடு நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Sports in Tamil

Image
கொச்சி: அடுத்த சில மணி நேரங்களில் ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம். பத்து அணிகளும் ஏலத்தில் யாரை வாங்கலாம் என தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கணக்கை கூட்டி கழித்து பார்த்து வருகிறது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். டேக்டிக்கல் சப்ஸ்டிடியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.