Posts

Showing posts from July, 2021

Sports in Tamil

Image
ஒலிம்பிக்கில் ஸ்விட்சர்லாந்து வீரர்கள் ரோஜர் ஃபெடரும், வாவ்ரின்காவும் இல்லாத நிலையில், மகளிர் பிரிவி்ல் பெலின்டா பென்சி தனது தேசத்துக்கு தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்ஸிக் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

World News

Image
உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன. தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் குறிப்பிட... அவரது கடந்த கால துன்பங்கள் பற்றி அமெரிக்கா முழுவதும் மீண்டும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கு பல காலம் பயிற்சி எடுத்து அதில் கலந்துகொண்ட முன்னணி வீராங்கனைக்கு அப்படி என்ன மனப் பிரச்னை? பதில் மிக வேதனையானது. அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கென உள்ள அமைப்புதான் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம் (USAG). 2014-ம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் புகார் குறித்த வழக்கில் அந்த

World News

Image
பெகாசஸ் உளவு மென்பொருளை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், அதைப் பயன்படுத்த சில நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தடை விதித்துள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள்மூலம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமாகியது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ரவுண்ட் ராபின்முறையில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் அமித் பங்கால் ஆகியோர் தோல்வி அடைந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவின் 9-வது நாளான நேற்று மகளிருக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தனது 3-வது முயற்சியில் 64 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான ஹாக்கி ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 3 கோல்களும் நேகா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்து கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

World News

Image
பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
என்னால் 40 வயதுவரை விளையாட முடியும் என்று இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

World News

Image
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் பிரிவின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து இனிமேல், வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சிந்துவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Sports in Tamil

Image
இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இசுரு உதானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வந்தபோதிலும் உதானாவுக்கு போதுமான வாய்ப்புகளை வாரியம் வழங்கவில்லை. இதுவரை 21 ஒருநாள் போட்டிகல், 35 டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை மட்டும்தான் உதானா வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 78 ரன்களும், டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 84 ரன்களையும் உதானா சேர்த்துள்ளார்.

World News

Image
எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்திய வீராங்கனை வந்தனா புதிய வரலாறு படைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். ஏ பிரிவு அணிகளுக்கு இடையே இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணி வீராங்கனை வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தார். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் எந்த வீராங்கனையும் ஹாட்ரிக் கோல் அடித்தது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை வந்தனா படைத்துள்ளார்.

World News

Image
அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்து என்னை விட்டுவிட்டனர் என்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹைதி அதிபரின் மனைவி மார்ட்டின் தெரிவித்துள்ளார். கரிபீயன் தீவில் அமைந்துள்ள நாடு ஹைதி. இதன் அதிபர் ஜொவினெல் மொய்சே ஜூலை 7ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மார்ட்டினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

Sports in Tamil

Image
இலங்கை அணி வீரர்கள் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோர் துர்ஹாமில் கடந்த மாதம் பயோ-பபுள் சூழலை மீறியதையடுத்து, ஓர் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் பங்கேற்கத் தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த 3 வீரர்களுக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதமும், உள்நாட்டுப் போட்டிகளில் 6 மாதங்கள் விளையாடவும் விதிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, இலங்கை அணி்க்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடியது.

Sports in Tamil

Image
கொழும்பு நகரில் தங்கியிருக்கும் இந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடியது.

Sports in Tamil

Image
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீள வேண்டும், மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால், காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான நேற்று குத்துச் சண்டையில் மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேவின் நியென்-சின் செனை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். லோவ்லினா அரை இறுதிக்கு முன்னேறியதால் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் பெறுவது உறுதியாகி உள்ளது. அடுத்த சுற்றில் 4-ம் தேதி உலக சாம்பியனான துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியை லோவ்லினா எதிர்கொள்கிறார்.

World News

Image
பிலிப்பைன்ஸில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தலைநகர் மணிலாவில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ டெல்டா வைரஸ் காரணமாக மணிலாவில் கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் பலியாகி உள்ளனர்.

Sports in Tamil

Image
ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்தார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான இன்று, ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நடந்தன.

Sports in Tamil

Image
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார்.

World News

Image
ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் என்று அறியப்படும் ஃபசல் முகமது, கடத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தது தலிபான் தீவிரவாதிகள் தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஃபசல் முமகது ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர். இவரைப் பிரியமாக மக்கள் காஸா ஸ்வான் என்றழைக்கின்றனர்.

Sports in Tamil

Image
டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

Sports in Tamil

Image
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹஸரங்காவின் சுழலில் 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுக்க மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் வெற்றி இலக்கை இலங்கை வீரர்கள் எளிதாக எட்டினர். 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை அணி. முக்கிய வீரர்கள் கரோனா அச்சம் காரணமாக கட்டாயத் தனிமையில் இருப்பதால், அனுபவமற்ற இளம் வீரர்களுடன் டாஸ் வென்று பேட்டிங் செய்யக் களமிறங்கினார் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவண். வெறும் 82 ரன்கள் வெற்றி இலக்கை 15 ஓவர்கள் முடிவதற்கு முன் இலங்கை அணி எட்டியது.

World News

Image
புலிட்சர் விருது பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஆப்கன் பாதுகாப்புப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் மோதலைப் படமெடுக்க கந்தகாருக்குச் சென்றார் டேனிஷ் சித்திக். அங்கு நடந்த சண்டையில் ஜூலை 16ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.

World News

Image
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று சற்று குறைந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

Sports in Tamil

Image
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பாட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் சதீஷ் குமார் ஆகியோர் கால் இறுதிச் சுற்றில் நுழைந்தனர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 7-வது நாளான நேற்று, ஆடவர் ஹாக்கியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வருண், விவேக் சாகர், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

World News

Image
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு, இலங்கையில் ஒரு வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் ரத்தினங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி ரத்தின தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் கமாகே என்ற ரத்தின வியாபாரியின் வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தற்செயலாக மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு கிடைத்து. இது 510 கிலோ அல்லது 25 லட்சம் காரட் எடை கொண்டதாக உள்ளது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் 745 கோடி இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

World News

Image
ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப்பொருட்கள் உட்பட 14 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதை அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது. இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

World News

Image
ஆஸ்திரேலியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிட்னியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை மக்கள் சரியாகக் கடைப்பிடிக்க ராணுவத்தின் உதவியை அரசு நாடியுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

World News

Image
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “அலாஸ்காவின் தென்கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வெளியேறினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தோல்வியைத் தழுவினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் இன்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

World News

Image
மேற்கத்திய நாடுகளை நம்புவதால் பயனில்லை என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத ஒப்பத்தம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார். இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “மேற்கத்திய நாடுகளை நம்புவதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்கால அரசுகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

World News

Image
தலிபான்கள் சாதாரணக் குடிமக்களே. அவர்கள் ராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறும்போது, ”பாகிஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் தலிபான்கள் இனக்குழுவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தலிபான்கள் ராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல. அவர்களும் சாதாரணக் குடிமக்களே” என்று தெரிவித்தார்.

World News

Image
ஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை தலிபான்கள் புதன்கிழமை சந்தித்தனர்.

Sports in Tamil

Image
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றில் நுழைந்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக்திருவிழாவின் 6-வது நாளான நேற்று, மகளிருக்கான மிடில்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜாரா ராணி 5-0 என்றகணக்கில் அல்ஜீரியாவின் இக்ராக்சைபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதிப்படுத்துவார் பூஜா ராணி.

World News

Image
ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துவரும் நிலையில், ஆப்கனில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

World News

Image
வடகொரியா - தென்கொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையை இரு நாடுகளுக்கிடையே தொடங்குவது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முதலே இரு நாட்டு அதிகாரிகளும் கடிதம் எழுதி வந்தனர். இந்த நிலையில் தற்போது அச்சேவை தொடங்கியுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தைப் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தீபிகா குமாரி, தனது விடாமுயற்சியால் தொடர்ந்து 4 செட்களைக் கைப்பற்றி 4-2 என்று முன்னிலை பெற்று, இறுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது பாராட்டுக்குரியது.

World News

Image
9 பேர் அடங்கிய தலிபான்கள் குழு இன்று (புதன்கிழமை) சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்தது. இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் முகமத் நயீம் கூறும்போது, “ ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது” என்று தெரிவித்தார்.

World News

Image
பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் "இதுபோன்ற முட்டாள்தனமான கருத்தை நான் தெரிவித்திருக்கவே மாட்டேன்" என அவர் இன்னொரு பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த மாதம் ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த கேள்விக்கு இம்ரான் கான் கூறும்போது, “பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு” என்று தெரிவித்தார்.

World News

Image
கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டால் மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளை, தனது நாட்டுக் குடிமக்கள் பயணிக்கக் கூடாத வகையில் சிவப்புப் பட்டியலில் சவுதி அரேபியா வைத்துள்ளது. அந்த வகையில் அப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

Sports in Tamil

Image
இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாடச் சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி காயத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என்று கேட்டு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கும் முன்பே ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர்,ஆவேஷ் கான் என 3 பேர் காயமடைந்தனர்.

Sports in Tamil

Image
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தத் தொடருக்கும் இல்லாத வகையில் அதிகமான பார்வையாளர்கள், ரசிகர்கள் சவுத்தாம்டனில் கடந்த மாதம் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தைப் பார்த்துள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஒட்டமொத்தமாக இந்தியா, நியூஸிலாந்து இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை உலக அளவில் 89 பகுதிகளில் இருந்து 17.7 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதில் 13.06 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

World News

Image
ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் என்று அறியப்படும் நசார் முகமத், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “நசார் முகமத் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய நபரால் கடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலிபான்கள்தான் அவரைக் கடத்தி, கொலை செய்துள்ளதாக நசார் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொல்லப்பட்ட நசார், கந்தஹார் ஆப்கன் போலீஸ் படையில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்” என்று செய்தி வெளியானது.

World News

Image
சிட்னியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “சிட்னியில் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கிப் பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வீழ்த்தியது. இந்திய அணி சந்திக்கும் 3-வது தோல்வி என்பதால் ஒலி்ம்பிக் காலிறுதிக்கு தகுதி பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

Sports in Tamil

Image
டோக்கியோவில் நடந்து வரும் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இ்ந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் வெற்றி நடை தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இன்று நடந்த 2-வது சுற்றில் ஹாங்கா வீராங்கனை என்.ஒய்.சாங்கை வீழ்த்தி சி்ந்து காலிறுதிக்குமுந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

Sports in Tamil

Image
இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 8 வீரர்களும் கொழும்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 8 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் இந்த 8 வீரர்களும் களமிறங்க முடியாது எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

World News

Image
இஸ்ரேலுக்காக உளவுப் பார்க்கப்பட்ட ஒருவரை தங்கள் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தரப்பில், “இஸ்ரேலுக்காக உளவுப் பார்க்கப்பட்ட ஒருவர் ஈரான் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஆயுதங்களும் கைபற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.