Posts

Showing posts from July, 2023

Sports in Tamil

Image
டிரினிடாட்: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாடில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

World News

Image
புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இதுகுறித்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். விண்வெளி துறையில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படும்.

World News

Image
ஹாங்காங்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லுசிடி (30), உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் மீது ஏறி சாகசம் செய்து வந்தார். அந்த வகையில் ரெமி கடந்த வாரம் ஹாங்காங்கில் உள்ள 68 மாடிகளைக் கொண்ட ‘ட்ரெகுன்ட்டர்’ என்ற குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள பாதுகாவலர்களிடம் 40-வது மாடியில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்கப் போவதாகக் கூறி உள்ளே சென்றுள்ளார். இதுபற்றி, நண்பர் என கூறியவரிடம் பாதுகாவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ரெமியை தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பாதுகாவலர் ஒருவர் ரெமியை தேடிச் சென்றுள்ளார். அதற்குள் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றுள்ளார் ரெமி. அங்கிருந்து சாகசம் செய்தபோது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Sports in Tamil

Image
கொழும்பு: நடப்பு எல்பிஎல் டி20 தொடரில் காலே டைட்டன்ஸ் மற்றும் டம்புல்லா ஆரா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து ஆட்டத்தை இடைமறித்தது. இது தொடர்பாக வங்கதேசத்தை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக். காலே மற்றும் டம்புல்லா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டம்புல்லா அணி பேட் செய்த போது பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த சூழலில் தினேஷ் கார்த்திக் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த போட்டியில் இரு அணிகளும் 180 ரன்கள் எடுத்தன. அதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் காலே அணி வெற்றி பெற்றது.

Sports in Tamil

Image
லண்டன்: நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கடைசி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட். லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் குவித்தது.

Sports in Tamil

Image
நியூயார்க் : மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் நிகோலஸ் பூரன் சாதனை சதம் வீசி MI நியூயார்க் அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், சர்வதேச வீரர்களைக் கொண்டு மேஜர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்களே அங்கும் அணிகளை வாங்கியுள்ளனர். இந்தத் தொடரின் முதல் சீஸனின் இறுதிப் போட்டியில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.

Sports in Tamil

Image
சிட்னி: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொலம்பியா வீராங்கனைகள் லிண்டா கேசிடோ, மேனுலா வனேகாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் நார்வே அணி 6-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸையும், மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் தென் கொரியாவையும் தோற்கடித்தன.

World News

Image
செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மா ராஜனின் (61) திடீர் மறைவால் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் மனைவி உட்பட பலர், பத்மா ராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 25-ம் தேதி திடீரென அவர் காலமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செர்பியா நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளின் மேம்பாட்டிலும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்து வந்த பத்மா ராஜன் சென்னையில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர். அதன் பிறகு செர்பியாவுக்கு வந்து குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார்.

Sports in Tamil

Image
புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 தொடரில் சென்னை லயன்ஸ் அணியை 7-8 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கோவா சாலஞ்சர்ஸ் அணி. இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டியில் நேற்று சென்னை லயன்ஸ் - கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

World News

Image
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது ராட்சத ஹம்மர். இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி. இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது.

Sports in Tamil

Image
மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 37 வயதான ஸ்டூவர்ட் பிராட், கடந்த 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அவரது அறிமுகம் அமைந்தது. இருந்த போதும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் அவர் உள்ளார். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

World News

Image
பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலை படை மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sports in Tamil

Image
குயின்ஸ்லாந்து : ஃபிபா உலக மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் மகளிர் அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. நேற்று குயின்ஸ்லாந்திலுள்ள சன்கார்ப் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், பிரேசில் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீராங்கனை யூஜின் லே சோம்மர் ஒரு கோலடித்தார். 2-வது பாதியில் பிரேசில் வீராங்கனை டெபோரா கிறிஸ்டின் ஒரு கோலடிக்க 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தில் சமநிலை எட்டப்பட்டது.

Sports in Tamil

Image
புனே : புனேவில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் டெல்லி தபாங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது. இந்த மோதலில் 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 6-6 என சமநிலையில் இருந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா அணியின் ரீத் ரிஷ்யா அபாரமாக விளையாடி தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள சகநாட்டைச் சேர்ந்தவரும் டெல்லி தபாங் அணியின் முன்னணி வீராங்கனையுமான ஸ்ரீஜா அகுலாவை எதிர்கொண்டார். இதில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ரீத் ரிஷ்யா தனது தாக்குதல் ஆட்டத்தால் ஸ்ரீஜா அகுலாவை நிலைகுலையச் செய்ததுடன் தனது திறனால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் கடைசிசெட்டில் ரீத் ரிஷ்யா, ஸ்ரீஜாவை வீழ்த்தியதும் ஆல்வரோ ரோபிள்ஸ் ஓடிவந்து ரீத் ரிஷ்யாவை தூக்கி கொண்டாடினார்.

World News

Image
நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Sports in Tamil

Image
பிரிட்ஜ்டவுன் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடினர்.

Sports in Tamil

Image
பிரிட்ஜ்டவுன் : மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடினர்.

World News

Image
பெஷாவர்: இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு தனக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு ரொக்கப் பரிசு, நிலம் இன்னும் பிற பரிசுகளைக் கொடுத்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் மோசின் கான் அப்பாஸி. இவர் பாக் ஸ்டார் குரூப் நிறுவனங்களின் தலைவராவார். அஞ்சு தற்போது ஃபாத்திமா என பெயர் மாற்றம் செய்துள்ளார். இது குறித்து மோஷின் கான் கூறுகையில், "அஞ்சுவுக்கு 10 மார்லா நிலம். பாகிஸ்தான் ரூபாய் 50 ஆயிரம், இன்னும் சில பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளேன். அஞ்சுவுக்கு இப்போது ஃபாத்திமா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஞ்சு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்து முஸ்லிமாக மாறியுள்ளார். அவரை வரவேற்கும் விதமாகவே இந்த பரிசுங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரைப் பாராட்டும்விதமாக இதை நான் செய்துள்ளேன்" என்றார்.

Sports in Tamil

Image
அடிலெய்ட் : உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அடிலெய்ட் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஹைதி மகளிர் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சீன அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை.

Sports in Tamil

Image
பிரிட்ஜ்டவுன் : மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். இந்தியா, மேற்கு இந்தியத் தீவு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் பார்படோஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

World News

Image
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா. இவரது 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அதிபர் ஹலிமா கடந்த மே மாதம் 29-ம் தேதி அறிவித்தார். இதனால் சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது ராஜினாமா அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார்.

Sports in Tamil

Image
புதுச்சேரி: நடப்பு தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் 84 பந்துகளில் சதம் விளாசியுள்ளார் ரியான் பராக். தனது இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களை அடித்து அணியை சரிவிலிருந்து அவர் மீட்டார். கிழக்கு மண்டல அணிக்காக அவர் இந்தத் தொடரில் விளையாடி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானம் 3-ல் வடக்கு மண்டல அணிக்கு எதிராக அவர் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். 57 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Sports in Tamil

Image
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லண்டன் தி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. பென் டக்கெட் 41 ரன்னில் மிட்செல் மார்ஷ் பந்திலும், ஸாக் கிராவ்லி 22 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்திலும் வெளியேறினர். மொயின் அலி 34 ரன்னில் போல்டானார்.

Sports in Tamil

Image
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக 2-0 என கைப்பற்றியது. கொழும்பு நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 132 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 563 ரன்கள் எடுத்தது. அப்துல் ஷபிக் 201 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அகா சல்மான் 132, மொகமது ரிஸ்வான் 37 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தனர்.

World News

Image
துபாய்: கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

World News

Image
லண்டன்: நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ‘ஃப்ரீமேன்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற கார்களுக்கும் பரவியது. தீயை அணைக்க கப்பல் பணியாளர்கள் மேற்கொண்ட 16 மணி நேர முயற்சி தோல்வி அடைந்தது. தகவலின் பேரில் நெதர்லாந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். கரும் புகையுடன் எரிந்து கொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
பார்படாஸ் : மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Sports in Tamil

Image
புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் - பெங்களூரூ ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரூ ஸ்மாஷர்ஸ் 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரில் ஜெராசிமென்கோ, ஜீத் சந்திரா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிரிவில் மணிகா பத்ராவும் வெற்றியை வசப்படுத்தினர். கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களை கோவா அணி வென்றது. பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த போதிலும் ஒட்டுமொத்தமாக 36 புள்ளிகளுடன் கோவா சாலஞ்சர்ஸ் முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

Sports in Tamil

Image
டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மானை எதிர்த்து விளையாடினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 2-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இந்த சீசனில் சிந்து முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறுவது இது 7-வது முறையாகும்.

Sports in Tamil

Image
பார்படாஸ்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என வென்றது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பார்படாஸில் இன்று இரவு நடைபெறுகிறது.

World News

Image
கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஒடேசா நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தேவாலயம் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நேற்றுமுன்தினம் பலத்த சேதமடைந்தது. இதில், தேவாலயத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். தேவாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

World News

Image
ரியாத்: உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

World News

Image
ஹைதராபாத்: அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார். ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலை அடைந்த பாத்திமா, தனக்கு தெரிந்த சிலரிடம் அமெரிக்கா சென்று தனது மகள் குறித்து விவரங்களை அறியுமாறு கேட்டுக் கொண்டார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது சாட்விக், ஷிராக் ஜோடி. ஆசிய சாம்பியனான இந்த ஜோடி இந்த சீசனில் 500 புள்ளிகள் கொண்ட கொரியா ஓபன், 300புள்ளிகள் கொண்ட சுவிஸ் ஓபன், ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தோனேஷியா ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றிருந்தது. தற்போது சாட்விக், ஷிராக் ஜோடி 87,211 புள்ளிகளுடன் உள்ளது.

World News

Image
கலிபோர்னியா: கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒருவாரமாக அமெரிக்காவில் அரிசிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அங்கு அரிசி விலை உயர்ந்து வருகிறது. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Sports in Tamil

Image
கொழும்பு: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமேஷ் மெண்டிஸ் 27, திமுத் கருணரத்னே 19 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 6, ஷான் மசூத் 51 ரன்னிலும் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தனர்.

World News

Image
சிங்கப்பூர்: விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போதைய உலக சூழலுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு குறைப்பதற்கான அவசர தேவை உருவாகியுள்ளது. கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

World News

Image
பெஷாவர் : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர்.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: பாஸ்பால் பாணி ஆட்ட அணுகுமுறை சுவாரசியமானதுதான். ஆனால், அதை செயல்படுத்த அதற்கு ஏற்ற ஆடுகளம் மற்றும் களச் சூழல் வேண்டும் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ‘பாஸ்பால்’ முறையில் கிரிக்கெட்டை அணுகி வருகிறது. அது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. பாஸ்பால் ஆட்ட முறையை விமர்சித்தோ அல்லது வரவேற்றோ அது இருக்கிறது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் முடிந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி மட்டும்தான் டிரா ஆகியுள்ளது. அது கூட மழை காரணமாக நடந்தது.

Sports in Tamil

Image
மோரிஸ்வில்லே: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து 22 வருட சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில்முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி 121, ரோஹித்சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தனர்.

World News

Image
கீவ் (உக்ரைன்): பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே 500 நாட்களுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில் இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
யோசுவா: கொரியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டி கொரியாவின் யோசுவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், உலகத் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் ஃபஜார் அல்பியன், முகமது ரியான் அர்டியான்டோ ஜோடியும் மோதின.

World News

Image
கலிபோர்னியா: எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார். இந்நிலையில், ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். சிறந்த லோகோ கிடைக்கும்பட்சத்தில் இன்று இரவே ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டுவிடும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

World News

Image
கைபர் பக்துன்வா: பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் தனது காதலனை சந்திக்க இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் எல்லை தாண்டி சென்றுள்ளதாக தகவல். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி முகமை நிறுவனமான ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியை சேர்ந்த 35 வயது பெண்ணான அஞ்சு, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வசித்து வரும் 29 வயதான தனது காதலன் நஸ்ருல்லாவை சந்திக்க அங்கு சென்றுள்ளார். அவர் அந்த மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஃபேஸ்புக் மூலமாக இருவரும் பேசி பழகியுள்ளனர். அஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.

Sports in Tamil

Image
மான்செஸ்டர்: நடப்பு ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடரை தக்க வைத்துள்ளது.

Sports in Tamil

Image
கொழும்பு: வளர்ந்து வரும் வீரர்களுக்கான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இந்திய ஏ அணியை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் ஏ அணி. 8 அணிகள் இந்த தொடரில் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் ‘குரூப் பி’-யில் இடம் பெற்றிருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ வென்றது. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொழும்பு நகரில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

Sports in Tamil

Image
யோசுவா : கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொரியாவின் யோசுவா நகரில் 500 புள்ளிகள் கொண்ட கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.