Posts

Showing posts from June, 2021

Sports in Tamil

Image
விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னாவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ், ஆடவர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பெயர்களை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகி கூறும்போது, “அர்ஜூனா விருதுக்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின்பெயர்கள் பரிந்துரைக்கப்பட வில்லை. கேல் ரத்னாவுக்கு மிதாலியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள் ளது” என்றார்.

Sports in Tamil

Image
யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் சுவீடன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது உக்ரைன். கிளாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் உக்ரைன் முதல் கோலை அடித்தது. ஆண்ட்ரி யர்மோலென்கோ உதவியுடன் பந்தை பெற்ற ஒலெக்சாண்டர் ஜின்கென்கோ பாக்ஸின் இடது புறத்தில் உதைத்த பந்து கோல் வலையின் வலது ஓரத்தை துளைக்க உக்ரைன் 1-0 என முன்னிலை பெற்றது. 43-வது நிமிடத்தில் சுவீடன் அணி இதற்கு பதிலடி கொடுத்தது.

World News

Image
கரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் எனத் திரிந்து உருமாறி அச்சுறுத்தி வரும் நிலையில், அத்தனை வகையான டெல்டா திரிபுகளுக்கு எதிராகவும் ஸ்புட்னிக் V தடுப்பூசி 90% திறம்பட செயல்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவில்ஷீல்டு, ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகளும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளிலும் பயன்பாட்டில் உள்ளன. சீனாவிலும் அதன் நட்பு நாடுகளிலும் சைனோவாக் வழங்கப்படுகிறது.

World News

Image
வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

World News

Image
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின் கரோனா தடுப்பூசி வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்தது.

World News

Image
தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் நீதிமன்றத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறலாம். அடுத்தடுத்த திருமணங்களுக்கும் இதேபோல அனுமதி பெற முடியும். தன்பாலின திருமணத்துக்கும் தென்னாப்பிரிக்காவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

Sports in Tamil

Image
கடந்த வாரம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தின் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு கைகொடுத்தவர் முகமது ஷமி. அவரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 1990-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா என்ற இடத்தில் பிறந்தவர் முகமது ஷமி. ஷமியின் அப்பா தவுசிப் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இதனால் சிறு வயதில் தனது அப்பாவிடம் பயிற்சி பெற்ற முகமது ஷமி, 15 வயது முதல் பத்ருதீன் சித்திக் என்பவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். சிறுவயதில் சிறப்பாக பந்துவீசினாலும், உத்தரப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தில் இருந்துவந்த சில அரசியல் காரணங்களால் முகமது ஷமிக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி மேற்கு வங்கத்துக்கு சென்ற முகமது ஷமி, அம்மாநில அணியில் இடம் பிடித்தார்.

Sports in Tamil

Image
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. குயாபா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில்அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பப்பு கோமஸ் கோல் அடித்தார். 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பையும் 41-வது நிமிடத்தில் அகுரோ அடித்த பாஸையும் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 3-0 என முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் பொலிவியாவின் சாவேத்ரா கோல் அடித்தார்.

Sports in Tamil

Image
யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி. புக்கரஸ்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 15-வதுநிமிடத்தில் ஸ்டீவன் ஜூபர் அடித்த கிராஸை தலையால் முட்டி கோலாக மாற்றினார் சுவிட்சர்லாந்தின் ஹாரிஸ் செஃபெரோவிக். இதனால் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 55-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அருமையான இந்த வாய்ப்பை ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் கோலாக மாற்றத் தவறினார். இதன் பின்னர் பிரான்ஸ் அணி இரட்டை பதிலடி கொடுத்தது. 57 மற்றும் 59-வது நிமிடங்களில் கரீம் பென்சீமா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

World News

Image
12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சினோவாக் கரோனா தடுப்பூசி செலுத்த இந்தோனேசிய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருத்துவ அமைப்பு கூறும்போது, “ இந்தோனேசியாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீனாவின் சினோவாக் கரோனா தடுப்பூசியைச் செலுத்த பரிந்துரை செய்கிறோம். இந்தோனேசியாவில் அஸ்ட்ராஜெனகா, சினோபார்ம் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது சினோவாக் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
முதல் முறையாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியைச் சந்தித்தது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டனாகி இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோப்பை ஒன்றையும் விராட் கோலியால் வெல்ல முடியாமல் போய்விட்டது. 1975ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் யார்? சீனிவாஸ் வெங்கட்ராகவன்: 1975இல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல, 1979இல் நடைபெற்ற இரண்டாம் உலகக் கோப்பைத் தொடருக்கும் இந்தியாவின் கேப்டனாக இருந்தவர். இரண்டு தொடர்களிலுமே பெயரளவில் விளையாடி லீக் சுற்றோடு காணாமல் போனது இந்திய அணி.

World News

Image
இருவேறு கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்போது அவை கரோனா வைரஸை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஏற்கெனவே கூறியுள்ளார்.

World News

Image
லண்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “லண்டனின் எலிபேண்ட் & கேஸ்டல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்த வணிக வளாகங்கள், நான்கு கார்கள், டெலிபோன் பாக்ஸ் ஆகியவை எரிந்து சாம்பலாகின.

Sports in Tamil

Image
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்: உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், 1877-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ஆண்களுக்கான பிரிவில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. பின்னாளில் 1884-ம் ஆண்டுமுதல் பெண்கள் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புல்தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இதுவாகும். இம் மைதானத்தில் உள்ள புற்கள் 8 மில்லிமீட்டர் உயரத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

World News

Image
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெஃபான் கூறும்போது, “என்னைப் பிரதமர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சபாநாயகரைக் கேட்டுக்கொள்கிறேன். கரோனா சூழலில் சுவீடனில் மீண்டும் தேர்தலை நடத்த முடியாது. எனவே, நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

World News

Image
தென் ஆப்பிரிக்காவில் மூன்றாம் அலை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா கூறும்போது, ''அடுத்த 14 நாட்களுக்கு உள் அரங்கம் மற்றும் வெளி அரங்க நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன. நாம் இரண்டு அலைகளைக் கடந்தோம். இப்போது மூன்றாம் அலையை எதிர்கொண்டுள்ளோம். இது பெரிய சவால். தொற்றுநோய்ப் பரவல் பேரிழப்பைத் தரும்'' என்றார்.

World News

Image
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரிட்டனில் பரவும் டெல்டா கரோனா வைரஸ் காரணமாக அங்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,876 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகி உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

World News

Image
புதுச்சேரியில் 82 நாட்களுக்குப் பிறகு 200க்குக் கீழ் கரோனா ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.3 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் உச்சகட்டமாக மே 11-ம் தேதி ஒரே நாளில் 2,049 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உட்பட அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.

World News

Image
உலகம் முழுவதும் காதலர் தினத்தை விதவிதமான வகையில் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்தனர் உக்ரைனைச் சேர்ந்த ஒரு தம்பதி. கணவனும் மனைவியும் கைகளை ஒரு சங்கிலியால் பிணைத்து, மூன்று மாதங்கள் ஒன்றாகவே வாழ்ந்து, உக்ரைன் நாட்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். 33 வயது கார் விற்பனையாளர் அலெக்சாண்டர் கட்லேயும், 29 வயது அழகுக்கலை நிபுணர் விக்டோரியா புஸ்டோவிடோவாவும் மீடியாக்களின் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 14 அன்று தங்கள் கைகளைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டனர். இந்தச் செய்தி உக்ரைன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. 24 மணி நேரமும் அவர்கள் ஒன்றாகவே இருந்தனர். சங்கிலியால் பிணைத்திருக்கும் கைகளால் தங்களின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சவாலாக இருக்கிறது என்பதைச் சமூக வலைதளங்களில் தெரிவித்துக்கொண்டேயிருந்தனர்.

Sports in Tamil

Image
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார். உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் தீபிகா, கோமாலிக்கா, அங்கிதா குழு மெக்சிகோவை 5 -1 என்ற செட் கணக்கில் வென்றது.

World News

Image
உலக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்க முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து அமெரிக்காவை 2-ம் இடத்துக்கு இந்தியா தள்ளியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

World News

Image
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

Sports in Tamil

Image
யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இத்தாலி அணி. யூரோ கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி - ஆஸ்திரியா அணிகள் மோதின. 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் டேவிட் அலபா தலையால் முட்டிய பந்தை கோல்கம்பத்துக்கு மிக அருகே நின்ற மார்கோ அர்னாடோவிக் கோல் வலைக்குள் திணித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. நிர்ண யிக்கப்பட்ட 90 நிமிடங்களுக்குள் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

Sports in Tamil

Image
உலகின் பண்டையகால விளையாட்டுகளில் ஒன்றாக நீச்சல் உள்ளது. கி.மு. 2500 ஆண்டுக்கு முன்பிருந்தே எகிப்து, கிரேக்கம், ரோமானிய கலாச்சாரத்தில் நீச்சல் விளையாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும், கிரேக்கம் மற்றும் ரோம் நாடுகளில் சிறுவர்களுக்கு இளவயது பாடங்களில் ஒன்றாக நீச்சல் இருந்துள்ளது. இப்படி பன்னெடுங்காலமாக நீச்சல் இருந்தாலும், இதில் சர்வதேச அளவிலான போட்டிகள் 19-ம் நூற்றாண்டில்தான் நடக்கத் தொடங்கியுள்ளன.

World News

Image
மலேசியாவில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மலேசியா அரசு வெளியிட்ட அறிக்கையில், “ மலேசியாவில் வருகின்ற திங்களுடன் ஊரடங்கு நிறைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

World News

Image
பாலிவுட் படங்களை பிரதி எடுப்பதை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் இயக்குநர்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் இம்ரான் கான் பேசும்போது, “ தவறு முதலில் பாலிவுட் படங்களை பிரதி எடுப்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தை எடுக்காமல் மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தை திரைப்படமாக எடுக்கிறோம். பாலிவுட் படங்களை பிரதி எடுப்பதை நிறுத்துஙகள்.

World News

Image
ஜப்பானில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில், “ ஜப்பானில் கரோனா நான்காம் அலை காரணமாக மே மாதத்தில் கரோனா அதிகரித்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கரோனா குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஜப்பான் அரசு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது.

Sports in Tamil

Image
ஒரு நாட்டையே ஆளும் அளவுக்கு கிரிக்கெட் வீரர்களால் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் இம்ரான் கான். இவரது அப்பா ஒரு பொறியாளராக இருந்ததால், வசதியான சூழலில் வளர்ந்தார். தனது 9-வது வயதில், ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர், தனது 16-வது வயது முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1971-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த அவர், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகளால், அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார்.

World News

Image
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸே அதிகம் தொற்று தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும்போது, “ டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதை நன்கு அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் டெல்டா வைரஸ்தான் அதிகம் தொற்று தன்மை கொண்டது. 85 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போடதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது. தளர்வுகளை அறிவிப்பதால் உலகம் முழுவதும் தொற்று அதிகரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறேம்

World News

Image
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டில் சர்ச்சையாகி இருக்கிறது. இது அந்நாட்டு அதிபர் ஜேர் போல்சொனோரோவுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து அந்நாட்டு சுகாதார மையம் தரப்பில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கிறோம். முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

World News

Image
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,655 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21, 665 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மட்டும் 8, 475 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 54 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.

World News

Image
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுவது காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

World News

Image
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத் மாகாணத்தில் முதன் முதலாக புல்லட் ரயிலை சீனா நேற்று இயக்கியது. சீனாவை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என அந்நாடு உரிமைக் கொண்டாடி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்துக்குள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்புவது போன்ற செயல்களிலும் சீனா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. ஆனால், இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது இந்த விவகாரத்தில் இருந்து சீனா சற்று ஒதுங்கியே உள்ளது.

Sports in Tamil

Image
1983-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் மொகீந்தர் அமர்நாத். இத்தொடரின் இறுதிப் போட்டியில் 26 ரன்களை அடித்ததுடன் 3 விக்கெட்களையும் எடுத்த அமர்நாத், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டி மட்டுமின்றி அந்த உலகக் கோப்பை தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர்நாத், 237 ரன்களைக் குவித்ததுடன் 8 விக்கெட்களையும் கைப்பற்றினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவரான லாலா அமர்நாத்தின் மகன்தான் மொகீந்தர் அமர்நாத். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானின் மகனாக இருந்தபோதிலும், மொகீந்தர் அமர்நாத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பிறகே 1969-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டார். இதில் சிறப்பாக ஆடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு 1976-ம் ஆண்டில்தான் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்தது.

Sports in Tamil

Image
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு உருகுவே முன்னேறியது. பிரேசிலின் குயாபா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் பொலியாவுக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் வீரர் ரோட்ரிகோ ரமல்லோ பந்தை கோல்கம்பத்துக்கு மேலே அடித்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 40-வது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் பாக்ஸ் பகுதிக்குள் அபாயகரமான வகையிலான கிராஸை அடித்தார். இதை பொலிவியா வீரர் ஏர் குயின்டெரோஸ் இடைமறித்தார். அப்போது பந்து பொலிவியா கோல்கீப்பர் கார்லோஸ் லம்பே காலில் பட்டு சுயகோலானது. இதனால் முதல் பாதியில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

Sports in Tamil

Image
யூரோ கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் - டென்மார்க் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த வேல்ஸ் 3 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்திருந்தது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிராவில் முடித்திருந்த வேல்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தியிருந்தது. கடைசி ஆட்டத்தில் இத்தாலியிடம் 1-0 என தோல்வி கண்டிருந்தது.

World News

Image
அமெரிக்க ராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டி, ‘பர்ப்பிள் ஹார்ட்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படையில் இடம்பெற்றவர் ஆஸ்கியோலா ஆஸி ஃப்ளெட்சர். இவருக்கான அங்கீகாரம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸி ஃப்ளெட்சரின் 99-வது வயதில் வழங்கப்பட்டிருக்கிறது! இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகள் சார்பாக அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃப்ளெட்சரும் ஒருவர். 1944ஆம் ஆண்டு நேசப் படைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, ஃப்ளெட்சர் இருந்த வாகனம் ஜெர்மன் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் வாகனத்தின் ஓட்டுநர் கொல்லப்பட்டார். வாகனத்தில் இருந்த மற்ற வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஃப்ளெட்சருக்கும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்து, நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி ‘பர்ப்பிள் ஹார்ட்’ விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. ஆனால், இனப் பாகுபாடு காரணமாக ஃப்ளெட்சருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை.

Sports in Tamil

Image
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. வியாழக்கிழமை நடந்த இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, முதல் போட்டியைப் போலவே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

Sports in Tamil

Image
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்க இனி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இறுதிப் போட்டி நடக்க வேண்டும் என்கிற இந்திய கேப்டன் விராட் கோலியின் யோசனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஏற்க மறுத்துள்ளார். முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் சந்தித்த இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

World News

Image
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ மியாமி கடற்கரை ஒரத்தில் இருந்த 12 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. விபத்துக்குள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 100-க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக மீட்புப் பணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Sports in Tamil

Image
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ப்ளேயிங் லெவனில் ஜடேஜாவை விளையாட வைத்தது தவறு என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

World News

Image
இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதற்குக் காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த இரு தினங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலுக்கு இங்கு புதிதாகப் பரவி வரும் டெல்டா வைரஸே காரணம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
மெக்காஃபி ஆன்டிவைரஸ் நிறுவனத்தின் நிறுவனரும் மென்பொருள் துறையின் முன்னோடியுமான ஜான் டேவிட் மெக்காஃபி ஸ்பெயின் சிறையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கணினி பாதுகாப்பு ஆன்டிவைரஸ் தயாரிப்பில் முன்னோடியான மெக்காஃபி நிறுவனத்தின் நிறுவனர் மெக்காஃபி (75). இவர்2014-லிருந்து 2018 வரை அமெரிக்காவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், இவர் 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் ஜூன் 25, 1983. இந்த நாளில்தான் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் இந்திய அணி சென்றது. இத்தொடரின் முதல் லீக் போட்டியிலேயே முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்த, உலகமே அதைப்பற்றி பரபரப்பாக பேசியது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்த இந்திய அணி தடதடவென முன்னேறி இறுதி ஆட்டம் வரை வந்தது.

Sports in Tamil

Image
நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனைக் கட்டி அணைத்து இந்திய கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்தார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆறாம் நாள் வரை நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களும் இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் வெற்றி இலக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்துக்கு 139 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது.

World News

Image
கரோனா வைரஸ் ஆல்ஃபா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிவரும் நிலையில், அனைத்து வகையான உருமாறிய கரோனா வைரஸ்களையும் ஸ்புட்னிக் V தடுப்பூசி எதிர்கொள்ளும் என அதனைத் தயாரித்த ரஷ்யாவின் தி காமாலேயா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

World News

Image
உலகம் முழுவதும் பரவி வரும் டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறும்போது, “டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணி. இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் மற்றும் நான்காம் நாள் கைவிடப்பட்டது.

Sports in Tamil

Image
மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்ததாக உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் கால்பந்து வீரர் நெய்மர். வருவாயிலும் அவர்களுக்கு இணையாக உள்ள நெய்மர், ஆண்டொன்றுக்கு 325 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணி தங்கப்பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்த நெய்மர், இப்போது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியிலும் பிரேசில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். நம் நாட்டில் சிறுவர்கள் எப்படி தெருக்களில் கிரிக்கெட் விளையாடுகிறார்களோ, அதேபோல் பிரேசில் நாட்டில் சிறுவர்கள் தெருக்களில் கால்பந்து ஆடுவது வழக்கம். அப்படி தெருக்களில் கால்பந்து ஆட ஆரம்பித்த நெய்மர் ஜூனியர், இன்று சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரது அப்பாவும் முன்னாள் கால்பந்து வீரருமான நெய்மர் சீனியர் கொடுத்த பயிற்சி.