Posts

Showing posts from December, 2023

World News

Image
ஆக் லேண்ட் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. உயரமான கட்டிடமான ஸ்கை டவர், டவுன்டவுணில் இருந்து வெளிப்படும் வண்ண வான வேடிக்கைகளும் மக்களின் ஆராவாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன. உக்ரைன் மற்றும் காசா போர்ச்சூழல் பல்வேறு நகரங்களில் கொண்டாட்ட மனநிலையை முடக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

World News

Image
குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானில் நோஷ்கி, துர்பத், புளேடா ஆகிய 3 இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎல்ஏ போராளிகள் ஸ்னைபர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி நோஷ்கியின் பால்கானி, கேஷாங்கி பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சிப்பாய் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 7 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்தனர். வரும் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும். உலகம்முழுவதும் குழந்தை பிறப்பு வினாடிக்கு 4.3 ஆகவும், இறப்பு 2 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

World News

Image
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த1,200 பேர் உயிரிழந்தனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில்மட்டும் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 157 பேர்உயிரிழந்துள்ளனர்.அதேவேளையில், பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. காசா மேற்கு கரையில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர்

World News

Image
புதுடெல்லி: கனடா வாழ் காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சர் பயங்கரவாதியாக அறிவித்தது. 33 வயதான லக்பீர் சிங் லண்டா தடை செய்யப்பட்ட காலிஸ்தானி இயக்கத்தின் பாபர் கல்சா இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மொஹாலியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறை தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராவார். அதேபோல் கடந்த டிசம்பர் 2022ல் சர்ஹாலி காவல்நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தெரிகிறது.

World News

Image
புதுடெல்லி: அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி அருகே முரேகாவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் இக்கோயில் கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்)அமைப்பு அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

World News

Image
இம்பால்: மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 10.01 மணி அளவில் இந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கர் மற்றும் 27-ம் தேதி அசாம் மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.

World News

Image
காத்மாண்டு: பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரது தண்டனை விவரம் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. 23 வயதான சந்தீப் லாமிச்சானே மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நேபாள கிரிக்கெட் சங்கம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த ஜனவரியில் அவர் பிணையில் வெளிவந்தார்.

World News

Image
கீவ் (உக்ரைன்): ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வியாழக்கிழமை இரவு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது 110-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 36 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றில் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

World News

Image
மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்யதுணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் புதின் கூறியதாவது: உக்ரைன் விஷயத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பிரதமர்மோடியுடன் பேசினேன். இப்பிரச்சினையை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என்பதை நான் அறிவேன். இந்த விவகாரம் குறித்து இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து ஆலோசிக்கும்.

World News

Image
அமலாபுரம்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மினி வேனும் டிரக்கும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆந்திர ஆளும் கட்சி எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தின் மும்மிடிவரம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பி. வெங்கட சதீஷ்குமார். இவரது உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு எம்எல்ஏவின் உறவினர்களான பி.நாகேஸ்வர ராவ், இவரது மனைவி சீதா மகாலட்சுமி மற்றும் லோகேஷ், நவீனா, க்ருதிக், நிஷிதா உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று முன்தினம் டெக்சாஸில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.

World News

Image
பெய்ஜிங்: கண் அறுவை சிகிச்சையின்போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக 82 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிசிச்சைக்காக அவருக்கு மருத்துவர் குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான மயக்கமருந்தை செலுத்தியுள்ளார். அம்மூதாட்டிக்கு முழுமையாக மயக்கம் வராத நிலையில் அறுவை சிகிச்சையின் போது அவர் புலம்பியுள்ளார். அவரால் மருத்துவரின் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் மருத்துவர் அந்நோயளியை மூன்று முறை தலையில் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

World News

Image
நியூயார்க் / புதுடெல்லி: அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் ஜேஎன்.1 (JN.1) கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் மூவர் உயிரிழந்தது ம் கவலைகளையும் அச்சங்களையும் அதிகரித்துள்ளது. பொதுவாகவே குளிர்கால வானிலை, மக்களை காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் என்று முடக்கிப் போட்டுவிடும் நிலையில், பிற வைரஸ்கள் பரவுவதால் கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் கரோனா வைரஸான SARS-CoV-2, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸின் சமீபத்திய திரிபு வடிவமான ஜேஎன்.1 என்ற வைரஸ் மிகவும் அதிகம் பரவக் கூடியது என்று யேல் பல்கலைக்கழக மருத்துவ அறிக்கையும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவிக்கின்றன. குளிர் காலங்களில் ஜேஎன்.1 கரோனா வேரியன்ட் பரவும் அபாயம் இருப்ப

World News

Image
காசா: முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் வீதி வீதியாகச் சென்று இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அதன் தலைவர் யாயா சின்வர் என கூறப்படுகிறது. அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம், கடுமையான, முன் எப்போதுமில்லாத போரை எதிர்கொள்கிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையை நசுக்கும் பாதையில் அல் கஸ்ஸாம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் ஹமாஸ் ஒருபோதும் அடிபணியாது.

World News

Image
லாகோஸ்: நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது ப்ளேட்டூ எனும் மாகாணம். இந்தப் பகுதி இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் - விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. இப்பகுதியால் எப்போதுமே நைஜீரிய அரசுக்கு தலைவலிதான் என்பது போல் சர்ச்சைகள் இல்லாத நாள் இல்லை எனும் அளவுக்கு அங்கே கலவரங்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோலத்தான் கடந்த ஞாயிறு ப்ளேட்டூ பகுதியில் ஒரு தாக்குதல் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்தத் தாக்குதலில் 16 பேர் பலியானதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய (டிச.26) நிலவரப்படி 113 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கே நைஜீரிய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
பெத்லகேம்: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் மரியாள், இயேசுவை பெற்றெடுத்தார் என்று இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத சான்றோர் குறிப்பிட்டு உள்ளனர். அந்த இடத்தில் கிரேக்க மன்னர் கான்ஸ்டன்டைன் ஏற்பாட்டின் பேரில் கடந்த 333-ம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. சமாரியர் கலகத்தின்போது அந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் ரோம மன்னர் முதலாம் ஐஸ்டீனியன் 565-ம் ஆண்டில் அதே இடத்தில் புதிய தேவாலயத்தை கட்டினார். பிறப்பிட தேவாலயம் என்றழைக்கப்படும் அந்த வழிபாட்டுத் தலம் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

World News

Image
உலகம் முழுக்க 2023-ஆம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய‘டாப் 11’ சம்பவங்களை இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கலாம். நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர், சர்வதேச அளவில் கவனம் பெற்றது முதல் துருக்கி - சிரியா இயற்கைப் பேரழிவுகளைக் சந்தித்தது வரை பலவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. அவற்றின் தொகுப்பு. துருக்கி - சிரியா பூகம்பம்: கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாடுகளை உலுக்கிப் போட்டன. இது ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.5 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்தன. 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அங்கு இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கின. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கி இரவும், பகலுமாய் மக்களை மீட்டன. இதையொட்டி துருக்கியில் 50,000-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 8,000 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. துருக்கியி

World News

Image
காசா: மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் (Maghazi refugee camp) மீது இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இன்று காலை வரை தொடர்ந்துள்ளது.

World News

Image
பாரீஸ்: துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

World News

Image
புதுடெல்லி: மத்திய ஆப்ரிக்காவில் உள்ள கபோன் நாட்டின் தேசியக்கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்த எம்வி சாய்பாபா என்ற கப்பல் மீது செங்கடலில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான கப்பலில் 25 இந்திய பணியாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, ஏமனின் ஹுதி பயங்கரவாதிகள் நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு உள்ளன இரண்டு கப்பல்களில் இந்திய கொடியுடன் பயணித்த கச்சா எண்ணெய் கப்பலும் ஒன்று என்று அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தனது அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: "டிச.23 (சனிக்கிழமை) அன்று ஹுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியில் இருந்து, தெற்கு செங்கடலில் சர்வதேச கடல் பாதையை நோக்கி இரண்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் எந்த கப்பலும் பாதிக்கப்படவில்லை.

World News

Image
நெவார்க்: கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றின் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

World News

Image
2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99% வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO - World Metorological Organisation) அறிவித்தது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்ற கணிப்பு கவனம் பெற்றது. இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99 சதவீத வாய்ப்புள்ளதாக இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

World News

Image
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரில் எழுதிவைத்த கோஷத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கலிபோர்னியாவின் நேவார்க் நகரில் சுவாமிநாராரயண் கோயில் உள்ளது. அதில் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன.

World News

Image
பாரிஸ்: துபாயில் இருந்து நிகரகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில் இந்தியர்கள் அதிகம் இருப்பதாக தகவல். இதனை பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

World News

Image
இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

World News

Image
புதுடெல்லி: எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. தெற்கு பசிபிக் நாடான பபுவா நியூ கினியாவில் உள்ள ‘உலவுன்’ என்ற எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதி சீறி புகையை வெளியேற்றியது. இந்த சாம்பல் புகை வானில் 15 கி.மீ உயரத்துக்கு எழும்பியது. 1,700-ம் ஆண்டுகளில் இருந்து அவ்வப்போது இந்த எரிமலை வெடித்து வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் உலவுன் எரிமலை வெடித்தது. அப்போது சுமார் 5 ஆயிரம் பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது இப்பகுதியில் இருந்து 26,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவை என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பபுவா நியூகினியா உள்ளது. இதனால் பபுவா நியூகினியா மக்களுக்கு உதவ இந்தியா முடிவு செய்தது. அதன்படி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை பபுவா நியூ கின

World News

Image
நியூயார்க்: குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்தவர் மயூஷி பகத். இவர் 2016-ல் அமெரிக்கா வந்தார். நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்துக் கொண்டிருந்தார். ஜெர்சி சிட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தங்கியிருந்தார்.கடந்த 2019 ஏப்ரல் 29-ம் தேதி மாலை, இவர் தனது குடியிருப்பை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் 2019, மே 1-ம் தேதி புகார் அளித்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷியை சேர்த்தது. இந்நிலையில் மயூஷி பற்றிய தகவலுக்கு எஃப்பிஐ வெகுமதி அறிவித்துள்ளது. மயூஷி பற்றி தகவல் அறிந்தவர்கள் நெவார்க் நகரில் உள்ள எஃப்பிஐ அலுவலகம் அல்லது ஜெர்சி சிட்டி நகர காவல் துறையில் தெரிவிக்கலாம். இதன் மூலம் மயூஷி இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது அவர் மீட்கப்பட்டால் தகவல் அளித்தவருக்கு 10 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.33 லட்சம்) பரிசு வழங்கப் படும் என்று எஃப்பிஐ தெரிவித்துள்ளது. மயூஷி பகத் ஆங்கிலம், இந்தி,உருது ஆகிய மொழிகளில்

World News

Image
கொலராடோ: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

World News

Image
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன் காரணமாக கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 116 பேர் பலியாகியுள்ள நிலையில், 200 பேர் காயமடைந்துள்ளனர்.

World News

Image
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல். திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.

World News

Image
சான் பிரான்சிஸ்கோ: மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது குறித்து பல்வேறு தருணங்களில் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் எக்ஸ் தளத்தில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார். பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து பேசி வருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

World News

Image
தேரா காஜி கான் (பலுசிஸ்தான்): பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி தேரா காஜி கான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் பலர் காணாமல் போவதாகவும், அரசே பயங்கரவாத அமைப்பு போல தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பலூச் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

World News

Image
கராச்சி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம் . பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

World News

Image
டெஹ்ரான்: இஸ்ரேல் உளவாளி ஒருவர் ஈரானில் தூக்கில் இடப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் உட்பட வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒருவர் (விவரம் தரப்படவில்லை) சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஈரான் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

World News

Image
புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டுகண்டறியப்பட்ட கரோனா வைரஸ்தொற்று பின்னர் உலகம் முழுவதும்பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 3 முதல் 9 வரை கணக்கிடப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,043 ஆகஅதிகரித்துள்ளது, இது முந்தையவார நோயாளிகள் எண்ணிக்கையுடன் (32,035) ஒப்பிடுகையில் 75 சதவீத உயர்வு ஆகும்.

World News

Image
பீஜிங்: சீனாவில் வரலாறு காணாத அளவு பனிப் பொழிவதால் அங்கு மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.16) சீன அரசு பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் ஜிஜின் பிங் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பீஜிங்கில் நடப்பாண்டில் பனிப்பொழிவு காலம் தொடங்கியவுடனே புதிய உச்சத்தில் குளிர்நிலை பதிவாகியுள்ளதால் பொதுப் போக்குவரத்தில் கடுமையான தாமதங்கள் நிகழ்கின்றன. ஓடுதளங்கள் வழுக்கும் சூழலில் இருப்பதால் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. டிச.14-ல் சீனாவில் பனியால் மெட்ரோ ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கான பயணிகள் காயமடைந்தனர்.

World News

Image
பெர்லின் : ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்.7-ம் தேதி இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

World News

Image
ஜெருசலேம்: சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

World News

Image
ஜெருசலேம்: காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

World News

Image
நியூயார்க்: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் இன்றுவரை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசாவில் 45 ஆயிரம் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வடக்கு காசாவில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.

World News

Image
புதுடெல்லி: பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான தெற்கு வஸிரிஸ்தானுக்கு அருகே உள்ள தேரா இஸ்மாயில் மாவட்டத்தில் தர்பான் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

World News

Image
துபாய்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டு அரங்கை அதிரவைத்துள்ளார், இந்தியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருந்தது. யார் அந்த சிறுமி? 12 வயதான லிசிபிரியா கங்குஜம் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராக காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இன்றைய கூட்டத்தில் அவர் மாநாட்டு மேடையில் திடீரென ஒரு பதாகையுடன் தோன்றினார். அந்தப் பதாகையில் ”புதைபடிம எரிவாயுக்களுக்கு தடை விதியுங்கள். நம் பூமியைக் காப்பாற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. அவர் அவ்வாறு பதாகையுடன் மேடயேறியதை பலரும் ஆமோதித்து வரவேற்றனர். அரங்கில் கைத்தட்டல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனாலும் அவருடைய நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால்அவர் மாநாட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

World News

Image
ஜெருசலேம்: காசாவிலேயே நிரந்தரமாக இருந்துவிடும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மாறாக காசா பகுதியை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்ற ஆலோசனையில் ஈடுபட இஸ்ரேல் தயாராக இருக்கிறது. காசாவில் அதிகாரம் செலுத்தப்போவது இஸ்ரேலுக்கு விரோதமான குழுவாக இல்லாமல் இருப்பது மட்டும் அவசியம் என்றார். நிரந்தரத் தீர்வுக்காக ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லாக்களுடன் கூட ஆலோசனை நடத்த இஸ்ரேல் தயாராகவே இருக்கிறது ஆனால் எல்லை பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் கூறினார். ஹமாஸை அழிக்க இஸ்ரேல் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கவும் தயார். ஆனால் அதற்காக நிரந்தரமாக காசாவிலேயே இருந்துவிடும் எண்ணம் இல்லை.

World News

Image
இஸ்லமாபாத்: மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது மத்திய அரசு. அதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் மத்திய அரசின் ஒருமனதாக உறுதி செய்தது நீதிமன்றம். இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

World News

Image
புதுடெல்லி: திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிக்கிம் மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் (Prem Singh Tamang) வரவேற்றார். அதோடு, பல்வேறு புத்த மத துறவிகள், அவருக்குப் புத்த மத வழக்கப்படி ஷெர்பாங் பாடலைப் பாடி, நடனமாடிச் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். தலாய் லாமா, தற்போது காங்டாக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைக் காண நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

World News

Image
காசா: தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கும் நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

World News

Image
ப்யூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி பதவியேற்றார். அர்ஜென்டினா கடுமையான பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் நடந்த தேர்தலில் ஜேவியர் அபார வெற்றி பெற்றுள்ளார். பதவியேற்புக்குப் பின்னர் பேசிய அதிபர் ஜேவியர் மிலி கூறுகையில், "இறைவன் மீதும், என் தேசத்தின் மீதும் ஆணையாக நான் இந்த அதிபர் பதவியி உண்மையுடன், தேசபக்தியுடன் செயல்படுவேன். முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவை காலிசெய்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் நடவடிக்கையால் நாடு அதிதீவிர பணவீக்கத்தை சந்தித்துள்ளது. அரசாங்கத்திடம் பணம் இல்லை. நிதி சீர்திருத்தம் தான் இப்போதைய தேவை. ஆனால் அதன் பலன்கள் அரசாங்கத்துக்கு வர வேண்டும். தனியார் துறைகள் ஆதாயமடையும் வகையில் இருக்கும்படியான சீர்திருத்தங்களாக இருந்துவிடக் கூடாது" என்றார்.

World News

Image
ஓஸ்லோ: ஜெர்மனியின் ஓஸ்லோ சிட்டி ஹாலில் நோபல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த ஆண்டுக்கானஅமைதிக்கான நோபல் பரிசு ஈரான் சமூக ஆர்வலரும், பெண்களின் உரிமை மற்றும்சுதந்திரத்துக்காக போராடி வரும் நர்கீஸ் முகமதுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ல் நர்கீஸ் முகமதுவை ஈரான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.இதையடுத்து,அமைதிக்கான நோபல் பரிசை அவர் நேரடியாகபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக, நர்கீஸின்இரட்டை குழந்தைகள்17வயதான அலி மற்றும் கியானி ஆகியோரிடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாககியானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெண்களின் சுதந்திரத்துக்காக போராடுவது மதிப்புக்குரிய விசயம்.வெற்றியை மட்டுமே நம்பி நாம் இந்த போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.ஏனெனில் இது விலைமதிப்பற்றது.நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்காக எனது தாயாரின் சுதந்திரத்தை ஈரானிய அதிகாரிகள் மேலும் பறிக்ககூடும்.எங்களது அம்மாவை நாங்கள் இறுதிவரை சந்திக்க முடியாமல் கூட போகலாம்.ஆனால்,அவர் என்றும் எங்கள் இதயத்தில் இருப்பார் என்றார்.

World News

Image
புதுடெல்லி: செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. இதன்படி அமெரிக்கா, இந்தியா உட்பட 22 நாடுகளில் 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தி உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

World News

Image
நியூயார்க்: யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனத்துக்கு இடம் கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இந்திய-அமெரிக்க சமூகத்தினர் நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் உறைபனியையும் பொருட்படுத்தாது வியாழக்கிழமை மாலை ஒன்றுகூடி கர்பா நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி வருண் ஜெப் கூறுகையில், “ குஜராத்தின் கர்பா நடனத்தை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு. இந்தியாவின் பல கலாச்சார கூறுகள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.