Posts

Showing posts from October, 2022

World News

Image
பெய்ஜிங் : சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐபோன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொனல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

Sports in Tamil

Image
பெர்த் : டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் பெர்த் நகரில் உள்ள கிரவுன் பெர்த் ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இங்கு விராட் கோலி தங்கியிருந்த ஓட்டல் அறையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 'கிங் கோலியின் ஓட்டல் அறை' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், கோலியின் தனிப்பட்ட உடமைகளான உடல் நலப்பொருட்கள், ஷூக்கள், இந்திய அணியின் சீருடைகளை உள்ளடக்கிய திறந்த நிலையில் இருந்த பெட்டி, தொப்பிகள் மற்றும் மேஜையின் மீது இருந்த இரு கண்ணாடி டம்ளர்கள் போன்றவற்றை காட்டியபடி ஒருவர் அறையைச் சுற்றி வலம் வருகிறார்.

World News

Image
தெஹ்ரான்: ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி, பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், 19 வயது ஈரானின் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாராடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது மெஹர்ஷாத் ஷாஹிதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை ஈரான் பாதுகாப்புப் படையினர் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த மெஹர்ஷாத் ஷாஹிதி உயிரிழந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sports in Tamil

Image
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன் மூலம் சூப்பர் 750 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர். தைவான் நாட்டு வீரர்களை 21-13 மற்றும் 21-19 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர். கடந்த 25 முதல் 30-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெற்றது. மொத்தம் 11 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்த தொடர் கடந்த 1935 முதல் நடைபெற்று வரும் தொடர். இதில் சாத்விக் மற்றும் சிராக் இணையர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர்.

World News

Image
ரியோ: பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் ஜெயிர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. யூனியன் தலைவராக இருந்த லுலா டா சில்வா பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர். இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக தற்போது லுலா டா சில்வா அதிபராகிறார். அதிபர் தேர்தலில் அவருக்கு 50.9% வாக்குகள் கிடைத்தன. போல்சோனாரோவுக்கு 49.1% வாக்குகள் கிடைத்தன.

Sports in Tamil

Image
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பர் 12 ‘குரூப் 2’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்வியை கடந்த 2011 உலகக் கோப்பை தொடருடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. அதுவும் பாசிட்டிவான வகையில். அது என்ன? கடந்த 2011 உலகக் கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் நடத்தப்பட்டது. இதில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருந்தாலும் குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. நாக்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் 2 பந்துகள் எஞ்சியிருக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

World News

Image
புதுடெல்லி : இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

Sports in Tamil

Image
இந்தியா-பாகிஸ்தான், பாகிஸ்தான்-ஜிம்பாப்வே மேட்சுக்குப் பிறகு இவற்றை விடவும் திக் திக் கிளைமாக்ஸ் கொண்ட வங்கதேச-ஜிம்பாப்வே உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்சனின்(64) அபாரமான வெற்றிக்கான இன்னிங்ஸ், அவரை வெளியேற்றிய வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனின் மேஜிக் ரன் அவுட் என்று மிகப்பிரமாதமான டி20 உலகக்கோப்பை போட்டியாக இந்த பிரிஸ்பன் போட்டி இன்று அமைந்தது. கடைசியில் வங்கதேசம்தான் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால் இதை கிரேட் எஸ்கேப் என்றுதான் கூற வேண்டும். கடைசி ஓவரில் நடந்தது என்ன? வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறினால் விளைந்த நோ-பால்:

World News

Image
மொகாடிஸ்ஹூ: சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்றிரவு இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது.

World News

Image
சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கிறிஸ்தவ மதத்தில் புனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்கான தினமாக அக்டோபர் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஹாலோஸ் ஈவ் என்ற இந்த கொண்டாட்டம் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. குறுகிய தெருக்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெருக்களில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Sports in Tamil

Image
பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது பலமான தென் ஆப்பிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கும், வலுவான இந்திய பேட்டிங் வரிசைக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியிருந்தது. இந்த வெற்றியால் 3 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ வயது சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 1994-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பஸ்தூன் இன மாணவர் சங்கங்களால் தலிபான் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது அங்கு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தி வந்தது. கடந்த 1995-ல் ஹெராட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர். கடந்த 1998-ல் நாடு முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

World News

Image
சென்னை: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

Sports in Tamil

Image
பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார். 35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது தவிர உலக அளவில் பிரசித்தி பெற்ற கிளப் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

World News

Image
சியோல்: தென் கொரிய நாட்டில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிக்கிய சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல். சுமார் 120 பேர் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதாவோன் (Itaewon) பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர். அங்கு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
பாகிஸ்தான் அணி அன்று ஜிம்பாப்வேயிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து 130 ரன்கள் இலக்கைக் கூட எட்ட முடியாமல் கோட்டைவிட்டது குறித்து போட்டிக்குப் பிறகான ஊடகங்கள் சிலவற்றின் சித்திரம், ஜிம்பாப்வேயிடம் தோற்பது ஏதோ உலகிலேயே பெரிய அசிங்கம் என்றும், பாகிஸ்தான் அசிங்கப்பட்டுவிட்டது என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் உட்பட பல ஊடகங்கள் எழுதின. ஜிம்பாப்வேயிடம் தோற்பது என்ன அசிங்கமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே. ஜிம்பாப்வே கிரிக்கெட்டை இந்த நிலைமைக்கு சீரழித்தது ஐசிசியில் உறுப்பினர்களான சில பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் மீதான ஐசிசியின் சார்பே. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிசிசிஐ போன்ற பண பலம் மிகுந்த வாரியங்களின் ஐசிசி மீதான செல்வாக்கினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் சிறுகச் சிறுக அழிந்தது. இது 50% காரணம் என்றால், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளும் பெரிய காரணமாகிவிட்டது.

World News

Image
மணிலா : பிலிப்பைன்ஸை தாக்கிய நால்கே புயலுக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸில் நால்கே புயல் வியாழக்கிழமை தாக்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. கனமழைக்கு பிலிப்பைன்ஸின் தென் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியதில் வீடுகள் பல சேதமடைந்தன.

World News

Image
ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ட்விட்டர் இப்போது ஒரு தான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது" என்று கூறியுள்ளார். முன்னதாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான் வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் தற்போது ட்விட்டர் கைமாறியதை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மஸ்கின் சூசக குறிப்பும், ட்ரம்பின் புகழாரமும் அமெரிக்காவில் கவனம் பெற்றுள்ளது.

World News

Image
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கி, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்து உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தவர் எனது மாமனார் நாராயண மூர்த்தி. வணிகத்தின் மூலம்தான் அதிக தாக்கத்தை உருவாக்க முடியும் என்று அப்போது நான் நம்பினேன். ஆனால், அந்த கூற்று தவறு என்பதை அப்போது அவர் விளக்கினார். உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த நீ விரும்பினால் அதனை செய்வதற்கான சிறப்பான வழி அரசியல் மூலமாகவே முடியும் என்று நாராயண மூர்த்தி அறிவுரை கூறினார். அப்படி கூறியது மட்டுமின்றி, எப்போதும் என் பின்னால் இருந்து தொடர்ந்து ஊக்கமளித்தார். அதனால்தான் தற்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன். வளர்ச்சியைத் தூண்ட விரும்பினால், நீங்கள் செய்ய விரும்பும் செயலில் புதுமையான நோக்கம் இருக்க வேண்டும். அதாவது புதிய விஷயங்களை உருவாக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் அதிக முதலீடு செய்யும். இவ்வாறு பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள்இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. முன்னதாக இதே மைதானத்தில் அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது.

Sports in Tamil

Image
புதுச்சேரி : கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற நினைப்பதாக இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் அறிவித்துள்ளார். புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்தத் தடைகள் நீக்கப்பட்டு மைதானத்தில் இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

World News

Image
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக பதவியேற்றுள்ளார். இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் பெற்றுள்ளார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி, இளம் வயதில் (42) பிரதமராகி, கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்துள்ளார். இதனிடையே, ரிஷி சுனக்கின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் அவருடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் இணைந்து வீடியோ கால் பேசுகிறார். வீடியோவில் செஃப் சஞ்சய் ரெய்னா, "மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப்போகிறேன்" என்று சொல்லி கேமராவை திருப்பி பிரதமர் ரிஷி சுனக்கை அறிமுகம் செய்துவைக்கிறார்.

World News

Image
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வல்டாய் டிஸ்கஷன் கிளப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்திய தேசத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அந்நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், " இந்தியப் பிரதமர் மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவருடைய மேக் இன் இந்தியா திட்டம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல கொள்கை ரீதியாகவும் சிறப்பானது. எதிர்காலம் இந்தியாவின் வசம் தான் இருக்கிறது. இந்தியா தான் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்று நவீன நாடாக இந்தியா கண்டுள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இந்தியாவின் மக்கள் தொகையும், அதன் வளர்ச்சியும் அதன் மீது மரியாதையும் ஈர்ப்பும் கொள்ளவைக்கிறது. இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. தனிச்சிறப்பானதும்ம் கூட. பல ஆண்டுகளாக இந்தியா, ரஷ்யா உறவு பலமாக இருக்கிறது. நமக்குள் எப்போதுமே கடினமான உறவுச் சிக்கல் வந்ததில்லை. நாம் எப்போதும் ஒருவொருக்கொருவர் துணையாக இருந்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதுவே நீடிக்கும் என்று நா

Sports in Tamil

Image
புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் ஆடவர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வீராங்கனைகளை பிசிசிஐ மதிப்பது இல்லை என்ற குற்றசாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் ஊதியத்தையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து வந்தனர்.

World News

Image
சான் ஃப்ரான்ஸிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியிருக்கிறார் உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஜாம்பவான், உலகப் பணக்காரர் எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன்பின்னர் இல்லை ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினா. இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்' என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது

World News

Image
மெக்சிகோ சிட்டி : தன்பாலின திருமணத்தை மாநிலங்களில் உள்ள சட்டங்கள் மூலம் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மெக்சிகோ உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமாக தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து வந்தன. இந்நிலையில் கெர்ரரோ மாநிலத்தில் தன்பாலின திருமணம் நேற்று முன்தினம் சட்டபூர்வமானது.

World News

Image
உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை 'கேலப்' (gallup survey) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 80 புள்ளிகள் எடுத்து பாதுகாப்பில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கைக்கு பின்னால் இடம் பெற்றிருக்கிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ’கேலப்’ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமான கேலப் சர்வே வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட்டியலில், தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறைந்த நாடாக கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3வது ஆண்டாக கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கிழக்கு ஆசியா மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவை தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஆண்கள், பெண்களுக்கு ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தில் வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தனது அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஜூலை வாக்கில் இதேபோல நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

World News

Image
அண்டார்டிகா: காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் நமது விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருக்கிறார். அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தினை கண்காணிப்பதற்காக சிறப்பு தளம் ஒன்றை 200 மில்லியன் டாலர் செலவில் நியூசிலாந்து அமைத்துள்ளது. இந்த நிலையில் அண்டார்டிக்காவில் உள்ள நியூசிலாந்து கண்காணிப்பு தளத்தில் விஞ்ஞானிகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா 72 மணி நேரம் பயணத்திற்கு பிறகு சந்தித்தார்.

World News

Image
ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கை கழுவும் தொடியுடன் தான் நுழையும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.அது மட்டுமல்லாது தனது ட்விட்டர் ப்ரொஃபைல் ஹேண்டிலில் தலைமை ட்விட் என்றும் மாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அத்துடன் ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.எனினும் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல் தொடர்பாக ட்விட்டரை வாங்குவதில் ட்விட்டர் நிறுவனம் மற்றும் மஸ்க் தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்தது.

World News

Image
பெய்ஜிங் : சீனாவின் வூஹான் நகரில்தான் முதல் முதலாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட வூஹான்நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் பரவலை முற்றிலும் ஒழிக்க சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘முழு கரோனா தடுப்பு’ என்ற கொள்கையை அறிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Sports in Tamil

Image
சிட்னி : டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவுடன் நெதர்லாந்து அணி மோதவுள்ளது.

Sports in Tamil

Image
சான்பிரான்சிஸ்கோ : டென்னிஸ் போட்டிகளுக்கு நான் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார். உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கருதப்படுகிறார். அவர் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று சான்பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

World News

Image
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் சந்தை, விநியோக சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றே முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் முயற்சி செய்தார். மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் சிலதவறுகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அந்த தவறுகளை நான் சரி செய்வேன்.

World News

Image
கடந்த 1971-ம் ஆண்டில் ரிஷி சுனக்கின் தந்தை யாஷ் மற்றும் அவரது தாத்தா ராம்தாஸ் சுனக் ஆகியோர் இணைந்து தென்மேற்கு லண்டனின் சவுதாம்டன் நகரில் இந்து கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். ரிஷி சுனக் இந்த கோயிலுக்கு சென்று உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்த கோயிலின் தலைவர் சஞ்சய் சந்தரனா கூறியிருப்பதாவது: இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளை இனத்தை சாராத ஒருவர் பிரதமராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகி சாதனை படைத்தது போலவே இதுவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணமாகும். அதேபோன்று, இந்திய வம்சாவளி பின்புலத்துடன் இந்து ஒருவர் இங்கிலாந்து பிரதமராகி சாதனை படைப்பதும் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

World News

Image
லண்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக நேற்று பதவியேற்றார். முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமராக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பதவியேற்றார். சமீபத்தில் அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சர் க்வாசி க்வார்டெங்க், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், கட்சியின் தலைமை கொறடா வெண்டி மார்டன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். நெருக்கடி முற்றியதால், லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவி விலகினார்.

World News

Image
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார். பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இங்கிலாந்து ஊடகங்கள் சில வரவேற்றுள்ளன. சில எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும் ரிஷி குறித்தே செய்திகள் இடம்பெற்றிருந்தன.

Sports in Tamil

Image
பெர்த் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரின் 19-வது போட்டியில் இலங்கையை 158 ரன்களுக்கு மட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா, பிறகு ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாச 16.3 ஓவர்களில் 158/3 என்று நியூஸிலாந்துக்கு எதிராக கோட்டை விட்ட நெட் ரன் ரேட் பூஸ்ட்டுடன் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா சேசிங்கில் முதல் 7 ஓவர்கள் வரை பவுண்டரியே அடிக்க முடியவில்லை. நல்லக் கட்டுப்பாட்டுடன் தொடங்கிய இலங்கை அணி ஸ்பின்னர்களால் காலியானது. கிளென் மேக்ஸ்வெல் ஒருமுறை லாஹிரு குமாரா பவுன்சரை தொண்டையில் வாங்கி கீழே விழவும் செய்தார்.

Sports in Tamil

Image
மெல்போர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தச் சூழலில் இரு நாட்டு அணியின் பெண் ரசிகர்கள் இணைந்து போட்டோவுக்கு முகமலர்ச்சியுடன் உற்சாக போஸ் கொடுத்துள்ளனர். அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 90,293 ரசிகர்களுக்கு முன்னிலையில் இரு அணிகளும் இந்த போட்டியில் பலப்பரீட்சை செய்தன. அதில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை விளாசி இருந்தார். அவரது ஆட்டத்தை கிரிக்கெட் வல்லுனர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.

World News

Image
டாக்கா: வங்கதேசத்தில் சிட்ராங் புயல் காரணமாக 7 பேர் பலியாகினார். வெள்ளம் புகுந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சித்ராங் புயல் நேற்று மாலை முதல் மணிக்கு 28 கிமீ வேகத்தில் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. டிங்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு நேற்று பின்னிரவில் கரையைக் கடந்தது.இதனையொட்டி பெய்த கனமழை காரணமாக சுவர் இடித்து விழுந்தது, மரம் முறிந்து விழுந்தது என நடந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புயல் பாதிப்பு காரணமாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை போட்டி மழையின் காரணமாக முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மழையின் காரணமாக இப்போட்டி தாமதமாகவே தொடங்கியது. மேலும் போட்டி தலா 9 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. ஜிம்பாப்வே சார்பில் மதவீர் மட்டும் நின்று அதிரடியாக ஆட, அவரின் 18 பந்துகளில் 35 ரன்கள் உதவியுடன் 9 ஓவர்களில் 79 ரன்களை எடுத்திருந்தது. 9 ஓவர்களுக்கு 80 ரன்கள் இலக்கை நோக்கி இறங்கிய தென்னாப்பிரிக்கா பேட்டிங்கின் போது மீண்டும் மழை குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட்டை ஆரம்பித்தனர். சத்தாரா வீசிய முதல் ஓவரில் மட்டும் டீகாக் 23 ரன்களை குவித்தார். எதிர்பார்த்தபடி மழை மீண்டும் பெய்ய DLS முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

World News

Image
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் வெகுவான அளவில் இந்தியர் அமெரிக்கர்களும் விழாவில் பங்கேற்றனர். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை இதற்கு முன்பு கொண்டாடப்பட்டிருந்தாலும் முன்னாப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை பெரிதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று இரவு நடக்கும் ஒரு மில்லியன் மக்கள் கலந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஜோ பைடன் கலந்துகொள்ள இருக்கிறார்.

World News

Image
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். புதிய வரலாறு படைத்துள்ள ரிஷி குறித்து இந்தியர்கள் பலரும் வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், சிலர் மீம்களில் அவரை பதிவு செய்திருந்தது கவனம் ஈர்த்தது. ரிஷியை வாழ்த்துவதற்கு பலர் அவருக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை ஷேர் செய்திருந்தனர். ரிஷியும் நெஹ்ராவும் உருவத்தில் பார்ப்பதற்கு ஒரே போல் இருப்பதால், அதை குறிப்பிட்டு ஷேர் செய்ய சில மணிநேரத்தில் மீம்களாக அது பரவியது. அதில் சில இங்கே,

World News

Image
இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது. சொல்லப்போனால் இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக். அவரே முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார். இதன்பின் லிஸ் ட்ரஸ் பதவிக்கு வந்தது தனிக்கதை. ஆனால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி அந்த அரியணைக்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி.

World News

Image
லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க இருக்கிறார் இங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக கடந்த ஜூலையில் அறிவித்ததை அடுத்து, அடுத்த பிரதமருக்கான தேர்வு தொடங்கியது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, இங்கிலாந்தின் பிரதமராக இருக்க முடியும். இதனால், கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக்கும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரசும் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் தொடக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு இருந்தது. எனினும், இறுதியில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

World News

Image
பாங்காக்: மியான்மர் நாட்டின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக கச்சின் இனக்குழு தெரிவித்துள்ளது. இச்செய்தியை மீட்புப் பணியாளரும் உறுதி செய்துள்ளார். மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஞாயிறு இரவு கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பான 'கச்சின் சுதந்திர அமைப்பு' ஏற்பாடு செய்திருந்தது. விழாவின் ஒருபகுதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை மக்கள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது மனைவி திங்கள் கிழமை தெரிவித்தார். அவருக்கு வயது 50. சில மாதங்களுக்கு முன்பு தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்படிருந்த அர்ஷத், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இருந்தார். அர்ஷத் பாகிஸ்தான் ராணுவத்தை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார் என்றும், அவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

World News

Image
ப்ளூ நைல்: சூடானில் கடந்தாண்டு ராணுவ தளபதி அப்தெல் பதா அல்-புர்ஹான் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பின் புதிய பழங்குடியினர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஹவுசா என்ற பிரிவினருக்கு நில உரிமை மறுக்கப்படுகிறது. இதனால், எத்தியோபியா எல்லையில் உள்ள புளூ நைல் பகுதியில் ஹவுசா இனத்தினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்ததால், 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.

Sports in Tamil

Image
இந்திய அணி பேட்டிங்கின் போது 20-வது ஓவரின் 4-வது பந்தை கள நடுவர் நோ-பால் என அறிவித்ததால் அது சர்ச்சைக்குள்ளானது. 20-வது ஓவரை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4-வது பந்தை ஃபுல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி, சிக்ஸருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் நோ-பால் அறிவிப்பு சரியானதே என்று நடுவர்கள் தெரிவித்தனர்.

World News

Image
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு கடந்த 16-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் 200 பேர் அடங்கிய புதிய மத்தியகுழு உருவாக்கப்பட்டது. இந்தமத்திய குழு, அதிபர் பொறுப்புக்கு 3-வது முறையாக ஜி ஜின்பிங்கையும், நிலைக்குழுவுக்கு இதர உறுப்பினர்களையும் தேர்வு செய்தது.