Posts

Showing posts from September, 2023

World News

Image
மாஸ்கோ : போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

World News

Image
வாஷிங்டன்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டக்கூடாது. அது எங்களைப் பொறுத்தவரை உரிமை துஷ்பிரயோகமாகும். கனடா தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறையை ஆதரிப்பதுதான் உண்மையான பிரச்சினை. கனடாவில் உள்ள இந்தியத் தூதரகக் கட்டிடத்தில் காலிஸ்தான் ஆதரவுப் போஸ்டர்கள் தொங்கவிடப்பட்டன.

World News

Image
கராச்சி: பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர். இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

World News

Image
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்கும் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புரூக்ளின் பகுதியில் மட்டும் சுமார் 4 அங்குலத்துக்கு மழை நீர் சேர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

World News

Image
பலூசிஸ்தான்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார். மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது.

World News

Image
டாக்கா: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலையுண்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகளால் கனடாவில் தஞ்சமடைந்து, அங்கே அவர்களால் அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு, மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அதன் நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார்.

World News

Image
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் வரலாற்றில் 1929 முதல் 1940 வரையிலான காலகட்டம் பொருளாதார பேரழுத்தக் காலகட்டம் என்று வரையறுக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவில் இருந்தது. இக்காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு தற்போது 4.8 லட்சம் டாலருக்கு (ரூ.4 கோடிக்கு) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1920-களின் முற்பகுதியில் உச்சத்திலிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் 1930-க்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

World News

Image
லண்டன்: ‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர். ‘ஹாரிபாட்டர்’ படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் (Professor) ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். ஹாரிபாட்டர் கதையை அடிப்படையாக கொண்டு வெளியான 8 படங்களில் 6-ல் இவர் நடித்துள்ளார். நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க அதிபர் நேற்று (செப்.26) கலந்து கொண்டார். அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார்.

World News

Image
பாக்தாத்: ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக் நாட்டின் நினேவா மாகாணத்தில் உள்ளது ஹம்தானியா என்ற பகுதி. பாக்தாத் நகரத்தில் இருந்து சுமார் 335 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள அரங்கில் இன்று (செப்.27) கிறிஸ்தவ திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மீது சுமார் 50 குண்டுகள் சுடப்பட்டதாக, குருத்வாரா உறுப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாராவில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை சம்பவம் தொடர்பாக, 90 வினாடிகள் வீடியோ ஒன்றை குருத்வாரா வெளியிட்டுள்ளது.

World News

Image
நாகோர்னோ-கராபக்: அசர்பைஜான் நாட்டின் ஒரு பகுதியான நகோர்னோ-கராபக் பகுதியில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். அசர்பைஜான் நாட்டின் ஓர் அங்கமாக உள்ள பகுதி நகோர்னோ-கராபக். எனினும், இந்தப் பகுதியை கடந்த 1994 முதல் தனி நாடாக அறிவித்து பிரிவினைவாதிகள் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வருகிறார்கள். பிரிந்த பிராந்தியத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எரிவாயு நிலைய வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 290 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
புதுடெல்லி: இந்திய நாட்டுடனான கனடாவின் உறவு முக்கியமானது என்றும் இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் போன்றவற்றில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை கனடா தொடரும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

World News

Image
டொராண்டோ: இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அறிவித்தது.

World News

Image
ஒட்டாவா: நாஜிப் படைப் பிரிவின் முன்னாள் அதிகாரியை நாடாளுமன்றத்தில் கவுரவித்ததால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், நாடாளுன்ற கீழவை சபாநாயகர் யூத இன மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் போலிவர் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடா வந்திருந்தார். அப்போது அவருடன் வந்திருந்த உக்ரேனியரான நாசிப் படைகளீன் 14வது வேஃபன் கிரண்டியர் பிரிவின் முன்னாள் அதிகாரி நாடாளுமன்றத்தின் கீழவையில் கவுரவித்தார். இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பியர் சமூக வலைதளம் வாயிலாக கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.

World News

Image
நியூயார்க்: ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள ‘5 ஐஸ்’ (5 கண்கள்) என்ற பெயரில் கூட்டணியை கடந்த 1941-ல் உருவாக்கின. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலையில் இந்திய ஏஜென்ட்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத் தகுந்த உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

World News

Image
மான்க்லோவா : ‘சக்கி டால்’ எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த பொம்மையையும் மெக்சிகோ போலீஸார் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் போவோர் வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கார்லோஸை கைது செய்தனர்.

World News

Image
புதுடெல்லி: இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவுக்குதான் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்தார். கனடாவின் வான்கூவர் நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா நாட்டுஅதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியது: "கடந்த ஒரு நிதி ஆண்டில், பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 34.2 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிதாக 1.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்துள்ளனர். இதன் மூலம் தற்போது 9.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

World News

Image
வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் அமெரிக்கா யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது பற்றி அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி சொன்ன கருத்து கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், அவருடைய கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘யானையுடன் எறும்பு மோதுவது போல் இந்தியாவுடன் கனடா மோதுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைக்கேல் ரூபின் என்ற அந்த அதிகாரி, "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவைக் காட்டிலும் கனடாவுக்குத் தான் பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொண்டால், நிச்சயமாக இந்தியாவைத்தான் தேர்வு செய்யும். கனடாவைவிட இந்தியாவுடனான உறவையே அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவுடன் கனடா மோதுவது ஓர் எறும்பு யானையை எதிர்கொள்வதைப் போன்றதாகும்" என்றார்.

World News

Image
ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம் என்று கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

World News

Image
புதுடெல்லி : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தற்போது பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
நியூயார்க் : பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜுன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியதால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்கு காரணங்களால் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு விசா வழங்கும் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

World News

Image
வின்னிபெக்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜுன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியதால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளியான சுக்துல் சிங் என்ற சுகா துனேகே கனடாவின் வின்னிபெக் நகரில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் துனேகே கலன் கிராமத்தைச் சேர்ந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடா தப்பிச் சென்றார். தவிந்தர் பம்பிகா கும்பலைச் சேர்ந்த இவருக்கு கனடாவில் உள்ள தீவிரவாத கும்பல் அர்ஷ் தல்லா, லக்கி பட்டியால் கும்பல், மலேசியாவைச் சேர்ந்த குற்றவாளி ஜேக்பல் சிங் உட்பட பல குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

World News

Image
நியூயார்க்: வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதிக்குமாறு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகரிடம், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது. ஐநா தலைமையகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவை சந்தித்தார். அப்போது, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளால் ஆட்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவர், கிறிஸ்டியானா ஜார்ஜியாவுக்கு எடுத்துரைத்தார்.

World News

Image
பாலி : இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை கூறி பன்றிக்கறி சாப்பிட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட பெண்ணுக்கு இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் லினா முகர்ஜி (33). டிக்டாக் பிரபலமான இவர் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். டிக்டாக் செயலியில் இவரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லினா முகர்ஜியின் டிக்டாக் பக்கத்தில் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.

World News

Image
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பிறகு எரிசக்தி, பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வர்த்தகம், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் 50 ஒப்பந்தங்கள் இந்தியா - சவுதி இடையில் கையெழுத்தாகியுள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத், பிரதமர் மோடியுடன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாக நிலுவையில் உள்ள பழைய திட்டங்களையும் விரைந்து முடிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 100 பில்லியன் டாலரை முதலீடு செய்வதெனவும், இதற்காக ஒரு கூட்டுப்பணிக்குழுவை உருவாக்குவதெனவும் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையே வர்த்தக வழித்தடத்தை (ஐஎம்இசி) உருவாக்க இந்தியாவும், சவுதியும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு (பிஆர்ஐ) கடும் போட்டியாக அமையும்.

World News

Image
புதுடெல்லி: எதிர்வரும் குடியரசு தினவிழா 2024-ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

World News

Image
சிட்னி: சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டாஸ்மேனியன் புலி என்ற விலங்கை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தைலசின் என்று அழைக்கப்படும் டாஸ்மேனியன் புலி இனம் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றம், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் இருந்து அழிந்து போனது. ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு சுமார் 5,000 டாஸ்மேனிய புலிகள் டாஸ்மேனிய காடுகளில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக கருதி, அவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி, டாஸ்மேனியாவில் உள்ள ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் 1936ஆம் ஆண்டு மடிந்தது. அந்த புலியின் பெயர் பெஞ்சமின்.

World News

Image
வெல்லிங்டன் : நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் அமைந்துள்ள ஜெரால்டின் நகருக்கு அருகே இன்று காலை 9.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை சுமார் 14,000 மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிக வலிமையானது என நியூசிலாந்து நில அதிர்வு கண்காணிப்பு மையமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.

World News

Image
கலிபோர்னியா: எலான் மஸ்க் உரிமையாளராக உள்ள நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களிடத்தில் சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூளையில் பொருத்தும் வகையில் நியூராலிங்க் தயாரித்துள்ள சிப்களை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

World News

Image
ஒட்டாவா : சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், "இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை மிகத்தீவிரத்துடன் கையாள வேண்டும்" என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ முன்பு குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய ட்ரூடோ, "இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.

World News

Image
கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.700 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் லொகேஷனை ஆஃப் செய்திருப்பார்கள். இப்படி லொகேஷன் அக்சஸை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சேகரிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

World News

Image
புதுடெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

World News

Image
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

World News

Image
கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் லொகேஷனை ஆஃப் செய்திருப்பார்கள். இப்படி லொகேஷன் அக்சஸை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சேகரிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

World News

Image
பாரிஸ்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

World News

Image
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் இரண்டு ஏலியன் உடல்களை அந்நாட்டு ஆய்வாளர்கள் பொதுமக்கள் காட்சியப்படுத்திய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக நடந்து வருகின்றன. அதுகுறித்த தெளிவான முடிவுக்கு இன்னும் ஆய்வாளர்களால் வர இயலவில்லை. இந்த சூழலில் மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் யூஎஃப்ஓ ஆய்வாளருமான ஜெய்மீ மாஸ்ஸன் என்பவர், மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை விசாரணையின்போது இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

World News

Image
திரிபோலி: லிபியாவில் புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

World News

Image
திரிபோலி: புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

World News

Image
பியாங்யாங் : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாகவும், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் பயணிக்கும் பச்சை நிற ரயில் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கிம் ஜாங் ரஷ்யா வருவவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவர் வெளிநாட்டுக்குச் செல்வது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதன் முறையாகும். கிம் ஜாங் - புதின் சந்திப்புக்கு நிகரமாக பேசப்படுவது கிம் பயணிக்கும் கவச ரயில் குறித்துதான். ஆம், வட கொரியாவிலிருந்து ரஷ்யா வரை சுமார் 1,180 கிமீ தொலைவை ரயிலில் கடக்கிறார் கிம். இந்த ரயில் பயணத்துக்கு பின்னால் சில சுவாரஸ்யமூட்டும் தகவல்கள் உள்ளன. மணிக்கு 59 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த ரயில் முழுக்க முழுக்க பச்சை நிறத்தில் உள்ளது. 1,180 கிமீ தொலைவை 20 மணிநேரத்துக்கும் மேலாக கிம், ராணுவ அதிகாரிகள் படை சூழ இந்த குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்ய பாரம்பர்ய பின்னணி ஒன்றும் உள்ளது.

World News

Image
எடின்பர்க்: கடந்த 1996-ல் குளோனிங் முறையில் டோலி எனும் ஆடு உருவாக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார். அவருக்கு வயது 79. அவர் உயிரிழந்த தகவலை ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் உலகுக்கு அறிவித்த போது அது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் இந்த ஆடு ‘6LL3’ என அறியப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் நினைவாக டோலி என்று பெயரிடப்பட்டது. இது விஞ்ஞான புரட்சியாகவும் பார்க்கப்பட்டது.

World News

Image
பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாகவும், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் கிம் வட கொரியாவின் வட கிழக்குப் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றதாகவும், அங்கிருந்து அவர் ரஷ்யாவுக்குச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை கிம் ஜோங் - புதின் சந்திப்பு நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வட கொரிய ஊடகம் ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கிம் ஜோங் ரஷ்யா வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், தென் கொரிய ஊடகங்களும் கிம் ரஷ்யா புறப்பட்டுச் சென்றுவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

World News

Image
ஹனோய்: இந்தோ - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: "ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

World News

Image
காசாபிளாங்கா: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோவின் சுற்றுலா நகரமான மாரகேஷ் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர்அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

World News

Image
காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

World News

Image
கீவ் : ஜி20 கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து 'பெருமைப்பட ஒன்றுமில்லை' என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக பிரகடன உரையை விமர்சித்தது.

World News

Image
ரபாட் : வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இதுவரை 1,037 பேருக்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 1200+ பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.

World News

Image
ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. மொராக்கோவின் சுற்றுலாதலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பூகம்பம் சரியாக வெள்ளி இரவு 11.11 மணிக்கு நடந்துள்ளது.