Posts

Showing posts from April, 2022

World News

Image
லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர், நாடாளுமன்றத்தில் இருமுறை தனது செல்போனில் ஆபாசப்படங்கள் பார்த்ததை ஒப்புக்கொண்டு தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்துள்ளர். இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி நீல் பாரிஷ், அந்நாட்டு இவர் ஹவுஸ் ஆப் காமன்ஸில் ஆபாசப்படம் பார்த்த குற்றச்சாட்டு காரணமாக வெள்ளிக்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

World News

Image
லண்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார்.

World News

Image
சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு. அப்படி பட்ட வெள்ளை நிற மயில் ஒன்று சிலையின் உச்சியில் இருந்து பறந்து வந்து தரையிரங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sports in Tamil

Image
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். படிக்கல் 15 ரன்களில் அவுட்டானார்.

Sports in Tamil

Image
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்து 158 ரன்களை எடுத்தது. நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். படிக்கல் 15 ரன்களில் அவுட்டானார்.

Sports in Tamil

Image
மும்பை: உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி நிறுவனத்தை வாங்கி விடுங்கள் என எலான் மஸ்கிற்கு ட்வீட் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்க உள்ளார். இந்த செய்தி உலகளவில் வைரலானது. தொடர்ந்து அவர் கோகோ கோலா நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அவரிடம் ஸ்விகி நிறுவனத்தை வாங்கி விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். அதற்கான காரணத்தையும் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் கில்.

Sports in Tamil

Image
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் என்பதை அவருடன் பேசியதன் மூலம் தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்துள்ளார் இயன் பிஷப். நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அணியின் பிரதான வீரர்கள் சோபிக்க தவறியதே மும்பையின் இந்த மோசமான நிலைக்கு காரணமாக உள்ளது. பவுலிங், பேட்டிங் என எதுவுமே மும்பை அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்.

World News

Image
புதுடெல்லி: உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது .உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் பங்கு 50 சதவீதமாகும். இதுமட்டுமின்றி உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா சூரிய காந்தி எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதமாக உள்ளது.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் 15-வது சீசனின் 41-வது லீக் ஆட்டம் மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கொல்கத்தா அணியில் ஷிரேயஸ் 42, நிதிஷ் ராணா 57, ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியின் குல்தீப் 4, முஸ்டாபிசுர் 3 விக்கெட்கள் சாய்த்தனர். டெல்லி அணி சார்பில் வார்னர் 42, லலித் 22 ரன்கள் சேர்த்தனர். இறுதிக் கட்டத்தில் அக்சர் பட்டேல் 24, ரோவ்மேன் பாவெல் 33, ஷர்துல் 8 ரன்கள் எடுத்து வெற்றி தேடித் தந்தனர்.

World News

Image
கீவ்: "என்னையும் எனது குடும்பத்தாரையும் கொலை செய்யும் வகையில் கீவ் நகருக்குள் ரஷ்ய அதிரடிப் படையினர் பாராசூட் மூலம் இறங்கினர். அன்றய இரவு எங்களைப் பாதுகாக்க ராணுவம் மேற்கொண்ட முயற்சியெல்லாம் அதற்கு முன்னால் நான் சினிமாவில் மட்டுமே பார்த்திருந்தேன்" என்று அந்நாட்டு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 2 மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் ஒரு வாரத்திலேயே வீழும் என்று பேசப்பட்ட நிலையில், அமெரிக்காவின் இடைவிடாத ராணுவ உபகரண உதவியால் 2 மாதங்களைக் கடந்தும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

World News

Image
கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச, அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. அதிபர் கோத்தபயராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சபதவி விலக வேண்டும். இல்லையெனில் மே 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

World News

Image
பெய்ஜிங்: கரோனா தொற்று பரவல் காரணமாக சீனா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மீண்டும் செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியமாணவர்கள் சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்விகளை படித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள். கரோனா வைரஸ்தொற்று பரவல் காரணமாகஇந்திய மாணவர்கள் சீனாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினர்.

Sports in Tamil

Image
புனே: பஞ்சாப் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனில் ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன் காரணமாக லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மூன்றாவது ஓவரில் ரபாடா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ராகுல்.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி. நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி. அவரது மோசமான பார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். நடப்பு சீசனில் ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார் கோலி. இதில் இரண்டு முறை டக் அவுட்டாகி உள்ளார். இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ளார் கங்குலி.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பார்க் மாகாணத்தின் தலைநகர் மசார்-இ-ஷரிபில் வியாழக்கிழமை இரண்டு வாகனங்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர் . பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

Sports in Tamil

Image
மும்பை: சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோல்வி கண்டோம் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். 15-வது ஐபிஎல் சீசனின் 40-வதுலீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடியஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி கண் டது.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஜெர்சியை ஏலம் விட்டு, அதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் அணி. நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. நோ-பால் சர்ச்சை, கரோனா பரவல் என அசாதாரண சூழலை கடந்து வந்துள்ளது டெல்லி அணி. லீக் போட்டிகளின் இரண்டாவது பாதியில் தங்களது அணி ஆதிக்கத்தை செலுத்தும் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங். இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறது டெல்லி.

Sports in Tamil

Image
மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கோபத்தில் கொதித்தெழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவரது கோபத்திற்கு காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இரண்டு அணிகளும் கடைசி ஓவரில் தலா 25 ரன்கள் சேர்த்திருந்தன. குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் சார்பில் மார்க்கோ ஜான்சன் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ராகுல் திவாட்டியா ஒரு சிக்சரும், ரஷீத் கான் மூன்று சிக்சரும் விளாசி தங்கள் அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

Sports in Tamil

Image
ஆன்ஃபீல்ட்: கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான்தான் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டு கால்பந்து வீரர் முகமது சாலா. 2021 - 22 பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்துள்ள வீரரும் அவர் தான். 29 வயதான சாலா, கடந்த 2017 முதல் லிவர்பூல் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் அந்த அணிக்காக 117 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 8 கோல்களை பதிவு செய்துள்ளார். இது தவிர லிவர்பூல் அணி நடப்பு சீசனில் கோல் பதிவு செய்ய 13 முறை உறுதுணையாக இருந்துள்ளார் சாலா. இந்நிலையில், உலகின் சிறந்த வீரர் என அவர் தன்னை சொல்லியுள்ளார்.

World News

Image
கராச்சி பல்கலைகழகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷாரி பலுச் என்ர அந்தப் பெண் படித்து பட்டம் வாங்கியவரும் கூட. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைகழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி, சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலியானவர்களில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.

World News

Image
மரியுபோல்: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து தனி ஒருவராக 200 பேரை காப்பாற்றியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த கிளப் ஓனர் ஒருவர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு இடையே மரியுபோலிலிருந்து 200 பேரை காப்பாற்றி இருக்கிறார் உக்ரைன் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் ஒருவர்.

World News

Image
லண்டன்: லண்டனில் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 150 குழந்தைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மரணம் எதுவும் பதிவாகவில்லை.

Sports in Tamil

Image
புனே : புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி, 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.

World News

Image
பாங்காக் : மியான்மரில் தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஆங் சான் சூகி. இவருடைய தேசிய ஜனநாயக பேரவை கட்சி 2015-ல் ஆட்சியைப் பிடித்தது. எனினும், சட்ட ரீதியாக அவர் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. பிரதமருக்கு இணையான ஆலோசகர் பதவியில் நீடித்தார். பின்னர் 2020-ல் நடந்த தேர்தலிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது. எனினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. சூகி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

Sports in Tamil

Image
மும்பை : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 196 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சுப்மன் கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் பார்ம் அவுட் இன்றும் தொடர்ந்தது. எனினும், முந்தையை போட்டிகளைவிட இன்று சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நீடித்ததுடன், கில் மற்றும் சஹா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். 22 ரன்கள் எடுத்திருந்த கில், உம்ரான் மாலிக் பந்தில் கிளீன் போலடாக்கி முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்.

Sports in Tamil

Image
சென்னை : தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக காவல் துறை அணி, பாண்டிச்சேரியை வீழ்த்தியது. செயிண்ட் பால் – சார்லஸ் அப்பாதுரை நினைவு தென் மண்டல ஆடவருக்கான ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள எஸ்டிஏடி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக காவல்துறை – லே பாண்டிச்சேரி அணிகள் மோதின. இதில் தமிழக காவல்துறை 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக காவல்துறை அணி சார்பில் எம்.விஜய், எஸ்.ராஜா ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.

Sports in Tamil

Image
மணிலா : ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியானது தாய்லாந்தின் அபிலுக் கேடராஹோங், நாச்சனோன் துலாமோக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

Sports in Tamil

Image
ஹாங்சோ : சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான அழைப்பை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகள் ஏற்க மறுத்துள்ளன. சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் 10 முதல் 25-ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஓசியானியா நாடுகளில் இருந்து சுமார் 300 விளையாட்டு வீரர்கள் மற்றும் 150 பயிற்சியாளர்களுக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது.

Sports in Tamil

Image
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமில்லை என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் தொடரில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒபன் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

Sports in Tamil

Image
மும்பை : ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை துரத்திய நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அம்பதி ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய போதிலும் சென்னை அணி வெற்றிக்கோட்டை எட்ட முடியாமல் போனது. அம்பதி ராயுடு ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய நிலையில் மறு முனையில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடியது வெற்றியை வெகுவாக பாதித்தது. 12.4-வது ஓவரில் களமிறங்கிய ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று 16 பந்துகளில் 21 ரன்களே சேர்த்தார். 18-வது ஓவரிலேயே சென்னை அணி வெற்றியை நழுவவிடத் தொடங்கியது.

Sports in Tamil

Image
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் எதிரணியின் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் விளாசி அதிசயிக்க வைத்து வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ‘டிகே’ என சுருக்கமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக். சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி, தினேஷ் கார்த்திக் சந்திக்காத சரிவுகளே இல்லை. 2004-ல் சர்வதேச கிரிக்கெட் டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை தனது இடத்தை அணியில் தக்க வைக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க 2007-ல் அவருக்கு திருமணம் ஆனது. ஆனால் சில வருடங்களிலேயே திருமண பந்தத்தில் முறிவு ஏற்பட்டது. இது அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்த ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி கோப்பையில் தமிழக அணியின் கேப்டன் பதவியை இழந்தார். தன்னை சுற்றியுள்ள சூழல் எதிர்மறையாக உருவெடுக்க உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதைகூட நிறுத்தினார். இதைக் கண்ட அவருடைய பயிற்றுனர், தினேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கே நேரடியாக சென்று, மனக்குழப்பத்தில் இருந்து மீண்டுவர உத்வேகம் அளித்தார்.

World News

Image
வாஷிங்டன் : இந்தியாவில் முதலீடு செய்யுமாறு செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியாவில் முதலீட்டு வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசி வருகிறார். சென்ற வாரம் ஃபெடக்ஸ், மாஸ்டர்கார்டு ஆகிய நிறுவனங்களில் சிஇஓ-க்களை சந்தித்துப் பேசினார்.

Sports in Tamil

Image
மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி கண்டது. 145 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு இம்முறை பாப் டு பிளஸிஸ் உடன் விராட் கோலி ஓப்பனிங் செய்தார். கடந்த இரண்டு போட்டிகளாக டக் அவுட் ஆன கோலி இம்முறை 9 ரன்களில் நடையைக்கட்டினார். இதன்பின் வந்த ராஜத் படிதார் உடன் இணைந்த டு பிளஸிஸ் சில ஓவர்களே தாக்குப்பிடித்தார். டு பிளஸிஸ் 23 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் சென் ஓவரில் அவுட் ஆனார்.

World News

Image
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை எலான் மஸ்க் வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால். மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றவர். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அமெரிக்க குடியுரிமை பெற்று குடியேறினார்.

Sports in Tamil

Image
மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்து போயுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன். நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்காக சென்னை அணி இறுதி வரை போராடி தோல்வியை தழுவியது. கடந்த போட்டியை போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி வெற்றியை தேடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இறுதி ஓவரில் அவர் விளையாடினார். இருந்தும் வெற்றிக்கோட்டை அவரால் இந்த முறை கடக்க முடியவில்லை.

World News

Image
வாஷிங்டன்: ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார். அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.

Sports in Tamil

Image
சென்னை : டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஃபேக்டரி ரேசிங் குழு எனும் பெருமை பெற்ற டிவிஎஸ் ரேஸிங்கின் டைட்டில் பார்ட்னர் ஆகியுள்ளது பெட்ரோனாஸ். இந்த இரு நிறுவனமும் இணைந்து ரேஸ் குழுவை உருவாக்க உள்ளன. இந்த சீசனில், புதிதாகப் பெயர் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேஸிங் அணிக்கு தனது அதிகத் திறன் வாய்ந்த என்ஜின் ஆயிலான பெட்ரோனாஸ் ஸ்பிரிண்டாவை விநியோகிக்கவுள்ளது பெட்ரோனாஸ். உள்ளூர் அளவிலான அனைத்து சாலை பந்தயம், சூப்பர்கிராஸ், ரேலி வடிவ பந்தயங்களில் இக்குழு பங்கேற்கவுள்ளது. அது மட்டுமல்லாமல், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உடன் வர்த்தகச் செயல்பாடு சார்ந்த கூட்டுறவையும் மேற்கொண்டுள்ளது பெட்ரோனாஸ் லூப்ரிகேண்ட்ஸ் இண்டர்நேஷனல். இதன் மூலம் பெட்ரோனாஸ் டிவிஎஸ் ட்ரூ4 ரேஸ்ப்ரோ எனும் என்ஜின் ஆயில் வரும் மே மாதம் முதல் இந்தியா முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

World News

Image
பாரிஸ் : பிரான்ஸ் அதிபராக 2-வது முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இமானுவல் மேக்ரான் (44). பிரான்ஸில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லா ரிபப்ளிக் என் மார்ச் கட்சி வெற்றி பெற்றது. கட்சி தலைவர் இமானுவல் மேக்ரான் (அப்போது 39), இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்தார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடியவுள்ள நிலையில், அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் மேக்ரான், நேஷனல் ரேலி கட்சித் தலைவர் மரின் லீ பென் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை.

World News

Image
பெய்ஜிங் : கரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

Sports in Tamil

Image
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. 188 ரன்கள் இலக்கை நோக்கி இன்னிங்ஸை துவக்கிய சென்னை அணிக்கு ஓப்பனிங் ஜோடி இந்தமுறையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஓவரிலேயே உத்தப்பா ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்து இறங்கிய சான்டனர், ஷிவம் துபே ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாடும் அம்பதி ராயுடுவும் கூட்டணி சேர்ந்தனர்.

Sports in Tamil

Image
மும்பை: 'பல ஜாம்பவான்கள் இதனைக் கடந்து வந்துள்ளனர்' என தொடர் தோல்வி குறித்து ட்வீட் செய்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. 'வாழ்ந்து கெட்ட குடும்பம்' என ஒரு சொலவடை உண்டு. அதுபோன்றதொரு நிலையில்தான் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை. இருந்தாலும் நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. வரிசையாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது மும்பை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஃபார்ம் அவுட்டாகியுள்ளது மும்பை.

Sports in Tamil

Image
மும்பை: 'அவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளம்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்துள்ளார் இர்பான் பதான். இருவரும் இந்திய அணிக்காக இணைந்து விளையாடியவர்கள். நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து, அணியில் அனுபவ வீரராக விளையாடி வருகிறார் தோனி. அவர் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதி ஓவரில் நான்கு பந்துகளில் 16 ரன்களை சேர்த்து அசத்தியிருந்தார். அவரது அந்த அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், தற்போது தோனியை புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்.

World News

Image
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Sports in Tamil

Image
"நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார், இந்திய நீச்சல் வீரர் வேதாந்த். அண்மையில் டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தார் அவர். 16 வயதான வேதாந்த், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தேசத்திற்கே பெருமை தேடி தந்தார். பள்ளியில் நீச்சல் பழகிய அவருக்கு அந்த விளையாட்டின் மீது ஈர்ப்பு வந்துள்ளது. தொடர்ந்து அதில் தொழில்முறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்காக பதக்கம் வென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

World News

Image
ஸ்டாக்ஹோம்: ராணுவத்துக்கான செலவுகளை மேற்கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது. இது, இதுவரை கண்டிராத உச்சபட்ச செலவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் ராணுவத்துகாக அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4 மற்றும் 5-ஆம் இடங்களை முறையே பிரிட்டனும், ரஷ்யாவும் பிடித்துள்ளன. இந்த ஐந்து நாடுகளும் சேர்ந்த உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினங்களில் 68 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன.

World News

Image
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவது வழக்கம். இதில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிட்டனர். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50%க்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில் முதல் இரு இடங்களைப் பெறுவோர் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று (ஏப். 24-ம் தேதி) நடந்தது. இத்தேர்தலுக்காக புதுச்சேரி, தமிழகம், கேரளத்தில் 4,564 பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற வாக்காளர்களும் ஏற்கெனவே வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய 2 ஆம் சுற்று தேர்தலில் மேக்ரான் 58% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரியான லீ பென் 42% வாக்குகளும் பெற்றனர்.

World News

Image
அபூஜா: நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் வறுமை, வேலையின்மை போன்ற காரணங் களால் சட்டவிரோதமாக பல்வேறுஇடங்களில் எண்ணெய் சுரங்கங்கள், ஆலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை.

World News

Image
கெய்ரோ: பஹ்ரைனைச் சேர்ந்த காலில் அல் டேலாமி கட்டிடக்கலை நிபுணர். ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் இவரது கார் போக்குவரத்து சிக்னலில் நிற்கிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். உடனடியாக அவரது கார் முன்பு தோன்றிய சிலர், ‘கவனியுங்கள் உங்கள் முன்பு ஒரு ஹீரோ உள்ளார்’ என அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை காண்பிக்கின்றனர். ‘காலில் அல் டேலாமி, உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ எனவும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் நின்றிருந்த லாரியில் ‘காலில் அல் டேலாமி ஹீரோ’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. கார் ஜன்னல் ஓரம் நின்றிருந்தவர்கள் டேலாமியின் புகைப்படத்தைக் காண்பித்தனர். ‘நீங்கள் மிகச்சிறந்த மனிதர்’ என கோஷமிட்டனர். இதை எல்லாம் பார்த்த அவர் ஆச்சரியப்படுகிறார். காரிலிருந்து கீழே இறங்கிய அவர், “உங்கள் பாராட்டைப் பெற நான் தகுதியானவன் அல்ல. இதற்கு அல்லா தான் காரணம்” என்றார்.

World News

Image
கொழும்பு: இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை0 ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

World News

Image
காபூல்: ஆப்கானிஸ்தானில் டிக் டாக், பப்ஜி போன்ற செயலிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற செயலிகளால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதாகக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான ஹமீது கர்சாயும் நாட்டைவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், ஆட்சி தலிபான்கள் வசம் வீழ்ந்தது.