World News
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மலை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய உடனேயே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. இது கடந்த 2014க்குப் பின்னர் மிக உயரிய விலை எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment