Posts

Showing posts from November, 2021

Sports in Tamil

Image
மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்குவதால் அல்லது அமரவைப்பதால் அணிக்கு எந்தக் கேடும் வரப்போவதில்லை என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திேரலியத் தொடரிலிருந்து ரஹானேவின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாகவே இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக தொற்று உறுதியானது. ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

Sports in Tamil

Image
2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விடஅந்தஅணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டதால் ஒருவேளை 15-வது ஐபிஎல் சீசனுக்கு கேப்டனாகவோ அல்லது துணைக் கேப்டனாகவோ நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports in Tamil

Image
2022ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் டி20 சீசனுக்கு 8 அணிகளும் சேர்ந்து 27 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. இதற்காக ரூ.269 கோடி செலவிட்டுள்ளன. நட்சத்திர வீரர்கள் பலரை அணிகள் கழற்றிவிட்டு ஏலத்தில் எடுக்க உள்ளன. அதில் எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், ஆன்ட்ரே ரஸல், க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். ஆனால், பண்டியாசகோதரர்கள், கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரவிச்சந்திர அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஷுப்மான் கில், யஜுவேந்திர சஹல், தீபக் சஹர் போன்ற நட்சத்திர வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

World News

Image
ஒமைக்ரானுக்கு எதிராக பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிப்பது சாத்தியம் என சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த வைரஸ் பற்றி மேலும் தகவல் கிடைக்கும்போது இதைப்பற்றி துல்லியமான முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

Sports in Tamil

Image
நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக அணியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யருக்கு அதிகமிருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணிக்கு கேப்டன் பதவி ஏற்ற ரஹானே இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 39 ரன்கள்தான் எடுத்தார். மயங்க் அகர்வால் 30 ரன்கள் எடுத்தார். அனுபவ வீரர் புஜாரா 26, 22 என இரு இன்னிங்ஸிலும் சொதப்பலாக பேட் செய்தார். அதிலும் ரஹானே ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டியில் அதிர்ஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார்.

Sports in Tamil

Image
கான்பூரில் நடந்த நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இருதரப்புக்கும் சாதகமான, தரமான, போட்டித்தன்மை மிகுந்த ஆடுகளத்தை வடிமைத்த பிட்ச் தயாரிப்புக் குழுவுக்கு ரூ.35 ஆயிரம் பரிசாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வழங்கியுள்ளார். கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாகக் கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது.

World News

Image
ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக எங்கள் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி பெரிய அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுவது சந்தேகம் என மாடர்னா நிறுவனம் கைவிரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகத் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படாது என ஃபைஸர், பயோ என்டெக் நிறுவனங்கள் கைவிரித்துவிட்ட நிலையில், தற்போது மாடர்னா நிறுவனமும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று முதல் கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலன் டி ஓர் விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார். இதற்கு முன் எந்த வீரரும் பாலன் டி ஓர் விருதை 7 முறை வென்றதில்லை. முதல் முறையாக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புடிலா விருதைக் கைப்பற்றினார்.

World News

Image
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலுக்கு 37 வயதுதான் ஆகிறது. இதனால், உலகளவில் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களிலேயே மிகவும் இளைமையானவர் என்ற அந்தஸ்தைப் பராக் அகர்வால் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார்.

World News

Image
ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்புகிறது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

World News

Image
ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார். சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

World News

Image
ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் இந்தத் தொற்று பாதிப்பைக் கண்டறிய உதவி செய்த பெண் மருத்துவர், இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தான் கணிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏஞ்சலிக் கோட்ஸீ என்ற மருத்துவர் தென் ஆப்பிரிக்க மருத்துவக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

World News

Image
அரசு ஊழியர்களுக்கு கோவிட் போனஸாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வை அடுத்த 2 ஆண்டுகள் வரை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. கரோனாவின் பாதிப்பு காரணமாக ஈடுகட்ட முடியாத அளவுக்கு மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம். இப்பிரச்சினை உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பளத்துடன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் தொகையை கூடுதலாக வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

World News

Image
ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

Sports in Tamil

Image
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டி, ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார். கான்பூரில் நடந்த நியூஸிலாந்து - இந்திய அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெளிச்சக் குறைவு காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால், டிராவில் முடிந்தது.

Sports in Tamil

Image
கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாக கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது. 284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Sports in Tamil

Image
வாழ்நாள் முழுவதும் என்னுடைய நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வேறுபாடுகாட்டப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சிவராமகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் “ இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.

World News

Image
சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெக்கிங் கணிதப் பல்கலைக்கழகம் சீனாவின் கரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதித்தால், கரோனா தடுப்பு முறைகளைத் தளர்த்தினால், மிகப்பெரிய அளவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகபட்சமாக நாள்தோறும் 6.30 லட்சம்வரை பாதிக்கப்படலாம். நாட்டின் மருத்துவத்துறைக்குத் தாங்க முடியாத சுமை ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.

World News

Image
ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது.

World News

Image
வேலை வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் சுரங்க ரயில் நிலையத்தில் நின்ற இளைஞருக்கு 3 மணி நேரத்தில் வேலை கிடைத்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹ்மூத் மாலிக் சிறுவயதிலேயே பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். லண்டனில் டாக்ஸி ஓட்டி வந்த மாலிக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இவரது மகன் ஹைதர் மாலிக் (24), மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.

World News

Image
இஸ்ரேல் நாட்டில் கரோனா வைரஸின் உருமாற்ற ஓமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, வெளிநாட்டினர் வருகைக்கு அடுத்த 2 வாரங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் தனிமைப்படுத்தும் விதிகள், லாக்டவுன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

World News

Image
கரோனாவின் புதிய உருமாற்ற வைரஸ் ஓமைக்ரானைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் இன்று மாலை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ''புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் கவலைக்குரியது மற்றும் மிகவும் ஆபத்தானது என்பதால் நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
நியூஸிலாந்து வீரர்கள் சவுதி, ஜேமிஸன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆட்டமிழந்தனர்.இதனால் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. பிற்பகல் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்வின் 20 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

World News

Image
சீனாவுக்கு பயந்து, புதிய கரோனா வைரஸின் பெயரை உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன.

World News

Image
சட்டவிரோதமாக செயல்படும் தங்கச் சுரங்கங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான அகழ்வு படகுகள் அமேசானின் மதேரா நதியில் தங்க வேட்டைக்காக குவிந்துள்ளன. பிரேசிலின் அமேசான் காடுகளில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தங்க வேட்டை செய்யபலர் முயன்றுள்ளனர். கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பது குறித்து உறுதியளித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான படகுகள் தங்கத்துக்காக அமேசான் நதிகளில் குவிந்துள்ளன. பம்புகள் பொருத்தப்பட்ட மிதவைப் படகுகள் நீண்ட மதேராநதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாகவும், இவை தங்கத்துக்காக ஆற்றுப்படுகைகளைச் சுரண்டி வெற்றிடமாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

World News

Image
ஒமிக்ரான் வைரஸ் கண்டபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கூறியதற்காக பாராட்ட வேண்டும், தண்டித்து விடாதீர்கள் என தென் ஆப்ரிக்கா உலக நாடுகளுக்கு தனது கவலையை பதிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக B.1.1.529 என்றழைக்கப்படும் 50 உருமாற்றம் கொண்ட புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
தென் ஆப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணியை அனுப்புவதற்கு முன், மத்திய அரசுடன் ஆலோசித்து அனுமதி பெற்று பிசிசிஐ செயல்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

Sports in Tamil

Image
குஜராத்தின் பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னால் பாண்டியா இன்று திடீரென விலகியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க இருக்கும் நிலையில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா எந்தவிதமான காரணமும் இன்றி திடீரென விலகியுள்ளார்.

Sports in Tamil

Image
ஜாகார்த்தாவில் நடந்து வரும் இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டியி்ல் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்தார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இன்று நடந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டானனை எதிர்கொண்டார் பி.வி. சிந்து.

World News

Image
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஓமைக்ரான் வைரஸுக்கு(பி.1.1.529) எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என்பதை உறுதி செய்ய இயலாது என்று ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் கைவிரித்துள்ளன. ஆனால், ஓமைக்ரான் வைரஸுக்கு எதிராக அடுத்த 100 நாட்களில் வீரியம் மிகுந்த தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்று ஸ்புட்னிக் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை பி.1.1.529 கரோனா வைரஸுக்கு உலக சுகதாார அமைப்பு “ஓமைக்ரான்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புகிய வகை வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது என்று உலக சுகதாார அமைப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை ைவரஸ் கடந்த புதன்கிழமை உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது.அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

World News

Image
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ்வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாகபரிசோதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்பரவியது. 2 அலை கரோனா வைரஸ்பரவலால் உலகமே கடுமையான பாதிப்பை சந்தித்தது. மேலும், கரோனாவின் மரபணு தொடர்ந்து உருமாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒன்றான கரோனாவின் டெல்டா வைரஸ், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, 7 நாடுகளுக்கு பயணிக்கவும், அங்கிருந்து பயணிகள் வரவும் அமெரிக்கா நாளை முதல் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

World News

Image
பிற நாடுகளின் அரசுகள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மக்களை கெஞ்சிக் கொண்டிருக்க, அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது ஆஸ்திரியா. வரும் பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து இது நடை முறைக்கு வருகிறது. இத்தாலியிலும் பிரான்சிலும் டாக்டர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்குதான் தடுப்பூசி கட்டாயமாக உள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் கட்டாயப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாதான். பிப்ரவரி 1, 2022 வரைதடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் (சுமார்ரூ.3 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

World News

Image
‘இன்டர்போல்’ எனப்படும் சர்வேதேச போலீஸ் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்கா தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ சர்வதேச அளவில் தீவிரவாதம், போதை கடத்தல், இணையதள குற்றங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ‘இன்டர்போல்’ அமைப்பின் 89-வது பொதுச்சபை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்து வருகிறது.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அண்மையில் ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்புதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ஏ அணியினர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து விளையாடி வருகிறார்கள்.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15-வது ஐபிஎல் டி20 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி வீர்ரகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால், அவர்கள் பயந்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிண்டலடித்துள்ளார். 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.

World News

Image
ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 76,414 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, உயிரிழப்பும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 50 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ், அதிகமான உருமாற்றத் தன்மையுடையதாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாலா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

Sports in Tamil

Image
கான்பூரில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களிலும், உமேஷ் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை விதித்து பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் கரோனா தொற்றின் 2 அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட நிலையில் 3-வது அலை தொடங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியும்கூட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள்.

Sports in Tamil

Image
பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திேரலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தமாதம் தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரிலும் டிம் பெயின் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Sports in Tamil

Image
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தைச்சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் அதிகாரபூர்வ பதவியை பெற்றுள்ளார்.

Sports in Tamil

Image
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நீடிப்பார் என்றும் , சஞ்சய் கோயெங்காவின் லக்னோ அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports in Tamil

Image
அறிமுகப் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதம், ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் கான்பூரில் இன்று தொடங்கியநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 50 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிந்திர ஜடேஜா தனது 17-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.