Posts

Showing posts from February, 2023

Sports in Tamil

Image
இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை. 30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.

World News

Image
வாஷிங்டன் : தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

Sports in Tamil

Image
இந்தூர் : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் 3-வது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது.

Sports in Tamil

Image
இந்தூரில் புதன்கிழமை இந்தியா மாற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தவிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் கடந்த போட்டியில் படுமோசமான ஒரு ஸ்வீப் ஷாட்டை ஆடப்போய் பெரிய சரிவுக்கு வித்திட்டது குறித்து ‘மூளை மழுங்கிப்போன நிலையில் ஆடிவிட்டேன்’ என சுய விமர்சனம் செய்து கொண்டுள்ளார். டெல்லியில் ஸ்வீப் ஷாட்களில் ஆட்டமிழந்த 6 வீரர்களில் ஸ்மித்தும் ஒருவர். அதுவும் இவர் ஆட்டமிழந்த பிறகு 28 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து தோல்வி கண்டது. பொதுவாக நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் குழிப்பிட்ச்கள், டாக்டரிங் என்று சொல்லப்படும் வேண்டுமென்றே திருத்தப்படும் பிட்ச்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்று. மேலும் பிட்சை விமர்சனம் செய்தால் இருவருக்கும் ஒரே பிட்ச்தானே என்று கூறுபவர்கள் ஏன் அங்கு போடப்படும் கிரீன் டாப் பிட்சும் இருவருக்கும்தானே என்பதை மறந்து விட்டு பேசுகின்றனர்.

World News

Image
பியாங்யாங் : வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார். வட கொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.

Sports in Tamil

Image
டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் வெற்றி பெறுவது 2வது முறையாக இன்று வெலிங்டனில் நடந்தது. ஆம்! 258 ரன்கள் இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 48/1 என்று தொடங்கி 257 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்த டெஸ்ட் வெற்றி மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து சமன் செய்தது. வாக்னர் வீசிய லெக் சைடு ஷார்ட் பிட்ச் பந்தை ஆடப்போய் ஜேம்ஸ் ஆண்டர்சன் லேசாகத் தொட பிளண்டெல் உச்ச கட்ட பிரஷரில் அருமையான கேட்சைப் பிடிக்க இங்கிலாந்துக்கு வரலாற்று வெற்றியை மறுத்தது நியூஸிலாந்து. ஆம்! இந்த டெஸ்ட்டிலும் இங்கிலாந்து வென்றிருந்தால், நாம் நேற்று குறிப்பிட்டது போல் வெளிநாட்டு மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து வென்ற வரலாற்றை 108 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து செய்திருக்கும். அது தடுக்கப்பட்டது. இங்கிலாந்தின் பாஸ் பால் அணுகுமுறை பிசுபிசுத்துப் போனது, ஆனால் இந்தத் தோல்வியை பற்றி இங்கிலாந்து கவலைப்படாது. நாம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருதலைப்பட்சமான பிட்ச், டெஸ்ட் போட்டிகளை பார்த்து வரும் நிலையில் உண்மையான கிரிக்கெட்டின் வெற்றியாக இந்த நியூஸிலாந்தின் வெற்றியைப் பார்க்க வேண்டியுள்ளது.

World News

Image
டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினிஎன்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணிய வில்லை எனக் கூறி அவரை கைதுசெய்த போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sports in Tamil

Image
பாரிஸ் : சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார். 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 35 வயதான ஜோகோவிச், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 378 வாரங்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இந்த வகையில் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாக ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் ஜோகோவிச்.

Sports in Tamil

Image
நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஃபிஃபா அமைப்பு விருது அறிவித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டி போட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றார்.

World News

Image
ஒட்டாவா: சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்தது.இணைய உலகில் சாட்ஜிபிடிபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய பதிலை உடனடியாக சாட்ஜிபிடி வழங்குகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி, கனடாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கிரேக் ஐசன்பெர்க் கனடாவில் வடி வமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு சேவை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்குரிய பணத்தை வழங்காமல் தொடர்பைத் துண் டித்துள்ளது. இந்நிலையில் கிரேக் ஐசன்பெர்க் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தனது நிறுவனத்துக்கு வர வேண்டிய 109,500 டாலர் (ரூ.90 லட்சம்) பணத்தை உடனடியாக பெற்றுள்ளார்.

World News

Image
கராச்சி: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தீவிர கடன் சுமை உள்ளது. இதனால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடி யாத நிலையில் நாட்டின் பொரு ளாதாரம் உள்ளது.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டன் பதவி தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுல் அதிக ரன்களைக் குவிக்காமல் ஆட்டமிழந்து வருகிறார். அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Sports in Tamil

Image
கேப்டவுன்: ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று கேப்டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத் மூனி 74, கார்ட்னர் 29, ஹீலி 18 ரன்கள் எடுத்தனர்.

Sports in Tamil

Image
சென்னை: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் ‘லிட் ஃபார் லைஃப்’நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றுவர்.

Sports in Tamil

Image
லண்டன்: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடும் EFL கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட் அணி. இந்த தொடர் ஸ்பான்ஸர்ஷிப் காரணமாக Carabao Cup என இப்போது அறியப்படுகிறது. லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நியூகேஸ்டல் யுனைடெட் அணிக்கு எதிரான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெல்லும் ஆறாவது சாம்பியன் பட்டம் அது. கடைசியாக 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.

Sports in Tamil

Image
கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார் அந்த அணியின் பெத் மூனி.

Sports in Tamil

Image
வெலிங்டன் : நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 138 ரன்களுக்கு 7 விக்கெட்களை தாரைவார்த்தது. பாலோ-ஆனை தவிர்க்க அந்த அணிக்கு மேற்கொண்டு 97 ரன்கள் தேவையாக உள்ளது. வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 குவித்தது. ஸாக்கிராவ்லி 2, ஆலி போப் 10, பென்டக்கெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஜோடி அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹாரி புரூக் 184, ஜோ ரூட் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Sports in Tamil

Image
மிகவும் ஜாலியாக பேசுவதிலும் நகைச்சுவையாக சில விஷயங்களை அணுகுவதிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவர். ஆஸ்திரேலிய அணி 2-0 என்று டெஸ்ட்டில் தோற்றதோடு மொத்தமே 2 டெஸ்ட்களும் 5 நாட்களில் முடிந்து போனது. ஸ்ரீகாந்த் ஸ்டைலில் கூற வேண்டுமானால், ஆஸ்திரேலியா 2 டெஸ்ட்களில் பொட்டலம் கட்டப்பட்டனர். நாக்பூரிலும் டெல்லியிலும் குட்லெந்த் ஸ்பாட்களில் தண்ணீரே காட்டாத வறண்ட, பந்துகள் தாழ்வாகவும் குழியில் பட்டு எம்பும் விதமாகவும் போடப்பட்ட பிட்சில் ‘பொட்டலம்’ ஆகியுள்ளனர். நாக்பூரில் படுமோசமாக 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு காலியாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர். டெல்லியில் கொஞ்சம் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி இந்திய அணியையும் தங்கள் ஸ்கோருக்கு அருகேயே சுருட்டி ஃபைட் கொடுத்தனர்.

Sports in Tamil

Image
நியூசிலாந்து: வெலிங்டனில் நடைபெறும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியது நியூஸிலாந்து. இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்களில் டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி 7 விக்கெட்டுகளை 138 ரன்களுக்கு இழந்து பாலோ ஆனைத் தவிர்க்க திணறி வருகின்றது. இங்கிலாந்து தன் புதிய பிராண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வருகின்றது. எதிரணி அடிக்கும் ரன்களெல்லாம் கணக்கல்ல நாங்கள் சாத்தி எடுப்போம் என்ற ஆக்ரோஷ பேட்டிங்கும் பிறகு திடீர் டிக்ளேர், பென் ஸ்டோக்ஸின் அற்புதமான பந்து வீச்சு மாற்றம் களவியூகம், மற்றும் நெருக்கடி கொடுக்கும் அட்டாகாச கேப்டன்சியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றி வருகின்றது. 21/3 லிருந்து ஹாரி புரூக், ஜோ ரூட் மூலம் அதிரடி 302 ரன்கள் கூட்டணி அமைத்தது, இன்று ஹாரி புரூக் வந்தவுடனேயே 186 ரன்களில் ஹென்றி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது முழங்கை அருகே பட்டு தெறித்த பந்தை ஹென்றி அபாரமாகப் பிடித்தார்.

World News

Image
புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான நட்பை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக டொனால்ட் லு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிக நீண்ட கால நட்பு இருக்கிறது. பனிப்போர் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான, மிக நீண்ட நட்பு இருந்து வருகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகிறோம்.

Sports in Tamil

Image
எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் விராட்கோலி கலந்து கொண்டார். அதில் அவர் தோனியுடனான தனது நெருக்கம் பற்றி பேசினார்.

World News

Image
இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகபாகிஸ்தான் அமைச்சர்கள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமான பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர்கள், அரசு ஆலோசகர்களின் செலவுகளை 15 சதவீத அளவுக்கு குறைத்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீதப்படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

Sports in Tamil

Image
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.

World News

Image
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம்,பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்துள்ளது.

Sports in Tamil

Image
வேலூர்: இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என விஐடி பல்கலையில் நடைபெற்ற ரிவேரா-23 கலை திருவிழாவில் கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-23 கலை திருவிழா நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் கலை திருவிழாவை பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘விஐடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

World News

Image
நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

World News

Image
வாஷிங்டன்: உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30% வேகப்படுத்த உதவும் இ-பேண்டேஜ் என்றமின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்திஅவற்றில் ஒன்றுக்கு புதிய இ-பேண்டேஜை பொருத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில்,குறிப்பிட்ட நாளில் இ-பேண்டேஜ் பொருத்தப்பட்ட எலி வேகமாககுணமடைந்தது தெரியவந்துள்ளது.

Sports in Tamil

Image
மெல்பர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 1-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி 9-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதன் முதல்ஆட்டம் மார்ச் 17-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 19-ம் தேதி விசாகப்பட்டிணத்திலும் கடைசி மற்றும் 3-வது ஆட்டம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளன.

World News

Image
நியூயார்க் : சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் குற்றம் சாட்டியு்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

World News

Image
இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த இரண்டு சகோதரர்களின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருத்தது. இறந்தவர்களில் ஒருவருக்கு அவர் இறப்பதற்கு சற்று முன்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மாதிரியான அறுவை சிகிச்சைகள் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை கிழக்குப் பகுதிகளில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “பண்டைய நகரமான டெல் மெகிடோவில் உள்ள ஒரு கல்லறையின் அகழ்வாராய்ச்சியின் போது கிமு 1550 முதல் கிமு 1450 வரையிலான வெண்கல காலத்தில் வாழ்ந்த சகோதரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Sports in Tamil

Image
மும்பை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். “இது அனைத்தும் நிச்சயம் மாறும். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த இரண்டுக்கும் இடையே ஆசிய கோப்பை தொடரும் உள்ளது. அந்த பட்டமும் இந்தியாவுக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும்.

World News

Image
வாஷிங்டன்: அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி மிகப் பெரிய தவற்றை ரஷ்யா செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத இருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் அணு ஆயுத (நியூ ஸ்டார்ட்) ஒப்பந்தத்தை கடந்த 2010-ம் ஆண்டு செக் குடியரசில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் உலகளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்பட்டது.

World News

Image
தெஹ்ரான்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு நிலம் நன்கொடையாக வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரான் இமாம் கொமெய்னி ஃபத்வா அறக்கட்டளையின் செயலாளர் முகமது இஸ்மாயில் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் ஒரு கை மற்றும் கண்களை செயலிழக்கச் செய்து முஸ்லிம்களை மகிழ்வித்த அந்த அமெரிக்க இளைஞனுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ருஷ்டி வாழும்போதே இறந்துவிட்டார். இந்த துணிச்சலான செயலை கவுரவிக்கும் வகையில், சுமார் 1,000 சதுர மீட்டர் விவசாய நிலம் அந்த நபருக்கோ அல்லது அவரது சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்கோ நன்கொடையாக வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அமைதியை உறுதி செய்து உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. இதுவரை உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் பங்கு கொள்ளாமல் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என இந்தியாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sports in Tamil

Image
இந்திய டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த சானியா மிர்சா, டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஹைதராபாத்தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு சிறுவயது முதலே டென்னிஸ் மீது அலாதிப்பிரியம். சிறுமியாக இருக்கும்போதே டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். 18 வயதில் அதாவது 2003-ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். பல போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியாவின் அசைக்க முடியாத டென்னிஸ் நட்சத்திரம் என்ற அடையாளத்தை ஈட்டினார். 2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்திய டென்னிஸின் அடையாளமாக, நம்பிக்கையாக வலம் வந்தார்.

World News

Image
பியாங்யாங்: மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவீன உலகின் மர்ம தேசம் என்றால் அது வட கொரியா என்று கூறினாலும் மிகையாகாது. அங்கு எல்லாமே ரகசியம் தான். உலகமே கரோனா பரவலால் கதறிய காலத்திலும் கூட வட கொரியாவின் நிலை பற்றி எதுவும் வெளியே வரவில்லை. கரோன உயிர்ப் பலிகள் குறித்து எந்த செய்தியும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தடுப்பூசியில் கூட அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக எல்லைகளை மூடினர். இதனால் சீனாவுடனான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Sports in Tamil

Image
கராச்சி: இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். பாகிஸ்தானில் திட்டமிட்டபடி ஆசியக் கோப்பை தொடர் நடைபெறுமா, அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற சூழல் இருக்கும் நிலையில் பாபர் இதனை தெரிவித்துள்ளார். 28 வயதான அவர் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,813 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் குவித்திருந்தார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அதன் காரணமாக 2022-ம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை அவர் வென்றிருந்தார்.

Sports in Tamil

Image
சிட்னி: அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

World News

Image
பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊடகங்கள், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்யப் பயணம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் அமையும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. சீன அரசின் தலைமை பிரதிநிதி வாங் யீ தற்போது மாஸ்கோவில் இருக்கிறார், இன்று (புதன்கிழமை) ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sports in Tamil

Image
சிட்னி : தோல்வியின் பிடியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உதவத் தயார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் தெரிவித்தார். பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Sports in Tamil

Image
போர்ட் எலிஸபெத் : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார். ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

World News

Image
டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்ப இடிபாடுகளில் பிறந்த பெண் குழந்தை அவர்களது உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. அக்குழந்தைக்கு பூகம்பத்தில் இறந்த தாயின் பெயரே சூட்டப்பட்டது. சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டபோது ஒரு தம்பதியும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என மீட்பு குழுவினர் நம்புகின்றனர். அக்குழந்தை 10 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டது.

World News

Image
இஸ்லாமாபாத்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான பஷிர் அகமது பிர் எனும் இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் இம்தியாஸ் ஆலம். ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்குள் பிற பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் ஒங்கிணைப்புப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனுக்கு மிகவும் நம்பிக்கையான தளபதியாக இருந்து வந்துள்ளார்.

World News

Image
கேப் டவுன்: இரண்டாம் உலகப் போரின் போது, போலந்து நாட்டை கைப் பற்ற அப்போதைய சோவியத் யூனியன் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது கிழக்குப் போலந்து பகுதியில் வசித்த ஆடம் கிஸாஸ்கி தனது 4 மகன்களை போலந்தை விட்டு வெளியேறும்படி செய்தார். அப்போது குடும்ப வெள்ளிப் பொருட்கள் அனைத்தையும் வீட்டின் பாதாள அறையில் புதைத்து விட்டு தப்பினர். இந்தச் சம்பவம் கடந்த 1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்துள்ளது.

World News

Image
ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் நடுப் பகுதியில் ‘தி முகாப்’ என்ற பெயரில் ஒரு மெகா கட்டிடம் உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஒரு வீடியோவை அரசு வெளி யிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கட்டிடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல 20 மடங்கு பெரிதாக இருக்கும். 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் இந்த கட்டிடம் அமையும். இதில் அருங் காட்சியகம், தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், பல்நோக்கு திரையரங்கம் மற்றும் 80-க்கும் மேற்பட்ட கலாச்சார மையங்கள் அமைய உள்ளன.

Sports in Tamil

Image
சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் குதி கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைநார் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கான முழு உடற்தகுதியையும் அவர், இன்னும் அடையவில்லை என்பதால் இந்தியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விரைவில் அவர், தாயகம் திரும்புவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
கீவ் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பிப்.20,21, 22-ம் தேதிகளில் சுற்றுப் பயணம்செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.

Sports in Tamil

Image
போர்ட் எலிசபெத்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி, 56 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.

Sports in Tamil

Image
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை அலசுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். இதே தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் துணை கேப்டனாக செயல்படுவாரா என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை. அது குறித்த முடிவை கேப்டன் ரோகித் சர்மா எடுப்பார் எனத் தகவல்.

World News

Image
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உலகையே, குறிப்பாக ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த வியூகம் வகுக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒருமுறையாவது நேரில் வந்து நிலவரத்தை அருகிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.