World News

ஜகர்த்தா: சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தோனேசியாவில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து ஆசியானுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே கூறியதாவது: ஆசியானுக்கான கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளில் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கான சந்தைகளை உருவாக்கவும், அந்நாட்டு மக்களின் சிறந்த உணவுக்கான தேர்வாக சிறுதானியத்தை மாற்றி அமைக்கும் வகையில் விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்தியா இந்த உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திருவிழா 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது. ஆசியானுக்கான இந்திய தூதரகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து இந்த உணவு திருவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News