Posts

Showing posts from September, 2022

World News

Image
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சட்டவிரோத இணைப்பு விவகாரம் குறித்து நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதனை இந்தியா புறக்கணித்துள்ளது.

Sports in Tamil

Image
சில்ஹெட் : மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றன. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. 50 ஓவர் வடிவில் இந்தியா 4 முறையும், டி 20 வடிவில் 2 முறையும் இந்தியா கோப்பை வென்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.

Sports in Tamil

Image
இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் போட்டித் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் காயம் அடைந்ததை உறுதிப்படுத்தியுள்ள பிசிசிஐ, உலகக்கோப்பையில் அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்தும் அறிவிக்கவில்லை.இப்போதைக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் முகமது சிராஜை பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவித்துள்ளது.

World News

Image
மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை. முதுகு வலி காரணமாக அவர், களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலியானவர்களில் பலரும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports in Tamil

Image
புதுடெல்லி : முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளார். 28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை.

Sports in Tamil

Image
அகமதாபாத் : 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். போட்டிகள் அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தொடக்க விழா பிரம்மாண்டாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்துகொண்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Sports in Tamil

Image
இந்திய அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடரில் இருந்து விலகுவார் என சொல்லப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக 30 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் பும்ரா. 28 வயதான அவர் மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 120 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் வீசும் யார்க்கரை சர்வதேச கிரிக்கெட் அணிகளின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சிரமப்படுவர். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் அப்படி ஒரு டெலிவரியை அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்சுக்கு வீசி இருந்தார்.

World News

Image
சியோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், “எங்களது பாதுகாப்புத் துறை கண்காணித்ததில் வட கொரியா அதன் தலைநகர் பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது தெரியவந்தது. இந்த ஏவுகணைகள் 360 கிமீ தூரம் செல்லும் தன்மையுடையன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை அன்று இயன் என்ற சூறாவளி கரையைக் கடந்தது. அப்போது மோசமான சேதம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் சுறாக்கள் சில கடலில் இருந்து வீதிகளுக்கு அடித்து வரப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை தொகுத்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் காற்றின் வேகத்தில் சிக்கி சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த சூறாவளி கரையை கடந்தபோது பதிவான மழை மற்றும் காற்றின் வேகத்தை பிரதிபலிக்கும் வகையில் இணையவெளியில் சில வீடியோ காட்சிகள் வலம் வருகின்றன.

World News

Image
தெஹ்ரான்: ஈரானில் மாஷா அமினியின் காயங்களை பதிவு செய்து வெளியிட்ட பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.

World News

Image
டொரன்டோ: கனடா நாடு தனது மக்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிமீ சுற்றளவைத் தவிர்க்கவும். குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளது. இந்த பயண எச்சரிக்கையானது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கனடா நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த கவனமுடன் சென்றுவர வேண்டும் ஏனெனில் அங்கு தற்போதைக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு செல்வதைத் தவிர்க்கவும். மிகுந்த அவசியமின்றி அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
துபாய் : ஐசிசி டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ், ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 801 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை அடைவது இது 2-வது முறையாகும். கடந்த ஆகஸ்ட் மாதமும் அவர், இந்த இடத்தை எட்டியிருந்தார்.

Sports in Tamil

Image
திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 106 ரன்களை எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சஹார் அபாரமாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட் செய்திருந்தனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் அணியின் சூர்யகுமார் யாதவின் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை ஏற்பட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1266 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 926 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 682 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில உள்ளார்.

World News

Image
ரியாத்: சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார். சவுதி அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த அவரை பிரதமராக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக முகமது பின் சல்மானின் சகோதரரான காலித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காலித், துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். உள்துறை அமைச்சராக அப்துல் அஜிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக முகமது பின் அப்துல்லா அல் ஜடான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

World News

Image
தெஹ்ரான் : ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் அதிபரின் மகள் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

World News

Image
அன்காரா: ஹிஜாப்புக்கு எதிராக போராடும் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சியின் போது தனது முடியை வெட்டிக் கொண்டார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.

Sports in Tamil

Image
நியூயார்க் : உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயதான மேக்னஸ் கார்ல்சன் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார். இந்தத் தொடரின் 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான ஹான்ஸ் நீமன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கார்ல்சன். சமீபத்தில் நடைபெற்ற ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் சாம்பியன் பட்டம்வென்றார். இந்த தொடரில் கார்ல்சனும் நீமனும் நேருக்கு மோதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரே ஒரு நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்திலிருந்து விலகினார் கார்ல்சன். இதனால் ஹான்ஸ் நீமன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹான்ஸ்நீமன் விவகாரம் தொடர்பாக முதல்முறையாக வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார் கார்ல்சன். அதில் அவர் கூறியதாவது:

Sports in Tamil

Image
திருவனந்தபுரம் : தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20 ஆட்டம், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இந்தத் தொடரை இந்திய அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். முக்கியமாக இறுதிக்கட்ட பந்து வீச்சு மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.

World News

Image
புதுடெல்லி : பாகிஸ்தானில் சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம் புனெர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.

World News

Image
புதுடெல்லி : சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சில தினங்களாக சுற்றுகின்றன. இது, உண்மையில்லை என்பதை உணர்த்த, வல்லரசு நாடான சீனா அமைதி காத்து வருகிறது. இந்தப் புரளியின் பின்னணியை ஆராய்ந்தால் இது, சீனாவை சீண்டிப் பார்க்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை எனத் தகவல்கள் கிடைக்கின்றன. சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்த செய்திக்கான காரணங்களில் ஒன்றாக, ஜெனிபர் ஜெங் என்பவரது ட்விட்டர் பதிவு இருந்துவிட்டது.

Sports in Tamil

Image
துபாய் : சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தலாம்.

World News

Image
மாஸ்கோ : ரஷ்யாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 7 மாணவர்கள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் இஸவ்ஸ்க் நகரம் உள்ளது. உட்முர்ஷியா மாகாணத்தின் தலைநகரான இதில் சுமார் 6.3 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

World News

Image
புதுடெல்லி : ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடை பெறவுள்ள நினைவு சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசினார். அப்போது, அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Sports in Tamil

Image
சென்னை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 வயதான தீபகே ஹூடா, இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 9 இன்னிங்ஸில் பேட் செய்து 293 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான போட்டியில் இவரும் ஒருவராக உள்ளார். ஆஃப் பிரேக் பவுலரும் கூட.

Sports in Tamil

Image
அடுத்த சில நாட்களில் குஜராத் மாநிலத்தில் தொடங்கவுள்ள 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார் தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இதற்காக அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து குஜராத் வர உள்ளார். இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதன் அவசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். 29 வயதான அவர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியா சார்பில் விளையாடி இருந்தார்.

World News

Image
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கலாசார காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலின் மீது தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இளம் பெண் ஒருவர். ஜாவத் ஹேதரி என்ற அந்த இளம் பெண்ணின் சகோதரர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் ஜாவேத் ஹேதரி மற்றும் சில பெண்கள் திரண்டனர். அப்போது பெண்கள் அனைவரும் நினைவிடத்தில் ரோஜாப்பூக்களை வீசி ஒப்பாரிவைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர். ஜாவேத் மட்டும் ஒரு கத்தரிக்கோலை எடுத்து தனது கூந்தலை கத்தரித்து சகோதரன் நினைவிடத்தின் மீது வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஈரான் பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான மாஷி அலினேஜத் கூறுகையில், கூந்தலை வெட்டி எறிவதால் ஈரான் பெண்கள் தங்களின் சோகத்தையும், கோபத்தையும் அரசுக்கு தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

World News

Image
கொழும்பு: இலங்கையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய 84 போராட்டக்காரர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்றதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலகினார்.

World News

Image
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வதுஆண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது:

Sports in Tamil

Image
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார் அது என்ன என்பதை பார்ப்போம். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் சார்பில் படைக்கப்பட்டுள்ள ஆல் டைம் ரெக்கார்டுகளில் அடங்கும். இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் கோலி. அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராகவும் போற்றப்பட்டு வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனை தடங்களாக அவருக்கு அமைந்துள்ளன.

Sports in Tamil

Image
ஹைதராபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. மூன்றாவது டி20 போட்டியில் 187 ரன்கள் இலக்கை விரட்டி கோப்பையை வென்றுள்ளது இந்தியா. இந்த வெற்றி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சிறப்பானதொரு வெற்றியாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Sports in Tamil

Image
ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் அபாரமான தொடக்கத்தை கொடுத்திருந்தார். டிம் டேவிட் சிறப்பாக ஆட்டத்தை முடித்து கொடுத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.

Sports in Tamil

Image
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில் நெகிழ்ச்சி நிலவியது. கடைசி போட்டியில், 10 ஓவர்களில் வீசி 3 மெய்டன்களுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

World News

Image
தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஈரானில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
தெஹ்ரான் : ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள், “ ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன

World News

Image
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 77வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி பாகிஸ்தான் பிரதார் ஷபாஸ் ஷெரீஃபின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், "பாகிஸ்தான் இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவுடனான சுமுகமான உறவு அது காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை சாத்தியப்படாது" என்று தெரிவித்திருந்தார்.

World News

Image
லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர் களாக வரும் நபர்கள், போலிக்கைகளுடன் வலம் வருவதாகவும், உண்மையான கையில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர் எனவும் இணையத்தில் போட்டோவுடன் கூடிய தகவல்கள் வைரலாக பரவியுள்ளன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின், இளவரசராக இருந்த சார்லஸ், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இயைடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் மெய்க்காப்பாளர்கள் வருகின்றனர். மன்னர் சார்லஸ் பொது மக்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறும் சில போட்டோக்கள் வெளியாயின. அதில் மன்னர் சார்லஸுடன் வரும் மெய்க்காப்பாளர்களின் கை போலிக் கை போல் தெரிகிறது. அந்தப் படத்தை சுட்டிக்காட்டி, ‘டிக்டாக்’ நபர்கள் இஷ்டத்துக்கு தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

World News

Image
கொச்சி: டேட்டா என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவி லிருந்து 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில், கேரளாவைச் சேர்ந்த 30 பேரும் அடங்குவர். இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இந்தியர்கள் தங்களை காப்பாற்ற கோரி வெளியிட்ட வீடியோ மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

World News

Image
டமாஸ்கஸ்: சிரியாவில் படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சத வீதம் சரிவடைந்தது. இதனால் அந்த நாட்டில் லட்சக்கணக் கானோர் வேலையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் வெளிநாடுகளுக்குத் தப்ப முயன்ற படகு சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்தது. இதில் 73 பேர் உயிரிழந்ததாக சிரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஹசன் அல் கபாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 100 முதல் 150 பேர் வரை இருந்ததாகவும், அதில் 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படகில் வந்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். எஞ்சியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

World News

Image
நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் போரை தீவிரப்படுத்தப்போவதாக பகிரங்கமாக தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் போரின் வீச்சு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்யும் பிரச்சினை. இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக போரை நிறுத்திவிட்டு வெறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 2023-ம் ஆண்டு சீசன் போட்டிகள் வழக்கம் போன்று அணியின் சொந்த மைதானம் மற்றும் வெளிமாநில மைதானங்களில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி உறுதி செய்துள்ளார். கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் டி 20 தொடரானது 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கினுள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் தொடரின் முதற்பாதி டெல்லி, அகமதாபாத், மும்பை, சென்னையில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கரோனா தொற்று காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டில் லீக் ஆட்டங்கள் மும்பை, புனேவிலும் பிளே ஆஃப் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடத்தப்பட்டது.

Sports in Tamil

Image
நாக்பூர் : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின்பந்து வீச்சு மோசமாக அமைந்தது.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் போருக்கு ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டதற்கு எதிராக, ரஷ்யாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 30 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதலை தொடங்கி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.

Sports in Tamil

Image
நியூயார்க் : ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதற்கட்ட போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். 15 சுற்றுகள் கொண்ட இந்தத் போட்டியில் 4-வது நாளான நேற்று கடைசி 3 சுற்றுகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தார். ஒரு ஆட்டத்தை டிரா செய்தார். ஒட்டுமொத்தமாக 15 சுற்றில் அர்ஜூன் எரிகைசி 7 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

World News

Image
புதுடெல்லி : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

World News

Image
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.

World News

Image
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் கொள்கைகளை சிறிதும் வெட்கமில்லாமல் ரஷ்யா மீறியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் பைடன் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்தார். ஜோ பைடன் பேசும்போது, “ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷ்யாவை யாரும் அச்சுறுத்தவில்லை. ரஷ்யாதான் இந்த மோதலை நாடியிருக்கிறது.

World News

Image
நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட உரை அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் போருக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்பதோடு, போர் சேதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரினார். கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணொலியில் மட்டுமே நடந்துவந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் இந்த ஆண்டு நேரடியாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இதில் உரையாற்றிய தலைவர்கள் பலரும் ரஷ்ய போருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.