Posts

Showing posts from May, 2023

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்தியை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Sports in Tamil

Image
மதுரை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பி.விக்காஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் swimming சார்பில் தேசிய அளவில் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கான நீச்சல் போட்டி மே 26 முதல் 29 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை நீச்சல் வீரர் பி.விக்காஸ் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதில் 50 மீ ஃப்ரிஸ்டைல் பிரிவில் 23.47 வினாடிகளில் நீந்தி தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், 100 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் 52.78 வினாடிகள் நீந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

World News

Image
லோசான்: இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது குறித்து குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா மனம் திறந்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Sports in Tamil

Image
அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது சிஎஸ்கே அணி. 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 15 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: என்னுடைய சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் ஐந்தாவது முறையாக சாம்பியன் வென்றது அற்புதமான உணர்வு. சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய அளவில் வாழ்த்துகளை கூற வேண்டும். இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி இரு பந்துகளில் என்னால் முடிந்தவரை கடினமாக மட்டையை சுழற்ற வேண்டும் என்று நினைத்தேன். மோஹித் சர்மா மெதுவாக பந்து வீசக்கூடியவர் என்பதால் நேர் திசையில் அடிக்க நினைத்தேன். அது சரியாக அமைந்தது. சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு ஜடேஜா கூறினார்.

World News

Image
புதுடெல்லி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிகழ் வுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவளது வீட்டிலிருந்து 55 வயது மிக்க முஸ்லிம் நபர் ஒருவர் கடத்திச் சென்றார் என்றும், அவர் அந்தச் சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்கு எதிராக இந்திய தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Sports in Tamil

Image
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2023 (TNPL) தொடரின் 7வது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டி.என்.சி.ஏ கிளப்பில் (TNCA Club) நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எல் சேர்மன் ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாரூக்கான் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 7-வது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏழாவது சீசனில் மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் டக்வோர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கை சென்னை வெற்றிகரமாக எட்டியது. இறுதிப் போட்டியில் ரன் விரட்டலின் போது 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசத்திய டேவன் கான்வே, ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தச் சூழலில் 2023 சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் சிறந்த கள செயல்பாடு என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அடங்கும்.

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, "சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்" என்று பேச்சை தொடங்கினார்.

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மழையின் காரணமாக 15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட, சென்னை அணி கடைசி ஓவரில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு கேம் சேஞ்சிங் பவுலராக இருந்த மோஹித் சர்மா இன்றைய போட்டியில் தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் 27 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை அவுட் ஆக்கியவர், இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் அம்பதி ராயுடு, தோனி என அவுட் ஆக்கி சென்னையின் கோப்பை கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார்.

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. 15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

Sports in Tamil

Image
அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.

Sports in Tamil

Image
அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமறிங்கிய விருத்திமான் சாஹா 2-வது ஓவரில் அழகாக ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால், தீபக் சாஹர் கையிலிருந்து நழுவிய அந்த பந்து சிஎஸ்கே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு உள்ளானது. அடுத்து 4-வது ஓவரில் சாஹர் வீசிய பந்தில் நேரடியாக சாஹருக்கே சுப்மன் கில் ஒரு கேட்சை கொடுத்தார். அதிலும் கோட்டைவிட்டார் சாஹர். ஆனால், இம்முறை சிஎஸ்கே ரசிகர்களின் கோபம் பந்தின் மீதல்ல... சாஹரின் மீது.

World News

Image
சென்னை: ஜப்பானின் ஒசாகாவில் இருந்து தலைநகர் டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதற்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். சிங்கப்பூரில் 25-ம் தேதி வரை இருந்த முதல்வர், அதன்பின் ஜப்பான் சென்றுள்ளார். ஒசாகா நகரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அங்குள்ள தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

Sports in Tamil

Image
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியே தனது கடைசி போட்டி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அறிவித்த ராயுடுவை மனதார வாழ்த்தி உள்ளார் சுரேஷ் ரெய்னா. இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியவர்கள். 37 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 203 போட்டிகளில் விளையாடி உள்ளார். 4,329 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் செய்துள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ராயுடு, 89 ஐபிஎல் போட்டிகளில் 1,913 ரன்கள் குவித்துள்ளார்.

Sports in Tamil

Image
மும்பை: நடப்பு சீசனில் 16 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 851 ரன்களை குவித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில். கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரது ஆட்டத்தை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். “தனது அபார ஆட்டத்தின் மூலம் இந்த சீசன் மறக்க முடியாத சீசனாக மாற்றியுள்ளார் சுப்மன் கில். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சதம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. அது தான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு.

Sports in Tamil

Image
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மழை காரணமாக திட்டமிட்டபடி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விதத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பலர் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து தகுதி சுற்று-2-ல், லீக்கின் வெற்றிகரமான அணியும் 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை தனது சொந்த மைதானத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி சுற்றில் வலுவாக கால்பதித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

World News

Image
வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடான அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது. மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் மக்களுக்கு மரண தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மத சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக இருக்கும் அந்நாட்டில் அதற்கு எதிராக தண்டனைகளும் வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Sports in Tamil

Image
எம்.எஸ்.தோனி என்பது ஐபிஎல் கிரிக்கெட்டின் குறியீடு. வணிகக் குறியீடு. அவர் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற்று விட முடியாது. அவர் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துவிட்டால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அது பெரிய ஓட்டை என்று பார்க்கப்படுவதோடு ஐபிஎல் கிரிக்கெட்டைச் சுற்றியுள்ள வர்த்தக வலைப்பின்னலிலும் பெரிய ஓட்டை விழும் என்றே கருதப்படுகின்றது. ஆகவே, தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது அவர் கையில் இல்லை என்றே தெரிகிறது. அதனால்தான் அவரும் வாயைத் திறக்காமல் இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய லெஜண்ட், முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹெய்டன், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் சென்னையில் நடந்த முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10-வது இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை அணி ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை இந்தியன்ஸ் சாதனையான ஐந்து ஐபிஎல் பட்டங்கள் என்பதைச் சமன் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்கள் அகமதாபாத்தில் இறுதிப் போட

Sports in Tamil

Image
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இன்று (சனிக்கிழமை) 34 பந்துகளில் சதம் விளாசி புதிய டி20 வரலாறு படைத்துள்ளார். இந்த டி20 தொடரின் வரலாற்றில் 34 பந்துகளில் சதம் கண்ட 2வது வீரர் ஆனார் சான் அபாட். சர்ரே அணி ஒரு கட்டத்தில் 66/4 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இறங்கினார். மைதானம் முழுதும் பந்துகள் பறந்தன 11 சிக்சர்களை பறக்க விட்டார். 44 பந்துகளில் 110 நாட் அவுட் என்று வரலாற்று நாயகனாகத் திரும்பினார். சர்ரே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் விளாசியுள்ளது.

World News

Image
நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
சென்னை: “பதிரனா குறித்து கவலை வேண்டாம்; என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” என்று பதிரனாவின் குடும்பத்திடம் தோனி உறுதியளித்திருக்கிறார். சிஎஸ்கே அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான பத்ரினா, அந்த அணியின் நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார். ரசிகர்களிடமும் அவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எலிமினேட்டர் 2-இல் வெல்லும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது.

World News

Image
பீஜிங்: சீனாவில் புதிய கரோனா அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” கரோனா பரவல் சீனாவில் முற்றிலும் பூஜ்ஜியமான நிலையில் ஒமிக்ரான் திரிபு உடைய XBB என்ற புதிய வகை கரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என்றும் அப்போது வாரத்திற்கு 6.5 கோடி பேர் இந்த வகை கரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். XBB என்ற வகை கரோனாவை தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

Sports in Tamil

Image
சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது அபார பந்து வீச்சால் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் 29 வயதான ஆகாஷ் மத்வால். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மத்வால், ஒரு பொறியாளர் ஆவார். தனது கிரிக்கெட் கனவை நிறைவேற்றுவதற்காக கட்டிட பொறியாளர் பணியை துறந்துவிட்டு கையில் பந்தை எடுத்தார். மாநில அணியில் இடம் பிடித்த அவர், தனது திறனை நாளுக்கு நாள்மெருகேற்றிக்கொண்டார். இதன்பயனாக அவர், 50 ஓவர் போட்டியில் மாநில அணியை கேப்டனாக வழி நடத்தினார். அப்போது ஐபிஎல் அணிகளின் பார்வை அவர் மீது விழுந்தது. முதலில் மும்பை அணியின் வலை பயிற்சி பந்து வீச்சாளராக ஆகாஷ் மத்வால் தேர்வு செய்யப்பட்டார்.

Sports in Tamil

Image
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆஃப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை சொந்த மண்ணில் விளையாடுவதால் குஜராத் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கக்கூடும். 15 ஆட்டங்களில் 55.53 சராசரியுடன் 2 சதங்கள், 4 அரை சதங்கள் உட்பட 722 ரன்களை வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும். அதேவேளையில் 12 ஆட்டங்களில் 301 ரன்கள் சேர்த்து சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கிய விஜய் சங்கரும் சவால் அளிக்கக்கூடும். இவர்கள் இருவரும் லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தனர். எனினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். இதனால் இலக்கை துரத்திய குஜராத் அணி கரைசேராமல் போனது.

World News

Image
நியூயார்க்: தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை வழங்க வகை செய்யும் மசோதாவை நியூயார்க் மாகாண பேரவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் புத்தாண்டு ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியூயார்க் மாகாண அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாகாண உறுப்பினர்களும் பேரவையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாம் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ. பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முறையே 2010, 2013, 2015, 2019 சீசன்களில் விளையாடி உள்ளன. அதில் சென்னை ஒரு முறையும், மும்பை மூன்று முறையும் வாகை சூடியுள்ளது.

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெளியேற்றி உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் செயல்பாடு. 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 21 பந்துகளில் 17 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பந்துகளாக வீசி இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஆகாஷ் சமன் செய்துள்ளார். கடந்த 2009 சீசனில் கும்ப்ளே, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அதை சமன் செய்துள்ளார் ஆகாஷ். கும்ப்ளேவின் எக்கானமி ரேட் 1.57. ஆகாஷின் எக்கானமி ரேட் 1.4.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டும் அல்லாமல் குஜராத் அணியை முதன்முறையாக வீழ்த்தி சாதனையும் படைத்தது சிஎஸ்கே. போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது எதிர்கால திட்டங்கள், அணி கட்டமைக்கப்படும் விதம், வீரர்கள் எந்த முறையில் வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை போட்டி ஒளிபரப்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளீர்கள். இதை மற்றொரு ஆட்டம் என்பது போன்றுதான் உணர்கிறீர்களா?

World News

Image
சிட்னி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக கடந்த 22-ம் தேதி இரவு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோர் நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தாதுப் பொருட்கள், கல்வி, குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 11, இஷான் கிஷன் 15 ரன்களில் வெளியேறினர்.

Sports in Tamil

Image
சென்னை : 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் சரிந்தது.

Sports in Tamil

Image
சென்னை : "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்" என்று தோனி தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாக 10வது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sports in Tamil

Image
சென்னை : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 173 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் கூட்டணி இம்முறை மெதுவான துவக்கம் கொடுத்தது. 3வது ஓவரில் இக்கூட்டணி பிரியவும் செய்தது. 12 ரன்களில் முதல் விக்கெட்டானர் சஹா. அவரை தீபக் சஹார் வீழ்த்த, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 8 ரன்களோடு நடையைக் கட்டவைத்தார் தீக்சனா. இதனால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 55 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது குஜராத்.

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசன் பிளே-ஆஃப் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள் குறித்து பார்ப்போம். நடப்பு சீசனில் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று மாலை விளையாடுகின்றன. எலிமினேட்டரில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை செய்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

World News

Image
பாரீஸ் : கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக்கொண்டு கோஷம் எழுப்பியபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. 75-வது கேனஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது. இதில் நேற்றிரவு பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. இப்படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் - நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவ நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார். அவர் ஆடை முழுவதும் ரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் சற்று பரபரப்பு தொற்றி கொண்டது.

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், குஜராத் அணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தான் என்றுமே தோனியின் ரசிகன் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இடையிலான பிணைப்பு குறித்து சொல்லவே வேண்டாம். அதனை பலமுறை களத்தில் நாம் நேரடியாக பார்த்துள்ளோம். இந்த சூழலில் ஹர்திக், தோனி குறித்த தனது நினைவுகளை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Sports in Tamil

Image
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், விராட் கோலி அது குறித்து நெகிழ்ச்சியான ட்வீட் செய்துள்ளார். இதில் ஆர்சிபி அணியை ஆதரித்த ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும் போதும், நடைபெறும் போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்ல வேண்டும் என அந்த அணியின் கோடான கோடி ரசிகர்கள் விரும்புவார்கள். ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற முழக்கத்தையும் முன்வைப்பார்கள். ஆனாலும் 2008 சீசன் முதல் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் ரசிகர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

Sports in Tamil

Image
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாத அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வகையில் இங்கிலாந்து புறப்பட்டு உள்ளதாக தகவல். இன்று (மே 23) அதிகாலை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் என 20 பேர் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். இதில் பயிற்சியாளர் ராகுல் திராவிட், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நெட் பவுலர்கள் ஆகாஷ் தீப், புல்கிட் நராங்க் ஆகியோரும் தற்போது இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். நாளை இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் அஸ்வின் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல்.

World News

Image
டப்ளின் (அயர்லாந்து): ஐரோப்பிய யூனியனுக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக்கில் ஐரோப்பிய யூனியன் பயனாளர் குறித்த தகவல்களை கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது அயர்லாந்தில் உள்ள மெட்டாவிடம் டிபிசி நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி மெட்டா நிறுவனம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

Sports in Tamil

Image
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. அதேவேளையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே பங்கேற்ற 14 சீசன்களில் 12-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. லீக் சுற்றில் குஜராத் அணி 10 வெற்றிகளுடன் 20 புள்ளிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது. மேலும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. சிஎஸ்கே 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்திருந்தது. முதல் தகுதி சுற்றான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியானது எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.அதில் வெற்றி பெறும்பட்சத்தில் 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழையலாம்.

World News

Image
போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினி நாட்டின் தோக்பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். தென்மேற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூ கினி நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Sports in Tamil

Image
நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’. ஆனால், வழக்கம் போலவே இந்த முறையும் வெறுங்கையோடு வெளியேறி உள்ளது ஆர்சிபி. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 7-ல் தோல்வி என முதல் சுற்றோடு நடையை கட்டி உள்ளது. இந்த சூழலில் அந்த அணி ஒரு முறை கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். 2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய ஆர்சிபி அணியால் அதனை வெல்ல முடியவில்லை. இந்த மூன்று சீசனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சீசனிலும் பிளே-ஆஃப் வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர். இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கும் முன்னேறிய ஓர் அணி ஆர்சிபி.

World News

Image
போர்ட் மோரஸ்பி: தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம் என்று பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நாடான பபுவா நியூ கினியாவுக்குச் சென்றுள்ளார். தலைநகர் போர்ட் மோரஸ்பி சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி விமான நிலையம் வந்து வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவர் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்வு பரவலாகப் பேசப்பட்டது.

World News

Image
ஹிரோஷிமா: ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. ஆயுத பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டின் முக்கிய நோக்கம்.

World News

Image
ஹிரோஷிமா: ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோக சங்கிலியில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை நீக்க வேண்டும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில், சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அவர்களில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார்.

Sports in Tamil

Image
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளது குஜராத் டைட்டன்ஸ். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது. இந்தப் போட்டியில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. சாஹா மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை தொடங்கினர். சாஹா, 12 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த விஜய் சங்கர், கில் உடன் 123 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.