Posts

Showing posts from January, 2023

Sports in Tamil

Image
மெல்பர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் கவலை கொண்டுள்ளேன் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட டேவிட் வார்னர் பேசியதாவது: அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் என்ன நடக்கும். கிரிக்கெட் எந்த திசையில் செல்லும் என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கவலை ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். அந்தப் பெருமிதம்தான் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அற்புதமான விஷயமாகும். டெஸ்ட் போட்டிகள் உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியதாக இருக்கும்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

World News

Image
பெஷாவர் : பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் மதியம் தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசை யில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் கள் மீது விழுந்தது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

World News

Image
வாஷிங்டன் : அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3-வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது.

Sports in Tamil

Image
இந்தியாவின் முன்னாள் இடது கை ஸ்பின்னரும், முன்னாள் தலைமைத் தேர்வாளருமாக பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதையொட்டி இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும், யஜுவேந்திர செஹல் தேவையில்லை என்று கூறியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அங்கு டெஸ்ட் ஆடிய குல்தீப் யாதவ் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஆனால், புரியாத புதிராக அடுத்த போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். மீண்டும் இலங்கை, நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடந்த இரண்டு ஒருநாள் தொடர்களிலும் அட்டகாசமாக வீசி அசத்தினார்.

World News

Image
ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவம் ஃப்ளோரிடாவின் ப்ளம் நகரில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது. இதனை லேக்லேண்ட் காவல்துறை உறுதி செய்துள்ளது. போலீஸ் விசாரணையின்படி சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்தக் காரின் 4 ஜன்னல்களும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்களைக் குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் நிகழ்விடத்திலிருந்து அந்தக் கார் வேகமாக சென்றுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய அந்தக் காரை தேடி வருவதாக லேக்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும்ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதற்கு, அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Sports in Tamil

Image
சென்னை : இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. கட்டுமான பொறியாளர்களிடையே நடத்தப்பட்ட இந்தத்தொடரின் இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் – மதுரை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 12 ஓவர்களை கொண்ட இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரவிந்தன் 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். 107 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மதுரை சூப்பர் கிங்ஸ் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

Sports in Tamil

Image
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான முரளி விஜய், இந்திய அணிக்காக 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 17 ஒருநாள் கிரிக்கெட்போட்டி, ஒன்பது டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாகஅவர், கடந்த 2018-ம் ஆண்டுபெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

World News

Image
பெஷாவர் : பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

World News

Image
லண்டன் : ஏவுகணைகளை வைத்து புதின் தன்னை மிரட்டுவதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்னர், ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன் பிபிசி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருக்கிறார்.அதில் புதின் குறித்து அவர் கூறிய தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World News

Image
கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் கைப்பற்றப்பட்டன. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து மிக வேகமாக சென்றதால்இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்தபேருந்து மேம்பால தடுப்பை உடைத்து பள்ளத்தில் விழுந்ததுள்ளது. உடனே தீ பற்றியுள்ளது. இதனால் பயணிகளின் உடல்அடையாளம் தெரியாத வகையில்எரிந்துள்ளது. தற்போது அவர்களது உடல் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று

Sports in Tamil

Image

Sports in Tamil

Image
லக்னோ: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இறுதி வரை களத்தில் பேட் செய்து அணிக்கு தேவையான வெற்றியை பெற்று கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

Sports in Tamil

Image
மெல்பர்ன்: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. நடப்பு ஆண்டில் அவர் அதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இது வெறும் வெற்றி மட்டும் அல்ல. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதன் மூலம் பத்தாவது முறையாக அவர் சாம்பியன் ஆகியுள்ளார். 35 வயதான அவர் 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023 என ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதோடு ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமன் செய்துள்ளார். நடால் மற்றும் ஜோகோவிச் என இருவரும் 22 முறை பட்டம் வென்றுள்ளனர்.

Sports in Tamil

Image
பாட்செஃப்ஸ்ட்ரூம்: நடப்பு அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வாகை சூடியுள்ளது இந்தியா. அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் எடிஷன் இது. இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி இந்தத் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் என இந்த தொடர் நடைபெற்றது.

World News

Image
அக்லாந்து: நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆக்லாந்து நகரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அக்லாந்து விமான நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.“ என்று நியூசிலாந்து நாட்டின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், அக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Sports in Tamil

Image
வதோதாரா : இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல், தனது காதலி மேஹாவை மணந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதாராவில் இவர்களில் திருமணம் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல். 2014ல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும், சமீபகாலமாக தனது திறமையால் மூன்று வடிவ போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர், தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

World News

Image
நியூசிலாந்தின் பிரதமர் பதவியிலிருந்து விடைபெற்று இருக்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன். நாட்டைக் காக்கும் சூப்பர் மேனாக சித்தரித்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக நின்று தனது ஐந்தரை ஆண்டு காலப் பணியை சிறப்பாகவும், நிறைவாகவும் முடித்திருக்கிறார் ஜெசிந்தா. “நான் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்த ஐந்தரை ஆண்டுகளில் பெரிய சவால்களை நான் எதிர்கொண்டேன். நானும் மனிதிதான். அரசியல் தலைவர்களும் மனிதர்கள்தான். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது நான் விடைபெறுவதற்கான நேரம்” என ஜெசிந்தா தனது ராஜினாமா உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது நியூசிலாந்துக்கு மட்டுமல்ல, உலக அரசியலைப் பின்தொடரும் அனைவருக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

World News

Image
இஸ்லாமாபாத்: “ கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” என்று அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார். இஸ்லாமாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், "பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இப்போது உள்ள நிதி சிக்கல்களுக்கு வழி வகுத்தது என்னவோ இதற்கு முன்பு இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு. இப்போது அந்தப் பிழையின் விளைவை சரி செய்ய இரவு பகலாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

World News

Image
வாஷிங்டன்: நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ட்ரம்ப் தோல்வியுற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன. இந்தத் தடையை அடுத்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் என்று தனக்காக ஒரு பிரத்யேக சமூக வலைதளத்தையே தொடங்கினார். இந்த சமூக வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவர் பதிவைப் பகிர்ந்தார். அதில், ”நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போரே நடந்திருக்காது. அதையும் மீறி போர் மூண்டிருந்தால் அந்தப் போரை இவ்வளவு காலம் நீடிக்கவிடாமல் மத்தியஸ்தம் செய்து முடித்துவைத்திருப்பேன். அதுவும் 24

World News

Image
மெம்ஃபிஸ்: அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை நிரூபிப்பது போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அவரத்து வீட்டிலிருந்து 90 மீட்டர் தொலைவில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. பைக்கில் வந்து கொண்டிருந்த நிக்கோலஸை போலீஸார் திடீரென சுற்றி வளைக்கின்றனர். அப்போது அவரை தரையில் படுக்குமாறு எச்சரிக்கின்றனர். அந்த இளைஞரும் போலீஸ் சொல்வது போல் செய்கிறார். ஆனால் அப்படியிருந்தும் அவரைத் தாக்குகின்றனர். அந்த இளைஞரோ "நான் தான் நீங்கள் சொல்வதை செய்துவிட்டேனே" என்று கேட்கிறார். அப்போது இன்னொரு காவல் அதிகாரி "நீ உன் கைகளை பின்னால் கட்டுகிறாயா இல்லை நான் அவற்றை உடைக்கவா?" என்று கேட்கிறார். உடனே நிக்கோலஸ் கைகளைக் கட்டுகிறார். அப்படியிருந்தும் தாக்குதல் தொடர்கிறது. பொறுக்க முடியாமல் அவர் அலறுகிறார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். அவரை டேஸர் எனப்படும் மின்ச

Sports in Tamil

Image
ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார். ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளஇந்தியாவின் லக்சயா சென், ஆசிய விளையாட்டு சாம்பியனும் 3-ம் நிலைவீரரருமான ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 10-21, 13-21என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

Sports in Tamil

Image
ராஞ்சி : இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி 3.1 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பசி, பட்டினி தலை விரித்தாடுகிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு டாலர்களை உள்ளூர் பணமாக மாற்ற மக்கள் கள்ளச்சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளனர். மின்வெட்டு சமாளிக்க முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

Sports in Tamil

Image
கொல்கத்தா: எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும், பயிற்சியாளர் ராகுல் திராவிடும் செய்ய வேண்டியது குறித்து தனது ஆலோசனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி பகிர்ந்துள்ளார். கங்குலி, இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும் சரி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தபோதும் சரி சிறப்பான பணிகளை செய்துள்ளார். இளம் வீரர்களுக்கு கேப்டனாக இருந்தபோது வாய்ப்பு வழங்கியது மற்றும் வாரிய தலைவராக இருந்தபோது மகளிர் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்து பணியாற்றதை குறிப்பிட்டு சொல்லலாம்.

Sports in Tamil

Image
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து 2-வது முறையாக ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர். ஆனால், அதற்காக இந்திய லெஜண்ட் விராட் கோலியை கேலி செய்யலாமா? ஆனால், அப்படிச் செய்வதில்தான் அவர்களின் கொடூர மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இந்தச் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. பாபர் அசாம், 2022-ம் ஆண்டில் 9 ஒருநாள் போட்டிகளில் 679 ரன்களை 84.87 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். தனிப்பட்ட சாதனையுடன் கேப்டனாகவும் அவர் கடந்த ஆண்டில் பிரமாதமாகச் செயல்பட்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உதை மேல் உதை வாங்கினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

World News

Image
நியூயார்க் : ’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரம் தான் இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து அறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபகினா, பெல்லாரசின் சபலெங்கா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 11-வது நாளான நேற்றுமகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 22-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 24-ம் நிலை வீராங்கனையும் இரு முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றவருமான பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவை எதிர்த்து விளையாடினார்.

Sports in Tamil

Image
சென்னை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டத்தில் ஒரே நாளில் 18 விக்கெட்கள் சரிந்தன. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்டத்தில் 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஷிராக் ஜானி 14, சேத்தன் சக்காரியா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 79.4 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Sports in Tamil

Image
ராஞ்சி : இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு7.30 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது.

Sports in Tamil

Image
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் களம் கண்ட அவர் இதன் மூலம் தனது வருகையை கிரிக்கெட் உலகிற்கு தெரிவித்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் உட்பட சில முக்கிய தொடர்களை அவர் மிஸ் செய்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இருந்தபோதும் தனது பிட்னஸை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

Sports in Tamil

Image
ராஞ்சி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊர். இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களுடன் தோனி நீண்ட நேரம் பேசியுள்ளார். அந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரை வென்ற நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

Sports in Tamil

Image
ராஞ்சி: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார் டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்த சந்திப்பின் போது இருவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக். ‘வெகு விரைவில் ஷோலே 2’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

Sports in Tamil

Image
சென்னை : இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்து செல்லும் வகையில் டி.என்.சி.ஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் திறன்களை கண்டறியவும், பந்து வீச்சாளர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

World News

Image
வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில்நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்தின. அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே அணுஆயுத தாக்குதல் ஏற்படும் சூழலைதவிர்த்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள ‘ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். நான் நேசிக்கும் அமெரிக்காவுக்கான போராட்டம்’ என்ற புத்தகம்கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது. அதில் மைக்பாம்பியோ கூறியதாவது: அமெரிக்கா-வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தைக்காக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இரவு, வியட்நாம் தலைநகர் ஹனாய்-ல் தங்கியிருந்தேன்.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அரை இறுதிச் சுற்றில் சானியா-போபண்ணா ஜோடியுடன், பிரிட்டனின் நீல் ஸ்கப்ஸ்கி, அமெரிக்காவின் தேசிரே கிராவ்சிக் ஜோடி மோதியது.

Sports in Tamil

Image
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்திய அணியின் பிரதான பந்து வீச்சாளரான பும்ரா விளையாடாத நிலையில் சிராஜ் அமர்க்களமாக பந்து வீசி இருந்தார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதிக ரன்கள் கொடுக்காமல் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி இருந்தார்.

World News

Image
பியோங்யாங்: மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் அனைவரும் கடுமையான சளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வடகொரியா இதனை கரோனா என்று குறிப்பிடவில்லை.

World News

Image
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், 'கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்' என்பதே” என்றார். ஆப்கானிஸ்தானில் சுமார் 80% சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018 முதல் 2021 வரை இருந்தவர் மைக் பாம்பியோ. தனது அனுபவங்கள் தொடர்பாக இவர் எழுதி சமீபத்தில் வெளியான Never Give an Inch: Fighting for the America I Love எனும் புத்தகத்தில், கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத தாக்குதல் நடத்த இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 29-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார்.

World News

Image
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் நேரிட்டுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தகவல் இல்லை.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் கடன் பிரச்சினையாலும் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின்சார துறையும் பெரும் கடனில் மூழ்கி உள்ளது. இதனால் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. மின் இணைப்புகளில் அதிக முதலீடும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் தேசிய மின் விநியோக மையத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை 7.34 மணிக்கு தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், குவெட்டா உட்பட முக்கிய நகரங்களின் மின் விநியோக லைன்கள் பாதிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தேசிய மின் விநியோக மையத்தில் மின்னழுத்தம் சீரற்று காணப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டதாக விசாரணையில் அதிகாரிகள் கூறுகின்றனர். பெரும் தட்டுப்பாட்டால் எரிபொருள் மற்றும் கேஸ் மூலம் இயங்கும் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் பாகிஸ்தானில் ஏற்படும் மிகப் பெரிய

Sports in Tamil

Image
இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் 2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.தோனி பேட்டிங் மந்தத்தினால் இந்திய அணி தோற்றதையடுத்து ரவி சாஸ்திரி அணி மீட்டிங்கில் தோனியை கடுமையாக எச்சரித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணி தோற்றது பற்றி ரவி சாஸ்திரி கோபம் அடையவில்லை, எம்.எஸ்.தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு போராட்ட குணமே இல்லாமல் போட்டியை தாரை வார்த்ததுதான் ரவிசாஸ்திரியின் கோபம் என்கிறார் ஆர்.ஸ்ரீதர்.

World News

Image
கலிபோர்னியா: அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர். பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவங்கள் நேற்று ஜனவரி 23 நடந்துள்ளன. முன்னதாக கடந்த சனிக்கிழமை கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மீண்டும் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

Sports in Tamil

Image
சென்னை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சவுராஷ்ரா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சவுராஷ்டிரா அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாத தொடக்கத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான உடற்தகுதியை நிருபிக்க வேண்டிய நிலையில் ஜடேஜா உள்ளார். இதற்காகவே சென்னையில் நடைபெற உள்ள ரஞ்சி போட்டியில் அவர், விளையாட உள்ளார். இதையொட்டி நேற்று அவர், தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டார். சுமார் 30 நிமிடங்கள் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட அவர், அடுத்த 30 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம்ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய போது ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சுமார் 5 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட ஜடேஜாவின் உடல் தகுதி முன்னேற்றங்களை தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்றுனர் க

Sports in Tamil

Image
இந்தூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி உள்ளிட்ட பல்வேறு மின் பகிர்மான நிறுவனங்களும் மின் தடை பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவித்தன. குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி தனது ட்விட்டர் பக்கத்தில் "குட்டு நகர் முதல் குவெட்டா நகர் வரையிலான இரண்டு மின் கடத்திகளில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பலோசிஸ்தானின் 22 மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபட்டது. லாகூர், கராச்சியிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 117 பவர் கிரிடுகள் மின் விநியோகம் இல்லாமல் முடங்கியுள்ளத

World News

Image
கலிபோர்னியா: கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், "நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன் நின்றது. அந்த வேனை நாங்கள் சுற்றிவளைக்க முற்பட்டோம். அப்போது அந்த வேனிலிருந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கான் ட்ரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார். நடந்தது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது.