Posts

Showing posts from February, 2022

World News

Image
ஜெனீவா: உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. அதன்படி ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

World News

Image
கடந்த 20-ம் நூற்றாண்டில் வியட்நாம், லாவோஸ், கியூபா, லெபனான், லிபியா, பனாமா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 21-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக்கை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் எந்தவொரு நாட்டிலும் அமைதி நிலைநாட்டப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு நேர்மாறாக இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் தலைதூக்கி உள்ளனர்.

World News

Image
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர். பொதுமக்களும் போரில் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்கி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று முன்னாள் ‘மிஸ் உக்ரைன்' அனஸ்டாசியா லீனா (31) ஆயுதம் ஏந்தி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார். அதிநவீன துப்பாக்கியுடன் போர்க்கோலம் பூண்டிருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

World News

Image
கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக ஐ.நா கூறுகிறது.

World News

Image
கீவ்: உக்ரைனுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்து உள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. எல்லையோர நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல பகுதிகளில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

World News

Image
ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை.

World News

Image
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உக்ரைன் ஆலோசனைக் குழு விரைந்துள்ளது. அதேபோல் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

World News

Image
கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது. போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

World News

Image
கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி முறையிட்டுள்ளது. தனது படையெடுப்பை நியாயப்படுத்தி இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அடுத்த வாரமே விசாரணையைத் தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

World News

Image
கீவ்: ஹிட்லரை தோற்கடித்தோம்; இப்போது ஒன்றிணைந்து புதினையும் தோற்கடிப்போம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, அதிபர் வொலடிமிரி ஜெலன்ஸ்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தங்கள் படைகளுடன் இணைந்து சண்டையிட விருப்பமுள்ள வெளிநாட்டுப் படையினர் கொண்ட கூட்டுப் படையை உருவாக்கி வருகிறோம் என்று கூறியிருந்தார்.

World News

Image
கீவ்: இரண்டாம் உலகப் போரின்போதுஇருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன என உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே, ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தொடர்பில் இருந்து வருகிறார். தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக அவர் இரண்டாவது நாளில் வெளியிட்ட வீடியோ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தானும், தனது குடும்பத்தினரும் தான் ரஷ்யாவின் இலக்கு என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அடுத்தடுத்த வீடியோக்களில் தொடர்ந்து உக்ரைனில் தான் இருப்பதாகக் கூறியிருந்தார்.

World News

Image
கீவ்: உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் அதிபார் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நிபந்தனையை முன்வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன் பின்னர் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது போல் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

World News

Image
பியாங்யாங்: ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் நாடு பற்றி எரிகிறது. ரஷ்ய தாக்குதல் 4வது நாளாக தொடரும் சூழலில் அங்கு இத்தகைய பேரிழப்பு ஏற்பட அடிப்படைக் காரணமே அமெரிக்கா தான் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி ஜி சாங்கின் இணையதளத்தில் அமெரிக்காவை குற்றஞ்சாட்டி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

World News

Image
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இணைய சேவை, ராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரைனுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. அதேவேளையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 471 உக்ரைன் ராணுவத்தினரையும் ரஷ்யப் படைகள் கைது செய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி உக்ரைன் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியிருந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உக்ரைனில் இதுவரை 240 அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கணிக்கிறது.

World News

Image
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந் தியா புறக்கணித்தது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ தளங்களை ரஷ்ய ராணுவம் தகர்த்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. கீவ் விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் முழுவதும் நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

World News

Image
கீவ்: "தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவம் இங்கு தான் இருக்கிறது. குடிமக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம். இப்படித்தான் இருப்போம்" என்று பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது. இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது. நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளன.

World News

Image
கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் நெருங்கவிடமாட்டோம் என்று உக்ரைன் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

World News

Image
ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரிக்க இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் ரஷ்யா நிரந்த உறுப்பினர் என்பதால் அதன் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. இருப்பினும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ரஷ்ய அதிபருக்கு எதிராக உலக நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.

World News

Image
கீவ்: உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நேற்று நீண்ட நேரம் கடுமையான சண்டை நீடித்தது. போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

World News

Image
லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலை இவ்வாறு தொடங்குகிறார், “நல்லது இளவரசே! ஜெனோவும் லுக்காவும் தற்போது நெப்போலியன் போனபார்ட்டின் குடும்பத்தின் வசமுள்ள நிலப்பரப்புகள் அன்றி வேறில்லை.’’ உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து 2014-ம் ஆண்டிலிருந்து தன்னாட்சி உரிமை கோரி வரும்டானெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா முறையான அங்கீகாரம் அளித்தபோது, எனக்கு ‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரிகள்தான் நினை வுக்கு வந்தன.

World News

Image
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில் தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழலில் நிலவுகிறது. உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இன அழிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மிக நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு போரைத் தொடங்கிய ரஷ்யா இரண்டாம் நாளான இன்று தலைநகர் கீவைக் குறிவைத்துள்ளது.

World News

Image
கீவ்: " ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்" என்று உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாகப் பேசியுள்ளார். உக்ரைன் மீது பிப்ரவரி 24 காலையில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது.

World News

Image
புதுடெல்லி: உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஐகர், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டால் நிச்சயமாக போர் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார். பாரதப் போர் வியூகம், சாணக்கிய தந்திரம் ஆகியனவற்றைக் குறிப்பிட்டு உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தலையிடுமாறு அந்நாட்டுத் தூதர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

World News

Image
இரண்டு பழமொழிகள்: 'பழி ஓரிடம், பாவம் ஓரிடம்'; 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்'. உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் இந்தியாவின் நிலை இதுதான். சர்வதேச அரங்கில் எல்லா நேரங்களிலும், எல்லா பிரச்சினைகளிலும் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தோழனாக இருக்கும் நாடு - ரஷ்யா. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிற நல்ல நண்பன்.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

World News

Image
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே காரணம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

World News

Image
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் பெரியளவில் மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்யா உக்ரைன் இடைடே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தநிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.

World News

Image
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மலை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய உடனேயே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. இது கடந்த 2014க்குப் பின்னர் மிக உயரிய விலை எனக் கூறப்படுகிறது.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடைடே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. சற்று முன்னர் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

World News

Image
மாஸ்கோ: உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது செயற்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உக்ரைனை போர்மேகங்கள் சூழ்ந் துள்ளது உறுதியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே சமீபகாலமாக போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உக் ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக் கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

World News

Image
வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து மிகக் குறைந்தவிலையில் உலகம் முழுவதற்கும் விநியோகித்த இந்திய நிறுவனங்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத்துறை உறவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கருத்தரங்கில் அவர் கூறியதாவது:

Sports in Tamil

Image
லக்னோ: இலங்கை கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இலங்கை அணியை சந்திக்கிறது. அதேவேளையில் இலங்கை அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்தியத் தொடரை அணுகுகிறது.

Sports in Tamil

Image
டெல்லி: 'உங்கள் வாழ்க்கையும், புற்றுநோயில் இருந்து நீங்கள் மீண்டதும், கிரிக்கெட் மட்டுமின்றி, அதை தாண்டி அனைத்து மக்களுக்கும் அது எந்நாளும் பெரிய இன்ஸ்பிரேஷன்' என்று யுவராஜ் சிங் தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு நேற்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பரிசு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பரிசுடன் உருக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பிய யுவராஜ் அதில், "விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளம் பையனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்றதில் இருந்து இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய். களத்தில் நீ காட்டும் ஒழுக்கமும், ஆர்வமும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் கிரிக்கெட் மட்டையை எடுக்க வைத்துள்ளதுடன், அவர்களுக்குள் ஒரு நாள் நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவைத் தூண்டியுள்ளது.

World News

Image
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தெற்கு பெலாரஸில் உள்ள மோசிர் விமான தளத்தில் படைகளின் முகாமும், 100 வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ.-க்கும் குறைவான தொலைவிலேயே இருக்கிறது.

Sports in Tamil

Image
மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் விதத்தில், வெளிநாட்டுத் தொடர்களை அதிகப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே திட்டமிட்ட தொடர்களுடன் கூடுதலாக சில தொடர்களை நடத்தவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால், இந்த முறை கோப்பையை வென்று ஆக வேண்டும் என தீவிரமான சில திட்டங்களை வகுத்து வருகிறது பிசிசிஐ நிர்வாகம். அதன்படி, இந்த எட்டு மாதங்களுக்குள் அதிகளவிலான டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் வகையில் சுற்றுப்பயணங்களை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட உள்ளது. அதில் ஒன்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி. அதுபோக இந்த மாதம் தொடங்கும் இலங்கையுடான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.

World News

Image
மாஸ்கோ: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

World News

Image
சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர்.

Sports in Tamil

Image
ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது, அனாமிகா ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். 73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுகுத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிது, ரஷ்யாவின் யூலியா சும்கலகோவாவை எதிர்த்து மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம்செலுத்திய நிது 5-0 என்ற கணக்கில்வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

World News

Image
மாஸ்கோ: "இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு விருந்தினராக பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் அவர், அதற்கு முன்னதாக, ரஷ்ய டுடேவுக்கு அளித்த பேட்டியில்தான் இந்திய பிரதமருடன் விவாதம் நடத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். அதில், "இந்தியா ஒரு எதிரி நாடாக மாறியதால் அவர்களுடனான வர்த்தகம் குறைந்துவிட்டது. அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பதே எனது அரசாங்கத்தின் கொள்கை.

Sports in Tamil

Image
மும்பை: இந்திய கிரிக்கெட்டில் தேடப்படும் ஒரு திறமை வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். ஜாம்பவான் கபில்தேவ், ஒரு ஆகச் சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். அவருக்கு பிறகு வேறு எந்த வீரரும் அந்த இடத்தை பெற முடியவில்லை. கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கபில் தேவ் ரோலில் இர்ஃபான் பதானை முயற்சித்து பார்த்தார். இதில் பலன் கிடைத்தாலும், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காரணம், இந்திய அணியில் இடம்பிடிக்கும் முன்புவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல், அணியில் இடம்பிடித்த பின்பே பேட்டிங் பயிற்சியில் தீவிரம் காட்டினார். அதுவே, கிரிக்கெட்டில் அவரது வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் சிறப்பாக வீசும் திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பதான், பேட்ஸ்மேன் முயற்சியில் பந்துவீச்சின் சாரத்தை இழந்து அணிக்கு தேர்வாக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். பதானோடு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேடல் முடிந்துவிடவில்லை. ஸ்டூவர்ட் பின்னி போன்ற பல சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர்களை நிர்வாகம் முயற்சித்தது. அப்படி முயற்சித்தவர்களில் எவரும் எந்த தாக்கத்தை

Sports in Tamil

Image
பஞ்சாப்: "ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்திக் கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய்" என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டில் வெளியில் தெரியாத நல்ல நண்பர்கள் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி இருவரும். இவர்கள் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்நிலையில், விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறந்து புதிய அத்தியாயத்தில் கால் பதித்துள்ளதை அடுத்து, அவருக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பரிசு ஒன்றை அனுப்பி, அத்துடன் உருக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.

Sports in Tamil

Image
சென்னை: உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

Sports in Tamil

Image
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைமுழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்ற இந்தியஅணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து, இந்தியா அணிகள் மதிப்பீடு புள்ளிகளை (269) ஒரே மாதிரியாக பெற்ற போதிலும் ஒட்டுமொத்த புள்ளிகள் கணக்கில் இந்திய அணி 10,484 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து 10,474 புள்ளிகளை பெற்று 2-ம் இடத்தில் உள்ளது.

Sports in Tamil

Image
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்தியகிராண்ட் மாஸ்டரான 16 வயதானசென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக் ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன.

World News

Image
உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம்காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

Sports in Tamil

Image
கொல்கத்தா: 'இந்திய அணிக்காக விருத்திமான் சஹா செய்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வலியுறுத்தியதாக டிராவிட் மீது சஹா குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் எந்த தொடர்களிலும் இந்திய அணிக்கு தான் தேர்வு செய்யப்பட போவதில்லை என்பதை தேர்வுக்குழு தெரிவித்ததாக சஹா தெரிவித்திருந்தார். மேலும், "இலங்கை தொடருக்கு நான் தேர்வாகவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. இது முன்பே எனக்கு தெரியும். இனிமேல் நான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்பட மாட்டேன் என ஏற்கெனவே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. தென்னாப்பிரிக்க தொடரிலேயே என்னை தேர்வு செய்யக் கூடாது என்று தேர்வுக் கமிட்டி எடுத்த முடிவு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூலமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

World News

Image
மாஸ்கோ: படையெடுப்பின்போது யாரைக் கொல்ல வேண்டும், யாரை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் குழு தலைவருக்கு இது தொடர்பாக அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது.

World News

Image
பாரிஸ்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடார்பாக பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து பேச இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல இணைந்து உக்ரைன் சர்ச்சை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசிக்கப்படும்.

World News

Image
டொரண்டோ: கனடாவின் மான்ட்ரீல் நகரில் உள்ள மூன்று கல்லூரிகள் திவாலானதாக அறிவித்து மூடிவிட்டன. கடந்த மாதம் இக்கல்லூரிகள் மூடப்பட்டதால் இந்தியாவைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. சிசிஎஸ்க்யூ கல்லூரி, எம் கல்லூரி மற்றும் சிஇடி கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் மாணவர்களிடம் கல்லூரிக் கட்டணமாக பல லட்சம் டாலர்களை வசூலித்தன. திவால் அறிவிப்பு வெளியிடும் முன்பு கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்தன. இந்தக் கல்லூரிகள் மூடப்பட்ட தால் அங்கு பயின்ற சுமார் 2 ஆயிரம்இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் பலர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். கல்லூரி நிர்வாகத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இவர்கள் தெரிவித்தனர். தங்களது பிரச்சினையை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் பேரணியும் நடத்தினர். இந்த விவகாரத்தில் கனடா அரசு தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் தங்களது படிப்பைத் தொடர வழியேற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Sports in Tamil

Image
லாகூர்: பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்வது ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பால்க்னரின் குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை போல பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல்லின் அதே பார்மெட்டை போல, பாகிஸ்தான் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள். கடந்த பல சீசன்களாக நல்ல வரவேற்புடன் தொடர் நடந்துவருகிறது. நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக அந்த அணிக்காக களமிறங்காத பால்க்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து டுவீட் செய்தார்.