Posts

Showing posts from May, 2021

Sports in Tamil

Image
துபாயில் நடந்த ஆசிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் (ASBC) 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் குமார் தங்கப்பதக்கம் வென்றார். ஷிபா தபா, அமித் பங்கால் இருவரும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். 19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை 13 பதக்கங்களை வென்ற நிலையில், இந்த முறை 16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஆடவர் அணி.

World News

Image
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸுக்கு “கப்பா” (Kappa) என்றும், 2-வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு “டெல்டா” (Delta) என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

Sports in Tamil

Image
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, சூதாட்டப் புகாருக்கு உள்ளான ஹன்சி குரோனி விமான விபத்தில் காலமான நாள் ஜூன் 1, 2002. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வலிமைமிக்க கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் ஹன்சி குரோனி. 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3,714 ரன்களையும், 188 ஒருநாள் போட்டிகளில் 5,565 ரன்களையும் குவித்த ஹன்சி குரோனி, ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி, பல போட்டிகளில் வெற்றி பெற்றது.

World News

Image
ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து ஆப்பிரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஞாயிறு நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 43, 23, 795 பேருக்கு கரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,30,286 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

World News

Image
நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் துப்பாக்கிய ஏந்திய நபர்கள் பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நைஜீரிய போலீஸார் தரப்பில், “ஞாயிறன்று வடமத்திய பகுதியில் அமைந்துள்ள சலிஹு தன்கோ என்ற இஸ்லாமியப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மாணவர்களைக் கடத்திச் சென்றனர். எத்தனை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கை இதுவரை கண்டறியப்படவில்லை. கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா ஐந்தாவது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

World News

Image
தென் ஆப்பிரிக்கா விரைவில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இருப்பதால், கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா, கரோனா மூன்றாவது அலையில் நுழைய இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைவதற்குள் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
சீனாவில் ஞாயிறு நிலவரப்படி 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை வரை சீனா முழுவதும் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே மாதம் முதல் சராசரியாக ஒரு நாளைக்கு 1.2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை சீனா ஏற்றுமதி செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிகமான மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்பத்துக்கு இரண்டு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

World News

Image
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தினர். இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜெய்ர் போல்சனோரா கரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும், அவரது அரசியல் அணுகுமுறை காரணமாக பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்குத் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர் என்றும் பிரேசில் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

Sports in Tamil

Image
கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே நடப்பு யுஎஸ் ஓபன் சாம்பியனும் ஆஸ்திரியா வீரருமான டோமினிக் தீம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேசமயம், ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா முதல் சுற்றில் வென்றபோதிலும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த காரணத்தால் 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
துபாயில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டி 2021்-ல்(ASBC) யில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம்,3 வெற்றி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர். மேரி கோம்(51கிலோ), லால்புட்சாஹி(64கிலோ), அனுபமா(81கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர்(60கிலோ), லோவ்லினா போர்கோஹெயின்(69கிலோ), ஜாஸ்மின்(57கிலோ), சாக்ஸி சவுத்ரி(54கிலோ), மோனிகா(48கிலோ), சாவித்ரி(81கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

World News

Image
கனடா பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் கடந்த 15-ம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763-ம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.1982-ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார்.

World News

Image
கரோனா பரவல் குறைந்து வருவதை யடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 நாட்டினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று விலக்கிக் கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடப்பாண்டு தொடக்கம் முதலே கரோனா 2-ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா வருவதற்கு அந்நாடு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது.

Sports in Tamil

Image
இந்திய ஹாக்கி அணியின் முன்னணி நட்சத்திரமாக சுமார் 16 ஆண்டுகள் இருந்தவர் தன்ராஜ் பிள்ளை. அவரைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகருக்கு அருகில் உள்ள கட்கி என்ற ஊரில் தமிழர் குடும்பத்தில் பிறந்தவர் தன்ராஜ் பிள்ளை. அவரது தந்தை ஹாக்கி ஸ்டேடியத்தை பராமரிப்பவராக இருந்தார். இதனால் அவருடன் அடிக்கடி ஹாக்கி ஸ்டேடியத்துக்கு செல்லும் தன்ராஜ் பிள்ளை, மற்றவர்கள் ஆடுவதைப் பார்த்து, இந்த விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், உடைந்துபோன பழைய ஹாக்கி மட்டைகளைக் கொண்டு, ஹாக்கி விளையாடி பயிற்சி பெற்றார்.

Sports in Tamil

Image
இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பது என்னைப் பொறுத்தவரை உலகக் கோப்பை ஃபைனல் போன்றதாகும் என நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் தெரிவித்துள்ளார். இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜெஸ்பவுல் நகரில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியினரும் பல்வேறு உத்திகளை வகுத்து தயாராகி வருகின்றனர். இந்திய அணி மும்பையிலிருந்து ஜூன் 2ம் தேதி லண்டன் புறப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் நியூஸிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் விளையாட உள்ளது.

Sports in Tamil

Image
போர்ச்சுகல் நாட்டின், போர்டோ நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி - செல்சீ அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 2012ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை செல்சீ அணி வென்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் எந்த வாய்ப்பையும் கேப்டன் பெப் கார்டியாலோ தலைமையிலான செல்சீ அணி வழங்கவில்லை.

World News

Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பித்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி தற்போது டோமினிக்கா அரசின் வசம் உள்ளார். அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகுல் சோக்ஸியை அழைத்துவரத் தேவையான ஆவணங்களுடன் இந்தியாவிலிருந்து தனி விமானம் டோமினிக்காவுக்கு வந்துள்ளதாக ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

World News

Image
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான் தனது 56 வயதில் தனது காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று திருமணம் செய்தார் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இருவரின் திருமணமும் நடந்தது.

World News

Image
கரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளி ன்கன் தெரிவித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றுள்ள முதல் இந்திய கேபினட் அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார். அப்போது பிளின்கன் கூறும்போது, "கடந்த ஆண்டு கரோனா நெருக்கடி காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது. இதை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. இப்போது நாங்கள் இந்தியாவுக்கு உதவியாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

World News

Image
சட்டவிரோத பதிவுகளை நீக்காததால் ட்விட்டர் நிர்வாகத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை 15 கோடியாகும். இதில் சுமார் ஒரு கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சிப்பவர்கள், ட்விட்டரில் அதிக பதிவுகளை வெளியிடுகின்றனர்.

Sports in Tamil

Image
கிரிக்கெட் விளையாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டபிள்யூ.ஜி.கிரேஸ். கிரிக்கெட் ஆட்டங்களின் தொடக்க காலத்தில் டான் பிராட்மேனையும் விஞ்சிய வீரராக கருதப்பட்ட டபிள்யூ. ஜி.கிரேஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 1895-ம் ஆண்டில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனையை கிரேஸ் படைத்துள்ளார். அந்த ஆண்டில் மே 9-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடந்த முதல்தரப் போட்டிகளில் வெறும் 10 இன்னிங்ஸ்களில் 1,016 ரன்களை குவித்ததே அந்த சாதனை. இந்த ஆயிரம் ரன்களில் 2 சதங்களும், 2 இரட்டைச் சதங்களும் அடங்கும். டபிள்யூ.ஜி.ஜிரேஸின் இந்தச் சாதனையை இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை. இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரில் 1858-ம் ஆண்டில் பிறந்த இவர், 1880 முதல் 1899 வரை இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அக்காலத்தில் பிரண்ட் ஃபுட் மற்றும் பேக் ஃபுட் என்று 2 வகையிலும் கால்களை நகர்த்தி பேட்டிங் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தவராக கிரேஸ் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில், 54 ஆயிரம் ரன்களுக்கு மேல் இவர் குவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி, ஒரு டாக்டராகவும் இருந்

World News

Image
பிரேசிலில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து பிரேசில் உள்ளூர் ஊடகங்கள், “பிரேசிலின் வடகிழக்குப் பகுதியான அரகாஜுவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அம்மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி நான்கு பேர் பலியாகினர். 35க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், அம்மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Sports in Tamil

Image
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.

World News

Image
கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹான்ஸ் க்ளூஜ் கூறும்போது, “ கரோனா தொற்று முடிந்துவிட்டதாக எண்ணி விடாதீர்கள். கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைவாக உள்ளது.

World News

Image
சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பஷார் அல் ஆசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கும், சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிரிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
12 - 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்புத் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடுப்பூசி செலுத்துவதால் 12 -15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே பைஸர் கரோனா தடுப்பூசியை 12 - 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Sports in Tamil

Image
இந்தியாவில் தடகளப் போட்டிகளில் பெண்கள் சாதித்த அளவுக்கு ஆண்கள் சாதித்ததில்லை என்று சொல்லலாம். இந்நிலையில், இந்த வரலாற்றை மாற்றி எழுத வந்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான முகமது ஹனான். கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள தானூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனான், காலிகட் பல்கலைக்கழகத்தில் நடந்த 110 மீட்டர் தூர தடை ஓட்டத்தில், பந்தய தூரத்தை 13.80 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 110 மீட்டர் தூர தடையோட்டத்தில், பந்தய தூரத்தை விரைவாகக் கடந்த உலகின் மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர்.

World News

Image
பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் பள்ளி மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த இருக்கிறோம். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது செலுத்திவிட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
ஒரே டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

World News

Image
பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை தரப்பில், “உருமாற்றம் அடைந்த B.1.617 வைரஸ் காரணமாக பிரிட்டனில் புதிதாக 6,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 3,535 ஆக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் 4-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. சிரியாவில் கடந்த 26ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

World News

Image
உலகம் முழுவதும் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் நாளைய குழந்தைகளும் கொண்டாடக்கூடியவர் எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல். பல கோடிக்கணக்கான குழந்தைகளின் விருப்பத்துக்குரியவராக இவரை மாற்றிய புத்தகம், ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’. படங்களுடன் கூடிய எளிமையான கதை. 1969-ம் ஆண்டு பிரபல பெங்குவின் பட்னம் வெளியீடாக வந்தது. 52 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் 5.5 கோடி புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன! கதைக்காகவும் படங்களுக்காகவும் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது இந்தப் புத்தகம்.

Sports in Tamil

Image
என்னுடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால்தான் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினேன். இந்த மன உளைச்சலால் 8 முதல் 9 நாட்கள் வரை சரியாகத் தூங்கக்கூட முடியாமல்தான் விளையாடினேன் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். 14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.

World News

Image
'டெம்பிள் ரன்' மொபைல் விளையாட்டின் போட்டி வடிவம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது. 2011ஆம் ஆண்டு வெளியான 'டெம்பிள் ரன்' விளையாட்டு மொபைல் பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரை 200 கோடிக்கும் அதிகமான முறை இந்த விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் அமைப்பை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதுவும் டெம்பிள் ரன் சுவைத்த வெற்றிக்குப் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.

Sports in Tamil

Image
இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடக்கும் நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி ஆட்டம் டிராவில் முடிந்தாலோ அல்லது டை ஆனாலோ வெற்றியாளரை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. சவுத்தாம்டன் நகரில் ஏஜெஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

World News

Image
ஜப்பானியர்கள் உருவாக்கும் ‘மோஜி ரிங்கோ’ ஆப்பிள்கள் உலக அளவில் பிரபலமானவை. ஆப்பிள் மரங்கள் பூத்து, காய்கள் உருவாக ஆரம்பித்தவுடன் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு கட்டிவிடுவார்கள். ஆப்பிள்கள் பெரிதானவுடன் பிளாஸ்டிக் தாள்களை எடுத்துவிடுவார்கள். சூரிய ஒளி செல்லாமல், ஆப்பிள்கள் எல்லாம் வெள்ளையாகக் காட்சியளிக்கும். அந்த ஆப்பிள்களின் மீது மனிதர், விலங்கு, பறவை, பூக்கள் போன்ற உருவங்களும் வாழ்த்துச் செய்திகளும் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள். சில நாட்களில் வெள்ளை ஆப்பிள்கள் எல்லாம் சிவப்பாக மாற ஆரம்பிக்கும். முழுமையாக சிவந்த, முதிர்ச்சியடைந்த ஆப்பிள்களை அறுவடை செய்வார்கள். அந்த ஆப்பிள்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களைக் கவனமாக அகற்றுவார்கள்.

World News

Image
அமெரிக்காவில் இதுவரை 50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவில் இதுவரை 50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலையின்மை கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

World News

Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவா பர்படாஸில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டுக்கு தப்பும் போதுபிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முயற்சிகள் நடந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மெகுல் சோக்ஸியின் டோமினிக்கா வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் அவரை நாடு கடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் மோசமான காலகட்டம் என்று 1984-ம் ஆண்டைச் சொல்லலாம். இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் ஜாம்பவான்களாக இருந்த கவாஸ்கருக்கும், கபில்தேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காலம் அது. 1984-ம் ஆண்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கவாஸ்கர் இருந்தார். தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆக்ரோஷமாக ஒரு ஷாட்டை அடித்த கபில்தேவ் அவுட் ஆனார். மற்றவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக, இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

World News

Image
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அங்கு ரயில் பாதை பராமரிப்பாளராக வேலை செய்து வந்த சாமுவேல் கேஸிடி (57), தனது பணியை முடித்துவிட்டு பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக அலுவலக அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அவர், ரயில் நிலையத்தில் இருந்த மற்ற அலுவலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

World News

Image
கரோனா பரவலை த்தடுக்கும் பொருட்டு பிரிட்டன் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தரப்பில், “ இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட b.1.617 கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதால் பிரிட்டனிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது.

World News

Image
கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் அமெரிக்க உளவு அமைப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதா, விலங்குகளிடமிருந்து தோன்றியதா அல்லது ஆய்வகத்திலிருந்து தோன்றியதா என்பது குறித்த விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களில் (90 நாட்களில்) சஅமெரிக்க உளவு அமைப்பு சமர்பிக்க வேண்டும்” என்று என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

World News

Image
ஹாங்காங்கில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வோல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் ஹாங்காங்கில் ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இறப்பு பதிவு செய்யப்படவில்லை.

World News

Image
"நான் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற கனவில் இங்கு வரவில்லை, தடுப்பூசியை எப்படியாவது போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா வந்துள்ளேன்" என்கிறார் பெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அமெரிக்காவை சுற்றிப் பார்பதற்காக வந்தவர்கள் நிலை மாறி தற்போது அமெரிக்காவுக்கு தடுப்பூசி போடுவதற்காக பிற நாடுகளிலிருந்து மக்கள் வருகை தருகிறார்கள்.

World News

Image
கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும் உலகளவில் அதிகளவு பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மே 25ம் தேதி முடிந்த வாராந்திர உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

World News

Image
அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் ேததி நிறுவப்பட்டது. அந்த நாளான ஜூலை 5ம் தேதி தான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

World News

Image
பஞ்சாப் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்து தப்பிச் சென்ற தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, கரிபியன் தீவான ஆன்டிகுவா பர்படாஸிலிரு்து தப்பிச் சென்று டோமினிக்கா நாட்டில் பிடிபட்ட நிலையில், மெகுல் சோக்ஸியை ஏற்க மாட்டோம் எங்கள் நாட்டுக்கு அனுப்பாதீர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள் என்று ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார் .

World News

Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிகா நாட்டிலிருந்து கியூபாவுக்கு படகில் தப்பிச் செல்லும் போது அந்நாட்டு போலீஸாரிடம் நேற்று சிக்கினார். கடந்த 2018ம் ஆண்டு முதல் கரீபியன் தீவான ஆன்டிகுவா அன்ட் பர்படாஸ் நாட்டில் வசித்துவந்த மெகுல் சோக்ஸி கடந்த ஞாயிறுமுதல் காணவில்லை. அவரை ஆன்டிகுவா போலீஸார் தேடி வந்தநிலையில் டோமினிகா நாட்டில் சிக்கியுள்ளார்.

Sports in Tamil

Image
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. துபாயில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் 3-வது நாளானநேற்று மகளிருக்கான 60 கிலோஎடைப் பிரிவு கால் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரஞ்சித் கவுர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ரெய்கோனா கொதிரோவாவை வீழ்த்தினார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 2-வது முறையாக பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார் சிம்ரஞ்சித். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தொடரில் அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இன்று நடைபெறும் அரை இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோவை எதிர்கொள்கிறார் கவுர்.