Posts

Showing posts from April, 2023

Sports in Tamil

Image
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, பர்ப்பிள் கேப் வென்றுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பந்து வீச்சாளர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். இதுவரை சென்னை அணிக்காக இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 33.2 ஓவர்கள் வீசி 369 ரன்கள் விட்டுக் கொடுத்து, 17 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் 76 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசி உள்ளார். இன்று (ஞாயிறு) சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் பர்ப்பிள் கேப் வென்றுள்ளார்.

Sports in Tamil

Image
தன் நாடே தன் மீது இவ்வளவு முதலீடு செய்யாது என்றும் ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்கள் தன் மீது அவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என்றும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் கூறியுள்ளார். தன் சொந்த நாட்டு அணிக்கு ரஸல் ஆடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருக்கும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக 10வது சீசனாக தொடர்ந்து ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சில அணிகள் தங்கள் பெரிய ஸ்பான்சர் வீரர்களை விட்டு விடாது. சிஎஸ்கேவுக்கு எந்நாளும் தோனி, ஆர்சிபிக்கு எப்போதும் கோலி, மும்பைக்கு எத்தினமும் ரோஹித் சர்மா, அதே போல் சில அயல்நாட்டு வீரர்களும் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் டேவிட் வார்னர் குறிப்பிடத்தகுந்த வெளிநாட்டு வீரர். ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆர்சிபிக்கு ஆடினார், ஷேன் வாட்சன், பிராவோ சிஎஸ்கேவுக்கு ஆடினர். பொலார்ட், மலிங்கா மும்பை இந்தியன்ஸின் ஐகான் வீரர்கள் என்று சொல்லலாம், அதேபோல்தான் ஆந்த்ரே ரஸலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு.

Sports in Tamil

Image
சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கேவின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்ட இந்த காம்போவை சிக்கந்தர் ராசா பிரிந்தார். அதன்படி 37 ரன்களுடன் ருதுராஜ் வெளியேறினார்.

Sports in Tamil

Image
ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 336 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி அனாயசமாக விரட்டி 337/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் 2-வது பெரிய வெற்றிகர சேஸிங் ஆகும். நியூஸிலாந்து அணி எடுத்த 336 ரன்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூஸிலாந்தின் டேரல் மிட்செல் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம் லேதம் 85 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 98 ரன்களை விளாசினார். சாத் போவ்ஸ் என்ற தொடக்க வீரர் 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 45.3 ஓவர்கள் வரை நின்ற டேரில் மிட்செல் முதலில் 53 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். பிறகு 102 பந்துகளில் சதம் கண்டார். அடுத்த 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தாலும் அவர் கொஞ்சம் முன்னமேயே அடித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது.

Sports in Tamil

Image
கோண்டா: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக அவர்கள், டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதில் ஒன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் உள்ளது. காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ள போதிலும் மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து விலகவேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

World News

Image
துபாய்: மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் கப்பலையும் ஊழியர்களையும் பத்திரமாக மீட்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுமே தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் களமிறங்குகின்றன. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் 32 ரன்கள் வித்தியாசத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடமும் வீழ்ந்திருந்தன. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியானது சிஎஸ்கேவின் நம்பிக்கையை சற்று அசைத்து பார்த்துள்ளது. எனினும் அந்த அணி வீரர்களின் பார்ம், கடந்த ஆட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்திய செயல்திறன் எல்லாவற்றுக்கும் மேலாக சுழலுக்கு சாதகமான தனது கோட்டையில் களமிறங்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

World News

Image
ஹேக் (நெதர்லாந்து): ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர், இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் செய்தி, ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவரும் ஹேக் நீதிமன்றத்தில் அவர் மீது தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு மூலம் வழியாக வெளியே வந்துள்ளது. இந்த வழக்கினை நீதிபதி ஹெஸ்லிங்க் விசாரித்தார். அவர் தனது தீர்ப்பில், "விந்து தானம் வழங்கியவர் தான் தானம் வழங்கப்போகும் பெற்றோர்களுக்கு தான் எத்தனை குழந்தைகளுக்கு அப்பா என்ற தகவலை தவறாக கொடுத்துள்ளார்.

World News

Image
பியாங்யாங்: அமெரிக்கா - தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா சமீபத்தில் ஒப்புக்கொண்டது .மேலும், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலை தென் கொரியா எதிர்கொள்ள அந்நாட்டை அணு ஆயுத திட்டத்திலும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருகிறது. தென் கொரியா - அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், தென் கொரிய பிரதிநிதி யூன் சுக்-யோல்ஸு இடையே நடந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ், குடும்பத்தில் நிலவும் மருத்துவ பிரச்சினைகள் காரணமாக அவசரமாக தாயகம் சென்றுள்ளார். நேற்று காலை டாக்கா சென்றடைந்த அவர், எப்போது அணிக்கு திரும்புவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 28 வயதான லிட்டன் தாஸை கொல்கத்தா அணி அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய லிட்டன் தாஸ் பேட்டிங்கில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் போது விக்கெட் கீப்பிங்கில் இரு ஸ்டெம்பிங்க் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தார். இதன் பின்னர் அடுத்த ஆட்டங்களில் லிட்டன் தாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Sports in Tamil

Image
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சின் போது பவர்பிளேவில் சிஎஸ்கே 64 ரன்களை தாரை வார்த்திருந்தது. 14 ஓவர்கள் வரை களத்தில் இருந்த தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில், 77 ரன்களை விளாசினார்.

World News

Image
புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று முன்தினம் சந்தித்தார்.

Sports in Tamil

Image
மொகாலி: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 258 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. மேயர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ், அரைசதம் கடந்து அசத்தினர். பதோனி, 43 ரன்கள். பூரன் 45 ரன்கள் எடுத்திருந்தார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: “ எங்கள் போராட்டம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் வாய் திறக்கவில்லை” என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. நீங்கள் இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு ஆதரவாக எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அது குறித்து நடுநிலையிலாவது எதாவது பேசுங்கள். நீங்கள் பேசாமல் இருப்பதுதான் எனக்கு வலியைத் தருகிறது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Sports in Tamil

Image
புதுடெல்லி : “மல்யுத்த வீராங்கனைகள் வீதிகளில் இறங்கிப் போராடுவது என்னைக் காயப்படுத்துகிறது” என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Sports in Tamil

Image
புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக்உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரிமாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில்6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்திதனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக்உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரிமாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில்6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்திதனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Sports in Tamil

Image
ஜெயப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு வழக்கத்துக்கு மாறாக டெவான் கான்வே மெதுவாக ஆடினார். 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவர் முதல் விக்கெட்டாக வெளியேற, மற்றொரு ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். எனினும், 47 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பினார்.

Sports in Tamil

Image
மும்பை: இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் இலக்கை விரட்டிய அணிகள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. இந்த சூழலில் பீட்டர்சன் இதனை தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணியும், குஜராத்துக்கு எதிராக மும்பை அணியும், டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியும் இலக்கை விரட்டிய போது அதனை வெற்றிகரமாக எட்ட முடியாமல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. நேற்று ஆர்சிபி அணியால் 201 ரன்கள் என்ற இலக்கை பெங்களூரு மைதானத்தில் எட்ட முடியவில்லை.

Sports in Tamil

Image
துபாய்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தனர். அதேவேளையில் லக்சயா சென் முதல் சுற்றுடன் வெளியேறினார். துபாயில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் வென் ஷி சூ-வை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான சிந்து 21-15, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் சிந்து, உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹன் யி-யை எதிர்கொள்கிறார்.

Sports in Tamil

Image
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சிஎஸ்கே தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்த நிலையில் களமிறங்குகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சிஎஸ்கேவின் ஹாட்ரிக் வெற்றியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர்.

World News

Image
மெல்பர்ன்: பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

World News

Image
ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் ராணுவத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Sports in Tamil

Image
பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் சீசனில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பெங்களூருவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

Sports in Tamil

Image
நடப்பு ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகளில் சரிபாதி ஆட்டங்கள் ஆடப்பட்டுள்ளது. 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ? என்பதை பார்ப்போம். எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆசியக் கோப்பை, இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் இந்த ஆண்டு முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி பிஸியாக இயங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது இந்தியா. அப்போது ‘பணிச்சுமை தான் காரணம்’ என இந்திய வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தக் கதை அப்படியே மாறி காயம் காரணமாக பிரதான வீரர்களான பும்ரா, ஜடேஜா போன்றவர்கள் விளையாடவில்லை.

World News

Image
கார்ட்டூம்: சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை" என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சூடானின் கார்ட்டூம் நகரில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் கலவரக்காரர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கே ஏதேனும் விபரீதம் நடந்தால் ஆராய்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகள் கசிவு ஏற்படலாம். இதனால் சூடானில் தொற்றுநோய் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் மார்க் வுட், தனது குழந்தை பிறப்பையொட்டி அடுத்த மாதம் தாயகம் செல்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் இந்த சீசனில் லக்னோ அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 8.12 ரன்களை வழங்கி உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரு ஆட்டங்களிலும் அவர் களமிறங்கவில்லை.

World News

Image
மாலிண்டி : கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார். இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன.

World News

Image
கார்ட்டூம் : உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல் கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது.

Sports in Tamil

Image
கராச்சி : தனது மனைவி சானியா குறித்து கூறி விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோயப் மாலிக். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார் சானியா.

Sports in Tamil

Image
அஹமதாபாத் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. 208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. 2வது ஓவரிலேயே 2 ரன்களுக்கு நடையைக்கட்டினார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. ஸ்லோ இன்னிங்சை வெளிப்படுத்திய இஷான் கிஷனும் 13 ரன்களுக்கு விக்கெட்டாக, இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட திலக் வர்மா, எந்த இம்பேக்ட்டும் காட்டாமல் 2 ரன்களில் வீழ்ந்தார்.

Sports in Tamil

Image
ராவல்பிண்டியில் நேற்று இரவு நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது. நியூஸிலாந்து அணிக்கு ஆடிவரும் ஹாங்காங்கில் பிறந்தவரான மார்க் சின்க்ளைர் சாப்மேன் என்ற இடது கை வீரர் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 104 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என்ற இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். இது சாப்மேனுடைய முதல் டி20 சதமாகும். டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மீண்டும் தான் யார் என்று நிரூபித்து 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 98 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ, இப்திகார் (22 பந்து 36 ரன்), இமாத் வாசிம் (14 பந்தில் 31 ரன்) கடைசியில் விளாச பாகிஸ்தான் 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஷாஹின் ஷா அஃப்ரீடி, இமாத் வாசிம் பந்து வீச்சில் 9.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் என்று முடங்கியது.

Sports in Tamil

Image
கடந்த சீசனில் அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அவருக்கு 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் அவர், 133 ரன்கள் சேர்த்தார். ஸ்டிரைக் ரேட் 104 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த சீசனுக்கான ஏலத்தில் ரஹானேவை கொல்கத்தா அணி விடுவித்திருந்தது. ஆனால் சிஎஸ்கே ரஹானேவை அவரது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரை ஏலம் எடுத்த போது சில எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவை அனைத்தையும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் வழியாக உடைத்து எறிந்துள்ளார் ரஹானே. 15 சீசன்களிலும் அவரிடம் பார்க்காத செயல்திறனை தற்போது ரசிகர்கள் கண்டு வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ரஹானே தனது ஆட்டத்தை முற்றிலும் புதுப்பித்துக் கொண்டுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

World News

Image
புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 500 இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்த்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு ஒரு இந்தியர் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
தாகா: வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகிக்கிறார். அதிபராக அப்துல் ஹமீத் பதவி வகித்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. முன்னதாக ஆளும் அவாமி லீக் சார்பில் புதிய அதிபராக மொகமத் ஷகாபுதீன் அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் போட்டியின்றி ஒருமனதாக ஷகாபுதீன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழா தலைநகர் டாக்காவில் உள்ள ‘பங்காபாபன்’ தர்பார் மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அப்போது வங்கதேசத்தின் 22-வது அதிபராக 73 வயதான மொகமத் ஷகாபுதீனுக்கு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின், ஆவணங்களில் ஷகாபுதீன் கையெழுத்திட்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் ஷேக் ஹசீனா, ஷகாபுதீனின் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Sports in Tamil

Image
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு மனமார்ந்த 50-வது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் தத்தமது துறைகளில் சிறந்து விளங்க தங்கள் வாழ்க்கை தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
ஹைதராபாத் : ஐபிஎல் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 145 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு ஹாரி ப்ரூக் இம்முறையும் ஏமாற்றினார். 7 ரன்களுக்கு அவர் முதல் விக்கெட்டானாலும், மற்றொரு ஓபனர் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை.

Sports in Tamil

Image
மும்பை: ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே எனது வெற்றிக்குக் காரணம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

World News

Image
ஜெட்டா: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படை யினருக்கும் - துணை ராணுவ (ஆர்எஸ்பி) தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் தொடங்கியது. இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ள தாக தகவல்கள் வெளியாகின.

Sports in Tamil

Image
ஐபிஎல் 16வது சீசன் பரபரப்பாக நடந்துவருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 ரன்களில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 49 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். நடப்பு தொடரில் சிஎஸ்கே பெறும் 5வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Sports in Tamil

Image
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 236 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு முதல் இரண்டு ஓவர்களில் ஓப்பனிங் வீரர்களை அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தனர் சென்னை பவுலர்கள். முதல் ஓவரை வீசிய ஆகாஷ் சிங் தனது நான்காவது பந்தில் சுனில் நரைனை கிளீன் போல்டக்கினார். துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஓவரில் நாராயண் ஜெகதீசனை அவுட் ஆக்கினார்.

Sports in Tamil

Image
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணிக்கு வழக்கம்போல் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர்.

Sports in Tamil

Image
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் தனக்கு பிடித்த உணவு தொடங்கி பிடித்த சினிமா வரை ஒரு கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்போதும் கிரிக்கெட் பற்றிமட்டும் தான் பேச வேண்டுமா என்ற ரகத்தில் அந்தப் பேட்டி சுவாரஸ்யமாக உள்ளது. அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்:

Sports in Tamil

Image
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பஞ்சாப் பவவுலர் அர்ஷ்தீப் சிங். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. இஷான் கிஷன், 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் களம் கண்ட கேமரூன் கிரீன் உடன் இணைந்து 76 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் ரோகித் சர்மா. 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ரோகித்.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நாளை மறுநாள் (ஏப்ரல் 24) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வான்கடே மைதானத்தில் மும்பை அணியினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். வான்கடேவில் குழுமியிருந்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அந்த வாழ்த்து மழைக்கு நடுவே தனது பிறந்தநாளை சச்சின் கொண்டாடினார்.

Sports in Tamil

Image
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் 30-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. 135 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி, லக்னோவை 128 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குஜராத். லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, சாஹாவுடன் இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாஹா, 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அபினவ், விஜய் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

World News

Image
காபூல்: ஆப்கனிஸ்தானில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க ஆளும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கனிஸ்தான் சென்ற பிறகு, அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில், கடந்த முறையைப் போல இம்முறை தங்களின் ஆட்சி முறை இருக்காது என உறுதி அளித்த தலிபான்கள், பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார்கள். ஆறாம் வகுப்புக்கு மேல் சிறுமிகள் பள்ளிகளுக்குச் செல்ல தடை, கல்வி நிலையங்களில் பெண்கள் பணியாற்ற தடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை, பொது இடங்களுக்குச் செல்வதில் கட்டுப்படு என பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.

Sports in Tamil

Image
ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் நடுநிலை மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்றலாமே என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜீம் சேத்தி பரிந்துரை செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானில் சென்று விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது. கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கலந்து கொள்ளும்போது, இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நஜீம் சேத்தி நம்பிக்கை தெரிவித்தார்.

World News

Image
டெல் அவிவ்: ஈரானில் கடைசியாக ஆட்சி செய்த மன்னர் (ஷா), முகமது ரெஸா பஹ்லவியின் மகன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரபு நாடுகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் அங்கு மன்னர் ஆட்சிமுறைதான் வழக்கத்தில் இருந்தது. முகமது ரெஸா பஹ்லவி ஈரானின் கடைசி மன்னராக இருந்தார். 1979 ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு மன்னர் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி இஸ்ரேலுக்கு இந்த வாரம் சென்றார். தனது பயணத்தில் இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளையும், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அவர் சந்தித்தார்.