Posts

Showing posts from March, 2022

World News

Image
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

World News

Image
கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக மேரிபோல் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று சண்டை நிறுத்தத்தை அமல் செய்தது. அந்த நகரில் சிக்கித் தவித்த பலர் பாதுகாப்பாக வெளியேறினர்.

World News

Image
இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

Sports in Tamil

Image
மும்பை : லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி வீழ்ந்தது. ஐபிஎல் 15வது சீசனின் 7வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. 210 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பனர்கள் கேஎல் ராகுல், குயிண்டன் டி காக் இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரையும் பிரிக்க சென்னை பவுலர்கள் பல முயற்சி எடுத்து பார்த்தனர். ஆனால் கைகூடவில்லை. அப்படி சொல்வதை கைகூடியதை கோட்டைவிட்டார்கள் சென்னை பீல்டர்கள். பிராவோவின் முதல் ஓவரிலேயே டி காக் மொயின் அலி கைக்கே பந்தை அடித்தார். எளிதான அந்தக் கேட்சை மொயின் அலி மிஸ் செய்வார். இதேபோல் மொயின் அலி ஓவரில் கேஎல் ராகுல் பந்தை தூக்கி அடிக்க முயற்சிப்பார். இந்தமுறை துஷார் தேஷ்பாண்டே கேட்ச்சை மிஸ் செய்தார்.

World News

Image
வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்தியில் அதிபர் புதினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அதனால் புதின் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், "புதின் தனது ராணுவ ஜெனரல்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார். போர்க்களத் தகவல்களில் உண்மைக்கு மாறான நிலவரங்களை தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாக புதின் ஆத்திரத்தில் உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் 15-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி. மிகுந்த த்ரில் அனுபவம் தந்த இந்தப் போட்டியின் 5 கவனம் ஈர்த்த தருணங்கள்... > டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதற்கு ஏற்ப முதல் மூன்று ஓவர்களில் ஆர்சிபி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஆகாஷ் தீப் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கேகேஆர் வீரர் வெங்கடேஸ் ஐயர் தனது விக்கெட்டை இழந்தார்.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே இம்ரான் கான் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

World News

Image
கொழும்பு: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு நாடு முழுவதும் மின் வெட்டு நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளது. இம்மாத தொடக்கம் முதலே இலங்கையில் 7 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருந்தது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கூட்டணிக் கட்சி, அமைச்சரவையிலிருந்து விலகி உள்ளது. இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி 20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் நினைத்ததைவிட வித்தியாசமாக இருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஐபில் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைவீழ்த்தியது. 211 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள்மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணியால் மீள முடியாமல் போனது.

World News

Image
ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதுகுறித்து அரபு செய்தி நிறுவனங்கள், “ இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அரசியல் பேச்சுக்களுக்கு வளமான சூழலை உருவாக்கவும், அமைதிக்கான முயற்சிகளைத் தொடங்கவும் ஏமனில் தற்காலிக போர் நிறுத்தத்தை சவுதி கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன.இந்தப் போர் நிறுத்தம் ஏமனில் அமைதி நிலவுவதற்காக அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் என்றும் சவுதி தெரிவித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று காலைமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

World News

Image
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது அமெரிக்கா. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியது. இதில் ஓரளவு பலனும் கண்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ரஷ்யாவுடனான தங்களின் நட்பை முறித்துக் கொண்டுள்ளன.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாக கவிழும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவர் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்னென்ன? அவர் கூறுவது போல் அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடக்கிறதா? என்று அறிய முற்படுவோம்.

World News

Image
இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படை களை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர். ஆனால் தலிபான்கள் ஆட்சிக்குவந்தது முதல் பெரும்பாலான பகுதிகளில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக பெண் குழந்தைகள் 6-வகுப்புக்கு மேல் படிப்பதற்கான தடையை தலிபான்கள் நீட்டித்தனர்.

World News

Image
கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு களமிறங்கிய இளம் வீரரான ஆயுஷ் பதோனி, தனது அதிரடியால் அறிமுக ஆட்டத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்தது. 159 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ராகுல் டிவாட்டியா 24 பந்துகளில் 40 ரன்களும், அபினவ் மனோகர் 7 பந்துகளில் 15 ரன்களும் விளாசியதன் மூலம் 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியது.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட்டி ரசிகர்களுக்கான பிரத்யேகப் பிரிவை சமூகவலைதளமான ட்விட்டர் உருவாக்கி உள்ளது. இதற்கான முன்னோட்டத்தை ட்விட்டர் தொடங்கியுள்ளது. இதற்காக ட்விட்டர் அதன் எக்ஸ்புளோர் பக்கத்தில் ஒரு பிரத்தியேக கிரிக்கெட் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவில் ஆண்ட்ராய்டில் ட்விட்டரைப் பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு கிடைக்கும். இந்த பிரிவின் மூலம் ரசிகர்கள் பிரத்யேக வீடியோ உள்ளடக்கம், நிகழ்நேர ஆட்ட புதுப்பிப்புகளை வழங்கும் ஸ்கோர் போர்டு, ஊடாடும் விட்ஜெட்களை அணுக முடியும். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட குழு எமோஜிகளை பயன்படுத்தி ரசிகர்கள்தங்கள் அணிகளை உற்சாகப் படுத்த முடியும்.

Sports in Tamil

Image
புனே: ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் லீக்கின் 5வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 210 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணி டாப் ஆர்டர் முழுவதும் ராஜஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது. கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் துவக்கம் கொடுத்தனர். இதில் கேன் வில்லியம்சன் இரண்டு ரன்களில் அவுட் ஆக, அபிஷேக் ஷர்மா 9 ரன்களில் அவுட் ஆனார். இதற்கடுத்து வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரன் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி நடையைக் கட்டினர். இப்படி முதல் வரிசை வீரர்கள் நால்வரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் சன்ரைசர்ஸ் அணி எட்டு ஓவர்களுக்கு உள்ளாகவே தனது மொமண்ட்டத்தை இழந்தது. பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் மூவரும் இணைந்து ராஜஸ்தான் அணியை சுட்ருட்டினர்.

World News

Image
மாஸ்கோ: உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

Sports in Tamil

Image
மும்பை: லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் திங்கள்கிழமை நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 5 சுவாரஸ்ய தருணங்கள்... > லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், டி-காக் என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட U19 இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் போட்டியிலேயே அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் அரைசதம் அடித்த தருணம், மிக முக்கியக் கொண்டாட்டமாக அமைந்தது.

World News

Image
மாஸ்கோ :போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில்,’உக்ரைனியர்களை நான் அழித்துவிடுவேன் எனக் கூறுங்கள்’ என்று ரஷ்ய அதிபர் புதின் கோபமாகக் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன.

World News

Image
கொழும்பு: இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் புதிய மின் திட்டத்தை அமைக்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா ஆதரவுடன் செயல்படுத்தப்பட இருந்த மின் திட்டத்தை மாற்றி இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததே தோல்விக்குக் காரணம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் நேற்றுமுன் தினம் மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், ஒடின் ஸ்மித்ஆகியோரது அதிரடியால் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.

Sports in Tamil

Image
மும்பை: முதல் போட்டியின் தோல்விக்கு பின்பு, அணியின் பாணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சில நாட்கள் முன் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி முதல் போட்டியை சனிக்கிழமை சந்தித்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. எனினும், அடுத்த ஆட்டத்துக்காக தயாராகி வருகிறார் சென்னை அணி வீரர்கள்.

Sports in Tamil

Image
ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த பின், ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இந்தியா வெளியேறியுள்ளது. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு இது கடைசி உலகக்கோப்பை ஆகும். 39 வயதாகும் அவர் இதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய ஒரே மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

World News

Image
இஸ்லமாபாத்: தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் தொடர்ந்து சிக்கலைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தனர். அவருக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாகவே போராட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடந்தி வந்தனர். சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.

World News

Image
லாஸ்ஏஞ்சல்ஸ்: நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர் வில் ஸ்மித் கூறியுள்ளார். 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

World News

Image
லாஸ்ஏஞ்சல்ஸ்: நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர் வில் ஸ்மித் கூறியுள்ளார். 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

World News

Image
லாஸ்ஏஞ்சல்ஸ்: டியூன் திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அகடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 94வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

Sports in Tamil

Image
பாஸல்: சுவிஸ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை எதிர்த்து விளையாடினார். 49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார். முதல் செட்டில் போராடிய பூசனன், 2-வது செட்டில் சிந்துவின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பிரணாய் 12-21, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.சுவிஸ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அக்சர் படேல், லலித் யாதவ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை டெல்லி கேபிடல்ஸ் அணி. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான இஷான் கிஷன் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், திலக் வர்மா 15 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அன்மோல்பிரீத் சிங் 8, கெய்ரன் பொலார்டு 3, டிம் டேவிட் 12 ரன்களில் நடையை கட்டினர். டேனியல் சேம்ஸ் 7 ரன்கள் சேர்த்தார். டெல்லி சார்பில் குல்தீப்யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 178 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. டிம் ஷெய்பர்ட் 21, மன்தீப் சிங் 0, ரிஷப் பந்த் 1, பிரித்வி ஷா 38, ரோவ்மன் பொவெல் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷர்து

World News

Image
கீவ்: ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நேற்றிரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மாஸ்கோவின் கொள்கைகளை வெகுக் கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி, "எங்கள் மக்கள் ரஷ்யாவை வெறுக்கக் கூடிய அத்தனை செயல்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி எம்மக்கள் அவர்களாகவே ரஷ்ய மொழியைப் புறக்கணிப்பார்கள். இதற்கு நீங்கள் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதலும், அரங்கேற்றும் படுகொலைகளும், குற்றங்களும் தான் காரணமாக இருக்க முடியும்.

World News

Image
உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிதாக சமூகவலைதளத்தை தொடங்கவிருக்கிறாரோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது அவர் பதிவு செய்த ட்வீட்டும் அதற்கான பின்னூட்டங்களும் பதில்களும். முன்னதாக மார்ச் 25 ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என வினவியிருந்தார். அதன் கீழ் ஆம், இல்லை ஆப்ஷன் இருந்தது. அந்த ஆப்ஷனில் இல்லை என்றே பெரும்பாலானோர் பதிவு செய்திருந்தனர். 70% வாக்குகள் இல்லை எனப் பதிவாகியிருந்தது.

World News

Image
கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் போலந்து நகருக்கு வந்தபோது உக்ரேனியர்களுக்கு மேற்கிலிருந்து இன்னும் அதிக உதவிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் எதுவும் பேசவில்லை என் உக்ரைன் பெண் எம்.பி. இன்னா சாவ்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதிபர் ஜோ பைடன் அண்மையில் போலந்து உக்ரைன் எல்லையில் உள்ள நகரத்திற்குச் சென்றார். அங்கே அவர் உக்ரைன் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

Sports in Tamil

Image
சென்னை மற்றும் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே நேற்று நடந்த நட்புறவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேரளாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடையிலான 20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டி கிண்டி ஐஐடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

World News

Image
அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள் ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனில் லக்னோ, குஜராத் ஆகிய இரு அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றின் 70 ஆட்டங்களும் மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா கேப்டனாக வழிநடத்தினார்.

Sports in Tamil

Image
2007-ம் ஆண்டு... யாராலும் மறக்க முடியாத ஆண்டு, கிரிக்கெட் உலகின் புது அத்தியாயம் இயற்றப்பட்ட ஆண்டு. ஆம், 2007-ம் ஆண்டு, முதல் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் புது அத்தியாயமே. 8 மணி நேரம் நடைபெறும் போட்டியை கண்ட முதியவர்களுக்கு அன்று 4 மணி நேரத்தில் போட்டி முடிந்து விடுவது மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர கொடுத்திருக்கலாம். அவர்களின் அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், முதல் டி20 உலகக் கோப்பையும் இந்தியா வென்றது. இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் தெரியாது, இது எவ்வளவு பெரிய சந்தையை ஏற்படுத்த போகிறது என்பது.

World News

Image
டமாஸ்கஸ்: சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சினைகளும், சவால்களும் உள்ளன. எனினும் சவுதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் அரசியல் ரீதியாக சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் நிகழ்வு ஒன்றில் சவுதியுடனான ஈரானின் உறவு எவ்வாறு உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறும்போது, “சவுதி அரேபியாவின் நடவடிக்கைகளால் அந்நாட்டுடனான உறவில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. மினாவில் சுமார் 460 ஈரானியர்கள் உயிரிழந்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சனைகளும், சவால்களும் இருந்து வருகின்றன. எனினும் சவுதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவர் 24 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கைக்கான நோக்கமாக பெரிய இலக்குகளைப் பட்டியலிட்டார். உக்ரைனை நாஜிக்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய ஆதரவாளர் அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். உக்ரைன் ராணுவத்தினை முடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் உக்ரைன் வலுவான எதிர் தாக்குதலைக் கொடுத்து வருகிறது.

World News

Image
கொழும்பு: நியூஸ் ப்ரின்ட் பற்றாக்குறை இன்றைய (சனிக்கிழமை) எடிசனை நிறுத்தியுள்ளது இலங்கையின் பிரபலமான தி ஐலாண்ட் பத்திரிகை. நியூஸ் ப்ரின்ட் எனப்படும் செய்திகளை அச்சிடும் தாளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் வார இறுதி எடிசனை நிறுத்துவதாக தி ஐலாண்ட் பத்திரிகை அறிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் இறுகிவருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் இரண்டு வேளை சாப்பாடு போதும் என்றளவுக்கு அங்குள்ள சாமான்ய மக்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. விரைவில் பசியும், பட்டினியும் ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் இன்றுதொடங்குகின்றன. இந்த சீசனில்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. கரோனா தொற்றை கருத்தில் கொண்டு இம்முறை லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் உள்ள 4 மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளை நேரில் காண 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

World News

Image
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். போரால் மக்கள் மட்டு மின்றி விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளன. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. இதனிடையே, தென்கிழக்கு உக்ரைனின் ஜிபோரிஜியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதேபோல் அகேலா என்று பெயரிடப்பட்ட ஓநாயையும் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை விலங்குகள் உரிமை குழு மேற்கொண்டது.

World News

Image
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது. வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை வியாழக்கிழமை நடத்தியது. இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா அரசு தமது ஏவுகணை சோதனை பற்றிய விளக்கத்தை அளித்துள்ளது.

World News

Image
"என்னிடம் காரோ, கழுதை சவாரிக்கான பணமோ இல்லை. ஆனால், வறட்சியிலிருந்து தப்பித்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பையோடாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது குடும்பத்தினருடன் 15 நாட்கள் நடந்தே அங்கு சென்றேன். இந்த பயணத்தில் எனது 3 வயது குழந்தையும், எனது மனைவியும் தாகத்தால் உயிரிழந்தனர்" என்கிறார் 47 வயதான அலி அதான். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக அலி அதானின் கால் நடைகள் எல்லாம் உயிரிழக்க, அலி உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் வேறு இடத்திற்குச் சென்றனர். அப்போதுதான் தனது மனைவி மற்று குழந்தையை அலி இழந்திருக்கிறார். அலி மட்டுமல்ல 7 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த 10 குழந்தைகளின் தாயான, முமினோ மவ்லிம்மும் பல போராட்டங்களுக்கு இடையே பையோடாவுக்கு வந்திருக்கிறார்.

World News

Image
மாஸ்கோ: ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தடையை தகர்க்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நட்பற்ற நாடுகள் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய ரூபிள்களில் இனி பணம் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

World News

Image
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்களைக் குறிவைத்து தாக்கும் ரஷ்யப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து சிதறும்போது பொதுமக்களின் உடல்கள் வெந்து புண் ஆவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இச்சூழலில் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கும், ரசாயன மற்றும் அணு ஆயுத எதிர்ப்பை வலுப்படுத்துமாறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா அடுத்ததாக இன்னும் பல ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தங்களுக்கு ஆயுதங்களுன், டேங்குகளும், போர் விமானங்களும் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

World News

Image
பிரஸல்ஸ்: உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்பாக நேட்டோ நாடுகளின் தலைவர்கள், பிரஸல்ஸில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 29-வது நாளாக போர் நீடித்தது. உக்ரைன் தலைநகர் கீவ், மேரிபோல் உள்ளிட்ட நகரங்கள் மீதுரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

World News

Image
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது.