Posts

World News

Image
அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். வரும் பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்தடுத்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

World News

Image
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், வங்கி வைப்புத் தொகை, அவரது ராணுவ ஓய்வூதியம் மற்றும் சொத்து விற்பனையின் வாயிலாககிடைத்த பணமும் அடங்கும்.

World News

Image
கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் திகழ்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர் (ரூ.47,300 கோடி) ஆகும். ஆனால், அவரது உண்மையான சொத்து மதிப்பு இதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

World News

Image
மாலே: மாலத்தீவின் அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம், இன்று (புதன்கிழமை) காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹுசைன் ஷமீம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஷின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அரசால் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவராவார். அவர் இன்று காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் அவர் மீது பாய்ந்து அவரை சுத்தியலால் கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் வழக்கறிஞரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் அங்குள்ள ஏடிகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

World News

Image
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தம்பதி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

World News

Image
உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 39, பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது. 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

World News

Image
இஸ்லாமபாத்: அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் ராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது.