World News
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந் தியா புறக்கணித்தது.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ தளங்களை ரஷ்ய ராணுவம் தகர்த்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. கீவ் விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் முழுவதும் நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
Comments
Post a Comment