World News

ப்யூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி பதவியேற்றார். அர்ஜென்டினா கடுமையான பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் நடந்த தேர்தலில் ஜேவியர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பதவியேற்புக்குப் பின்னர் பேசிய அதிபர் ஜேவியர் மிலி கூறுகையில், "இறைவன் மீதும், என் தேசத்தின் மீதும் ஆணையாக நான் இந்த அதிபர் பதவியி உண்மையுடன், தேசபக்தியுடன் செயல்படுவேன். முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவை காலிசெய்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் நடவடிக்கையால் நாடு அதிதீவிர பணவீக்கத்தை சந்தித்துள்ளது. அரசாங்கத்திடம் பணம் இல்லை. நிதி சீர்திருத்தம் தான் இப்போதைய தேவை. ஆனால் அதன் பலன்கள் அரசாங்கத்துக்கு வர வேண்டும். தனியார் துறைகள் ஆதாயமடையும் வகையில் இருக்கும்படியான சீர்திருத்தங்களாக இருந்துவிடக் கூடாது" என்றார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News