Posts

Showing posts from June, 2022

Sports in Tamil

Image
சென்னை : சென்னை ஓபன் டபிள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18 -ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.1.96 கோடியாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 22 லட்சம் பரிசும் 280 புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பெறும் வீராங்கனை ரூ.15.60 லட்சத்துடன் 180 புள்ளிகளை பெறுவார். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கோப்பையுடன் ரூ.9.47 லட்சம் பரிசுத் தொகையாக பெறும். 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.29 லட்சம் வழங்கப்படும்.

Sports in Tamil

Image
சென்னை : தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் 48-வது மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் கடந்த 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் சென்னை ஆதம்பாக்கம் டிஏவி மெட்ரிக் பள்ளி மாணவன் எஸ்.அவினாஷ் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 100 மீட்டர் பட்டர் பிளை பிரிவிலும் அவினாஷ் தங்கம் வென்று அசத்தினார். இந்தத் தொடரில் 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவினாஷ்.

Sports in Tamil

Image
கோலாலம்பூர் : மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பிட்டயபோர்ன் சைவானை 19-21, 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Sports in Tamil

Image
லண்டன் : இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஷார்டர் ஃபார்மெட் கேப்டன் இயன் மோர்கன். இவரின் ஓய்வை அடுத்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்துவந்த பட்லர், மோர்கன் இல்லாத சமயங்களில் 14 முறையை அணியை வழிநடத்தியுள்ளார். இம்முறை முழுநேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பை பட்லர் ஏற்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள சூழலில், இன்றையப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கான அணி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரோகித்திற்கு பதிலாக மயங்க் அகர்வால் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sports in Tamil

Image
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.

Sports in Tamil

Image
லண்டன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி உள்ளார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்கு அந்த அனுமதியை வழங்கும் வகையில் ஆடை கட்டுப்பாட்டை விம்பிள்டன் நிர்வாக அமைப்பு தளர்த்தியுள்ளதாக தெரிகிறது. டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அதுதான் லெசியா சுரென்கோவுக்காக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sports in Tamil

Image
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் காலே கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னேவுக்கு எதிராக எல்பிடபிள்யூ (LBW) அப்பீலை ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கொண்டனர். ஆனால் வார்னர் மட்டும் அவரை நோக்கி வந்த பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார். இறுதியில் வார்னருக்கு தான் வெற்றி கிடைத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. நேற்று இந்தத் தொடரின் முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது அந்த ரன்களை ஆஸ்திரேலிய அணி டிரையல் செய்து வருகிறது.

World News

Image
மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.

Sports in Tamil

Image
சென்னை : இளையோருக்கான 5-வது தேசிய ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 33 மாநில பிரிவுகளைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து மகளிர் பிரிவில் 12 எடைப் பிரிவிலும், ஆடவர் பிரிவில் 13 எடைப் பிரிவிலும் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில்லோஷினி (சென்னை), பூவிதா (புதுக்கோட்டை), மதுமிதா (திருவள்ளூர்), ஜீவா (புதுக்கோட்டை), ஸ்நேகா (திருச்சி), மாலதி (புதுக்கோட்டை), அனுசுயா (காஞ்சிபுரம்), ஸ்ரீநிதி (சென்னை), எம்.மதுமிதா (திருவள்ளூர்), ஜெயஸ்ரீ (திருவள்ளூர்), அபிநய சரஸ்வதி (திருவள்ளூர்), பிரிஸ்கிலா (கன்னியாகுமரி) ஆகியோர் பல்வேறு எடைப் பிரிவில் களமிறங்குகின்றனர்.

Sports in Tamil

Image
கோலாலம்பூர் : மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

World News

Image
சான்டியாகோ : தென் அமெரிக்க நாடான சிலியில் கான்சார்சியோ இன்டஸ்டிரியல் டி அலிமென்டோஸ் (சியால்) நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் 5,00,000 பெசோஸ் (சிலி நாட்டு கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம்.

World News

Image
சாண்டியாகோ: சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த நிறுவனம் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக முடிவு செய்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சிலி. அந்த நாட்டில் இயங்கி வரும் சியல் (Cial) என்ற நிறுவனத்தில்தான் இது நடந்துள்ளது. கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் அவரது வழக்கமான மாதச் சம்பளத்தை காட்டிலும் 246 மடங்கு கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கு வழக்குகளை அந்நிறுவனம் சரிபார்த்த போதுதான் இந்த தவறு நடைபெற்றுள்ளதை கவனித்துள்ளது. தொடர்ந்து அந்த ஊழியரை தொடர்பு கொண்டுள்ளனர்.

World News

Image
பெர்லின்: "புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது" என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், "ரஷ்ய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால். அவர் அப்படி இல்லை... எனினும் அவர் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார்.

Sports in Tamil

Image
டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. அழுத்தம் நிறைந்த அந்த ஓவரை இந்திய அணிக்காக வீசி இருந்தார் இளம் வீரர் உம்ரான் மாலிக். அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விளக்கம் அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தினார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதில் கடைசி போட்டியில் ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றிருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடி கொண்டிருந்த சமயம். அந்த ஓவரை இந்திய அணி சார்பில் உம்ரான் மாலிக் வீசி வெற்றி பெற செய்தார்.

World News

Image
டமாஸ்கஸ் : சிரியாவில் அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை தரப்பில், "சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டை, அல்-கய்தாவுடன் தொடர்புடைய குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபு ஹமாஸ் அல் ஏமனியை மையமாக கொண்டு இருந்தது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற அபு ஹமாஸ் மீது எங்கள் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
அபுதாபி : ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரம் அபுதாபி சென்றார். அந்நாட்டின் மரபுப்படி, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் விமானநிலையத்துக்கு வந்து, உலகத் தலைவர்களை வரவேற்பது வழக்கம். ஆனால், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, மரபுகளை உடைத்து, நேரடியாக விமானநிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரு தலைவர்களும் ஆரத்தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அந்நாட்டின் அரச குடும்பத்தினரும் விமானநிலையத்துக்கு வந்திருந்தனர்.

World News

Image
முனிச் : ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Sports in Tamil

Image
டப்லின் : அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. 228 ரன்கள் டார்கெட்டை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. பவுல் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்ன் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை வழக்கம் போல் புவனேஷ்வர் குமார் தொடங்கினார். அயர்லாந்து அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்டிர்லிங் அந்த ஓவரை எதிர்கொண்டார். சந்தித்த முதல் ஆறு பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து அதிரடியாக ரன்கள் வேட்டையை தொடங்கி வைத்தார்.

World News

Image
அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 40 பேர் சடலமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Sports in Tamil

Image
டப்ளின் : இந்தியா – அயர்லாந்து அணிகள் 2-வது டி 20 ஆட்டத்தில் டப்ளின் நகரில் உள்ள மலாஹைட் மைதானத்தில் இன்று இரவு 9 மணிக்கு மோதுகின்றன. இரு அணிகள் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டம் மழை காரணமாக 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து 12 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தது.

Sports in Tamil

Image
புதுடெல்லி : இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

World News

Image
காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ம்தேதி காலை 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்துக்கு 1,150 பேர் உயிரிழந்ததாகவும் 1,600 பேர் காயம் அடைந்ததாகவும் தலிபான்ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

World News

Image
முனிச் : பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, உக்ரைன் விவகாரம் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் ஜி7 மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றார். முதல் நாளில் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்றார்.

World News

Image
அகாபா : ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்தது 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டி கொண்டுசெல்லும் போது விழுந்ததில் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானது. விஷ வாயு கசிந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sports in Tamil

Image
பாரீஸ்: உலக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. உலக வில்வித்தைப் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின. இந்திய அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணி 5-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. - பிடிஐ

World News

Image
முனிச்: உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த, அந்நாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று தொடங்கி 28-ம் தேதிவரை நடக்கிறது. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன.

Sports in Tamil

Image
டப்லின்: அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடியிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை குறுக்கீடு காரணமாக ஒவ்வொரு அணிக்கும் தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது.

Sports in Tamil

Image
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி லீசெஸ்டர்ஷையருக்கு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

Sports in Tamil

Image
நெல்லை: லைக்கா கோவை கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. திண்டுக்கல் அணிக்காக ஹரி நிஷாந்த் மற்றும் விஷால் வைத்யா சிறப்பாக பேட் செய்திருந்தனர். அந்த அணி இமாலய இலக்கை இந்த போட்டியில் சேஸ் செய்து வென்றுள்ளது. நடப்பு டிஎன்பிஎல் தொடர் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் ஞாயிறு (ஜூன் 26) அன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட் செய்த கோவை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டியது திண்டுக்கல் அணி.

Sports in Tamil

Image
பெங்களூரு: 2021-22 சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மத்திய பிரதேசம். அந்த அணி முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடர்களில் முதன்மையானது ரஞ்சிக் கோப்பை. இந்த தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தங்களது திறனை இந்த போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர். அதில் மத்திய பிரதேச அணி வீரர்களின் கை கொஞ்சம் ஓங்கி இருந்தது.

Sports in Tamil

Image
பாரீஸ் : உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 தொடர் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி பிரான்ஸின் ஜீன் போல்ச், சோஃபி டோடெமன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அபிஷேக், ஜோதி ஜோடி 152-149 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

Sports in Tamil

Image
டப்ளின் : இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 9 மணி அளவில் டப்ளின் நகரில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளதால் அயர்லாந்து தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார்.

World News

Image
மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

Sports in Tamil

Image
லண்டன்: 'அது ஒரு முட்டாள்தனமான ஆட்டம்' என்று நிக்கோலஸின் சர்ச்சை அவுட் குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

World News

Image
வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்புச் சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அதே வேளையில் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பலவும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. வெறும் ஆதரவு என்ற வார்த்தைகளைத் தாண்டி சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று, பெண்கள் கருக்கலைப்பு செய்ய அண்டை நாடுகளுக்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு, பயணப்படி என எல்லாம் தருவதாக அறிவித்துள்ளன. வழக்கு பின்னணி: கடந்த 1973 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று 1973-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து. ஆனால், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 50 ஆண்டு காலத்திறகுப் பிறகு கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது,

Sports in Tamil

Image
டிஎன்பிஎல் தொடரில் மன்கட் முறையில் எதிரணியினர் வசம் தனது விக்கெட்டை இழந்தார் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர் நாராயண் ஜெகதீசன். விக்கெட்டை இழந்த விரக்தியில் ஆபாசமான சைகையை காட்டி இருந்தார் அவர். இப்போது தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். நடப்பு டிஎன்பிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது சேப்பாக்.

World News

Image
அங்காரா: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துருக்கி, ஜமால் கஷோகி படுகொலையை மறந்து சவுதியின் உதவியை கைகுலுக்கி வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

World News

Image
பிரேசிலியா: மூளை ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலில் அழகிப் பட்டம் வென்றவரான கிளேய்சி கார்ரியா உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 27. பிரேசிலைச் சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் பிரேசில்’ பட்டம் வென்றவர்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரித்தது,

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது,

Sports in Tamil

Image
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் திருநெல்வேலியில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இம்முறை அங்கு போட்டிகள் நடத்தப்படவில்லை.

Sports in Tamil

Image
சென்னை : இந்திய புட்சால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான புட்சால் கால்பந்து தொடர் சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் சென்னை அணி 2-வது இடம் பிடித்தது. 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் சென்னை அணி லீக் சுற்றில் மேற்கு மகாராஷ்டிரா, தெலங்கானா, மும்பை அணிகளை தோற்கடித்திருந்தது.

Sports in Tamil

Image
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார் அவர். 37 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்களின் வீரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் அவர். அதற்கு காரணம் அவரது அபார பேட்டிங் திறன். 15-வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இப்போது ஐசிசி பேட்டிங் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Sports in Tamil

Image
கொல்கத்தா: இந்திய ஆடவர் கால்பந்து அணிக்கு ஊக்கம் கொடுக்க ஜோதிடருக்கு 16 லட்ச ரூபாய் கொடுத்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பணி அமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஆடவர் கால்பந்து அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கோப்பைக்கான தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மூன்றாவது தகுதி சுற்றின் மூலம் உறுதி செய்தது.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.

Sports in Tamil

Image
லண்டன்: கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தான் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் மல்லையா. "சிறந்த நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி" எனவும் அதற்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். பல்லாயிரம் பேர் இந்தப் படத்தை லைக் செய்துள்ளனர். கெயில் அதை ரீ-ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பல தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு நிதி ஆதாய குற்றங்கள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதை எதிர்கொள்ளும் வகையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து அவரை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசாங்கம். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளராக அறியப்படுகிறார்.