Posts

Showing posts from March, 2023

World News

Image
ஜெனீவா: தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் மற்றும் 39 சதவீதம் குறைவாகும். ஒட்டுமொத்த போக்கு இவ்வாறாக இருக்க சில நாடுகளில் சமீப காலமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மார்ச் 26ஆம் தேதியின்படி உலகம் முழுவதும் 76.1 கோடி தொற்றுகளும், 6 கோடியே 80 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

Sports in Tamil

Image
ஐபிஎல் தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. முதல் 30 நிமிடங்கள் அர்ஜித் சிங்கின் தனது இசை மற்றும் பாடலால் ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். விஷால் நடித்த ‘எனிமி’ படத்தில் இடம் பெற்ற மனசோ இப்ப தந்தி அடிக்குது பாடல், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற உ சொல்றீயா மாமா மற்றும் சில இந்தி பாடல்களுக்கு தமன்னா நடனமாடினார். வணக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறியபடி மேடையில் தோன்றிய ராஷ்மிகா புஷ்பா படத்தின் ஐயா சாமி சாமி, ஸ்ரீவள்ளி பாடல், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் சில இந்தி பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் தோனி விழாமேடைக்கு வந்தார். தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் டிராபியை மேடையில் கொண்டு வந்து வைத்தார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது.

Sports in Tamil

Image
இன்று ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் விளையாடும் 10 அணிகள் குறித்த ஓர் பார்வை. மும்பை இந்தியன்ஸ்: கேப்டன்: ரோஹித் சர்மா

World News

Image
மான்ஹாட்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 76 வயதான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க பான் ஸ்டார் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு 1,30,000 டாலர் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அவர் அந்தத் தொகையை 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த குற்றசாட்டின் பேரில் டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி முன்வைத்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Sports in Tamil

Image
ஐபிஎல் தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய விதிகளின் விவரம்.. ‘இம்பேக்ட் பிளேயர்’: ஐபிஎல் தொடரில் முறை ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

World News

Image
புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் 30 பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 30 மாத்திரைகளின் விலை ரூ.46,000 ஆகும். ஆரம்ப காலத்தில் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகின.

World News

Image
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிலன் மாகாணத்தின் ஆளுநர் ஜிம் ஹட்டாமேன் கூறியதாவது. தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் பேசிலன் நகருக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை.

Sports in Tamil

Image
அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. வரும் மே 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், இரு முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தலா ஒரு முறைபட்டம் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் களமிறங்குகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்றில் முதல் 4 இட

World News

Image
நியூயார்க்: H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது. சில குறிப்பிட்ட H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு வேலை வாய்ப்பை அங்கீகரிக்கும் ’ ஒபாமா கால விதிமுறைகளை’ தள்ளுபடி செய்யும்படி ’ Save Jobs USA’ என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி தன்யா சுட்கான் வழக்கை தள்ளுபடி செய்தார்.

World News

Image
பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு @GovtofPakistan இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக இந்திய பொதுமக்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கைப் பார்க்கவும், கருத்துகளை பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுவது கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். இந்திய அரசு சட்டபூர்வமாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ட்விட்டர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நோட்டீஸில், தங்கள் நிறுவனத்தின் கோட்பாடுகளின்படி, தகுதியான சட்டபூர்வ கோரிக்கைகளை ஏற்று எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தியே பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கை இந்தியாவில் தடை செய்துள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Sports in Tamil

Image
மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு இந்த சீசனே கடைசியாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை. இதை நான் கடந்த 2 முதல் 3 வருடங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். அவர், இன்னும் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றே நினைக்கிறேன்” என்றார்.

World News

Image
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி நீதிமன்றத்தைத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

Sports in Tamil

Image
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் மோசமாக அமைந்தது. லீக் சுற்றில் 10 தோல்வி, 4 வெற்றிகளுடன் அந்த அணி கடைசி இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் 15 சீசன்களிலும் மும்பை அணியின் மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அதேவேளையில் கடந்த சீசன் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் சரியாக அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் அந்த சீசனை நிறைவு செய்திருந்தார் ரோகித் சர்மா. மும்பை அணியின் ரன் இயந்திரமாக கருதப்படும் அவர், 19.14 சராசரியுடன் 268 ரன்கள் மட்டுமே சேர்த்து கடும் ஏமாற்றம் அளித்தார். இந்த சீசனில் அந்த அணி எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் பலரை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

World News

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

Sports in Tamil

Image
பியூனஸ் அயர்ஸ்: சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் அர்ஜெண்டினா அணிக்காக 100 சர்வதேச கோல்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி. Curacao அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்-ட்ரிக் கோல்கள் பதிவு செய்து அசத்தி இருந்தார். முறையே ஆட்டத்தின் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் இந்த மூன்று கோல்களையும் அவர் பதிவு செய்திருந்தார். அதுவும் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா வென்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தனது 100-வது சர்வதேச கோலை அவர் பதிவு செய்துள்ளார். கடந்த 2005 முதல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார்.

Sports in Tamil

Image
சச்சின் டெண்டுல்கருக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு எழும் கேள்வி என்னவெனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியினால் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதே. இடது கை வேகப்பந்து வீச்சாளர், டீசண்டான பேட்டிங் கொண்ட ஆல்ரவுண்டரும் ஆவார் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் இன்னமும் அறிமுகமாகவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த கேள்வி பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, “அர்ஜுன் இன்னும் உயரிய மட்டத்திற்கு தயாராகவில்லை, அவர் இன்னும் கொஞ்சம் கடினமாக சில பகுதிகளில் பணியாற்ற வேண்டியுள்ளது.

Sports in Tamil

Image
கடந்த ஐபிஎல் தொடருக்கும் இப்போது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சில பல புதிய விதிமுறைகள் தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக டாஸ் போட்ட பிறகு அணிகள் தங்கள் ஆடும் லெவனை இறுதி செய்யலாம். அதாவது ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற ஒன்று அறிமுகம் ஆகின்றது. அதாவது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரரை அணிகள் களமிறக்கலாம். நடுவர் தீர்ப்பு ரிவியூ முறை வெறும் அவுட்களுக்கு மட்டுமல்ல, மாறாக நோ-பால், வைடுகளுக்கும் ரெஃபரல் உண்டு.

World News

Image
கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஏன் இந்த போராட்டம்? - இஸ்ரேலில் நீதித் துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அதாவது, நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித் துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்கவும் நீதித் துறையில் மாற்றம் கொண்டுவருவதாகச் சொல்லி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

World News

Image
ரியாத் : சவுதி அரேபியாவில் உள்ளபுனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உம்ரா புனித யாத்திரை செல்வோரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று மெக்காநகரை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யாத்ரீகர்கள் அதில் இருந்தனர்.

Sports in Tamil

Image
சென்னை: இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போட்டி தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பென் ஸ்டோக்ஸின் உடற்தகுதி விஷயத்தில் சிஎஸ்கே மருத்துவக்குழுவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவக்குழுவும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறோம். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக களமிறங்க தயாராக உள்ளார். அவர், பந்து வீச்சுக்கு தயாராவதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

World News

Image
பாரிஸ்: “ விலங்குகளிடமிருந்தே கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பாரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்துள்ளார். 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துவிட்டது. இன்னமும் கூட கரோனா அச்சுறுத்தல் முழுமையாக தீர்ந்துவிடவில்லை என்றே உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. இந்நிலையில், கரோனா வைரஸ் வூஹான் உணவுச் சந்தையில் இருந்த விலங்குகள் மூலமே மனிதர்களுக்குப் பரவியது என்று பிரான்ஸ் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான தேசிய மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஃப்ளாரன்ஸ் டெபார் கூறியிருந்தார்.

World News

Image
மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சவுதியில் அகபா ஷார் பகுதியில் இருந்து புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து தீப்பிடித்து ஏறிந்தது. இதில் 20 பேர் பலியாகினர். விபத்தில் 29 -க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

World News

Image
வாஷிங்டன்: ராகுல் காந்தி மீதான வழக்கை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக மாண்புகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது" என்றார்.

Sports in Tamil

Image
மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளில் இறுதிச் சுற்றின்முதல் போட்டி நிகத் ஜரீனுக்கும் வியட்னாம் வீராங்கனை நிகுயென் தீ தம் என்பவருக்குமிடையே நடைபெற்றது. முதல் சுற்றில் தொடக்கத்தில் பல நொடிகளுக்கு தன் எதிரியின் உத்திகளை அறிந்து கொள்வதற்காகவே நிகத் செலவிட்டது போல் இருந்தது. முதல் சுற்றில் நிகத்துக்கு ஆதரவாக 5-0 என்ற கணக்கில் முடிவானது என்றாலும் இரண்டாவது சுற்றில் 2-3 என்று முடிவு அவருக்கு எதிராகப் போனது. எனவே மூன்றாவது சுற்று பரபரப்பானது. அதில் சிறப்பாக செயல்பட்ட நிகத் ஜரீன் இறுதியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

World News

Image
டென்னிசி : அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பள்ளி ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Sports in Tamil

Image
டெல்லி: தனக்கு ஒரு வேலை வேண்டி சுமார் 8 மாத காலமாக 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்து இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர். அவர் பெயர் ஃபர்ஹான் என தெரியவந்துள்ளது. இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். “கடந்த 2022 ஜூலையில் வேலை தேடும் படலத்தை தொடங்கினேன். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்தேன். அதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நான் கல்லூரியை முடித்து வெளிவந்த போது வேலை தேடி பெற்றதற்கும், இப்போதும் நிறைய சவால் இருப்பதை கண்டேன். தொழில்நுட்ப துறையில் வேலை பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. ஒருபுறம் பணி நீக்கம் நடைபெற்று வரும் காலம் இது.

World News

Image
கொழும்பு : இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் இந்திய உயர்மட்டக் குழு நேற்று சந்தித்தது. அப்போது எரிசக்தித் துறையில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து முன்னெடுத்து வரும் பணிகளின் நிலவரம் குறித்து இந்திய குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தனர். இலங்கையில் இந்திய அரசின் பங்களிப்புடன் எரிசக்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு இலங்கை திரிகோணமலையில் 100 மெகாவாட் சோலார் ஆலை அமைக்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விரு நாடுகளும் இணைந்து இலங்கையில் எரிபொருள் சேமிப்பு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இந்நிலையில், எரிசக்தித் துறையில் நடந்த முன்னேற்றங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

World News

Image
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 வயது சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான நபருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையை லூசியாணா நீதிமன்றம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் லூசியாணா மாகாணம் ஷிரேவ்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் லீ ஸ்மித் (35). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மான்க்ஹவுஸ் ட்ரைவ் என்ற ஓட்டலில் தங்கியிருந்தார்.

Sports in Tamil

Image
மும்பை : முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (WPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீராங்கனையான மெக் லேனிங் உடன் ஷெபாலி வர்மா ஓப்பனிங் செய்தார். 4 பந்துகளை சந்தித்த ஷெபாலி தலா ஒரு சிக்ஸ் பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகி சரிவை தொடங்கி வைத்தார். இதன்பின் வந்தவர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை.

Sports in Tamil

Image
புதுடெல்லி : மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் 22 வயதான இந்தியாவின் நீது கங்காஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 3 முறை ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் சவீட்டி பூரா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.

Sports in Tamil

Image
டேன்ஜர்: கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ. நட்பு ரீதியிலான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மொராக்கோ விளையாடியது. இந்நிலையில், பிரேசில் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

World News

Image
டெல்லி: கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அண்மையில் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Sports in Tamil

Image
மதுரை: புனேயில் நடந்த தேசிய அள விலான தடகளப் போட்டியில் தமிழக பாரா ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் 29 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 16 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவது மிருந்து 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளை யாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வான 80 பேர் பங்கேற்றனர்.

Sports in Tamil

Image
டெல்லி: இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் ஒருநாள் அணியில் தன்னைக் காட்டிலும் சுப்மன் கில்லைதான் தேர்வு செய்வேன் என இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அணியில் தவானுக்கு மாற்றாக கில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 பார்மெட்டில் தனக்கான இடத்தை அனுபவ வீரர் ஷிகர் தவான் கிட்டத்தட்ட இழந்துவிட்டார். கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் விளையாடி இருந்தார். ஐசிசி தொடர்களில் அபாரமாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன் என தவான் அறியப்படுகிறார். எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அவருக்கு மாற்றாக இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.

Sports in Tamil

Image
போபால்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனுபாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்க போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனுபாகர் 20 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார். ஜெர்மனியின் டோரீன் 30 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் யு ஸியு 29 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சர்வதேச போட்டியில் மனுபாகர் இரு வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பதக்கம் பெற்றுள்ளார்.

Sports in Tamil

Image
புதுடெல்லி: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் அசத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்தச் சூழலில் யுவராஜ் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் வேகத்திலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர் சுழலிலும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. வரும் ஐபிஎல் சீசனில் தனது மோசமான ஆட்டத்தை அவர் தொடர்ந்தால் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகும். இந்நிலையில், யுவராஜ் தனது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளார்.

Sports in Tamil

Image
ஆக்லாந்தில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணியை நியூஸிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இத்தனைக்கும் நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன், சவுதி, கான்வே, சாண்ட்னர், பிரேஸ்வெல் ஆகியோர் இல்லை. டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 274 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை 19.5 ஓவர்களில் 76 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது.

Sports in Tamil

Image
ஷார்ஜா: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியை நெருங்கி வந்த ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றிக் கோட்டை கடக்க முடியவில்லை. ஆனால், இந்த முறை அதை நேர்த்தியாக கடந்து வெற்றி பெற்றுள்ளது ஆப்கன். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் கேப்டன் ரஷித் கான் உட்பட ஆப்கானிஸ்தான் பவுலர்கள் அபாரமாக பந்து வீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தி இருந்தனர்.

Sports in Tamil

Image
இந்திய அணித்தேர்வு ரகசியக் குறியீட்டின் புரியாத இன்னொரு புதிர்தான் பிரிதிவி ஷா. ஏன் இவரை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பது இன்னமும் கூட புதிர்தான். இவரிடம் லாரா, சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகிய மும்மூர்த்திகளின் கலவையைக் கண்டவர் ரவி சாஸ்திரி. இப்போது என்ன ஆயிற்று? இந்தக் கலவை கரைந்து போய் விட்டதா? இல்லை ஒழிக்கப்படுகின்றாரா? எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதுமில்லை, கேட்டாலும் பதிலும் கிடைப்பதில்லை. பிசிசிஐ-யின் ‘வெளிப்படைத்தன்மை’ அத்தகையது. இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடர் இந்த மாத இறுதியில் தொடங்குகின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரிதிவி ஷா, ஏற்கெனவே டேவிட் வார்னருடன் சேர்ந்து சிலபல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். இதுவரை பிரிதிவி ஷா மொத்தம் 63 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1588 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 25 தான். 99 அதிகபட்ச ஸ்கோர். ஸ்ட்ரைக் ரேட் 147. 14 அரைசதங்களை அடித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் வெறும் 283 ரன்களையே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 152.97 என்று வைத்துள்ளார். ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த 2வது வீரர் என்ற பெருமை இவருக்க

World News

Image
மாஸ்கோ: 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் புதினிடம் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக இந்த வாரம் ரஷ்யா வந்திருந்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

World News

Image
டொரண்டோ : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

Sports in Tamil

Image
மும்பை : WPL 2023 எலிமினேட்டர் சுற்றில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது. முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்யும் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

Sports in Tamil

Image
லிஸ்பன்: கால்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரொனால்டோ அறியப்படுகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். நடப்பு யூரோ கோப்பை தகுதி சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக ரொனால்டோ களம் கண்டார். அது அவரது 197-வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 2 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். வியாழக்கிழமை அன்று இந்த சாதனையை ரொனால்டோ படைத்திருந்தார். கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார்.

Sports in Tamil

Image
அகமதாபாத்: கடந்த 2011-ல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதி, இறுதி என கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அந்தப் போட்டி இதே நாளில் (மார்ச் 24) நடைபெற்றது. இந்திய அணியின் வெற்றியில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா என இருவரும் பிரதான பங்கு வகித்தனர். ஆட்டத்தில் அழுத்தம் நிறைந்த நேரத்தில் அபாரமாக பேட் செய்து அசத்தினர். இந்த வெற்றி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஏனெனில் 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் அந்த அணி களம் கண்டிருந்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் சதம் விளாசி இருந்தார்.

World News

Image
வாஷிங்டன்: அமெரிக்கர்களை உளவு பார்த்து சீன அரசுக்கு தகவல் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீனா அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசு துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

World News

Image
பியாங்யோங்: கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சோதனையில் எந்தவிதமான ஆயுதத்தை வட கொரியா பயன்படுத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.

World News

Image
சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் நானாகல் அம்பியான என்ற இடத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தாராபூர் என்ற கிராமத்தில் அம்ரித்பால் சிங் சென்ற பைக் நிறுத்தப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

Sports in Tamil

Image
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றுதான் கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியின் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் சூப்பர் பவர் பெற்ற மின்னல் முரளி போல செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்திருப்பார் தோனி. அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பெற்றிருக்கும். அந்தப் போட்டி இதே நாளில் கடந்த 2016-ல் நடைபெற்றிருந்தது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருக்கும். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டும். 19 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருக்கும். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

World News

Image
கீவ்: உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைகாக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று புதின் தெரிவித்துள்ளார்.

Sports in Tamil

Image
ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீழ்த்தியுள்ளது தமிழ்நாடு அணி. 3-1 என்ற கணக்கில் அரையிறுதியில் இந்த வெற்றியை தமிழ்நாடு பெற்றுள்ளது. யாஷினி மற்றும் கவுஷிகா என இருவரும் மணிகா பாத்ராவை வீழ்த்தியது தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடி அசத்தி இருந்தார் கவுஷிகா. அது மணிகா பாத்ராவுக்கு பின்னடைவாக அமைந்தது. 11-8, 9-11, 11-8, 7-11, 11-5 என கவுஷிகா வெற்றி பெற்றார். யாஷினி, ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினார். அதன் மூலம் தமிழ்நாடு 2-0 என முன்னிலை பெற்றது.