World News

லாகோஸ்: நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது ப்ளேட்டூ எனும் மாகாணம். இந்தப் பகுதி இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் - விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. இப்பகுதியால் எப்போதுமே நைஜீரிய அரசுக்கு தலைவலிதான் என்பது போல் சர்ச்சைகள் இல்லாத நாள் இல்லை எனும் அளவுக்கு அங்கே கலவரங்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோலத்தான் கடந்த ஞாயிறு ப்ளேட்டூ பகுதியில் ஒரு தாக்குதல் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்தத் தாக்குதலில் 16 பேர் பலியானதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய (டிச.26) நிலவரப்படி 113 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கே நைஜீரிய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News