Posts

Showing posts from October, 2021

Sports in Tamil

Image
இந்திய அணி டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. இந்திய வீரர்கள் மனநிலையும், அணுகிய விதமும் தவறு என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

Sports in Tamil

Image
6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம், பயோ-பபுள் சூழலில் இருக்கிறோம். எங்களுக்கும் ஓய்வு தேவை என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

World News

Image
ஜி 20 காலநிலை மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாதற்கு ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்தது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எனினும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவில்லை.

Sports in Tamil

Image
பந்துவீச்சிலும் துணிச்சல் இல்லை, பேட்டிங்கிலும்துணிச்சலோடு செயல்பட வில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்குப்பின்ஆதங்கத்தோடு தெரிவித்தார். துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

Sports in Tamil

Image
மிட்ஷெல் சான்ட்னர், சோதி ஆகியோரின் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

World News

Image
அமெரிக்காவில் கரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த சில தினங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றில் இருந்து உலகம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் பயணத் தேவை அதிகரித்து வருவதால் அதிகமான விமானங்களை இயக்கும் சூழல் உள்ளது. ஆனால் கரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது. இதனால் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

World News

Image
அமெரிக்காவில் கரோனாவுக்கு முன்பு வாங்கிய லாட்டரியில் 2 ஆண்டுகளும் 8 மாதங்களுக்கும் பிறகு நடந்த குலுக்கலில் 65 வயது முதியவர் ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வென்று ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

Sports in Tamil

Image
ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள் மோதும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டதைத்தொடர்ந்து இந்த கணிப்பை வார்ன் வெளியி்ட்டுள்ளார்.

Sports in Tamil

Image
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கணித்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில்இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் மட்டும்தான் இதுவரை தோல்விகளைச் சந்திக்காமல் செல்கின்றன. மற்ற அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

Sports in Tamil

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைவிட டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுசாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அபு தாபியில் இன்று நடக்கும் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்ெகட்டிலிருந்து அஸ்கர் விடை பெற உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டனா அஸ்கர் ஆப்கன் இருந்து வருகிறார்.

Sports in Tamil

Image
துபாயில் இன்று மாலைநடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான மோதலில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து அணியும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளன.

Sports in Tamil

Image
தாயை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பாபர் ஆஸம் வெற்றி பெற்றுக் கொடுத்தார் என்று அவரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்தார். துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

World News

Image
நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், உலகின் எந்த பகுதியில் இருந்தோ இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் வங்கியின் பணத்தை பெருமளவில் திருடும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

World News

Image
கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்து வருகிறது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

World News

Image
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கத் தவறுவதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவினர் ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

Sports in Tamil

Image
நாங்கள் ஒரு நல்ல காரணத்துக்காக கிரிக்கெட்டை மைதானத்தில் விளையாடுகிறோம். முதுகெலும்பு இல்லாத சிலர்போல், அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைக் கூறவில்லை. ஷமி மட்டுமல்ல யாரையும் மதரீதியாக விமர்சி்க்க அவர்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார். துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தி்த்தது.

Sports in Tamil

Image
மில்லர், ரபாடாவின் அதிரடி ஆட்டத்தால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி20 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports in Tamil

Image
ஜோஸ் பட்லரின் காட்டடி பேட்டிங், ஜோர்டன், வோக்ஸின் பந்துவீச்சு ஆகியவற்றால்துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திேரலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

World News

Image
பிரிட்டன் இந்த வருடம் இறுதிக்குள் 2 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அனுப்ப இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “ சுமார் 2 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை இந்த வருடம் இறுதிக்குள் பிற நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம். பிரிட்டன் முன்னரே 10 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளது.

World News

Image
ஏமன் போர் குறித்து சவுதிக்கு எதிராக லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதனால் 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி தெரிவித்துள்ளது. லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி உள்நாட்டுச் செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் ஒன்றில் பேசும்போது, ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது. அந்தப் போரை சவுதி நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சவுதி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் லெபனான் - சவுதி உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

World News

Image
ரஷ்யாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேசம் முழுவதும் ஒரு வார காலம் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அமல்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு. ரஷ்யாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 40,251 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கை.

World News

Image
டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ஏஒய்.4.2 வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக முடிவுகள் நடத்தப்படுகின்றன. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரிட்டனில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான மற்ற 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் 4% கரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார். இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

World News

Image
ஈரான் ராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது 2019ஆம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும் (இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர்) ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

World News

Image
சுமார் 9 மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் போன்ற பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் தொடக்கம் முதல் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து விக்டோரியா, மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் போன்ற மாகாணங்களில் கரோனா பரவல் அதிகரித்தது.

World News

Image
கடும் கரோனா பரவல் காரணமாக சிவப்பு பட்டியலில் வைத்திருந்த 7 நாடுகளை பிரிட்டன் அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “வரும் திங்கள் முதல் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.

Sports in Tamil

Image
ஆசிப் அலியின் அற்புதமான ஃபினிஷிங், கேப்டன் பாபர் ஆஸமின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைப் போட்டியின் குரூப்-2 பிரிவில் நடந்த சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகி்ஸ்தான் அணி. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

World News

Image
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்க போவதில்லை என்று தலிபான்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க - இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

Sports in Tamil

Image
உடற்தகுதியில்லாத இல்லாத நிலையில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியாவை டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்ததற்கு யாராவதுபொறுப்பேற்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்வின்னிங் ஆட்டம் ஆடவில்லை,பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

World News

Image
இனப் படுகொலையில் ஈடுபட்ட ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் பேசும்போது, ”நாம் கொடுமையானவர்கள் முன்னால் அமைதியாக இருக்கக் கூடாது. இப்ராஹிம் ரெய்சி எவ்வளவு கொடுமையானவர் என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும். ஈரானில் 30 ஆயிரம் அரசியல் கைதிகள் தூக்கிலிடுவதற்கு ரெய்சியும் ஒரு காரணம்.

World News

Image
சிக்கப்பூரில் சமீப நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

Sports in Tamil

Image
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளில் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். புதிதாக வந்துள்ள 3 அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்களுக்காக ஏலத்தில் ரூ.90 கோடிவரை செலவிடலாம் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.85 கோடியாக இருந்தது.

Sports in Tamil

Image
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவைத் தக்கவைக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக இருக்கும் 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2 அணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

Sports in Tamil

Image
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல் இணைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்றாக இருந்த நாங்கள் ஐந்தாக ஆகியுள்ளோம். நானும் தீபிகாவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அதை தானே வைத்துவிட்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் “ நான் இதை திரும்ப வைக்கவேண்டுமா?” என்று சிரி்த்துக்கொண்டே கேட்டார்.

Sports in Tamil

Image
ஃபார்முக்கு திரும்பிய டேவிட் வார்னர், ஆடம் ஸம்ப்பா, ஸ்டார்க் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட் செய்த இலங்கைஅணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

World News

Image
சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்துக்கான மெய்நிகர் உலகத்தை உருவாக்கவே மெட்டா முயற்சிக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்படஉள்ளது அதாவது ரீபிராண்ட் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் இதற்கான அறிவிப்பை ஜூகர்பெர்க் நேற்று வெளியிட்டார்.

World News

Image
ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவிலும் கரோனா வேகமெடுத்து வரும் சூழலில் சீனாவிலும் ஆங்காங்கே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஏற்கெனவே லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரின் மக்கள் தொகை 40 லட்சம். அதேபோல் மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

World News

Image
சீனாவில் டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ரேஷன் முறையில் குறைவான அளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படுகிறது. சீனாவில் பெட்ரோல், டீசல் உற்பத்தி குறைந்துள்ளதாலும், விலை உயர்ந்து வருவதாலும் டீசல் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு மட்டுமே டீசல் விநியோகம் செய்யப்படுகிறது.

World News

Image
பிற நாடுகளை சார்ந்திருக்கவில்லை, நாங்களே எங்களை தற்காத்துக் கொள்வோம் என்று தைவான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர், செங் கூறும்போது, “ நாங்கள் பிற நாடுகளை சாந்திருக்கவில்லை. ஒருவேளை சீனா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.பிற நாடுகள் எங்களுக்கு உதவுவது மகிழ்ச்சித்தான். ஆனால் தைவான் இதனை முழுமையாக சார்ந்திருத்திவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

World News

Image
கரோனா வைரஸுக்கு எதிரான ஈரானின் போராட்டத்தை வலுப்படுத்த சுமார் 6.3 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவப் பொருட்களை ஜப்பான் வழங்கியுள்ளது. கரோனா பரவல் நெருக்கடியை ஈரான் சரியாகக் கையாளவில்லை என்றும், ஆகஸ்ட் மாதம் ஈரானில் ஏற்பட்ட கரோனா ஐந்தாம் அலையில் தினசரி 600 பேர் வரை பலியாகினர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில் ஈரானுக்கு ஜப்பான் மருத்துவ உதவி வழங்கியுள்ளது.

World News

Image
ரஷ்யாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் . அமெரிக்காவுடனான மறைமுகமான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்று தெriவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
கரோனா தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா மீது சட்டபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் கொண்டுவந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கரோனா தொற்று பிரேசிலில் தீவிரமாக இருக்கும்போது அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரா அறிவியல் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், கரோனா குறித்து தவறான தகவல்களை மக்களிடத்தில் பதிவு செய்துவந்தார். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனத் தெரிவித்தார்.

World News

Image
2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவுகிறது. கரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் கூட மூடியுள்ளது.

World News

Image
உலகளவில் ஐரோப்பாவில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஐரோப்பாவில்தான் அதிகமான உயிரிழப்பும், தொற்றுப்பரவலும் ஏற்பட்டதாகவும், கடந்த வாரத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் உயர்ந்ததாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன், ரோமானியா, பல்கேரியா, மால்டோவா, ஜார்ஜியா போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. மக்களிடையே குறைவான அளவில் தடுப்பூசி செலுத்துவது இருந்ததே அதிகபட்சமான பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sports in Tamil

Image
முகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையைப் பற்றி கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால் பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்கள் என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

Sports in Tamil

Image
இனவெறிக்கு எதிராக நான் முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்தால் அது சிறந்ததுதான். ஆனால், நான் இனவெறி பிடித்தவன் இல்லை. அதுபோல் சித்திரிப்பது வேதனையாக இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் தெரிவித்தார். கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.

Sports in Tamil

Image
தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் பந்துவீசாமல் தவிர்த்துவந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் நேற்று பந்துவீசி தோனி முன்னிலையி்ல் பயிற்சியில் ஈடுபட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டையில் பந்துபட்டதால், காயமடைந்திருப்பாரோ என்ற அச்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த காயமும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து வரும் 30ம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Sports in Tamil

Image
டிரம்பிள்மேனின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியி்யில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நமிபியா முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 8 வி்க்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது.110 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்்த்து 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.