Posts

Showing posts from May, 2022

Sports in Tamil

Image
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் காலிறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார்.

World News

Image
காத்மாண்டு : விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது. நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
ஜகார்த்தா : ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று இந்தியா – தென்கொரியா மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர்.

Sports in Tamil

Image
சென்னை : தேசிய ஜூனியர் டென்னிகாய்ட் போட்டியில் சிறுமியர் பிரிவில் ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமியைச் சேர்ந்த எஸ்.மகேஷ்வரி தங்கப் பதக்கம் வென்றார். 39-வது தேசிய ஜூனியர் டென்னிகாய்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தத் தொடரில் தமிழகம், ஹரியாணா, தெலங்கனா உள்ளிட்ட 18 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிறுமியர் பிரிவில் தமிழகத்தின் எஸ்.மகேஷ்வரி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், சக மாநிலத்தை சேர்ந்த தக் ஷிதாவை 5-21, 21-15, 22-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், ரமிதா, ஸ்ரேயா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அனா நீல்சன், எம்மா கோச், ரிக்கே மேங் இப்சன் ஆகியோரை கொண்ட டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் தோற்கடித்து தங்க பதக்கம் வென்றது.

World News

Image
புதுடெல்லி : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து அரிசி, பால் பவுடர், மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் இருந்து பல தவணைகளாக பெட்ரோல், டீசலும் அனுப்பப்பட்டது. கடந்த 21-ம் தேதி 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில், இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்தக் கப்பல் நேற்று முன்தினம் மாலை கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. இதை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

World News

Image
காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 22 பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிறு (மே 29) காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள ஊழியர்கள் என 22 பேர் இருந்தனர்.

World News

Image
புற்றுநோய் முற்றிவிட்டதால் ரஷ்ய அதிபர் புதின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Sports in Tamil

Image
ஏதென்ஸ் : கிரீஸ் நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கப் பதக்கம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் வெனிசெலியா-சானியா2022 தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.95 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் பொம்மெரி (7.73மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், அதே நாட்டைச் சேர்ந்த எர்வான்கோனேட் (7.71 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

World News

Image
பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகின் மிகப் பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்படுகிறது. வழக்கம் போல் அருங்காட்சியகத்துக்கு நேற்று முன்தினம் பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்தனர். சக்கர நாற்காலியில் மூதாட்டி போல் வேடமிட்டு வந்த நபர் ஒருவர் திடீரென குதித்து எழுந்து, தான் அணிந்திருந்த ‘விக்’கை தூக்கி வீசினார். மோனலிசா ஓவியத்தை அவர் உடைக்க முயன்றார். ஆனால் குண்டு துளைக்காத கண்ணாடியால் அந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டிருந்ததால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த கேக்கை ஓவியத்தின் கண்ணாடி மீது வீசி மெழுகினார்.

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியது குஜராத் அணி. இந்த சீசனுக்காக ஏலம் முடிந்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் குஜராத்அணியை திறம்பட வழிநடத்தி கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இறுதிப் போட்டியில் முக்கியமான பேட்ஸ்மேன்களான ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் அணியை சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார். இதில் இருந்து அந்த அணியால் மீளமுடியாமல் போனது. இந்த தொடரின் வாயிலாக மீண்டும் முழுமையான ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

World News

Image
காத்மாண்டு : விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியில் இருந்து இதுவரை 21 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள ஊழியர்கள் என 22 பேர் இருந்தனர்.

Sports in Tamil

Image
பாரிஸ்: நாளை நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் உடன் ரஃபேல் நடால் விளையாடுகிறார். இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள 59-வது போட்டி இது. நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்களில் இதுவும் ஒன்று. இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் விளையாடி இருந்தனர். அதில் ஜோகோவிச் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடால், இதற்கு முன்னர் 13 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவர்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உட்பட முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை விரிவாக பார்ப்போம். கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது ஐபிஎல் 2022. 15-வது ஐபிஎல் சீசனான இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் என வெவ்வேறு இடங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதில் பிளே-ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. சுமார் 237-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். அனைவரும் இணைந்து ஆயிரம் சிக்ஸர்களுக்கு மேல் நடப்பு சீசனில் பதிவு செய்துள்ளனர்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த அணி. நடப்பு சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது குஜராத் அணி. தனியொரு வீரரை நம்பி இருக்காமல் ஆடும் லெவனில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக அந்த அணிக்காக ஜொலித்துள்ளனர். கில், சாஹா, ஹர்திக், மேத்யூ வேட், டேவிட் மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், ஷமி, யாஷ் தயாள், ஃபெர்குசன், சாய்கிஷோர் என ஒவ்வொருவருமே அந்த அணியின் வெற்றியில் அங்கம் வகித்துள்ளனர்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நடப்பு சீசனின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங் தேர்வு செய்தார். மறுபக்கம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முதலில் பந்துவீச ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

World News

Image
மாஸ்கோ : உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி அறிமுக சீசனான 2008-ல் ஷேன் வார்ன் தலைமையில் மகுடம் சூடியிருந்தது. தற்போது 2-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் அதீத பார்மில் உள்ளார். 4 சதங்கள், 4 அரை சதங்களுடன் 824 ரன்களை வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

World News

Image
காத்மாண்டு: பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

World News

Image
சென்னை : பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு பாதுகாப்புடன் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாக்களையும் அவர்கள் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக பார்த்து வருகின்றன. காஷ்மீர் எல்லையில் நிலவும் தீவிரவாத தாக்குதல்கள் உலக நாடுகளையே அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இயங்கி வரும் நிலையில், அங்கு சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு ஆண்டுதோறும், அரசு பாதுகாப்புடன் அச்சமின்றி மாரியம்மன் கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். வரும் 12-ம் தேதி அக்கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

Sports in Tamil

Image
பெங்களூரு : ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் குவாலிபையர் - 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் சதத்தால், பெங்களூரு இம்முறையும் கோப்பையின்றி வெளியேறியது. வழக்கத்தைவிட இந்த சீசனில் பெங்களூருவுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. மும்பை டெல்லி போட்டியிலே ரசிகர்களின் ஆதரவு பெங்களூரு அணிக்கு எப்படி இருந்தது என்பது தெரிந்தது.

World News

Image
தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அறிவுசார் குறைபாடுடைய நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சிங்கப்பூரில் இளைஞர்கள் பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்களும் பதிவு செய்யப்பட்டன. நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இறுதியில் கடந்த மாதம் 27-ஆம்

World News

Image
ரோம்: இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி'அன்னா. இவரை டிக் டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த மே 24-ஆம் தேதி தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அன்னா தனது 76 வயதான காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும், தாங்கள் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Sports in Tamil

Image
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 195-ம் நிலை வீரரான சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வதுசுற்றுக்கு முன்னேறினார்.

Sports in Tamil

Image
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனிடம் தோல்வியைத் தழுவினார். இணைய வழியில் நடைபெற்ற இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார் பிரக்ஞானந்தா. அதனால், அவரது ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். குறிப்பாக, அவருக்கு எதிராக விளையாடியவர்களே அவரது திறனை பாராட்டியுள்ளனர். அதில் ஒருவர் சீன வீரர் டிங் லிரன். மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் நிகழ்வின் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

World News

Image
டோக்கியோ : ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலகளவில் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜப்பானும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.

World News

Image
கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. இதனையடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

World News

Image
டெக்சாஸ்: அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மறைந்தார். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய ஆசிரியை இம்ரா கார்சியாவும் கொல்லப்பட்டார். அவர் 4ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்து வந்தார்.

Sports in Tamil

Image
ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி முதல் ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்த நிலையில் 2-வது ஆட்டத்தில் 2-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் தனது 2-வதுஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் குறைந்தது 16 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது.

Sports in Tamil

Image
பாரீஸ் : கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 300-வது வெற்றியை பதிவு செய்தார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 67-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sports in Tamil

Image
அகமதாபாத் : ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-ல் இன்று இரவு 7.30 அணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி தகுதி சுற்று 1 போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றில் ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் லக்னோவை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 29-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தும்.

Sports in Tamil

Image
புதுடெல்லி : கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனை அவர், தனது 3-வது முயற்சியில் தாண்டியிருந்தார். முதல் இரு முயற்சியிலும் ஸ்ரீசங்கர் முறையே 7.88 மற்றும் 7.71 மீட்டர் நீளமும் 4-வது முயற்சியில் 7.79 மீட்டர் நீளமும் தாண்டியிருந்தார். கடைசி இரு முயற்சியும் பவுலாகியிருந்தது. உலக உள்ளரங்க விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுவீடனின் தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் ஜூல்ஸ் பொம்மெரி 8.17 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

World News

Image
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப் என்ற பெயரில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி வளாகத்துக்கு நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் பயந்து போன மாணவர்கள் அலறியடித்தபடி வெளியே தப்பியோடினர். அந்த இளைஞர் சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் இறந்தார்.

World News

Image
டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

World News

Image
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இலங்கையில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து மகிந்த ராஜக்பச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது வீட்டை மக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால், அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டார். அதனால், 5 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக கடந்த 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாடுகளுடன் பேசி,இலங்கைக்கு எரிபொருள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். அரசியல் சாசனத்திலும் சீர்திருத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இடைக்கால பட்ஜெட் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

Sports in Tamil

Image
சென்னை : மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இணையம் வழி நடைபெறும் இத்தொடரின் அரை இறுதியில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்று டிரா ஆன நிலையில் அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி கண்டார். 3-வது சுற்று டிராவில் முடிய பரபரப்பான 4-வது சுற்றில் அனிஷ் கிரி வெற்றி பெற்றார். இதனால் ஆட்டம் 2-2 என்றானது.

Sports in Tamil

Image
கொல்கத்தா : ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது குஜராத் டைட்டன்ஸ். போட்டி முடிவடைந்ததும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “நிறைய பேர் டேவிட் மில்லரின் திறன் முடிந்தது என்றே கருதினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவரை ஏலத்தில் எடுத்ததில் இருந்தே அவர், வெற்றி தேடிக்கொடுப்பவர்தான்.

Sports in Tamil

Image
கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது பெங்களூரு அணி. கேஎல் ராகுல் சிறப்பாக ஆடிய போதிலும், கடைசி கட்டத்தில் அவரை வீழ்த்தியதுடன் தொடர்ந்து இரண்டு விக்கெட்கள் எடுத்து லக்னோ கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹேசில்வுட். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கடந்த போட்டியில் செஞ்சுரி அடித்த குயிண்டன் டி காக் இப்போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து வெளியேறினார். ஒன்டவுனில் மனன் வோராவும் நிலைக்க தவறினார். 19 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். எனினும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடினார் கேஎல் ராகுல்.

Sports in Tamil

Image
கொல்கத்தா: நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் பெங்களூரு வீரர் ரஜத் பட்டிதார் (Rajat Patidar). இந்த போட்டியில் அவர் சதம் பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

Sports in Tamil

Image
ஜகார்த்தா : ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பான் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி சார்பில் கவாபே கோஷி இரு கோல்களும் (40 மற்றும் 56-வது நிமிடம்), நாகயோஷி கென் (15-வது நிமிடம்), ஒகா ரயோமா (49-வது நிமிடம்), யமஷகி கோஜி (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

World News

Image
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.

Sports in Tamil

Image
சென்னை : செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அரை இறுதிக்கு முன்னேறினார். இணையம் வழியாக நடைபெற்று வரும் இந்தத் போட்டியில் பிரக்ஞானந்தா, கால் இறுதி சுற்றில் சீனாவின் வெய் யி-யை எதிர்த்து விளையாடினார். இதில் பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அரை இறுதி சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார்.

Sports in Tamil

Image
கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா, மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். சுழலால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷித் கான் பேட்டிங் கிலும் வலுசேர்ப்பவராக உருமாற் றம் கண்டுள்ளார். டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா ஆகியோரது அதிரடியும் பலம் சேர்ப்பதாக உள்ளது. எனினும் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில்லின் பார்ம் சற்று கவலை அளிப்பதாக உள்ளது. அதேவேளையில் ரித்திமான் சாஹா, கடந்த சில ஆட்டங்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

World News

Image
டாவோஸ் : பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:

World News

Image
ஜெட்டா : கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா பரவல் அதிகரித்தபோது உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தன. அத்துடன் மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்தையும் நிறுத்தின. இதுகுறித்து சவுதி அரேபியா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு சவுதி அரேபியாவில் இருந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

World News

Image
புதுடெல்லி : அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை (ஐபிஇஎப்) உருவாக்கி உள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று முன்தினம் டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்கிய அவருக்கு இந்திய வம்சாவழியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

World News

Image
டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கு ஏராளமான ஜப்பானிய குழந்தைகள், இந்திய தேசிய கொடிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று வரவேற்றனர். அப்போது ஜப்பானிய சிறுவன் வைசுகி இந்தியில் பேசினான். அவனது இந்தி புலமையை பார்த்து வியந்த பிரதமர் மோடி, "வாவ், எங்கு இந்தி கற்றாய், அழகாக பேசுகிறாயே" என்று வினவினார். அந்த சிறுவனோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.

Sports in Tamil

Image
ஜகார்த்தா : ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

World News

Image
புதுடெல்லி : இந்தியாவில் ஜவுளி முதல் ஆட்டோ மொபைல் துறை வரை தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை நிலவுவதாகவும், முதலீடு செய்ய வருமாறும் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று டோக்கியோவில் அந்நாட்டின் பெரிய தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.

World News

Image
ஜெனீவா: 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் Monkeypox (குரங்கு காய்ச்சல்) பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தம் 92 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. 28 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.