Posts

Showing posts from November, 2023

World News

Image
துபாய் நகரம்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (வியாழன்) துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

World News

Image
வாஷிங்டன்: நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காமற்றும் கனடா ஆகிய இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய சிலர் சதித் திட்டம் தீட்டியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் பைனான்சியல் டைம்ஸ் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.

World News

Image
காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இருதரப்பும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, "பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்தர்களின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின் படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது" என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு நாளைக்கு இது தொடரும் என்ற காலக்கெடு கூறிப்பிடப்படவில்லை.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றி தூதரக ஆலோசகர் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைந்தார். அவருக்கு வயது 100. கனக்டிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. கிஸ்ஸிங்கர் புகழ் பெற்றவர் மட்டுமல்ல சர்ச்சைகளின் நாயகரும்கூட. யார் இந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர்? அமெரிக்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களுக்குக் கீழ் பணியாற்றி வெளியுறவுக் கொள்கைகளில் பல கடுமையான முடிவுகளை எடுத்ததற்காக அறியப்பட்டவர் ஹென்ரி கிஸ்ஸிங்கர்.

World News

Image
கான்பெரா: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை கடுமையாக போராடி மீட்ட இந்தியாவின் விடா முயற்சிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்திய அதிகாரிகள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுரங்கப் பணியாளர்களை மீட்க களத்தில் நின்று அயராது போராடியதில் ஆஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் பங்களிப்பை பெருமையாக கருதுகிறேன் என்று அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

World News

Image
நியூயார்க்: பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒற்றுமை நாளை ஒட்டி பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப் பிரதிநிதி, இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா எப்போதுமே ’இரு நாடுகள்’ தீர்வை முன்வைத்து வருகிறது என்றார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ருச்சிரா காம்போஜ், ” இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும்.

World News

Image
கீவ்: உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசா ஒப்லாஸ்டை (Odesa Oblast) கடுமையானப் பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளையே உற்று நோக்க வைத்தது உக்ரைன் - ரஷ்யா போர். சுமார் 21 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், நவம்பர் 26-27 ஆம் தேதிகளில் கடுமையான புயல், காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு உக்ரைனின் பெரும்பகுதியைத் தாக்கியது. இந்த நிலையில், பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

World News

Image
காசா நகர் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கள் பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசாவில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

World News

Image
கோலாலம்பூர்: இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி மலேசியாவுக்கு வருகை தரலாம் என அந்த நாட்டின் பிரதமர்அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்நிய செலவாணியை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினை பெற முடியும்.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் காரணமாக உருகுலைந்து போயுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் புனரமைப்புக்கு உதவுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் தோதாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சூழலில் காசா புனரமைப்புக்கு உதவுவேன் என மஸ்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் மஸ்க் இடையிலான கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இது நேரலையில் வெளியானது.

World News

Image
கீவ்: கருங்கடல் பகுதியின் வாயிலாக உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ரஷ்ய அச்சுறுத்தலையும் மீறி உக்ரைன் தானிய ஏற்றுமதியை திறம்பட செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றியும், தானியங்கள் ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உணவுத் துறை அமைச்சர் எனப் பலரும் விரிவாக விவாதித்துள்ளனர். கடந்த 2021 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. ஆரம்பத்தில் கருங்கடல் பகுதியின் துறைமுகங்கள் முடக்கப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. சபையும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்தன. ரஷ்யா, உக்ரைன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தானியங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக உக்ரைனில் சில

World News

Image
கோலாலம்பூர்: டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியா, சீன நாட்டினருக்கு விசா அவசியமில்லை என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசிய அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு காலம் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவும் சீனாவும் மலேசியா வின் நான்காவது மற்றும் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரச் சந்தையாகும். மலேசிய அரசின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 9.16 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில், சீனாவில் இருந்து 4,98,540 பேர் மற்றும் 2,83,885 பேர் இந்தியாவில் இருந்தும் சென்றிருக்கிறார்கள். கரோனா தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், சீனாவில் இருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 3,54,486 பேர் மலேசியா பயணித்துள்ளனர்.

World News

Image
டெல் அவிவ் :இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பைடனும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது . இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் தோதாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

World News

Image
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஹமாஸ் தீவிரவாதிகள் 17 பிணைக் கைதிகளை சனிக்கிழமைவிடுவித்தனர். இதில், இஸ்ரேலியர்கள் 13 பேரும், தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் நேற்று இஸ்ரேலை வந்தடைந்தனர். அதற்கு பதிலாக 33 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

World News

Image
புதுடெல்லி: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்க உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்கி உள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கிக் கொள்ளலாம் என சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, "சீனாவின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு" உதவும் என்று செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.

World News

Image
ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிக ள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

World News

Image
ரஃபா (காசா): இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7-ம் தேதிதெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

World News

Image
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் படி இரண்டாவது நாளன்று விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல். ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது ஹமாஸ். அதுவே தாமதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் ஆலோசகர் தாஹிர் அல்-நோநோ தெரிவித்துள்ளார். வடக்கு இஸ்ரேல் பகுதிக்கு வேண்டிய உதவிகளை இஸ்ரேல் விநியோகிக்காமல் உள்ளது என்றும், சிறையில் நீண்ட கால தண்டனையில் உள்ள கைதிகளை விடுவிக்க மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இஸ்ரேல்.

World News

Image
ஜெருசலேம் : பாலஸ்தீன கைதிகளுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.

World News

Image
காசா : முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர்.

World News

Image
காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களைக்கொண்டு போலீசாரை தாக்கினர். பதிலுக்கு, தடியால் அடித்தும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினர்.

World News

Image
ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கொன்று வருகிறது.

World News

Image
பெய்ஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், "தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (the Chinese Center for Disease Control and Prevention) மற்றும் பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றை தொடர்பு கொண்டு விசாரித்தது. அப்போது அவர்கள், ”பெய்ஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் அசாதாரணமான அல்லது புதிய நோய்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே அறியப்பட்ட நோய்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களின் பொதுவான அதிகரிப்புதான்” என்று தெரிவித்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

World News

Image
ஜகர்த்தா : சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தோனேசியாவில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஆசியானுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே கூறியதாவது: ஆசியானுக்கான கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளில் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கான சந்தைகளை உருவாக்கவும், அந்நாட்டு மக்களின் சிறந்த உணவுக்கான தேர்வாக சிறுதானியத்தை மாற்றி அமைக்கும் வகையில் விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்தியா இந்த உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திருவிழா 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது. ஆசியானுக்கான இந்திய தூதரகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து இந்த உணவு திருவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

World News

Image
ஜெருசலேம்: "இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர்.

World News

Image
பீஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி அந்நாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகச் செய்திகளின்படி சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே சுவாசக் கோளாறுடனேயே அழைத்துவரப்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

World News

Image
புதுடெல்லி : அமெரிக்காவில் உள்ள பிஇடபிள்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்குள் பல்வேறு நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

World News

Image
ஜெருசலேம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 40 நாட்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது.

World News

Image
புதுடெல்லி: "எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

World News

Image
டெல் அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். இந்தப் போர் 40 நாட்களைக் கடந்து நடந்துவருகிறது.

World News

Image
ஜெருசலேம்: கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வர உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ளஇஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.

World News

Image
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் அல்-மயாதீன் எனும் அரபு மொழி தொலைக்காட்சிக்காக பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் லெபனான் - இஸ்ரேல் எல்லை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து அல்-மயாதீன் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

World News

Image
புதுடெல்லி: சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவன சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா,எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சாம் ஆல்ட்மேன் மற்றும் அதன்முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழிநடத்துவார்கள். ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான எங்கள் கூட்டணி தொடரும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான தயாரிப்புகளை வழங்குவோம் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம். இவ்வாறு சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி: துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎப்) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘சரக்குகளை ஏற்றிக் கொண்டுஇந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

World News

Image
மாலி: மாலத்தீவு நாட்டின் அதிபராக 2018 முதல் இப்ராஹிம் முகமது சோலி (மாலத்தீவு ஜனநாயக கட்சி) பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் மாலத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. அங்கு 77 இந்தியவீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முகமது முய்சு கடந்த 17-ம் தேதி அதிபராக பொறுப்பேற்றார். சீன ஆதரவு தலைவராக கருதப்படும் முய்சு அதிபராக பொறுப்பேற்ற மறுநாளே இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், அதிபர்அலுவலக செயலாளர் முகமது பிருசுல் அப்துல் கலீல் அளித்தபேட்டியில், “சோலி ஆட்சியில்இந்தியாவுடன் செய்து கொண்ட100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்மறுஆய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

World News

Image

World News

Image
டெல் அவிவ் : மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது, அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம் இருக்கிறது என்று கூறிவந்த இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்துவதுபோல் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் 35க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹமாஸ், "அம்பலமானது: இந்தப் புகைப்படம் அக்டோபர் 7 2023 அன்று அல் ஷிபா மருத்துவமனையில் கேமராவில் பதிவானது. காலை 10.42 மணி முதல் 11.01 மணிக்குள் சில பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் அழைத்து வருகின்றனர். அதில் ஒருவர் நேபாளி, ஒருவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனை படுக்கையில் சுமந்து செல்கின்றனர். மற்றொருவர் நடந்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளது.

World News

Image
செங்கடல்: இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் கடத்தியுள்ளனர். அந்தக் கப்பலில் இருந்த 25 பேரும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தற்போது அந்தப் பிராந்தியத்தில் கடல்வழியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளமாக இந்தக் கடத்தல் சம்பவம் உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் கூறும்போது, இஸ்ரேலுடன் தொடர்புடைய காரணத்தாலேயே அந்தக் கப்பலை நாங்கள் சிறைப்பிடித்துள்ளோம். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படும் வரை கடல் பகுதியில் இதுபோல் இஸ்ரேல் கப்பல்களை குறிவைப்போம். இஸ்ரேல் நாட்டுக் கப்பலோ இல்லை இஸ்ரேலுடன் வர்த்தக தொடர்புள்ள கப்பலோ நிச்சயமாக எங்களின் இலக்காகும் என்று எச்சரித்துள்ளனர். இது ஆரம்பம்தான்.. ஹவுத்தி படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலியர்களுக்கு அடக்குமுறை தான் புரியும். இஸ்ரேல் கப்பலை நாங்கள் இப்போது பிணையாக பிடித்துவைத்திருப்பது போரில் நாங்கள் எங்களை இணைத்துக் கொண்டதன் தீவிரத்தை உ

World News

Image
சான்பிரான்சிஸ்கோ: சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் மீரா முராதி சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

World News

Image
சான் சால்வடோர்: மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றுள்ளார் 23 வயதான ஷெய்னிஸ் பலாசியோஸ். இவர் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டை சேர்ந்தவர். அந்த நாட்டின் சார்பில் சர்வதேச அளவில் அழகிப் போட்டியில் முதல் முறையாக பட்டம் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 72-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி எல் சால்வடாரின் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெற்றது. இதில் தாய்லாந்து அழகி அன்டோனியோ போர்சில்ட் முதல் ரன்னர் அப் ஆகவும், ஆஸ்திரேலிய அழகி மொராயா வில்சன் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வானார்கள்.

World News

Image
காசாநகர்: காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் சூழலில் நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேல் ராணுவம் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை காலி செய்ய உத்தரவிட்டது .அந்த மருத்துவமனையில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

World News

Image
புதுடெல்லி: ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018-ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவரது மேல்முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவருக்கான மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

World News

Image
மாலே: இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மாலத்தீவு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

World News

Image
டெல் அவில்: காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக அந்த மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான மக்கள் காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை யை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இது குறித்து கூறுகையில், “காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள் உட்பட சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மருத்துவமனையே முற்றிலும் வெறிச்சோடி கிடக்கிறது. சிலர் நடைபாதைகளில் படுத்துக் கிடக்கின்றனர். இந்த மருத்துவமனையின் மையத்தை இஸ்ரேல் சுற்றி வளைத்திருக்கிறது. எஞ்சியிருக்கும் மருத்துவ ஊழியர்களால்கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மருத்துவமனைகளில் உணவும் தீர்ந்து வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படாவிட்டால் இறந்துவிடுவார்கள்” என்றார்.

World News

Image
டெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டாவது குளோபல் சவுத் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் நாங்கள் நிதானத்தையும் கடைப்பிடித்தோம். போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

World News

Image
காசாநகர்: காசாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது குறிவைத்துள்ளது அங்குள்ள மருத்துவமனைகளை. அதிலும் குறிப்பாக அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷர்ஃப் அல் குத்ரா கூறுகையில், "இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அல் ஷிஃபாவில் மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவம் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் தலைமை கமாண்டர்கள் அங்குதான் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக நம்புகிறது. மருத்துவர்களையும் வெளியேற்றியுள்ளது." என்றார்.

World News

Image
பெய்ஜிங்: வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணம் லுலியாங் நகரில் யோங்ஜு நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகம், 5 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நேற்று காலையில் தீப்பற்றியது. இத்தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியி்ல் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில்26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

World News

Image
டெல் அவில்: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயது சிறுவன் ஒருவர் தனது கால்களை இழந்ததுடன், தான் இழந்துவிட்ட பெற்றோரையும், குடும்ப உறுப்பினர்களையும் தேடி வருவது மனதை உலுக்கும் சம்பவமாக இருக்கிறது. காசா பகுதியின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனௌன் (Beit Hanoun) நகரைச் சேர்ந்தவர் அஹ்மத் ஷபாத் (4 வயது). காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் அஹ்மத் ஷபாத்தின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதோடு இந்தச் சிறுவனின் 17 குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். அஹ்மத் ஷபாத்தின் இரண்டு வயது சகோதரர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். தற்போது இந்தச் சிறுவனை அவரின் மாமா அபு அம்ஷா தான் பாராமரித்து வருகிறார் . பெய்ட் ஹனௌன் நகரில் போருக்கு முன்பு 52,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தனர். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

World News

Image
புதுடெல்லி: சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இன்று காலை 6.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற 'ஏபிஇசி' (APEC Summit ) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் முக்கிய உலகளாவிய பிரச்சினைகளான ஈரான், மத்திய கிழக்கு, உக்ரைன், தைவான், இந்தோ-பசிபிக், பொருளாதார பிரச்சினைகள், செயற்கை நுண்ணறிவு, மருந்துகள் மற்றும் காலநிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.