World News
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் பெரியளவில் மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்யா உக்ரைன் இடைடே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தநிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.
Comments
Post a Comment