Sports in Tamil
மும்பை: இந்திய கிரிக்கெட்டில் தேடப்படும் ஒரு திறமை வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். ஜாம்பவான் கபில்தேவ், ஒரு ஆகச் சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். அவருக்கு பிறகு வேறு எந்த வீரரும் அந்த இடத்தை பெற முடியவில்லை. கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கபில் தேவ் ரோலில் இர்ஃபான் பதானை முயற்சித்து பார்த்தார். இதில் பலன் கிடைத்தாலும், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
காரணம், இந்திய அணியில் இடம்பிடிக்கும் முன்புவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல், அணியில் இடம்பிடித்த பின்பே பேட்டிங் பயிற்சியில் தீவிரம் காட்டினார். அதுவே, கிரிக்கெட்டில் அவரது வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் சிறப்பாக வீசும் திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பதான், பேட்ஸ்மேன் முயற்சியில் பந்துவீச்சின் சாரத்தை இழந்து அணிக்கு தேர்வாக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். பதானோடு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேடல் முடிந்துவிடவில்லை. ஸ்டூவர்ட் பின்னி போன்ற பல சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர்களை நிர்வாகம் முயற்சித்தது. அப்படி முயற்சித்தவர்களில் எவரும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த தவறினர். இறுதியாக நீண்ட தேடலுக்கு விடையாக கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா.
Comments
Post a Comment