Posts

Showing posts from January, 2024

World News

Image
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், வங்கி வைப்புத் தொகை, அவரது ராணுவ ஓய்வூதியம் மற்றும் சொத்து விற்பனையின் வாயிலாககிடைத்த பணமும் அடங்கும்.

World News

Image
கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் திகழ்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர் (ரூ.47,300 கோடி) ஆகும். ஆனால், அவரது உண்மையான சொத்து மதிப்பு இதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

World News

Image
மாலே: மாலத்தீவின் அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம், இன்று (புதன்கிழமை) காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹுசைன் ஷமீம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஷின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அரசால் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவராவார். அவர் இன்று காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் அவர் மீது பாய்ந்து அவரை சுத்தியலால் கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் வழக்கறிஞரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் அங்குள்ள ஏடிகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

World News

Image
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தம்பதி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

World News

Image
உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 39, பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது. 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

World News

Image
இஸ்லாமபாத்: அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் ராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது.

World News

Image
இண்டியானா: அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை என அவரது தாயார் தெரிவித்த அடுத்த நாளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலிசன் சாலையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்ததில் பர்டூர் பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவர், நீல் ஆச்சாரியா என்பதும் தெரிய வந்தது. அவர் பர்டூர் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்டின்சன் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் (டேட்டா) அறிவியல் படித்து வந்துள்ளார்” என்றனர்.

World News

Image
கலிபோர்னியா: நம் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதை சரி செய்ய மூளையில் சிப் பொருத்தினால் என்ன நேரும்?! மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் இந்தக் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம். ஆம், நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அச்சோதனை நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறை மனிதருக்குப் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது.

World News

Image
மாலே: கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்குஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் பரிந்துரைக்கு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி), ஜனநாயகவாதிகள் கட்சியினர் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

World News

Image
புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை இந்திய போர்க்கப்பல் பத்திரமாக மீட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

World News

Image
வாஷிங்டன்: சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த ட்ரோன் தாக்குதல் தங்கள் நாட்டின் எல்லையில் நடக்கவில்லை என்று ஜோர்டான் கூறியுள்ளது. இது குறித்து ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முஹன்னத் முபைதீன் செய்தியாளர்களிடம், “அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த தாக்குதல் ஜோர்டானில் நடக்கவில்லை. இது சிரியாவில் உள்ள அல்-டான்ஃப் என்ற தளத்தில் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் போர்க் கைதிகள் 65 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் அதில்இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன் போரில் சிறைபிடிக்கபட்ட 65 கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மேற்கு பெல்கோரோட் பிராந்தியத்தில் (உக்ரைன் எல்லைப் பகுதி) திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 65 உக்ரைன் கைதிகள், ஆறு விமான பணியாளர்கள், மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி பிராந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்நிலையில், 65 உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11 மணி அளவில் உக்ரைன் எல்லையோர நகரமான ரஷ்யாவின் பெல்க்ரோட் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 65 போர்க் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது.

World News

Image
ஒட்டாவா: கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு வருடங்களாக கனடா அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், "கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு கிட்டத்தட்ட 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஏற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைவிட இது மூன்று மடங்கு அதிகம்.

World News

Image
சான் பிரான்சிஸ்கோ: ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என்று உலகின் மிகப் பெரிய பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு கட்டத்தில் ஐநா அமைப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐநா பாதுகாப்பு அவை யில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்ரிக்காவுக்கும் கூட்டாக நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி : மாலத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனை இந்திய ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல அனுமதி வழங்க அந்நாட்டு அதிபர் முய்ஸு தாமதித்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்ததாவது: காஃபு அட்டோலைச் சேர்ந்த 13 வயது சிறுவனக்கு உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, இந்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறுவனை மாலேவில் உள்ள உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு மிகவும் தாமதம் காட்டியுள்ளது.

World News

Image
புதுடெல்லி : ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. விளாதிமிர் புதின் 2012-ம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) என்றும் கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது என்றும் கூறப்படுகிறது.

World News

Image
புதுடெல்லி: மாலத்தீவில் மருத்துவ சிகிச்சைக்கான பயணத்துக்காக இந்தியா வழங்கிய டோனியர் விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிழந்த சிறுவன் மூளைக் கட்டி மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுவனுக்கு பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த தூரத்து தீவான வில்மிங்டனில் இருந்து சிகிச்சைக்காக தலைநகர் மாலேவுக்கு அவரைக் கொண்டு செல்ல குடும்பத்தினர் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் சிறுவனை விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர் ஆனால் வியாழக்கிழமை காலை வரை அவர்களின் அழைப்புகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தீவிரமான 16 மணி நேர போராட்டங்களுக்குப் பின்னர் மாலத்தீவு விமான போக்குவரத்து அதிகாரிகள் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு பதில் அளித்தனர்.

World News

Image
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ, தனியார் விமானமோ இல்லை. அது மோராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம். மேலதிக தகவலுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

World News

Image
பியாங்யாங்: தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த மக்களை தண்டிக்கும் போக்கைக் கொண்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்காக பிரத்யேக சட்டத்தைக் கொண்டுவந்தது. தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதை தடை செய்யும் சட்டம் அது. அந்தச் சட்டத்தின்படியே அந்த இரண்டு சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

World News

Image
அபுதாபி : உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. எம்பிஇசட் என்று அழைக்கப்படும் சேக் முகம்மது பின் செய்யத்அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

World News

Image
காசா : இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,140 பேரும், காசாவில் 24,620 பேரும் உயிரிழந்தனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்வதால், காசாவில் வசித்த 85 சதவீத மக்கள், அதாவது 24 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. பலர் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு அவசர உதவி தேவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

World News

Image
டோக்கியோ : ஜப்பான் நாட்டின் விண்கலமான 'ஸ்லிம்' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான் . நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

World News

Image
தெஹ்ரான்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு பின்னர் ஆயுத பலமுள்ள இரண்டு அண்டை நாடுகள் அதன் எல்லைகளின் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. வியாழக்கிழமை ஈரானில் உள்ள தீவிரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்தது. முன்னதாக பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருந்தது. அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானும், ஈரானும் இப்படி மோதிக்கொள்வது இது முதல் முறையில்லை என்றாலும் ட்ரோன், ஏவுகணைகள் வீசி தாக்கிக் கொண்டதால் இந்த தாக்குதல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரெஸ், இருநாடுகளும் அதிகபட்

World News

Image
கம்பாலா: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அணிசேரா அமைப்பின் (Non-Aligned Movement) இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றுள்ளார். இதனிடையே அவர் வியாழக்கிழமை அங்கு, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் சந்திப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, "கம்பாலாவில் இன்று மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்துப் பேசினேன். இரு நாடு உறவுகள் பற்றி வெளிப்படையாக உரையாடினோம். மேலும் அணிசேரா அமைப்புத் தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோ

World News

Image
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய - அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேரி மில்பென் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை காண இங்கு பலரும் விரும்புகின்றனர். இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் அவர்.

World News

Image
இஸ்லாமாபாத் : ஈரான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

World News

Image
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் ஈரானில் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர். இது இன்று முளைத்த புதிய பிரச்சினை இல்லை என்றாலும் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்கிக் கொள்வது என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒரு போர்! - போ-ர் எப்போதும் ஒரு தேசத்தை மட்டுமோ, சம்பந்தப்பட்ட தரப்புகளை மட்டுமே பாதிப்பதாக அல்லாமல் சிற்றலை விளைவை ஏற்படுத்தும். ஆனால், மாறிவரும் உலக அரசியலில் போர் அதன் தாக்கத்தின் வீச்சை விஸ்தரித்துக் கொள்கிறது. அப்படித்தான் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் மெல்ல மெல்ல ஈரானை ஆக்கிரமித்துள்ளது. மேற்கு ஆசிய பதற்றத்தால் தனது உள்நாட்டு, வெளியுறவு பாதுகாப்பு சவால்கள் மீதான அழுத்தம் தர அண்டை நாடுகளைத் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஈரான் விழுந்திருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்ச

World News

Image
வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. மேலும் ஹவுதிகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகிறது. ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாதவை. இதனால் செங்கடல் வணிகப் பாதையில் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ஏமனின் ஹவுதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.

World News

Image
இஸ்லாமாபாத் : ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக ஈரான் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உளவு அதிகாரி, “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஈரான் மண்ணில் இருந்து இயங்கும் ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்பதை மட்டுமே இப்போதைக்கு உறுதி செய்ய முடியும். மேலதிக விவரங்களுடன் அரசு அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும்” என்றார்.

World News

Image
இஸ்லாமபாத்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால் செங்கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், போர்கப்பல்கள் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாத முகாம்களை குறிவைத்து குண்டு வீசின. இந்நிலையில் சிரியா மற்றும் இராக்கில் உள்ள குர்திஷ் பகுதியில் ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர்.

World News

Image
ஒட்டாவா: இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டு 86% சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது. அதற்கான ஒளி தெரியவில்லை" என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்களில் 86% சரிவு ஏற்பட்டுள்ளது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலோசிஸ்தான் பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அதில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை தாக்கியதாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாகத் தெரிவித்தது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் டேவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் கக்காரும் சந்தித்துக் கொண்ட வேளையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசானது ஈரான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளதோடு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல

World News

Image
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

World News

Image
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாரி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

World News

Image
தெஹ்ரான் : ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இந்த உளவு அலுவலகம் குர்திஸ்தானின் அர்பில் பகுதியில் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தின் அருகே உள்ளது. இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு ஈரானுக்கு எதிராக உளவுத் தகவல்களை சேகரிப்பதாக நீண்ட நாள் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில் மொசாட் உளவுத்துறை அலுவலகம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

World News

Image
வாஷிங்டன் : 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவிக் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

World News

Image
புதுடெல்லி: மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசியகாங்கிரஸ் தலைவர் முகமது முய்சுபுதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அதிபர் முய்சு கெடு விதித்துள்ளார்.

World News

Image
மாலே: மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திருப்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவு அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. நவம்பர் மாதம் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், இந்தியாவிடம் வலுவான கோரிக்கை வைக்க மக்கள் எனக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்துக்கு இந்தியா மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

World News

Image
தைபே: தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் சீன தேசிய கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க் கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள் நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறி ஆட்சி நடத்தினர். அந்த பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

World News

Image
தைபே: 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தைவானில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகின. இதனால், சர்வதேச அரசியல் பார்வை, தைவான் மீது திரும்பியது. சுமார் 19.5 மில்லியன் தைவான் மக்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். தற்போது தைவானின் புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கான முடிவு, போருக்கான பாதை அல்லது அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்று சீனா நம்பியது. ஆனால், ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

World News

Image
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கால்செரனின் இந்தப் பதவியேற்பு உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டோர் மத்தியில் நேர்மறையான செய்தியைக் கடத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. அதுவும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு மிதமாக இருப்போருக்கு இது நம்பிக்கை செய்தியாக வந்துள்ளது. ஸ்பெயினில் மட்டுமல்ல, ஐரோப்பியாவிலேயே டவுன் சிண்ட்ரோம் பாதித்த பெண் ஒருவர் நாடாளுமன்ற பதவியில் அமர்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

World News

Image
புதுடெல்லி: "ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா ( Abdul Mateen ibni Hassanal Bolkiah ) , தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை ( Yang Mulia Anisha Rosnah ) திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புருனே நாடு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல் போல்கியா. இவரின் 10-வது மகனும், இளவரசருமான அப்துல் மதீன், அரச குடும்பத்தைச் சாராத தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (ஜன.11) திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம், தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமண விழா ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. இதற்காக திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் நடைபெற்றது.

World News

Image
வாஷிங்டன்: செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் அமெரிக்க முயற்சியின் முக்கிய இலக்காக ராடார் தளங்கள் உள்ளன" என்று தெரிவித்தனர். தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்களை அவர்கள் தர மறுத்துவிட்டனர். இந்தத் தாக்குதல்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “சமீப காலங்களில் செங்கடல் பிராந்தியங்களில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹவுதிகளின் திறன்களை குறைக்கும் வகையில் அவர்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வைத்து தாக்குதலுக்கு ஏவும் தளங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது” என்றார். ஏமன் நேரப்படி வெள்ளிக்கிழமை, தலைநகர் சனாவிலுள்ள விமான நிலையம் அருகே உள்ள ராணுவத் த

World News

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் என்பது நாம் ஓரளவுக்கு அறிந்ததே. ஆனால், அதன் அளவு என்ன என்பதுதான் சமீபத்திய அமெரிக்க அறிவியல் ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலாகும். அதாவது, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் சுமார் 2,40,000 நேனோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன என்பதுதான் அந்த எச்சரிக்கை தரும் ஆய்வுத் தகவலாகும். பேக்கேஜ் தண்ணீரை விற்கும் நிறுவனங்கள் தாங்கள் எடுக்கும் தண்ணீர் மிகவும் சுத்தபத்தமான இடங்களிலிருந்து எடுக்கப்படுவதாக விளம்பரம் செய்கின்றன. ஆனால், அதில் கண்களுக்கு புலப்படாத நேனோ பிளாஸ்டிக் துகள்கள் லட்சக்கணக்கில் மிதக்கின்றன என்பதுதான் இப்போதைய ஆய்வு நம்மை எச்சரிக்கும் ஒரு தகவல்.

World News

Image
புதுடெல்லி: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை (Oliver Mulherin) திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை (38 வயது) நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் இந்த திருமண விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

World News

Image
வாஷிங்டன்: ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களை ஏமனில் உள்ள சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். "தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் சுதந்திரத்தை கெடுக்கும் எந்த செயலையும் நாங்களோ எங்களது கூட்டாளிகளோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இந்தத் தாக்குதல்கள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

World News

Image
மாட்ரிட்: கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. அத்துடன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிய மக்களை வலியுறுத்துமாறு அந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஸ்பெயின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. ஆனால் பொதுமக்கள் அதனை சரிவர பின்பற்றாத நிலையில், தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

World News

Image
புதுடெல்லி: மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவரும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஃபயாஸ் இஸ்மாயில் நேற்று கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான இனவெறி பேச்சு என்பது துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் பதவிகளில் உள்ளவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.சமூக ஊடகங்கள் எங்கும் பரவியுள்ளன. இதுபோன்ற பேச்சுகள் இருநாடுகளுக்கிடையில் எளிதில் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றன.