புதுடெல்லி: ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலானபோர் கவலை அளிக்கிறது. இருதரப்பும் போரை நிறுத்தி, அமைதிபேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர். இதற்கு, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இண்டியானா: அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை என அவரது தாயார் தெரிவித்த அடுத்த நாளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலிசன் சாலையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்ததில் பர்டூர் பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவர், நீல் ஆச்சாரியா என்பதும் தெரிய வந்தது. அவர் பர்டூர் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்டின்சன் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் (டேட்டா) அறிவியல் படித்து வந்துள்ளார்” என்றனர்.
குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானில் நோஷ்கி, துர்பத், புளேடா ஆகிய 3 இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎல்ஏ போராளிகள் ஸ்னைபர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி நோஷ்கியின் பால்கானி, கேஷாங்கி பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சிப்பாய் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
Comments
Post a Comment