Posts

Showing posts from August, 2022

World News

Image
கலிபோர்னியா : அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மற்றொரு இந்தியர் ஒருவரால் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் "அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்" என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Sports in Tamil

Image
துபாய் : ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி விதித்த 193 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை. ஓப்பனிங் இறங்கிய அந்த அணி வீரர் யாசிம் முர்தாசாவை அர்ஷதீப் சிங் 2வது ஓவரிலேயே அவுட் ஆக்க, அடுத்த சில ஓவர்களில் கேப்டன் நிஜாகத் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒன் டவுனில் இறங்கிய பாபர் ஹயாத் மற்றும் கிஞ்சித் ஷா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஆனால் அவர்களின் உழைப்பு நீண்ட நேரம் கைகொடுக்கவில்லை.

Sports in Tamil

Image
நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சீனியர் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வைரக்கற்கள் பதித்த காலணியை (ஷூ) அணிந்து விளையாடி உள்ளார். இது அவர் பங்கேற்று விளையாடும் கடைசி அமெரிக்க ஓபன் தொடராக அமைந்துள்ளது. அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதே இதற்கு காரணம். அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் இவர்.

Sports in Tamil

Image
இந்தியா உட்பட உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் இனிய வேளையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் இந்த வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பலரும் தங்களது விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவராக இணைந்துள்ளார் டேவிட் வார்னர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஐபிஎல் கிரிக்கெட் தான். ஹைதராபாத், டெல்லி என அவர் மாறி மாறி விளையாடினாலும் அவருக்கு அமோக ஆதரவு இருக்கும். ஹைதராபாத் அணியில் கடந்த 2021 சீசனில் அவர் எதிர்கொண்ட சில சங்கடத்தின் போதும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது.

Sports in Tamil

Image
14 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங் அணிக்கு எதிராக முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடிய தரமான இன்னிங்ஸை கொஞ்சம் ரீவைண்ட் பார்ப்போம். அந்தப் போட்டியில் தோனி சதம் விளாசி இருந்தார். நடப்பு ஆசிய கோப்பை தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இந்தப் போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Sports in Tamil

Image
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 36 வயதான அவர் கடந்த 2012 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். 29 டெஸ்ட், 45 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2679 ரன்கள் எடுத்துள்ளார். அனைத்து ஃபார்மெட்டையும் சேர்த்து 91 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் 2 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்துள்ளார்.

World News

Image
இஸ்லாமாபாத் : மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய ரூ.80 ஆயிரம் கோடி தேவை என்று அந்நாட்டு திட்ட அமைச்சர் அசன் இக்பால் கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்தசில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 15% பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன.

World News

Image
பெய்ஜிங் : சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

Sports in Tamil

Image
துபாய் : ஒருமுறை என் மரணம் பற்றிய வதந்தி பரவியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். அவரின் உதவியுடன் கடைசி ஓவரில் பாண்டியா அபாரமான சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்தார். இந்திய அணி அடுத்ததாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

World News

Image
பாரீஸ் : பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ஜெனீவா-பாரீஸ் இடையே பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானியும், துணை விமானியும் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் மற்றொருவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எதற்காக இந்த சண்டை நடந்தது என்று தெரியவில்லை. காக்-பிட் அறையிலேயே இந்த சண்டை நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

Sports in Tamil

Image
புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி 20 ஆட்டங்களில் விளையாடுவாரா என கிரிக்கெட் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. பேட்டிங்கில் உலக அரங்கில் கோலோச்சிய விராட் கோலி கடந்த 3 வருடங்களாக தடுமாற்றம் கண்டுவருகிறார். அதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டி 20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மட்டை வீச்சு அணுகுமுறை நவீன காலத்துக்கு தகுந்த அளவில் இல்லை என்ற கருத்து எழத்தொடங்கியுள்ளது. டி 20 வடிவில் விராட் கோலி 20 அல்லது 35 ரன்கள் சேர்க்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் பெரிய அளவில் இல்லை என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.

World News

Image
சிங்கப்பூர் : திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது, “வரும் ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise – ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா வழங்கப்படும். இத்துடன் அவர்களை சார்ந்த வர்கள் வேலை தேடவும் அனுமதிக்கப்படும்.

Sports in Tamil

Image
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்களே தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். ஒரு கட்டத்தில் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. முன்னதாக பந்து வீச்சிலும் ஹர்திக் பாண்டியா அபார திறனை வெளிப்படுத்தியிருந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.

World News

Image
லாகூர் : பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக இதுவரை 1,128 பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. 3 லட்சம் வீடுகள் இடிந்துள்ளன. 3,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழையால் இதுவரை ரூ.7.98 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Sports in Tamil

Image
ஜெர்மன் நாட்டு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தற்போது அந்த அணி ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bundesliga தொடரில் விளையாடி வருகிறது. Oktoberfest கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த அணியில் இடம் பெற்று விளையாடி வரும் Sadio Mané மற்றும் Noussair Mazraoui மது கோப்பையை கையில் ஏந்தாமல் போட்டோ எடுத்துள்ளனர்.

World News

Image
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸில் மகன் வீட்டுக்கு சென்றால் கார் நிறுத்துமிடமான கேரேஜில்தான் தூங்குவேன் என்று உலக கோடீஸ்வரர் எலான் மஸ்கின் தாய் மயி மஸ்க் (74) தெரிவித்துள்ளார். "தி சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

World News

Image
புதுடெல்லி: தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தெரிவித்துள்ளார். திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, தைவானையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, விமானம் தாங்கி கப்பல்களை தயாரித்து வருவதுடன் ‘நீல நீர்கடற்படை’யையும் சீனா உருவாக்கி வருகிறது. மேலும், இலங்கைக்கு அனுப்பிய உளவு கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால்,கப்பலை வாபஸ் பெற்ற சீனா, தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அதை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Sports in Tamil

Image
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கூட்டணி வெற்றியை பெற்றுக் கொடுத்தது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

Sports in Tamil

Image
துபாய் : ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தனது பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இந்தியஅணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறந்த பார்மிலும் உள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டி 20 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் முதலில் பேட் செய்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியில் பலம் சேர்க்கக் கூடியவர்கள். இவர்களுடன் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் பெரிய அளவில் இலக்கை கொடுப்பதும், விரட்டுவதும் சாத்தியமாகும்.

World News

Image
லண்டன் : பிரிட்டனில் மின்சாரம், எரிவாயுவிலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

World News

Image
கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியும் இலங்கையிடம் இல்லை. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

World News

Image
காபுல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து படிப்பதற்காக வெளிநாடு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்தது. தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு செப்டம்பர் மாதம் பதவியேற்றது.

World News

Image
கீவ் : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு எடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ள ஜபோரிஷ்ஜியாவில் உள்ளது. இதன் அருகே உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

Sports in Tamil

Image
துபாய் : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் அஸம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

World News

Image
வாஷிங்டன் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் "அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்" என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரீமா ரசூல் என்ற இந்திய வம்சாவளிப் பெண் அவரது தாயார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனம் நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்கும் அங்கு வந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

World News

Image
கொழும்பு : சீன உளவு கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கையில் இருக்கும் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு சீன ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையும் யுவான் வாங்-5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.

Sports in Tamil

Image
துபாய் : 6 அணிகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இரவு7.30 மணிக்கு இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரை முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

World News

Image
லாஸ் ஏஞ்சல்ஸ் : சிகிச்சை தர தாமதம் ஏற்பட்டதால் கருச்சிதைவு ஏற்பட்ட பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தருமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் 34 வயதான சான்ட்ரா குயினான்ஸ். இவர் செய்த குற்றத்துக்காக கடந்த 2016-ல் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

World News

Image
கராச்சி : பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, ஜூன் 14 முதல் நேற்றுவரை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்நாட்டில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மில்லியன் பேர் தங்குமிடங்களை இழந்து தவித்துவருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. பலுசிஸ்தானில் 234 இறப்புகளும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் முறையே 185 மற்றும் 165 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

Sports in Tamil

Image
புதுடெல்லி : அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதன்காரணமாக திட்டமிட்டபடி மகளிர் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சில தினங்கள் முன் இடைக்கால தடை விதித்து. மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும் என்று பிஃபா அறிவித்திருந்தது.

World News

Image
டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூலை 8-ம் தேதி ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Sports in Tamil

Image
மஸ்கட் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (27-ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கடைசி அணியாக ஹாங்காங் தேர்வாகி உள்ளது. அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்தது.

Sports in Tamil

Image
அபுதாபி : அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார். அபுதாபியில் நடைபெற்ற இந்தத் தொடரில் 148 வீரர்கள் கலந்து கொண்டனர். 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 8 சுற்றுகளின் முடிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, சீனாவின் வாங் ஹாவ், அமெரிக்காவின் ரே ராப்சன், நெதர்லாந்தின் வான் ஜோர்டன் ஆகியோர் தலா 5.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசி சுற்று ஆட்டம் நடைபெற்றது.

World News

Image
வாஷிங்டன் : உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக வாக்களித்தது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான தீர்மான விவகாரங்களில் இந்தியா ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோ : உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் 2 இந்திய ஜோடிகள் கால் இறுதி சுற்றில் நுழைந்தன. அதேவேளையில் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சகநாட்டைச் சேர்ந்த காமன்வெல்த் சாம்பியனான லக்சயா செனை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதியில் பிரனாய், சீனாவின் ஜாவோ ஜுன் பெங்கை எதிர்கொள்கிறார்.

Sports in Tamil

Image
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. 35 வயதான ஜோகோவிச், செர்பிய நாட்டை சேர்ந்தவர். இதுவரையில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடி வென்றுள்ளார். அவரது அண்மைய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக அமைந்துள்ளது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர். இந்நிலையில், அமெரிக்க ஓபன் தொடரில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் பஞ்சாய சன்னோயை எதிர்த்து விளையாடினார். இதில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த அனுபமா வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீராங்கனையான கீர்த்தனா பாண்டியன் 0-3 என்ற கணக்கில் சன்னோயிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.பதக்கம் வென்ற இருவருக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. Source : www.hindutamil.in

World News

Image
கொழும்பு : இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இலங்கை அதன் பெருவாரியான தேவையை இறக்குமதி வழியே நிறைவேற்றி வந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு உள்ளானது. இந்தியா உட்பட அண்டை நாடுகளிடம் உதவி பெற்றே அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், சாக்லேட், முகப்பூச்சு, வாசனை திரவியம், ஷாம்பூ உட்பட 300 வகையான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

Sports in Tamil

Image
புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச அரங்கில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புத்துணர்ச்சியுடன் வரும் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (டி 20 வடிவம்) கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது: எனது ஆட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவேன், சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளை எதிர்கொள்ளும் திறமை மற்றும் பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ளும் திறமை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்க முடியாது. இந்த காலக்கட்டத்தை (மோசமான பார்ம்) கடந்து செல்வதற்கான செயல்முறை எளிதானதே.

World News

Image
டோக்கியோ : ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதனால் புகுஷிமா அணு மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அணு உலை பேரழிவாக இது அமைந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பல அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்நாட்டில் ஏற்கெனவே 33 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்த நிலையில், இப்போது 10 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் எரிசக்தி தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

World News

Image
இஸ்லாமாபாத் : போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

Sports in Tamil

Image
ஹைதராபாத் : காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. 35 வயதான சானியா கடந்த ஜனவரியில் இந்த சீசனுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சானியா மிர்சா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,“2 வாரங்களுக்கு முன்னர் கனடாவில் விளையாடிய போது எனது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

Sports in Tamil

Image
டோக்கியோ : ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், ஹாங்காங்கின் செயுங் கன் யி-யை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-19, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். சாய்னா நெவால், 2-வது சுற்றில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் அவர், போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் சாய்னா நேரடியாக 3-வது சுற்றில் கால்பதித்துள்ளார்.

Sports in Tamil

Image
மும்பை : ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் இந்திய அணியினருக்கு வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் மருத்துக்குழு கண்காணிப்பில் திராவிட் உள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்திய அணியினருடன் ராகுல் திராவிட் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
தெஹ்ரான் : சிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி கொலை செய்யப்பட்டார். மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியாவில் ஷியாமுஸ்லிம் பிரிவை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துகின்றனர். இதன்காரணமாக இரு நாடுகளும் ராணுவரீதியில் பரஸ்பரம் உதவி செய்து வருகின்றன. ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவான இஸ்லாமிக் புரட்சி படையின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி அரசுமுறை பயணமாக சிரியா சென்றிருந்தார்.

World News

Image
பெய்ஜிங் : சீன பள்ளி பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வரைபடங்கள் இடம்பெற்றதால் கல்வி அதிகாரிகள் 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆரம்ப கல்வி கணித புத்தகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இது சீனா முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் தோற்றம் சீன குழந்தைகள் போல் இல்லை. படங்கள் அழகாக இல்லாமல் அசிங்கமாக இருந்துள்ளன. ஒரு வரைபடத்தில் சிறுவர்கள், சிறுமிகளின் உடையை இழுப்பது போன்றும், ஒரு குழந்தையின் காலில் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்றும் வரைபடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக புத்தகத்தில் இடம் பெற்ற இந்த வரைபடங்கள் பற்றி சர்ச்சை எதுவும் எழாமல் இருந்தது.

World News

Image
வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரக ட்ரோன்கள் இந்திய முப்படைகளில் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. சீன, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

World News

Image
கோலாலம்பூர் : மலேசிய பிரதமராக இருந்தவர் நஜிப் ரசாக். இவர் பிரதமராக இருந்த காலத்தில், அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் ரூ.4,500 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி ஏராளமான நகை, ரொக்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Sports in Tamil

Image
மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள தான் எண்ணியதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இதனை அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் பகிர்ந்துள்ளார். 31 வயதான ஷமி, இந்திய அணிக்காக 60 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 386 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

World News

Image
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மூலம் பொது பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தலைப்பில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: