Posts

Showing posts from November, 2022

Sports in Tamil

Image
புதுடெல்லி: தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் தயான் சந்த் கேல்ரத்னா, அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

World News

Image
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sports in Tamil

Image
தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. போலந்துக்கு எதிரான இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தது அர்ஜென்டினா. இதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 974 மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக அடுத்த சுற்றில் விளையாடலாம் என்ற நெருக்கடியை பொருட்படுத்தாமல் மிகவும் அபாரமாக விளையாடியது அர்ஜென்டினா. முதல் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் பதிவு செய்ய முயன்றுக் கொண்டே இருந்தது. அந்த முயற்சிகளை போலந்து வீரர்கள் தடுத்தனர். இதில் மெஸ்ஸி மிஸ் செய்த பெனால்டி வாய்ப்பும் அடங்கும்.

Sports in Tamil

Image
இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் லெவனில் மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடி உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர். இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.

Sports in Tamil

Image
அல் வக்ரா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில் ஆஸ்திரேலியா அதை வெற்றிகரமாக செய்தது. 1-0 என டென்மார்க் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டி அல் ஜானூப் மைதானத்தில் நடைபெற்றது. குரூப் ‘டி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இரு அணிகளும் இதில் பலப்பரீட்சை செய்தன. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

World News

Image
சைபீரியா: 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்களை ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக், அண்டார்டிக்கா பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் நாளும் உருகி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆண்டுகளாக புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.

Sports in Tamil

Image
கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல. இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ் ராஷ்போர்ட் 50 மற்றும் 68-வது நிமிடங்களில் கோல்களை அடிக்க, 51-வது நிமிடத்தில் ஹாரி கேனின் அசிஸ்ட்டுடன் பில் ஃபோடன் ஒரு கோலை அடித்தார். 64 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வேல்ஸ் அணியின் அடுத்த சுற்றுக்கு கனவு தகர்ந்தது.

World News

Image
லண்டன்: சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சீனா உடனான வெளியுறவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, “தற்போதைய காலகட்டங்களில் உலக அளவில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பனிப்போர் போன்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செனட் சபையிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும்.

World News

Image
பெய்ஜிங்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள் டேட்டிங் செயலி, டெலிகிராம் மூலம் தகவல் பரப்புகின்றனர். சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகத்தான், உரும்கி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, 10 பேர் வெளியேற முடியாமல் இறந்தனர் என சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. இது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க சீன அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. சென்சார்கள் மூலம் மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்களை அரசு அழித்து வருகிறது.

Sports in Tamil

Image
அல் கோர்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது கத்தார் அணி. மறுபக்கம் 2 வெற்றிகளை பதிவு செய்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. குரூப் ‘ஏ’ பிரிவில் இரு அணிகளும் இடம் பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இதுவே இந்த சுற்றில் கடைசி போட்டி. இதில் 2-0 என்ற கணக்கில் கத்தாரை வீழ்த்தி நெதர்லாந்து அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டியில் 26 மற்றும் 49-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தது அந்த அணி.

World News

Image
தெஹ்ரான்: கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கந்தாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஈரானின் இந்த வெற்றி, உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை ஈரான் அரசு அறிவித்து வருகிறது.

World News

Image
அதிசயங்கள் எப்போது வேண்டுமானலும் நடக்கும். அதற்கு நம்பிக்கை முக்கியம்...ஆம் அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் 50 வருடங்களுக்கு முன்னால் காணாமல்போன ஒருவர் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

Sports in Tamil

Image
கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரிவு ‘ஜி’ போட்டியில் ஆடிய போர்ச்சுகல், உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-0 என வெற்றி பெற்றாலும் அந்த அணி பதிவு செய்த 2-வது கோல் உருகுவேவுக்கு எதிராக செய்யப்பட்ட மோசடி என்றே கால்பந்து அரங்கில் பேசப்பட்டு வருகிறது. உருகுவே வீரர் ஹேண்ட் பால் செய்து விட்டார் என்று போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது. போர்ச்சுகல் அணியில் புருனோ பெர்னாண்டஸ், 54-வது நிமிடத்திலும், பிறகு 93-வது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தார். ஒன்று அற்புதமான பீல்ட் கோல் என்றால் இரண்டாவது பெனால்டி கிக். காரணம் 89-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் பந்தை உள்ளே கொண்டு செல்ல முயன்றார். அப்போது அவரை சேலஞ்ச் செய்ய உருகுவே வீரர் யோஸ் மரியா ஜிமேனேஸ், சறுக்கியபடியே வந்து தடுக்க முயன்றதில் பின்பக்கமாக விழுந்தார் பந்து அவர் கையில்பட்டது.

World News

Image
பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கடந்த 3 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 39,791 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது போர்ச்சுகல். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார் ப்ரூனோ பெர்னாண்டஸ். இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கத்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. ஆட்டத்தில் சுமார் 60 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அந்த அணி வீரர்கள்.

Sports in Tamil

Image
தோகா: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி. குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும் தீவிரமாக இருந்தது. 13 ஷாட்களை ஆடி இருந்தது பிரேசில். அதில் 3 ஷாட்கள் டார்கெட்டில் விழுந்தன.

World News

Image
ஷாங்காய்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. சுமார் 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்துள்ள சீன மக்கள், ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்துள்ளனர்.

Sports in Tamil

Image
தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆட்டம் முடிய இருந்த கடைசி சில நிமிடங்களில் தோல்வியை தவிர்ப்பதற்கான அந்தவொரு கோலை பதிவு செய்தது ஜெர்மனி. அதற்கு முன்னர் வரை அந்த அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ஸ்பெயின் அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. குரூப் ‘இ’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதற்கு முன்னர் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியும், ஜெர்மனி தோல்வியையும் தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sports in Tamil

Image
தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போட்டிகள் நடைபெற்று வரும் மைதானங்களில் சஞ்சு சாம்சன் படம் இடம் பெற்றுள்ள போஸ்டர்களை ரசிகர்கள் தாங்கி நிற்பது கவனம் பெற்றுள்ளது. 28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு கிடைத்தாலும் ஆடும் லெவனில் கிடைப்பதில் சவாலாக உள்ளது.

Sports in Tamil

Image
தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது குரோஷியா. இந்த வெற்றியின் மூலம் ‘எஃப்’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது அந்த அணி. இந்த போட்டி தொடங்கிய 120 நொடிகளுக்குள் முதல் கோலை பதிவு செய்தது கனடா. ஆனால் நேர்த்தியாக விளையாடி ஆட்டத்தை வென்றது லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியா. குரூப் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்தது. நெருக்கடியான இந்த போட்டியில் பதட்டமின்றி கிளாஸ் ஆக விளையாடி அசத்தி இருந்தது குரோஷியா. ஷாட் ஆடுவதிலும், அதனை டார்கெட்டில் அடிப்பதுமாக அசத்தினர் குரோஷிய வீரர்கள்.

Sports in Tamil

Image
தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை அப்செட் செய்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தனது தாயுடன் கொண்டாடி மகிழ்ந்தார் மொராக்கோ வீரர் அக்ரஃப் ஹக்கிமி. குரூப் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்த போட்டி அல்-துமானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடமும், ஃபிஃபா சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ள பெல்ஜியம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொராக்கோ அணியுடனான போட்டியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

World News

Image
பியாங்கியாங்: உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே தங்கள் நோக்கம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். ஹ்வாசாங்-17 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக செய்து முடிந்தது. அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனையாக இது அறியப்படுகிறது. இந்நிலையில் இப்பரிசோதனையில் பங்கு கொண்ட அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் சந்தித்து கிம் வாழ்த்து தெரிவித்தார்.

Sports in Tamil

Image
ரியாத் : உலகக் கோப்பை கால்பாந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை 2- 0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றிக் கொண்டது. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சி பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா - மெக்சிகோ அணிகள் நேற்று மோதின. முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, சவுதியுடன் தோல்வி அடைந்ததால் அந்த அணிக்கு மெக்சிகோவுடனான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன.

World News

Image
ஷாங்காய்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டிடம் பகுதியளவு பூட்டப்பட்டதால் உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அதீத கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை இட்டனர்.

Sports in Tamil

Image
ரியாத்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அர்ஜென்டினாவைத் தோல்வியுறச் செய்த சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மிகவும் வலுவான அணியாகக் கருதப்படும் அர்ஜென்டினாவை லீக் சுற்றில், சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

World News

Image
பெய்ஜிங் : சீனாவில் நேற்று தொடர்ந்து 3-வதுநாளாக 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 35,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3,405 பேருக்கு அறிகுறியுடன் கூடிய பாதிப்பும், 31,504 பேருக்கு அறிகுறியற்ற பாதிப்பும் இருந்தது. இது சீனாவின் தினசரி கரோனா பாதிப்பில் மிக அதிகமான அளவு. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Sports in Tamil

Image
கத்தார் : கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து அசத்தினார். அதனால் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. எனினும், இதற்கு பதிலடியாக 68வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.

Sports in Tamil

Image
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி 0-0 என்று, ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் தூண்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 6 கோல்கள் அடித்து வென்று விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதன் மூலம் இங்கிலாந்து, எங்கு தன் ‘பழைய’ கோல் இல்லா “ஃபார்முக்கு” வந்து விட்டதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. அதாவது, அமெரிக்க வீரர்கள், இங்கிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதே உண்மை. ஆனால், இவர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. அது அந்த அணியின் அனுபவமின்மை, பெரிய போட்டிகளில் ஆடிய பயிற்சியின்மையின் விளைவு என்று ஒரு காரணத்தைக் கூற முடியும். அப்படியென்றால் ஆண்டு முழுதும் நாள்தோறும் எங்காவது லீக்குகளில் கால்பந்துடனேயே புழங்கி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஒரு கோல் அடிக்க முடியாததையும், அமெரிக்க கோல் கீப்பர் கைக்கே ஷாட்களை அடித்ததையும், புரிந்து கொள்ள ஒரே வழி ‘

World News

Image
பெய்ஜிங் : சீனாவில் மீண்டும் கரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

World News

Image
ரியாத் : ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் இளைஞர் நலத்துறை தலைவராக இளவரசர் பைசல் பின் பாத் இருந்தார். அவர், அப்போதைய சவுதி மன்னர் பாத்தின் மூத்த மகன் ஆவார். அவரது அரண்மனையில் தாய்லாந்தை சேர்ந்த கிரியாங்ராய் டெங்காமாங் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

Sports in Tamil

Image
அல் ரய்யான்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஈரான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அல் ரய்யானில் உள்ள அகமதுபின் அலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே வேல்ஸுக்கு அழுத்தம் கொடுத்தது ஈரான் அணி. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அவை முழுமை பெறாமல் போனது. 86-வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸி தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பாக்ஸ் பகுதிக்கு வெளியே துள்ளியவாறு பந்தை தடுத்தார். அப்போது ஈரான் அணியின் ஸ்டிரைக்கர் மெஹ்தி தரேமியுடன் பலமாக மோதினார்.

World News

Image
புதுடெல்லி : ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.

Sports in Tamil

Image
அண்மையில் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆன சினிமா நட்சத்திரங்களான ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதியரை பிரபல கால்பந்தாட்ட விளையாட்டு கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணி வாழ்த்தி உள்ளது. இந்த வாழ்த்து செய்தியை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளது அந்த அணி. பாலிவுட் சினிமா நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கடந்த ஏப்ரல் மாதம் மண வாழ்க்கையில் இணைந்தனர். அதற்கு முன்னர் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதல் செய்து வந்தனர். அண்மையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ‘ராஹா’ என இருவரும் தங்கள் மகளுக்கு பெயர் சூட்டி உள்ளனர்.

World News

Image
அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்தவர் பென் இஸ்மாயில் (38). ஓவியர், இசை கலைஞர், சமூக வேகவர் என இஸ்மாயிலுக்கு பல முகங்கள் உண்டு. அல்ஜீரியாவின் மிலியானா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கடந்த ஆண்டு டிசி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அவர் இடம்பெயர்ந்தபோது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ நிகழ்வு அல்ஜீரியாவை திருப்பிப் போட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்கவும், அதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கும் இஸ்மாயில் தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அந்த பொய்ச் செய்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவியது.

World News

Image
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வா (61), மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்புக்கு பிறகு வரும் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சா ஆகியோரை பிரதமர் ஷெபாஸ் ஷரீப் நியமனம் செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி : வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
தோகா : 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ.

Sports in Tamil

Image
கத்தார் : 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் லயோனல் மெஸ்ஸி இதுவரை வைத்திருந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தார் ரொனால்டோ.

World News

Image
லண்டன்: உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் நாட்டுக்காக உலகக் கோப்பை தொடரில் தன் மகன் விளையாடியதைப் பார்த்து பெருமிதம் கொண்டுள்ளார் தாய் ஒருவர். தொலைக்காட்சியில் மகன் விளையாடுவதை பார்த்து உற்சாகத்தில் மூழ்கிய அவரது வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரே நோக்கம்தான். அது, தங்கள் பிள்ளைகள் விரும்பும் துறையில் அவர்கள் சாதிக்க வழிவகை செய்வது. பிள்ளைகள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றால் பெற்றோர்கள் பேரானந்தம் கொள்வர். அந்த ஆனந்தத்தைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றுள்ளார் கனடாவை சேர்ந்த டீ.

World News

Image
சீனாவில் ஐபோன்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் ஆலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. ஐபோன் ஆலை பணியாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஊதியம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக செங்சோவ் ஆலை பணியாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பணியாளர்களுடனும், அரசுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

Sports in Tamil

Image
தோகா : பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு அல் ஜனூப் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய அணி கோல் அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

World News

Image
செசபீக் : அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது செசபீக் நகரம். இங்குள்ள சாம்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் அங்காடி உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 10 மணிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். வரும் சனிக்கிழமை அமெரிக்காவில் ‘தேங்க்ஸ்கிவிங்’ என்றழைக்கப் படும் நன்றியளித்தல் விடுமுறை கொண்டாடப்படுகிறது. அதற்கான பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

Sports in Tamil

Image
தோஹா : நடப்பு உலகக் கோப்பை தொடரில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் விளையாடின. இதில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அதிர்ச்சி அளித்தது. முன்னதாக, இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் ஜெர்மனி அணி வீரர்கள் தங்களது வாயை மூடியபடி போஸ் கொடுத்தனர். இப்படி போஸ் கொடுக்க காரணம் ஃபிஃபா எடுத்த முடிவு ஒன்று.

World News

Image
பீஜிங்: சீனாவைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அலுவலக அரசியலை தவிர்ப்பதற்காக கல்லறையில் காவலாளியாக பணி செய்வதாக கூறிய பதிவு வைரலாகியது. சீனாவில் இளைஞர்களிடம் பிரபலமாக இருப்பது டிக் டாக். டிக் டாக்கில் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர சீனர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், டிக் டாக்கில் டான் (22) என்ற இளம்பெண் ஒருவர் பகிர்ந்த புகைப்படமும், பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

World News

Image
ரியாத்: கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத். இதனால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

Sports in Tamil

Image
தோகா : கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத். இதனால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

World News

Image
வாஷிங்டன் : மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் ‘என்டர் தி டிராகன்' உள்பட பல ஹாலிவுட் படங்களில் தற்காப்புக் கலையைப் போற்றும் விதத்தில் நடித்து புகழ்பெற்றார். 1973-ல் தனது 32-வது வயதில் அவர் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர்.

World News

Image
ஜகார்த்தா : இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 151 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புபணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த 21-ம் தேதி மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு லேசான அதிர்வுகள் 25 முறை ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.