Posts

Showing posts from August, 2023

World News

Image
புதுடெல்லி: சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் இந்த வரைபடம் உள்ளடக்கி உள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது. அதோடு இந்திய நாட்டின் ஒரு பகுதியின் மீது சீனாவின் உரிமை கோரலை நிராகரித்தும் இருந்தது. இந்தியாவின் வழியில் சீனாவின் புதிய வரைபடத்தை பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் மற்றும் தைவான் நாட்டு அரசுகளும் நிராகரித்துள்ளன.

World News

Image
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இந்த தீ விபத்தில் இதுவரை 73 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் கடும் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டதாகவும், அவரது செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட. நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளை திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறிப்பிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது மனப்பிறழ்வு நமது நாட்டை சீரழித்து மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும்” இவ்வாறு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

World News

Image
புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரியாக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் திலுள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம். சுரேஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அந்த பொறுப்புக்கு கீதிகா நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எம். சுரேஷ் குமார் விரைவில் டெல்லி திரும்பவுள்ளார்.

World News

Image
பெய்ஜிங்: சீனா வெளியிட்டுள்ள புதிய வரை படத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது.

World News

Image
இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கருவூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

World News

Image
பீஜிங்: சீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. காரணம் அதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தனது வரைபடத்தில் இணைத்ததோடு, அக்‌ஷய் சின் பிராந்தியம் சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதுபோல் காட்டப்பட்டுள்ளது. 2023 சீன வரைபடம் எனப் பெயரிடப்பட்ட இந்த வரைபடத்தை சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த புதிய வரைபடம் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய நைன் டேஷ் லைனையும் உள்ளடக்கியுள்ளது.

World News

Image
லண்டன்: பிரிட்டனில் நேற்று திடீரென விமானச் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டனில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ள தாவும், அந்தக் கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் இருந்து செல்லும் மற்றும் பிரிட்டன் நாட்டுக்கு வரும் விமானங்களின் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானத்தில் செல்வதற்காக வந்த விமானப் பயணிகள் ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். சிலர் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

World News

Image
பாரிஸ்: "பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் 'அபயா' எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமலுக்குக் கொண்டுவரப்படும்" என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

World News

Image
சீயோல்: கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது ஏற்கெனவே ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சீன சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

World News

Image
கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார். சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர்.

World News

Image
கரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கிய வட கொரிய குடிமக்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தளர்த்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஏறக்குறைய ஓராண்டு காலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளானது. கரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் வட கொரிய அரசு தனது நாட்டின் எல்லைப் பகுதிகளை அடைத்தது. வெளிநாடுகளில் இருந்த தனது சொந்த குடிமக்கள் கூட மீண்டும் வட கொரியாவுக்குள் அனுமதிக்கவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்தது.

Sports in Tamil

Image
பெங்களூரு: பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

Sports in Tamil

Image
கொழும்பு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த மூன்று போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடரையும் வென்றுள்ளது. முதல் போட்டியை 142 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியை இறுதி ஓவரிலும் வென்றிருந்தது பாகிஸ்தான். நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

Sports in Tamil

Image
பர்மிங்காம்: ஐபிஎஸ்ஏ உலக போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் தங்கம் வென்றுள்ளது இந்தியா. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 7-வது உலக பார்வையற்ற விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உட்பட மொத்தம் பத்து விளையாட்டு பிரிவுகளில் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர் இதில் பங்கேற்று விளையாடினர்.

World News

Image
இஸ்லாமாபாத்: சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார். நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.

World News

Image
அன்டனானரிவோ: மடகாஸ்கரில் உள்ள ஒரு மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று (ஆக. 25) தொடங்கியது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர்.

Sports in Tamil

Image
பாகு : மன வலிமையில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அரசுன் என்றும் கிளாசிக் போட்டியில் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் வலிமையாக திகழ்வதாகவும் பாராட்டி உள்ளார் உலகக் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றமுதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை டைபிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற கணக்கில் வென்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். உலக செஸ் அரங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் கார்ல்சன், ஏற்கெனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

World News

Image
ஏதென்ஸ்: ஒரு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து இன்று கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். மேலும், அந்நாட்டின் பல்வேறு உயர் அதிகாரிகளும் பிரதமரை வரவேற்றனர்.

World News

Image
புதுடெல்லி: நேபாளத்தில் மாதேஷ் மாகாண மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து வியாழன் அதிகாலையில் சிமாரா சப்-மெட்ரோபாலிட்டன் சிட்டியில் உள்ள சூரியமாய் கோயிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஆற்றங்கரையில் 50 மீட்டர் தொலைவில் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 6 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஓட்டுநர்ஜிலாமி கான் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான போல்வால்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் கேட்டி மூனும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான போல்வால்ட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கேட்டி மூனும் தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தனர்.

World News

Image
ஜோகன்னஸ்பர்க்: சீனாவும் இந்தியாவும் எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சுருக்கமாக உரையாடினர். மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, சீனாவும் இந்தியாவும் உறவுகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் எல்லைப் பிரச்சினையை சரியாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
வாஷிங்டன் : தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இரன்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீசார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

World News

Image
மாஸ்கோ : ரஷ்யாவில் நிகழ்ந்த ஜெட் விமான விபத்தில் தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஷின் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வாக்னர் குழு ரஷ்யாவில் இயங்கிவந்த தனியார் ராணுவம் ஆகும். வாக்னர் குழுவை சில நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவது உண்டு. உக்ரைன் உடனான போரில், ரஷ்யா வாக்னர் குழுவை பயன்படுத்தியது.

World News

Image
பெங்களூரு அருகில் உள்ள பெயலாலு என்ற இடத்தில் பிரம்மாண்ட ஆன்ட்டனா மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆண்டனா 38 மீட்டர் குடை வடிவத்தில் உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் இருண்ட அல்லது அடர்த்தியான நிழல் படர்ந்த பகுதியில் தரையிறங்கும்போது, பெங்களூருவில் இருந்து ஆன்ட்டனா மூலம் அதன் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்குதான் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் (இஎஸ்ஏ) இஸ்ரோவுக்கு உதவ முன்வந்தன. அதன்படி, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, அது எந்தப் பாதையில் செல்கிறது, தூரம், நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் நாசா மற்றும் இஎஸ்ஏ கண்டறிந்து இஸ்ரோவுக்கு உடனுக்குடன் தகவல் அளித்தது. அதற்காக பயன்படுத்தும் அதிநவீன ஆன்ட்டனாக்கள் மற்றும் விக்ரம் லேண்டரின் பாதையை கண்காணித்து தகவல் அளிக்க எத்தனை மணி நேரம் ஆகிறதோ, அதற்கேற்ப கட்டணத்தை இஸ்ரோவிடம் இருந்து நாசாவும் இஎஸ்ஏ.வும் பெற்றுக் கொள்கின்றன.

Sports in Tamil

Image
டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

Sports in Tamil

Image
கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி சீன தைபேவின் சாங் சிங் ஹுய், யங் சிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயத்ரி, ட்ரீசா ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஷென் குயிங், ஜியா யி ஃபேன் ஜோடியை எதிர்கொள்கிறது.

World News

Image
ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில், கீழே விழுந்து கிடந்த தேசியக் கொடியை எடுத்து பாக்கெட்டில் வைத்தார் பிரதமர் மோடி. பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற தலைவர்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் போட்டோ எடுப்பதற்காக மேடையில் ஏறினர். அப்போது அவர்கள் அருகில் வைக்கப்பட வேண்டிய தேசியக் கொடிகள் மாநாட்டு மேடையின் தரையில் கிடந்தன. இதைப் பார்த்த பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை கீழே குனிந்து எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்தார்.

World News

Image
மாஸ்கோ : விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 9 பேர் மரணமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுளளது. சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது இந்த வாக்னர் குழு. ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடக்கம். ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Sports in Tamil

Image
பாகு: 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் துப்பாக்கிச் சுடுதல் வீரர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்தப் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷ் சிங் பங்கேற்று 583 புள்ளிகளைக் குவித்தார். இதன் மூலம் அவர் தகுதிச் சுற்றில் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஆதர்ஷ் சிங் இழந்துள்ளார். உக்ரைன் வீரர் டெனிஸ் குஷ்நிரோவ் 583 புள்ளிகள் எடுத்தபோதும் அவர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். எஸ்டோனியாவின் பீட்டர் ஒலஸ்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

Sports in Tamil

Image
கொல்கத்தா: துராந்த் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கான அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர். இதில் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சாம்பியனான மோகன் பகான், ஐஎஸ்எல் தொடரின் லீக் சுற்றில் முதலிடம் பிடித்து ஷீல்டு வென்ற மும்பை சிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் வரும் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முன்னதாக 24-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - இந்திய ராணுவம் அணிகள் மோதுகின்றன.

World News

Image
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும். ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

World News

Image
ஜோகன்னஸ்பர்க் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது.

Sports in Tamil

Image
தன்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது தன் மீதே தனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், அது வெறுப்பையும், சலிப்பையும் தந்தாலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய தன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது என்றும் உணர்கிறார் புஜாரா. இதனை அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா, கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.அதில் சோபிக்கவில்லை. ஆனால், இவர் மட்டுமா சோபிக்கவில்லை? தோற்றால் யாரையாவது நீக்கி கண் துடைப்பு செய்ய வேண்டும். அதற்கான பலிகடாவாக இவரை உட்கார வைத்து விட்டனர். கேட்டால் புஜாராவைக் கடந்து செல்கிறோம் என்பார்கள்.

World News

Image
வாஷிங்டன்: மனித ஈடுபாடு இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பததால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும் என மாகாண நீதிபதி பெரில் ஹோவெல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
மும்பை: எதிர்வரும் ஆசிய ஒருநாள் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அறிமுகமாக அமையும். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். அதையடுத்து ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இருக்க வேண்டும் என பலரும் சொல்லி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது அயர்லாந்து பயணித்துள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர். கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இளம் வீரர் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுலுக்கு புதிதாக காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று டெல்லியில் அறிவித்தார். 20 வயதான திலக் வர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Sports in Tamil

Image
கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனோய், லக்‌ஷயா சென் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 5-7ம் நிலை வீரரான பின்லாந்தின் கல்லே கோல்ஜோனெனுடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Sports in Tamil

Image
ஃபிடேவின்: நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார். உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.

World News

Image
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது கடை வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை பறக்கவிட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் சிறிய துணிக் கடை வைத்திருந்தவர் லாரா ஆன் கார்லேடன் (66). இவர் தனது கடையின் வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை ஏற்றிவைத்துள்ளார். இதனையடுத்து லாராவின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கொடியை உடனடியாக அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Sports in Tamil

Image
புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் தமிழரசனும், உயரம் தாண்டுதலில் சர்வேஷ் அனில் குஷாரேவும் இறுதி சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் தமிழரசன் மூன்றவாது ஹீட் பிரிவில் பங்கேற்றார். இதில் பந்தய தூரத்தை சந்தோஷ் குமார் தமிழரசன் 50.46 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

World News

Image
மாஸ்கோ: நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11-ம் தேதி சோயுஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. திறன்மிக்க உந்துவிசை இன்ஜின் பொருத்தப்பட்டிருந்ததால், பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளை முழுமையாக கடந்து செல்லாமல், குறுக்கு வழியில் விரைவாக சென்று நிலவை 10 நாளில் நெருங்கியது.

Sports in Tamil

Image
சிட்னி: நடப்பு பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. மொத்தம் 64 போட்டிகள். இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

World News

Image
கோபன்ஹேகன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதனை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு 6 எஃப்-16 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் 8 போர் விமானங்கள் மற்றும் 2025-ல் 5 போர் விமானங்கள் என 19 எஃப்-16 போர் விமானங்களை வழங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளனர். “சுதந்திரத்துக்காக போராடும் உக்ரைனுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக இதை வழங்குகிறோம். உக்ரைனுக்கு தேவை உள்ள வரை இந்த ஆதரவு தொடரும்” என மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

World News

Image
மாஸ்கோ: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று சொல்லப்பட்டது.

Sports in Tamil

Image
சென்னை : மணிப்பூரில் இருந்து தமிழகத்தில் பயிற்சி பெற வந்துள்ள வீரர்கள் எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

World News

Image
லண்டன் : வடக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியரை போலீஸில் சிக்க வைக்க, இந்திய வம்சாவளி மருத்துவர் உதவியுள்ளார். வடக்கு இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2015-ம்ஆண்டு ஜூன் மாதத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தன. இது அங்கு பணியாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர் டாக்டர் ரவி ஜெயராமுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

World News

Image
மாஸ்கோ : இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் இதுதொடர்பாக, "லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் வேலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த செயல்பாட்டின்போது தானியங்கு நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்ததால், திட்டமிட்டப்படி அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. எனினும் விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்" என்று கூறியுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை ரோஸ்காஸ்மோஸ் அளிக்கவில்லை.