World News
பாரிஸ்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடார்பாக பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து பேச இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல இணைந்து உக்ரைன் சர்ச்சை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசிக்கப்படும்.
Comments
Post a Comment